Wednesday, June 22, 2016

30 வருசமா ஏழரை....!

வெற்றி கண்ட மனிதன் எல்லாம் புத்திசாலி அல்ல....

என்னே ஒரு பொன்வாக்கு. வாழ்க்கையில் பல இடங்களில் இந்த வாக்கு உண்மையாவதை கண்டு  வியந்துள்ளேன்.

இவன் ஒரு ஆளுன்னு.. இவனுக்கு எப்படி? என்று என்னை வியக்க வைத்தததில் முதலில் இருப்பவர்.. கூத்தாடி சனியன்  சல்மான் கான்.

சினிமா துறை உலகத்தை சார்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்ததால் இவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு. இவர் படங்களில் எதுவுமே நான் இதுவரை பார்த்ததில்லை.. என் மும்பை நாட்களில் தான் இவர் அறிமுகமானார். மைனே பியர் க்யா என்ற படம்.  அந்த காலத்தில் இந்த படத்தின் பாடல்கள் மிக பிரமாதம். I just called to say I  love you (Stevie Wonder)  மற்றும் Final Countdown (Europe)  உட்பட்ட சில ஆங்கில பாடலைகளை அப்படியே காப்பி அடித்து வெற்றி பெற்ற படம்.

அதில் வெற்றி பெற்ற இவருக்கு அப்போது 22 வயது இருக்கும் ... தற்போது..51.


இவர் 22 இருந்து 51 வரை எந்த தவறு செய்தாலும் , சினிமா துறையில் இருப்பவர்கள் "இவர் ரொம்ப நல்ல மனிதன்" தெரியாமல் செய்து விட்டார் என்ற வேண்டுகோளை வைப்பார்கள்.

சட்டத்திற்கு புறம்பாக காட்டுக்குள் சென்று அங்கே இருந்த மானை சுட்டார் (துப்பாக்கி) எங்கே இருந்து கிடைத்தது (ஒரு வேலை சஞ்சய் தட் அவர்களை கேட்டால் தெரியும் ).

மானை தெரியாமல் சுட்டுவிட்டார்.

பின்னர் நன்றாக குடித்து விட்டு தன் வண்டியை ஏற்றி  தெருவில் தூங்கி கொண்டு இருந்தவர்களை கொன்று விட்டு..

18 வருடங்கள் கழித்து.. அந்த வண்டியை தான் ஒட்டவில்லை, அது தானாகவே ஓடி அவர்களை கொன்றுவிட்டது என்று சொன்னவர்...

ஐயோ.. இவர் எவ்வளவு நல்லவர்.. வண்டி தானாதான் ஓடி இருக்கும்

ஐஸ்வர்யா ராயுடன் காதல்.. அதில் அம்மணியை அடித்து பிரட்டி எடுத்தவர்.  சினிமாவில் எதிரிகளை பிரட்டி எடுக்கும் இவர், நிஜ வாழ்க்கையில் ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்தியது...

பாவம் தெரியாமல் அடித்துவிட்டார்..

இந்த வேலைகளை ஒரு சராசரி மனிதன் செய்து  இருந்தால்.... ப்ளூ க்ராஸ் .. பீட்டா. ...மாதர் சங்கம்... காட்டிலாகா.. ஆயுள் தண்டனை .. மரணதண்டனை... என்று போய் இருக்கும்.

ஆனால் இவர் சினிமா நாயகன் ஆயிற்றே... அதனால் இவர் இந்த விதிக்கெலாம் விதி விளக்கு.

தற்போது புதிதாக ஒரு விஷயம் சொல்லி இருக்கின்றார்.

சென்ற வாரம் .. ஒரு படப்பிடிப்பு முடிந்தவுடன்.. படப்பிடிப்பை பற்றி பேசுகையில்...

இந்த படப்பிடிப்பை முடிப்பிற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

ஒரு கற்பழிக்கப்பட்ட பெண்ணை போலாகிவிட்டேன்.

அட கூத்தாடி பையலே... உன்னுடைய கேடு கெட்ட படப்பிடிப்பை ... ஒரு கற்பழிப்பிற்கு எப்படி உன்னால் ஒப்பிட முடியுது?

ஒரு கற்பழிக்கபட்ட பெண்ணின் கஷ்டத்தை . .அவளுக்கு நேர்ந்த கொடுமையை... உன்னுடைய படப்பிடிப்பிற்கு இணையா பேசுறியே... உனக்கு உண்மையாவே அறிவில்லையா?

இந்த சனியன் இப்படி செய்ததை பற்றி பேசுகையில்... காங்கிரசின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் நடிகை நக்மா   கூறியது..

சல்மான் கான்.. அதை இந்த அர்த்தத்தில் சொல்லி இருக்க மாட்டார். மற்றும் அவர் எதையுமே மனதில் ஒன்று வைத்து பேசமாட்டார்.

இந்த கூத்தாடிய என்ன சொல்றது? இந்த அம்மணியும் பெண் தானே.. கற்பழிப்பு என்பது எவ்வளவு ஒரு கொடிய செயல்.. ஒரு பெண்ணின் அடிபடை உரிமை பறிக்க படுகின்றது.. அதை சல்மான் கொச்சை படுத்துகிறான். இந்த அம்மணி அவனுக்கு வக்காலத்து.

எதையும் யோசித்து பேசமாட்டாராம். 51 வயதாகி விட்டது. இன்னும் யோசித்து பேசமாட்டார் என்றால் .. மன நலம் குன்றியவராக தான் இருக்க முடியும்.

51 வயதில்...இப்படி ஒரு சனியன்..சிறிய வயதிலே முடியை இழந்த விழுந்த   எப்படியோ ஒரு விக் வைத்து அதை சரிபண்ணி சினிமாவில் ஊரை ஏமாற்றி விட்டார்கள்.

ஆனால் உள்ளே உள்ள மூளையையும் அல்லவா இழந்து இருக்கின்றார்.. அதை எப்படி சரி செய்வது...

இந்த மாதிரி சனியனுக்கு வக்காலத்து வாங்க ஆட்கள் இருக்கும் வரை.. இவரது முட்டாள்தனமான செயல்கள்  தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.


பின் குறிப்பு :


இன்னும் ரெண்டு மாதத்தில் நம் பாரத பிரதமர் மோடி உங்க ஊரு பக்கம் வருவார்.. அவரோடு சேர்ந்து ஒரு காத்தாடி விட்டு செல்பி, அப்புறம் .. ஊர கூடி சுத்தம் பண்றமாதிரி ஒரு செல்பி.. போடு...

அப்புறம் பாரு.. நீ என்ன   இழவு  பண்ணாலும் .. சட்டம் உனக்கு எதிரா ஒரு ஆணி கூட புடுங்க முடியாது..

நெஞ்சு   பொறுக்குதில்லையே!Q

5 comments:

 1. இந்த மாதிரி கூத்தாடிகளை நினைக்கையிலே கோபம் பொங்கி வருவது உண்மைதான்! ஆனாலும் இவர்களை சட்டமோ ஆட்சியோ ஒன்றும் செய்வதில்லை! தெய்வம்தான் தண்டிக்க வேண்டும்.

  ReplyDelete
 2. ஒருவேளை அப்படியேதும் நடந்திருக்குமோ!!
  51 வயசாகியும் கல்யாணம் பண்ணாம இருக்கானே, அதான் டவுட்டு...!!
  அவனா இவன்..!!

  ReplyDelete
 3. விசு சரியாகச் சொன்னீர்கள் அதுவும் அந்தப் பின் குறிப்பு! மூளை இல்லாமல்தானே நம்மூரில் எல்லோரும் ஆட்சி புரிகிறார்கள், இப்படி உளறிக் கொண்டிருக்கின்றார்கள்.

  ReplyDelete
 4. சினிமா மோகம்...... தவறென்று தெரிந்தாலும் Support செய்வார்கள்......

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...