Sunday, April 3, 2016

"கேப்டன் தோனி" ..தன்னடக்கத்தின் இலக்க ..சாரி .. தலைகனம்.

நான் ஏற்கனவே அடிக்கடி சொல்லியதை போல் 'கிரிக்கெட்' என்ற ஆட்டத்தை அருவருப்பாக பார்ப்பவன். இந்த விளையாட்டின் மேல் எப்போதுமே இவ்வளவு அருவருப்பா என்றால், இல்லை. அடியேனும் ஒரு சராசரி இந்தியனை போல் இந்த ஆட்டத்தை மனதார ரசித்தவன் தான். பின்னர் ஏன் இந்த அருவருப்பு .

பல காரணங்கள் உண்டு. முதல் காரணம் .. சூதாட்டம். வேலை மனகெட்டு மணி நேரத்தை வீணடித்து பார்த்த பல ஆட்டங்கள், ஒரு இருட்டறையில் மேசைக்கு மேல் வைத்த பணத்தினால் நிர்ணயிக்க படுகின்றது, என்று கேள்வி பட்டவுடன்... இந்த சனியனுக்கும் நமக்கும் தொடர்பே இல்லை என்று விட்டு விட்டேன்.

அடுத்த காரணம்.. "பாப் வுல்மர்" கொலை. இந்த சூதாட்டகாரகளால் கொலை செய்யப்பட்ட பாப்வுல்மர். மிக சிறந்த பயிர்ச்சியாளர் என்று போற்ற பட்ட "பாப் வுல்மர்" கொலை செய்யப்பட்டு அவரின் சடலம் ஒரு பொது மருத்துவமனையின் எதிரில் சாலையில் வைக்க பட்டு இருந்ததே.. அதை பார்த்தபின் .. இனி இந்த ஆட்டத்திற்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை .. என்ற முடிவுக்கு வந்தேன்.


சச்சின் டெண்டுல்கர்.. மிக பெரிய ஆட்டக்காரர் என்று போற்றப்படும் இவர்..  இவர் கண்களின் எதிரில் சூதாட்டம் வருட கணக்கில் தலைவிரித்து ஆடும் போது அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்.. "எம்புட்டு தேறும்" என்ற ஒரே கண்ணோக்கில் வாழ்ந்து  வந்தாரே.. அவர்..

அடுத்து .. கவாஸ்கர் மற்றும்  ரவி சாஸ்திரி..யார் எக்கேடு கேட்டு  போனால் என்ன? உனக்கு எத்தனை கோடி.. எனக்கு எத்தனை கோடி என்று ஆட்டையை போட்டுவரும் இவர்கள் இருவரும்.

மற்றும் ... ஸ்ரீனிவாசன்.. லலித் மோடி ...

இன்னும் பல காரணங்கள்..இப்படி நாட்கள் போய் கொண்டு இருக்கையில்..  சென்ற வாரம், நண்பன் ஒருவர் ஒரு காணொளி தொடர்பு அனுப்பி இருந்தார். அந்த அஞ்சலில் அவர்...

விசு,

"இனியும்  இந்த  ஆட்டத்தை வெறுக்காதே.. நம்முடைய அணியின் தலைவனை பார். யாரோ ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு என்ன அற்புதமாய் பதில் சொல்லி இருகின்றார். இதை நீ கண்டிப்பாக பார்க்க வேண்டும்"

என்றும் எழுதி இருந்தார்.

அருமை நண்பரின் அன்பு கட்டளை அல்லவா .. பார்த்தேன்.

அரை இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகளிடம் தோற்றபின் இந்திய அணியின் தலைவர் 34 வயதான தோனியின் பேட்டி. அங்கே இருந்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த நிருபர் ஒருவர்...

தாங்கள் ஓய்வு பெறுவதை பற்றி ஏதாவது முடிவு செய்தீர்களா?

இது ஒரு சாதாரண கேள்வி. 34 வயதான ஒரு வீரரை, உலக கோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில் தோற்ற ஒரு அணியின் தலைவனை  கேடக வேண்டிய கேள்வி தான் இது. இங்கு தான் வந்தது தோனி அவர்களின் பிரமாண்டமான பதில்..கேட்ட அவரை முன்னே அழைத்து .. அவரிடம் இவர் பேசிய விதம்..

நீங்கள் .. அயல்நாட்டுக்காரர். இந்த கேள்வியை ஒரு இந்திய நிருபர் கேட்டு இருந்தால், நான் அவரை ..

உங்களுக்கு மகன் இருகின்றாரா? இல்லை வேறு யாராவது உறவினர்கள் கிரிக்கெட் விளையாடுபவர்கள் இருகின்றனரா ? என்னை இந்த அணியில் இருந்து நீக்கும் அளவிற்கு திறமைசாலிகளா என்று கேட்டு இருப்பேன்.

இந்த பதிலை கேட்ட அந்த நிருபரின் முகம் பேய் அறைந்தது போல் ஆனது என்றால் அது மிகையாகாது.

தோனி, தொடர்ந்தார்..

நான் என்ன மெதுவாக செயல்படுகிறேன் என்று நினைகின்றீரா?

இல்லை..

2019 உலககோப்பை வரை என்னால் ஆடமுடியாது என்று நினைக்கின்றீரா?

இல்லை..

பிறகு... அது தான் பதில் என்று ஒரு பெருமையான சிரிப்போடு அவரை அனுப்பி வைத்தார்.

எனக்கோ.. இதில் என்ன பிரமாண்டமான பதில் உள்ளது. ஓய்வை பற்றி கேட்டால், 2019க்கு பிறகு பார்க்கலாமே என்று சொல்லி அடுத்த கேள்விக்கு செல்லவேண்டியது தானே.. அதை விட்டு விட்டு ..

ஏன்,  "இந்த என்னை பார்.. என் அழகை பார்" என்ற இறுமாப்பு என்று நினைக்கையில் .. கணினியின் வலது புறத்தில் .. நியூசிலாந்து வீரர் "பிரண்டன் மெக்காலம்" ஓய்வு பெறுகின்றார் என்ற காணொளி இருந்தது.

 சரி .. இவர் என்ன சொல்லுகின்றார் பார்க்கலாம் என்று சொடுக்கினேன்.

34 வயதான இவர் தான் ஆடிய கடைசி ஆட்டத்தில் டெஸ்ட் பந்தயங்களிலே துரிதமான சதத்தை அடித்து 30 வருடங்கள் போல் இருந்து வந்த விவியன் ரிச்சர்ட்ஸ் அவர்களின் சாதனையை முறியடித்து விட்டு அதே ஆட்டத்தில் ஓய்வு பெற்று விலகுகின்றார். இதோ அவரின் பேட்டி.

இவ்வளவு சிறப்பான ஆட்டம்.. 54 பந்துகளில் சதம்.. இப்போது ஏன் ஓய்வு?

இவரோ சிரித்து கொண்டே...

என் நாட்டிற்காக நான் விளையாட நேர்ந்தது ஒரு பாக்கியம். இது அனைவருக்கும் கிட்டாது. எங்கள் நாட்டில் பல இளைஞர்கள் என்னைவிட திறமை சாலிகள், இந்த வாய்ப்பிற்காக காத்து கொண்டு இருகின்றார்கள்.

ஆண்டவன் அருள், இந்த ஆட்டத்தின் மூலம் எனக்கு பெயரும் புகழும் செல்வமும் கிடைத்தது. இது என்னை போல் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும். அதனால் தான் ஓய்வு.

ஆனாலும் டெஸ்ட் பந்தயத்தில் 54 பந்தில் சதம். இவ்வாறன அதிரடி ஆட்டம் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் நடைபெறும்  T  20 உலககோப்பையில் உங்கள் அணிக்கு கை கொடுக்கும் அல்லவா? நீங்கள் ஏன் அது முடிந்தவுடன் ஓய்வு பெற கூடாது.

உலககோப்பைக்கு முன்பே ஓய்வு என்பது நான் நன்றாக தீர்மானித்து எடுத்த முடிவு. எனக்கு பின்னால் வரும் அணியின் தலைவனுக்கு உலக கோப்பை கேப்டன் என்ற வாய்ப்பு நல்லதோர் உற்சாகதைகொடுக்கும். அதை கெடுக்க நான் விரும்பவில்லை.

என்ன ஒரு பிரமாண்டமான பேட்டி..

இப்போது.. இதே மெக்காலம் தோனி பாணியில் பதில் தந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

மெக்காலம்..தம் ஓய்வை பற்றிய கருத்து..

உங்கள் இல்லத்தில் என்னை போல் யாராவது 54 பந்தில்  சதம் அடிக்க முடியுமா?

இல்லை.

79 பந்தில் 145 ?

இல்லை..

பிறகு எதற்கு நான் ஓய்வு பெற வேண்டும்...

பின் குறிப்பு :
நண்பர்களின் உந்துதலினால் மீண்டும் இந்த சனியன் கிரிக்கெட் ஆட்டத்தை தொடர ஆரம்பித்து விடுவேனா என்ற ஒரு சந்தேகம் சில வாரங்களாக இருந்தது. நன்றி, தோனி அவர்களே.. அந்த சந்தேகத்தை முற்றில்லும் நீக்கி  விட்டீர்கள்.

2019 வரை என்ன.. 2030 வரை ஆடுங்கள்.. அதுவரை..

"என்னை பாரு என் அழகை பாரு" என்று பேசி கொண்டும் இருங்கள்..

நெஞ்சு பொறுக்குதில்லையே.. 

13 comments:

 1. கிரிக்கெட் பார்த்தது கிடையாது அதை கேட்டதும் கிடையாது. அதில் யாருல்லாம நடிக்கிறார்கள் என்பது கூட எனக்கு தெரியாது

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கையில் பாதிநாளை வீணடிக்காம விட்டுடிங்களே ...

   Delete
 2. எனக்கு ஒரு சந்தேகம் விசு,

  இந்த தோனி எப்படி பேசுவது என்று இளையராஜாவிடம் பயிற்சி எடுத்திருப்பாரோ?

  ReplyDelete
 3. if any o ne ask you to retire from your current job, will you do, since lot of people jobless :) and to give a chance to them....you can't then why you expect from others

  ReplyDelete
  Replies
  1. Thanks for dropping by... Let me try and answer to the best of my ability.

   If any one ask me to retire from my current job... my answer would be...

   I have just turned fifty and have a family to support and not in a hurry to retire and would probably retire at 60. I wouldn't be asking him, Is any of your family member a "Kanakku Pillai", can they add numbers like me.. do they also know to subtract, multiply and divide... :)

   With regards to giving them a chance...

   Dude... in the real world, if you are not good enough, you are booted... Period!

   Finally.. I dont think that the Aussie Journo, had asked Dhoni to retire, I thought, what was Dhoni's thought on retirement. All he could have said is a Gentle.. "I wouldnt talk about it now... as I have let down my team real bad".

   Delete
 4. விசு கிரிக்கெட் பலவருடங்களாக சுத்தமாக அந்தப்பக்கம் திரும்புவதே இல்லை. பிடிக்காமல் போய்விட்டது, அது வியாபாரமாகிப் போனதாலும், ஊழல், கள்ளத்தனம், நிறைந்துள்ளதாலும், நல்ல நல்ல ஆராய்ச்சிகளுக்குச் செலவு செய்து அதை மேம்படுத்தாமல் இதற்கு கோடிக்கணக்கில் கணக்கில் வராமல் பணம் செலவழிப்பதை மனது ஏற்க மறுப்பதாலும் பிற விளையாட்டுகள் பின் தள்ளப்பட்டதாலும்..என்று அடுக்கிக் கொண்டு போகலாம்...

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு..... சூதாட்டம் என்று தெரிந்த பிறகு அதில் அவ்வளவு ஆர்வமில்லை.

  ReplyDelete
 6. Nothing wrong with Dhoni's answer..Its not the first time he was asked about retiremnet..Everytime he has replied saying when I take that decision I will let you know..As a journalist whats the fun in asking about retirement? ..What the journalist is going to do if he answer yes or answer no? if he answers yes..does the Journalist going to find a replacement?..if he answers no..does the Journalist going to him ..no you have to retire since you are not playing well?...You need to understand onething..This retirement questions are of a tone that..Boss..now you have lost..why dont you retire?...Dhoni very well understood the intention, answered back him royally..

  ReplyDelete
  Replies
  1. Thanks for dropping by. Appreciate your thoughts and agree to disagree. Thanks again.

   Delete
 7. Hi Visu,

  I do not think anything is wrong with his statement. I'm neither fanatic towards him or cricket.

  Questions asked to McCullam and Dhoni were different. First was asked about planned retirement and second one was about the retirement plan. As unknown told, this was not the first instance. New Zealand team is not only dependent on McCullam but there is no qualified captain like Dhoni as such though his batting is not up to the mark in recent years. If Kohli (who is expected to be next eligible captain) had been in that interview, he would have bounced back or blasted out of anger due to his immaturity.

  I do not agree with the statement "Thannadakkaththin thalaikkam" but i can say he handled the situation effectively inspite of his showing all his anger like actor vijay in one of his interviews.

  ReplyDelete
  Replies
  1. The thing that bothered me most was him saying, " If you were a Indian Journalist, I would have asked whether you have someone in my family to replace me".

   This one goes under "Arrogance" in my book. Having said all these, i must confess, I am not into Cricket anymore, and my thoughts could be debatable.

   Thanks for dropping by and I do appreciate you taking time to write as well.

   Delete
  2. Thanks for your time to reply. I agree with your view on his statement but not fully. Though this is just a sport, it is not fair for a reporter to ask about retirement instead of asking about next plans. This is just my view on this issue. :)

   Delete
 8. கபில், அசார், கங்குலியை விட சர்வதேச போட்டிகளில் தோனி வெற்றிகள் அதிகம் குவித்த கேப்டனாக இருந்தாலும்..., பௌலர்களை சிதைத்து பேட்டிங் மட்டுமே கிரிகெட் என்ற நிலை உருவாக காரணமான மோசமான கேப்டன் என்பேன்.
  பதான், சாகீர். ஆர்.பி.சிங், முனாப் படேல் என கங்குலி உருவாக்கியிருந்த ஸ்விங் பௌலர்களை ஓரங் கட்டி அஸ்வினை மட்டுமே நம்பி செயல் படுவதெல்லாம் எதில் சேர்க்க? சமீபத்தில் உருவான புவனேஸ்வர் குமார், மொஹம்மத் ஷமி, மோஹித் ஷர்மா போன்றவர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் ரவீந்திர ஜடேஜா என்ற மொன்னையை all rounder என ஆட்டையில் இன்னும் வைத்துக் கொண்டிருப்பது மகா கேவலம்...
  தொடர்ந்து விக்கெட் கீப்பராக இருந்து கொண்டு கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்தால் தேவலாம்...

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...