Monday, May 23, 2016

நாக்குல தூக்கு போட்டுன்னு...

வா தண்டம்... எப்ப வந்த?

நேத்து தான் வாத்தியார..

இந்தியா ட்ரிப் எப்படி இருந்தது...

சூப்பர் வாத்தியாரே.. கிட்ட தட்ட 20 வருஷம் கழிச்சு தமிழ் நாட்டில் தேர்தல் நேரத்தில் போய் இருந்தேன், ஒரு வித்தியாசமான அனுபவம்.

சரி, வோட்ட யாருக்கு போட்ட?

நான் எங்க போட்டேன் ...எனக்கு பதிலா எந்த படுபாவியோ போட்டு இருக்கான்.

ஐயோ பாவம்..  நீ ஊருல இல்லன்னு தெரிஞ்சிட்டு உனக்காக நல்ல காரியம் செஞ்சி இருக்காங்க.. அதுக்கு நன்றியா இல்லாம...

சரி.. மீண்டும் அம்மா வந்துட்டாங்களே.. அதை பத்தி..

வாத்தியாரே.. உனக்கே தெரியும் நான் எந்த கட்சியையும் சேராதவன்..

டேய்..நீ தி மு க வா?

ஏன் அப்படி கேக்குற?

எப்பவுமே, தோத்தவங்க தான் "நான் எந்த கட்சியையும் சாராதவங்கன்னு' சொல்லுவாங்க.

இல்ல வாத்தியாரே. நான் ஊற விட்டு வந்து 20 வருஷம் ஆச்சி.. கட்சி கொடி லொட்டு லொசுக்குன்னு ஒன்னும் கிடையாது.

சரி.. மீண்டும் அம்மாவா.. தமிழன்களுக்கு அறிவே கிடையாதான்னு இங்கே  மத்த மாநிலத்து ஆட்கள் பேசிகிறாங்க.. தண்டம். வெளியே தமிழ்னு சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு.

ஏன் வாத்தியாரே.. தமிழ் வாக்காளர்கள் அப்படி என்ன தப்பு செஞ்சிட்டாங்க..

இல்ல மீண்டும் அம்மா..

இப்ப நீ என்ன கருணாநிதி வந்து இருக்கோனும்ன்னு சொல்றியா..

ச்சே அவர் வந்து இருந்தா இதை விட கேவலமா பேசி இருப்பாங்க..

அப்படி சொல்லு.

சரி தண்டம்.. தேர்தலுக்கும் ஒரு வாரத்துக்கு முன்னால கூட கண்டிப்பா தி மு க தான் வரும்ன்னு ஒரு பேச்சு அடி பட்டதே.. எப்படி தோத்தாங்க.

வாத்தியாரே..ஓவர் கான்பிடன்ட். .. அது தான்.

புரியல..

வாத்தியாரே.. நீங்க தான் ஜெயிக்க போறீங்கன்னு எவனோ சொன்ன கருத்து கணிப்ப நம்பி ... ஒரு முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டாங்க.

என்ன விஷயம்?

வாத்தியாரே.. போன பாராளுமன்ற தேர்தலில் "அச்சா தின் மோடி" எப்படி அவ்வளவு பெரிய வெற்றி பெற்றாரு?

சனி .. கேது வோட போய்.. சுக்கிரன் சந்திரனோடு சேர்ந்து எல்லாம் சுத்தி வந்து மோடி மேலே விழுந்தது .. அதுதான்.

வாத்தியாரே.. சீரியஸ்...

அதுக்கு பல காரணங்கள் இருந்தது... விஷயத்த சொல்லு.

பல காரியம் இருந்தது சரி.. அதுல ரொம்ப முக்கிய காரணம்.

176,000 கோடி.. 2 G  ஊழல் குற்றசாட்டு.

சரியா சொன்ன.. அந்த ஒரு காரணத்த வச்சி மோடி சாப் முழு மஜாரிட்டி  வாங்கினாரு, இல்ல இந்த தேர்தலும் அந்த மாதிரி தான்.

டேய்.. 2G  ய தான் மக்கள் மறந்துட்டாங்களே. அது நடந்து ரெண்டு வருஷம் ஆச்சே.

சரியா சொன்ன.. 2G  ய மக்கள் மறந்தது என்னவோ உண்மை தான். ஆனா. இந்த ஓவர் கான்பிடன்ட் தி மு க ஆட்கள் ..இந்த மேட்டரை சொதப்பிடாங்க.

புரியல.

வாத்தியாரே.. 2G  ஊழல் பத்தி நீ கடைசியா எப்ப யோசித்த?

எப்ப.. தெரியலையே..

நல்லா யோசித்து பார்..கடைசியா எப்ப நினைச்சே.

போன வாரம் தான்.. தண்டம்..

போன வாரம்... சரி.. போன வாரம் உனக்கு 2G  ஊழலை யார்  ஞாபக  படுத்தினாங்க..

யாரும்  ஞாபக  படுத்தல.. நம்ம தயாநிதி, கருணாநிதி வண்டிய தள்ளினு வந்தாரு.. அதுக்கு அப்புறம் மேடையில் அவர் பக்கத்தில் உக்கார்ந்து இருந்தாரு. அவரை பாத்தவுடன் 2G  மறக்காம நினைவிற்கு வந்தது.

சரியா சொன்ன.. 9000 மைல் தள்ளி இருக்க உனக்கே நினைவுக்கு வந்திடிச்சே.. இந்த அநியாயத்த அங்கேயே வச்சி பார்த்தாங்களே அவங்களுக்கு நினைவில் வந்து இருக்காதா?

ஆமா தண்டம்.. சரியா சொன்னேன்.

வாத்தியாரே.. மேடையில் தயாநிதிய பார்த்தவுடன் " மக்களே.. அந்த 176,000 கோடி.. கேடி .. இவருதான்.. இவரு தான் அதுன்னு ஒரு மைண்ட் வாய்ஸ்.என்னை பொறுத்தவரை தி மு க தோத்ததுக்கு காரணமே .. தயாநிதி மற்றும் கனி மொழி உடைய "தரிசனம்' தான். இவங்க ரெண்டு பேரை பார்த்தவுடனே ...மக்களுக்கு பீரிக்குனு வந்துடிச்சி.

அப்ப .. அ தி மு க மட்டும் என்னவாம்.. மன்னார்குடி...?

வாத்தியாரே.. மன்னார்குடி ஆட்கள் ஒருத்தர் கூட தேர்தல் நேரத்தில் வெளிய வரல..

ஆமா தண்டம்..

அதை விடு... நம்ம சிம்மகுரலோன்... 'இனோவா" வெள்ள நேரத்தில் ஏதோ தொலை காட்சியில் முட்டாள்தனமான பதில் சொல்லி மக்களை ரொம்ப கோவ படுத்தினாரு. அவரை கூட தேர்தல் நேரத்தில் வெளிய பாக்க முடியல.

ஆமா தண்டம்..

சரி.. இந்த ம ந கூ...?

வாத்தியாரே.. விஜய்காந்த் வர வரைக்கும் ஒரு 8-10 சதவீதம் இவரை பத்தி பேசினு இருந்தது என்னவோ உண்மை தான் .. அவர் வந்த பின்னே  .. அடே டே. .இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வரும் போல இருக்கேன்னு.மக்கள் முடிவு பண்ணிண்டாங்க.  

வை கோ ...

த்தூ ...

சரி.. நாம் தமிழர்..

வாத்தியாரே.. அவங்களுக்கு வலைத்தளத்தில் மட்டும் தான் கொஞ்சம் பேர். அங்க ... ஒரு பையன் இவங்கள தொலை காட்சியில் இல்ல வேற எங்கேயும் காட்டல.

அன்புமணி...

அவரை மக்கள் எங்கே வச்சி இருக்காங்கன்னு இப்ப அவருக்கே நல்ல தெரிஞ்சது. அடுத்த தேர்தலில் எதாவாது ஒரு கழகத்தோடு சேர்ந்துடுவாங்க.

ப ஜ க...?

மீண்டும் "மிஸ்ட் கால்" தான்..2026 வரை ப ஜ க தமிழகத்தில் ஒன்னும் பண்ண  முடியாது வாத்தியாரே.

அதுக்கப்புறம்..?

தி மு க மற்றும் அ தி மு க வின் அடுத்த தலைமையை பொருத்து தான் இவங்க எதிர் காலம்.

மானஸ்தன்...?

எவன் அவன்...

அவருதான் மானஸ்தன்..?

தமிழகத்து அரசியலில் ஏது மானஸ்தன் ..?

சரத்குமார்..

3000 பேர் இருக்குற சங்கத்து தேர்தலில் ஜெயிக்க முடியல. இவர் எப்படி சட்ட மன்றம் போட்டியில் ஜெயிக்க போறாரு? இருந்தாலும்..

இருந்தாலும்..

இப்ப அடிக்கடி சித்தி வெளியே வந்து.. நான் அரசியலுக்கு கண்டிப்பா வருவேன் .. கண்டிப்பா வருவேன்னு சொல்றத பார்த்த எனக்கு கூட கொஞ்சம் பயம் தான் வருது.

என்ன பயம்?

ஒன்னும் இல்ல.. என் வாய கிளராத..

சொல்லு தண்டம்..

ஒன்னும் இல்ல...

தண்டம்.. தயவு பண்ணி சொல்லிடு...

இல்ல..சில தலைகள் சித்தியானவுடன், சித்தி அம்மா ஆகிடுவாங்கலோன்னு  ஒரு பயம் தான்...

டேய்.. பாவி..போய் வாய கழுவுடா..

நான் தானே சொன்னேனே.. சொல்ல மாட்டேன்னு..என்ன போர்ஸ் பண்ணி சொல்ல வச்சிட்டியே..

அதுக்கு வாய்ப்பு இருக்கா..?

ஒன்னும் இல்ல வாத்தியாரே.. ஏதோ மீட்டிங் பேசும் போது.. எதிர் கட்சி ஆட்கள் என்னை கையை பிடிச்சி இழுத்துட்டான்னு சொன்னா போதுமே.. நம்ம ஆட்கள் அடுத்த முதல்வர் ஆக்கிடுவான்களே.. அதை தான் சொன்னேன்.

அப்படி ஒரு நாள் வந்திச்சினா தண்டம்..

வந்திச்சினா...

நான் நாக்குல தூக்கு போட்டுன்னு சாவேன் .

நாக்குல தூக்கா ? ஒன்னு நாக்கை புடுங்கிகிட்டு சாவு .. இல்லாட்டி கழுத்துல தூக்கு போட்டுன்னு சாவு.. இது என்ன புதுசா இருக்கே..?

இது டபுள் கேவலம் இல்ல.. அது தான்.. நாக்குல தூக்கு போட்டுன்னு சாவுறேன்.  

பின் குறிப்பு...

என்ன தான் சொல்லு தண்டம்.. அக்ரகாரத்தில் இருந்து கலக்டர் வரை இவங்க ... குனிஞ்சு குனிஞ்சு வளைஞ்சு தரையில் விழுந்து கும்புட்றத பார்த்தா .. வாந்தி வருது.


வாத்தியாரே.. எல்லாம் மானம் கேட்ட சுயனலவாதிங்க. ஒரு சுயமரியாதை இல்லாத சோமாறி நாயிங்க எப்படி இன்னொருத்தருக்கு மரியாதை தருவாங்க. இந்த குனியறது எல்லாம் எதோ ஒரு லாபத்த எதிர் பார்த்து தான். இந்த மூதேவிகளை பார்த்து கோபப்பட்டு நீ உடம்ப கெடுத்துக்காத..

5 comments:

 1. மக்கள் தான் தண்டம்ன்னு மறுபடியும் ப்ரூ பண்ணிட்டாங்க..

  ReplyDelete
 2. உங்கள் பாணியில் தேர்தலை அலசி பிழிந்து போட்டுவிட்டீர்கள்! அருமை!

  ReplyDelete
 3. என்ன தமிழ்நாடோ என்ன தேர்தலோ...என்ன ஆட்சியாளர்களோ...நம்மள முழுசும் ஒட்டிக் கிடக்கற பக்கத்து மாநிலம் கேரளா மக்கள் நம்மள ஏளனமா பாக்கறாங்க அந்த அளவுக்கு இருக்கு தமிழ்நாடு. தமிழ்நாடு விரித்திக்கேடாணு என்று சொல்லும் அளவிற்கு..அங்க பாருங்க ஒரு சாமானியனுக்கு மந்திரி பதவி.....இங்கு நடக்குமா?

  ReplyDelete
 4. குனிஞ்சு குனிஞ்சு வளைஞ்சு தரையில் விழுந்து கும்புட்றத பார்த்தா...மானம் போகுது...ஸ்வாரசியமான பதிவு..

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...