Thursday, April 28, 2016

இன்னும் எத்தனை நாளுதான் .....

டிங் டாங்.. வீட்டு அழைப்பு மணி அலறியது..

வாத்தியாரே..

வா தண்டம்.. என்ன சொல்லிக்காம ,,,, கொல்லிக்காமா..

இந்த பக்கம் வந்தேன், உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...

அட பாவி.. பங்கஜவல்லி அம்புஜநேத்திரியா ? ஏதாவது எடக்க முடக்க பண்ணி சுந்தரிட்ட வாங்கி கட்டிகினியா...

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம் ..

சரி விஷயத்த சொல்லு.. என்ன திடீர்னு..

ஆமா.. என்ன இப்பெல்லாம் உன் பதிவில் நான் வரதே இல்லை...?

அப்படியெல்லாம் இல்லை தண்டம்..

இல்லை வாத்தியாரே.. முந்தி எல்லாம் ரெண்டு பதிவுனா ஒன்னுல நான் இருப்பேன் .. இப்ப..

ஒன்னும் இல்ல..

உண்மைய சொல்லு.. பதிவுலகத்தில் "விசு"ன்னு ஒருத்தனை தெரியாதவங்க  இருந்தாலும் இருக்கலாம், ஆனால் இந்த தண்டபாணியை தெரியாமல் யாரும் இருக்க முடியாதே..

அதனால  தான்.

எதனால?

தண்டம்.. நான் என்ன எழுதினாலும்.. அதையெல்லாம் படிக்காம  தண்டத்த பத்தி எழுத்து.. தண்டம் போட்டோ போடுன்னு என்னை ஓரங்கட்டுறாங்க.. அதுதான் உன்னை கொஞ்சம் ஒதுக்கி வைச்சி இருக்கேன்.

நாசமா போக..இதுக்கு எங்க ஊரில் ஒரு சின்ன கதை சொல்லுவாங்க வாத்தியாரே..

சொல்லு..

கப்பல் முழுக்க பொண்ணுங்க வராங்கன்னு சொன்னவுடன்.. எனக்கு ஒன்னு என் அப்பாவுக்கு ஒன்னுன்னு சொன்னான்னாம்.

கப்பல் முழுக்க இருக்காங்க தானே தண்டம். எடுத்துன்னு போகட்டும் விடு. அதுல என்ன தப்பு .. ?

முழுசா கேளு வாத்தியாரே..

கப்பல் முழுக்க பொண்ணுங்க வராங்கன்னு சொன்னவுடன்.. எனக்கு ஒன்னு என் அப்பாவுக்கு ஒன்னுன்னு சொன்னான்னாம்.

தண்டம், கப்பல் தரை தட்டிடிச்சி ..விஷயத்த சொல்லு ...

தலைக்கு இம்புட்டு காசு தரனும்னு சொன்னவுடன்..

சொன்னவுடன்...?

சரி வேண்டாம் விடு .. நான் சின்ன பையன்.. எங்க அப்பாவிற்கு வயசாயிடுச்சின்னு சொன்னானாம்..

தண்டம்.. விவரமான ஆளா இருக்கான் தண்டம்..

அவன் விவரமோ இல்லையோ.. நீ விவரமா இருக்க...

புரியல....

வாத்தியாரே.. என் புலம்பல வச்சின்னு ஒரு புத்தகமே போட்டுட்டு இப்ப என்னை கழட்டி விட்டா..பதிவர்கள் மத்தியில் சக பதிவர் என்னை பத்தி என்ன சொல்லுவாங்க..

என்னது .. நீ சகபதிவரா ?

ஆமாம்..

இதுவரை எத்தனை பதிவு எழுதி இருக்க ?

நான் எதுக்கு எழுதணும்.. எனக்கு பதிலாதான் என்னையும் சேத்து நீ எழுதுறியே ..

இதுக்கு எங்க ஊரில் ஒரு கதை சொல்லுவாங்க... தண்டம்..

உன் கதையை கேக்க நேரம் இல்ல ... , சீக்கிரம் கிளம்பு.. இங்க பக்கத்துல இருக்க "ஸ்டார்பக்ஸ்" கடையில் ஒரு வட இந்தியன் எனக்கு காத்துன்னு இருக்கான். கூட வேலை செய்யறவன். போனவாரம் தான் இந்தியாவில் இருந்து வந்து இருக்கான். ஊரில் இருந்து ஏதோ பார்சல் கொடுத்து இருக்காங்க.. வா போய் வாங்கின்னு வரலாம்.

நீ போ தண்டம். கொஞ்ச நாளாவே . நான் இந்த வட இந்தியங்களை கொஞ்சம் அவாயிட் பண்றேன்.

ஏன் வாத்தியாரே.. ஜூன் மாசம் "மோடி வராரே அதுக்கு டிக்கட் வாங்குன்னு தலையை தின்றான்களா.?

டேய், அவர் மீட்டிங்கு இப்ப எல்லாம் இவங்களே போறது இல்லை.

அப்ப ஏன் அவாயிட் பண்ற..

அது பெரிய கதை..

வாத்தியாரே.. .இவன் கூட ரொம்ப டார்ச்சர் தான். அஞ்சு நிமிசத்துக்கு மேலே பேச முடியாது..இப்படி பண்ணேன்.

சொல்லு..

நான் கிளம்பி போறேன்..

சரி.. பாக்கலாம்...

வாத்தியாரே.. பொறுமை.. நிதானமா கேளு..

நான் கிளம்பி போறேன்.

 சாதா நாளிலே அவன் உடனே என்னை விட மாட்டன். இப்ப பொண்டாட்டி பிள்ளைகள் வேற ஊரில் இருக்காங்க.. அறுத்து எடுத்துடுவான்.

உன்னாலே தாங்க முடியலையே.. என்ன ஏன் கூப்பிடுற..

அதுதான் வாத்தியரே.. அவனை பாத்து பார்சல் வாங்கினவுடன்.. நான் அவன்ட்ட.. ஏன் ப்ரெண்ட் ஒருத்தர் இப்ப வருவாரு அவரோட அவசரமா லாஸ் அன்ஜெல்ஸ் போகணும்ன்னு சொல்றேன்..

டேய்.. எனக்கு தலைக்கு மேல வேலை.. என்னால லாஸ் அன்ஜெல்ஸ் வரமுடியாது.

பேச்சுக்கு வாத்தியாரே..

சரி.. நீ கிளம்பி வா .. நீ வந்தவுடன் ..அங்கே இருந்து ரெண்டு பேரும் எஸ்கேப்.

ஓகே..

பத்து நிமிஷத்தில் வா.

சரி,.
வாத்தியாரே.. ஒரு விஷயம்.. இந்த பார்ட்டிகொஞ்சம் ஓவர் லொள்ளு பார்ட்டி.. நம்மை கண்டா கொஞ்சம் கேவலமா பேசுவான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.

தண்டம் .. என்னை ஏன் கேவலமா பேசுவான்/

நீயே வந்து பார்.

பத்து நிமிடம் கழித்து கடையை அடைந்தேன்.அவர்கள் இருவரும் அமர்ந்து இருந்த இடத்தை நோக்கி சென்று..

அடுத்த சில உரையாடல்கள் ஆங்கிலத்தில் நடந்தேறியது அதை தமிழாக்கம் செய்து கொடுக்கின்றேன்.

ஹை.. பாணி.. நேரமாச்சி கிளம்பு..

வாத்தியாரே.. மீட் சின்ஹா..

நைஸ் மீட்டிங் யு.. சரி, நேரமாச்சி கிளம்பு..

என்று நான் சொல்ல.. சின்ஹாவோ..

இருங்க.. என்ன அவசரம்.. காபி குடிங்க,,,என்று சொல்லிவிட்டு..
தண்டபாணியை நோக்கி..
உங்களுக்கு வெக்கம் மானம் ரோசம் எதுவுமே இல்லையா என்றான்.

அங்கே என்ன பேச்சு நடகின்றது என்று அறியாமல் நானோ.. ஆச்சரியமாக பார்க்க..

தண்டம் என்னை 'வாத்தியாரே.. காப்பாத்து ' என்று முழிக்க.. நான் சின்ஹாவை பார்க்க.. அவனோ என்னை பார்த்து..

இந்த தண்டபாணி ஆட்களுக்கு வெட்கம் மானம் ரோசம் இல்லையா என்றான் ..

நானோ.. ஏன் அப்படி கேட்கின்றீர்கள் என்று தெரியாமல் கேட்டு விட..

நேத்து டிவியில் பார்த்தேன். ஜெயலலிதா. இவங்க முதல் அமைச்சர்..

அவங்க முதல் அமைச்சர்ன்னா இவன் என்ன பண்ணுவான்.

ஒரு நிமிஷம்.. கேளுங்க..அவங்க கார் போகையில் அந்த கார் போற தரைய ஒரு ஆள் கும்பிட்டான்..

அதுக்கு ஏன் தண்டபாணியை திட்டுற..

அந்த கும்பிட்டானே.. அவனும் முன்னால்  முதலமைச்சராம் ... இவங்ககளுக்கு வெட்கம் மானம் ரோசம்..

என்று கொக்கரிக்க..நானோ தண்டத்தை நோக்கி..

உண்மையா தண்டம்..இது உண்மையினா.. சின்ஹா இஸ் கரெக்ட்.

இந்த மாதிரி தலைவர்களை தேர்ந்தெடுத்ததற்கு உங்கள்ளுக்கு வெக்கம் மானம் இல்ல தான்..

என்று சொல்ல.. தண்டமோ .... வாத்தியாரே.. கவுத்திட்டியே

என்று என்னை பார்க்க .. சின்ஹா தொடர்ந்தான்.

சரி.. இந்த முறையும் இந்த வயதான ஓய்வு பெற்ற நடிகை தானா.. இவங்களுக்கு பதிலா அடுத்த எந்த நடிகர் நடிகையை செலெக்ட் பண்ணி வச்சி இருக்கீங்க..

என்று கேட்ட்க.. தண்டமோ ..சற்று சுதாரித்து..

இல்லை இந்த முறை கருணாநிதி வர வாய்ப்பு உள்ளது..

என்று உளற சின்ஹாவோ..
அட பாவி.. கருணாவா .. அவருக்கு என்ன 108 வயசு இருக்குமா

என்று ஒரு நக்கலோடு நிறுத்தாமல்.. அதுவும் நல்லது தான் ..அவரை அங்கேயே ஏதாவது ஒரு பதவி கொடுத்து வச்சிகுங்க.. டெல்லி வந்து.. 2G பாணியில் மீண்டும் ஒரு மெகா...

அது அவர் மட்டும் இல்ல .. காங்கிரஸ்சும் தான்,. என்று தண்டம்  தொடர்ந்து உளற..

சின்ஹாவோ.. ஏன் தண்டபாணி .. உங்களுக்கு இவ்வளவு பேராசை..உங்க ஆளுங்கள பாத்தாலே ... ஒரு திருடன், சுயநலவாதி .. பேராசைகாரன்னு மட்டும் இல்லாமல் .. ஒரு :முட்டாள்கள்ன்னு ஒரு பேச்சு நாடு முழுக்க அடி படுதே , அது உனக்கு தெரியுமா?

அது எப்படி முட்டாள்கள்னு சொல்லுவாங்க. நீங்க கூடாதான் டெல்லியில்..

தண்டபாணி.. நாங்களும் முட்டாளா இருந்தோம்.ஆனா புரிஞ்சிகினோம். போன தேர்தலில் "தொடங்கி ஒரு வருடம் கூட முடியாத அம் ஆத்மி கட்சிக்கு'முழு மெஜாரிட்டி கொடுத்து ஆட்சில் வச்சி இருக்கோம்.

அது ஒரு விபத்து.. இந்தியாவில் வேறு எங்கும் நடக்காது..

ஏன் நடக்காது தண்டபாணி.அடுத்தவருடம் பஞ்சாப் சட்டசபை தேர்தல் வருது. டெல்லியில் எங்களுக்கு கிடைத்த ஆட்சி அவங்களுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. அடுத்த வருடம் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் - பி ஜே பி  அகாலி தள், இந்த மாதிரி கட்சிக்கு கண்டிப்பாக ஒரு சீட் கூட இல்ல, டெபொசிட் கூட கிடைக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க..

என்று அவன் சொல்லும் போது.. நானோ தண்டத்தை பார்த்து பரிதாப பட்டு.. எறியும் நெருப்பில் எண்ணை ஊத்தினேன்..

அது எல்லாம் இருக்கட்டும் தண்டபாணி.. இலவசம்ன்னா.. எனக்கு ஒன்னு என் அப்பாவுக்கு ஒன்னுன்னு போய் வரிசையில் நிப்பீங்கலாமே ..

என்று எடுத்து கொடுக்க..

சின்ஹாவோ.. அம்மா.. விசிறி.. மாவு ஆட்றது.. தோசை சுடறது, இது எல்லாம் தான முக்கியம் தண்டபாணி.. ஏன் இப்படி இவ்வளவு கேவலமா இருக்கீங்க.. சாப்பாடு கூட இலவசமா எதிர் பாக்குரிங்கலாமே . அதுக்கு எங்க ஊரில் என்ன பேரு தெரியுமா.. "பிச்சை எடுக்குறது"

என்று சொல்லி கொண்டே..என்னை நோக்கி..

ஆமா.. இவ்வளவு பேசினேன்.. உங்க பேரை கூட தெரிஞ்சிக்காம..
நான் ..ரிச் கர்நலியஸ் ...

பேரை வித்தியாசமா இருக்கே.. இந்தியாவில் எந்த ஊரு.. நீங்க ரிச்..

நானா.. நான்..கோவா...

என்று சொல்ல ...தண்டமோ..

ரிச்.. சீக்கிரம் கிளம்புங்கோ.. லாஸ் அன்ஜெல்ஸ் போகனும்ம் என்று சொல்ல..

நானோ.. சின்ஹா.. சும்மா இருந்தா நீங்களும் வாங்க ... பேசினே போகலாம்
என்று சொல்ல..

தண்டம் எதோ திடீரென்று.. சரி.. லாஸ் அன்ஜெல்ஸ் வேண்டாம் .. நான் வீட்டுக்கே போறேன் என்று. சொல்ல..

என்ன தண்டம்.. என்னமோ உங்க வீட்டுக்கு முக்கியமா எதோ வாங்கனும்ம்னு சொன்னீயே என்று சொல்ல .

தண்டமோ பதிலாக...

வாங்கனும்ம்தான் நினைச்சேன்.. ஆனா இப்ப தான் ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது. அதனால அதை அப்புறமா வாங்கிக்கலாம்னு முடிவி பண்ணிட்டேன்.

அப்படி என்ன விஷயம் நினைவிருக்கு வந்தது..

நான் சின்ன பையன். எங்க அப்பாவுக்கு வயசாயிடிச்சி.. அதுதான்...

என்று அங்கு இருந்து கிளம்ப....

அறையின் ஓரத்தில் .. என் கண்ணில்.. சாரதி தெரிய.. அவன் அடியேனை சின்ஹாவிடம் போட்டு கொடுக்குமுன் பின் கதவின் மூலம் காரை நோக்கி ஓடினேன்..

நம்ம நிலமைய பாத்தீங்களா... "தமிழன் என்று சொல்லடா தரையை தொட்டு வணங்கடா" என்றல்லவா ஆகிவிட்டது.


சொந்த செலவில் சூனியம் (தமிழனின் நிலையை என் பாடல் வாயிலாக கேட்க்க இங்கே சொடுக்கவும்)

பின் குறிப்பு :

இங்கே அடியேனின் பெயரை இந்த ஊர்க்கார்கள் அடிக்கடி "ரிச்" என்று மாற்றி சொல்வது வழக்கம். அது இந்த நேரத்தில் மிகவும் உதவியது. 

3 comments:

 1. தண்டத்துக்கு நல்வரவு..ஆனாலும் நம்மை நாமே இப்படியா கலாய்ப்பது..
  ரிச்....சின்ஹா சொல்வதும் பொய்தான்....ஈயத்தை பார்த்து சிரிச்ச கதை தான்...ஊழலின் பெரிய பெருச்சாளிகள் அங்கும் உண்டு...
  சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம்..நமக்குள்ள பெருந்தன்மை அவர்களுக்கு உண்டா? யார் வேண்டுமானாலும் ஆளலாம்...பேசலாம்..நடிக்கலாம் என வீட்டை பப்பரக்கான்னு திறந்து விட்டு இருக்கமே...அவங்களால முடியுமா...முடியுமா...

  நீண்டநாள் கழித்து தண்டம் மட்டுமல்ல...எங்கள் விசுவும். நல்ல இன்னிங்ஸ்..

  ReplyDelete
 2. நன்றாக அலசி உள்ளீர்கள்

  தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
  http://tebooks.friendhood.net/t1-topic

  ReplyDelete
 3. ஹஹஹ் அதானே தண்டத்தை ஓரங்கட்டலாமோ...விசு??!!

  விசு தமிழன் என்று சொல்லடா தரையைத் தொட்டு வணங்கடா இல்லை....காலைத் தொட்டு வணங்கடா மீண்டும் தொடங்கிவிட்டது பார்த்தீர்களா? வாழ்த்துச் சொல்லவருபவர்கள் கூட எப்படிக் குனிகின்றார்கள், காலில் விழுகின்றார்கள்....அப்படியே 90 டிகிரி கோணம் இல்லை அதற்கும் கீழே...ஹும்...

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...