Saturday, April 9, 2016

கலாய்க்க போவது யாரு ? ஏப்ரல் 2016 போட்டி.: முடிவுகள்

வணக்கம் . கலாய்க்க  போவது யார் என்ற தலைப்பில் நடந்த ஏப்ரல் மாதத்திற்கான போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த போட்டிக்கான கார்ட்டூன் இங்கே.. மயங்கி விழற அளவுக்கு அப்படி என்ன செய்தியை ரேடியோவில் கேட்டார் ?முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் அரசியல் வாசனையே அதிகம் வீசியது . தேர்தல் வரபோகின்றதல்லவா? அதனால் என்று நினைக்கின்றேன்.


மொத்தம் பங்கேற்றவர்கள் 20 பேராக இருந்தாலும், அவர்கள் அளித்த கருத்துக்கள் பல மடங்கானது.


இதில் சிலரின் பின்னூட்டங்கள் வித்தியாசமாக நகைச்சுவையாக  இருந்தாலும், அவை மிகவும் பெரிய அளவில் எழுத பட்டதால் கார்ட்டூனில் போட சரிபட்டு வராது என்று தான் நான் நினைக்கின்றேன்.


நண்பர் நம்பிள்கி அவர்கள், வித்தியாசமாக நினைத்து, விசு ஆங்கில செய்திகள் கேட்டு இருந்தால் என்ன ஏட்டு மயங்கி இருப்பார் என்று ஒரு "ஒபமா - க்யுபா" லெவெலில் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார் ரசித்தேன்.


பல பின்னூட்டங்கள் என்னை கவர்ந்தாலும் , படித்தவுடன் என்னை விட்டு சிரிக்க வாய்த்த வெற்றி பின்னூட்டம் இதோ..

அரசியல் என்பது ஒரு சாக்கடை, கொள்கை, கோட்பாடு, ஒழுக்கம் என்று எவையும் இல்லை. சுயனலதிர்க்காக எதுவும்   செய்வார்கள் என்பதை எடுத்து சொல்லும் வகையில் வந்த பின்னூட்டம். இந்த பின்னூட்டத்தை இதோ கீழே கார்ட்டூனில்  பாருங்கள்.


இதை நமக்கு அளித்தவர் , அமெரிக்க வாழ் தமிழர் "தமிழ்.பையன்" . வாழ்த்துக்கள் "தமிழ் பையன்" அவர்களே. தாம் அடியேனை visuawesome@hotmail.com  என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டி கொள்கிறேன்.


இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து நல உள்ளங்களுக்கும் நன்றி. அடுத்த போட்டி மே மாதத்திற்கான போட்டி.. மே 1 போல ஆரம்பித்து 10 போல் முடியும். கண்டிப்பாக பங்கேற்கவும்.


நாம் அனைவரும் தமிழ் பையனை வாழ்த்துவோமா?


11 comments:

 1. தமிழ்.பையனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!!! எஞ்சாய் தமிழ்.பையன்!!!

  ReplyDelete
 2. தமிழ் பையனுக்கு வாழ்த்துகள். தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 3. தமிழ்நாட்டின் எட்டாவது வள்ளல் "சிரித்து வாழ வேண்டும்" என்று சொன்ன சொல்படி போட்டி நடத்தி பரிசு பணத்தை வழங்கின நண்பர் விசுவிற்கும், போட்டியில் கலந்து கொண்ட எல்லோருக்கும், முக்கியமாக, முதல் பரிசு பெற்ற தமிழ் பையனுக்கும் வாழ்த்துக்கள்.

  எந்த அரசியல் தலைவராவது நான் எழுதினா மாதிரி வாழ்கையில் சொல்வார்களா என்று நினைத்துக் கொண்டே தான் நான் எழுதினேன். ஆனால், அதை விட ஒரு பிராமதமான ஜோக்கை ஒரு பதிவர் நேற்று அடித்து இருந்தார். "முதல் அமைச்சர் ஆறுமதமாக தயாரித்த "பூரண மதுவிலக்கு கொள்கையை" அறிவிக்காகததற்கு ஒரே காரணம் மு.க. அதை திருடி அறிவித்தார்" என்று ஒருவர் எழுதியிருந்தார். என் ஜோக் அவர் அடித்த ஜோக் முன்னால பக்கா ஜூஜூபி! அவருக்கு தான் முதல் பரிசு போகவேண்டும்! தமிழ்நாட்டில் எவனுக்காவது மலச்சிக்கல் வந்தாலும் அதற்கு காரணமும் மு.கவே என்று கூறும் ஊடகங்கள் (இதை சொன்னது நண்பர் அமுதவன்)

  (உண்மையான கடையேழு வள்ளல்கள் எல்லோர் பெயரும் ஞாபகத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நமக்கு தெரிந்த ஒரே வள்ளல் காது குத்து கல்யாணத்திற்கு நூறு இருநூறு கொடுத்த வள்ளல் தானே! Thanks to press!)

  ReplyDelete
 4. பரிசுக்கு நன்றி. நான் மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்கிறேன். பலரின் கருத்துகளும் பிரமாதம். போட்டியைத் தொடரவும். இவ்வளவு நகைச்சுவைக்கும் நமது தமிழ் அரசியல்வாதிகளே மூல காரணம். எனவே அவர்களுக்கும் நன்றி :-)

  ReplyDelete
 5. தங்களிடம் (விசுவிடம்) தொலைபேசியில் சொன்னது போல இப்போது இந்தப் பரிசை வாங்கும் நிலையில் இல்லை. என்னை மனம் விட்டு சிரிக்கவைத்த கருத்து எழுதிய மீரா செல்வக்குமார் அவர்களுக்கு இந்தப் பரிசை வழங்க பரிந்துரைக்கிறேன். எந்திரன் 5 கருத்தும் அருமை. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உங்கள் புத்தகத்தை எனக்கு அனுப்பி வைக்க சம்மதித்ததற்கு நன்றி. விலாசம் மின்னஞ்சலில்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தமிழ் பையன். தாம் விருப்பப்பட்ட படியே மீரா செல்வகுமார் அவர்களுக்கு பரிசை அனுப்பி வைக்கின்றேன். மீரா செல்வகுமார் அவர்கள் ஒன்றுக்கும் மேலான கருத்தை அனுப்பியுள்ளார். அதில் தம்மை மிகவும் கவர்ந்ததி எது என்பதை தயவு செய்து குறிப்பிடவும்.

   மீரா செல்வகுமார் அவர்களுக்கு , தாம் விருப்பத்திற்குரிய உணவகத்தை தெரிய படுத்தவும் . அதற்கான ஏற்பாடை செய்து தருகின்றோம்.

   அனைவருக்கும் நன்றி.

   Delete
  2. அன்பின் விசு அவர்களே..உங்கள் மீது நான் அதீத அன்பு கொண்டவன். எதையேனும் கொடுத்து கொடுத்து மகிழும் மனம் கொண்ட உங்களை நான் அறிவேன்.

   நீண்ட இடைவெளிக்குப்பிறகு எழுத ஆரம்பித்திருக்கிறேன். மிகக்குறுகிய காலத்தில் தங்களைப்போன்றோரின் அன்பெனும் பிடியில் அகப்பட்ட ஆனந்த மழையில்..

   உங்களின் போட்டிக்கான முடிவில் ஆர்வமாய் இருந்து...இல்லையெனத்தெரிந்ததும்..சரி இன்னும் நல்லா எழுதனும்னு போய்ட்டேன்..

   ஆனால்,இந்த இன்பாதிர்ச்சியை இப்போதே அறிந்தேன்..

   உள்ளூர் நீதிமன்றம் தயங்கினாலும்..உயர்நீதிமன்றமாய் பரிசுபெற்ற நண்பர் தமிழ்பையன் எனக்கு சிபாரிசு செய்திருப்பது இன்னும் மகிழ்ச்சி..

   பாருங்களேன்...பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி என் வாயில் விழுந்திருக்கிறது...நான் கூட்டணி அமையாத கட்சி மாதிரி இருந்திருக்கிறேன்...

   நன்றிகள் நண்பர்களே..

   Delete
 6. Congrats Thamizh Payyan and Meera Selvakumar.

  ReplyDelete
 7. தமிழ் பையனுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...