Monday, February 1, 2016

இரயில் பயணங்களில் ...

ஞாயிறு மதியம் போல் சமையலறையில் அம்மணிக்கு உதவி செய்து கொண்டு இருக்கையில்...

என்னங்க.. இது என்னா தெரியுதா?

சுரைக்காய்.

பெரிய சமையல் காரன்னு பேசின்னு இருக்கிங்களே .. இதை எப்படி
செய்யனும்னு தெரியுமா?

சுரைக்காய்.. எனக்கு... ஹ ஹா ஹா என்று ரஜினி பாணியில் சிரிக்க..

தெரியுமா .. தெரியாதா?

தெரியும்.

இந்தியாவில் எப்படி சமைப்பீங்க..


எண்ணை காஞ்சவுடன் கருவேப்பில்லை, கடுகு, ரெண்டு மிளகாயை வெட்டி போடு, நாட்டு வெங்காயம் பொடிசா  நறுக்கி எல்லாத்தையும் பொன்னிறம் வரவரைக்கும் தாளி. கொஞ்சம் சீரகம்., கூடவே ரெண்டு பூண்டை பொடிசா நறுக்கி போடு.. எல்லாம் சேர்ந்து வரும் போது கொஞ்சம் தேங்காய் பால்.. உப்பு ....போட்டு அது கொதிக்கும் போது சுரைக்காயை வெட்டி போடு. அது ரொம்ப கொல கொலன்னு வேகரதுக்குள்ள எடுத்துடு.. அம்புட்டுதேன்.

ஒ.. எங்க ஊரிலும் அப்படியே தான் செய்வோம்.

அலை பேசி அலறியது.

விசு...

சொல்லுங்க, மணி.

எங்கே இருக்கீங்க..

கழுதை கெட்டா குட்டிசுவர்..

ஒ வீட்டிலையா?

வீடே தான்,மணி என்ன விஷயம்?

எக்செளில் (Excel ) கொஞ்சம் உதவி வேணும், வரட்டா?

ஒரே நிமிஷம்..  அம்மணியிடம் கேட்டு சொல்றேன்.

விசு.. ஒரே நிமிஷம் வெயிட் பண்ணு. நான் இங்கே எங்கவீட்டு அம்மணியிடம் கேக்காம உன்னை கேட்டுட்டேன்.

ஒரு நிமிடம் கழித்து.

ஓகே.. இப்ப கேளு.

ஒரு நிமிசம் மணி.

மணி சாயங்காலம் வீட்டுக்கு வரார்.

அப்படியா. ராணியையும் கூட்டினு வர சொல்லுங்க.

மணி.. அம்மணியும் கூட்டினு வாங்க.

என்ன விசேஷம்..

விசேஷம் எதுவுமில்லை.இங்கே சேப்பங்கிழங்கும் சுரைக்காயும் செய்யுறாங்க.. உனக்கு பிடிக்கும். அப்படியே டின்னெர் முடிச்சிட்டு போகலாம்.

மணி மற்றும் ராணி தம்பதியினர் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். நல்ல மனிதர்கள். மணி ஒரு பெரிய நிறுவனத்தில் மனித வளம் துறை தலைவராக இருகின்றார். ராணி, ஒரு செவிலியர் கல்லூரியின் டைரக்டராக பணி புரிகின்றார்கள்.  இவர்கள் இல்லம் எங்கள் இல்லத்தின் அருகில் இருந்தாலும் இவர்கள் அலுவலகம் லாஸ் அன்ஜெல்ஸ் நகரில் உள்ளது. வீட்டில் இருந்து
 40 மைல் தொலைவு.

மாலை ஆறு மணி.. இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

எக்சல் வேலையை முடித்துவிட்டு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது..

ஏன் மணி.. உனக்கும் சரி அம்மணிக்கும் சரி வேலை லாஸ் அன்ஜெல்ஸ் நகரில். எப்படி ஒரே காரில் போய் வருகின்றீர்களா..?

என்ன விசு.. இங்கே இருந்து லாஸ் அன்ஜெல்ஸ்க்கு வேலைக்கு காரில் போக
முடியுமா? பயங்க போக்குவரத்து அதிகமா இருக்கும், அதனால் இருவரும்
காலையில் ட்ரெயினில் ஏறி போய்ட்டு   அதே ட்ரெயினில் திரும்ப வருவோம்.

வாவ்! இரயில் பயணங்களில் .. சூப்பர் மணி..  ரெண்டு பேரும் ஒரே ட்ரெயினில் கல்லூரி மாணவர்கள் போல்..

விசு .. ஒரே ட்ரெயினில் தான்.. ஆனாலும் வேறு வேறு கம்ப்பார்ட்மென்ட்.

ஒ. அவங்க லேடீஸ் கம்ப்பார்ட்மென்ட் நீ ஜென்ட்ஸ் ..

இந்த ஊரில் எங்க விசு .. லேடீஸ் .. ஜென்ட்ஸ்...

பின்ன ஏன் வேற வேற..

விசு... நான் அமைதிய விரும்புறவேன்.. அம்மணி எப்ப பாரு பேசினே இருப்பாங்க..

அதுதான் உலகம் அறிந்த உண்மையாச்சே, எல்லா வீட்டிலேயும் இதுதானே,
அதனால்..ன்னய்யா .. அமைதி கம்ப்பார்ட்மெண்டில் ஒரு அம்மணியை கூட காணோம்.  

நான்.. "Quite Car "  என்று அழைக்கபடும் கம்பார்ட்மெண்ட் .. அவங்க வேற கம்ப்பார்ட்மென்ட்?

புரியல..

விசு. இந்த "Quite Car " போறவங்க.. மிகவும் அமைதியாக  இருக்கணும். போன் பேசகூடாது, பாட்டு எதுவும் போட கூடாது. அமைதியா அவங்க அவங்க வேலைய பாத்துனு போவாங்க. யாராவது பேசினா. அங்கே இருக்கிற மத்தவங்க .. நம்மை அமைதியா இருக்க சொல்லுவாங்க.
விதி முறைகள் . 

அட என்ன மணி? அம்மணியோடு போறீங்க.. ஜாலியா ..ஒரே கம்பார்ட்மெண்டில்  ஜோடியா போறதா விட்டுட்டு..

என்ன விசு?  நாங்க என்ன புதுசா கட்டிக்கிட்ட ஜோடியா?  வீட்டிலே பேசுறதுக்கு நேரம் இருந்தாலும் மேட்டர் இல்ல, இதுல ட்ரெயினில் வேற உட்கார்ந்துட்டு. சரி.. எங்க சேப்பங்கிழங்கு ? அது என்னா வெள்ளையா?

சுரைக்காய். செஞ்சது அம்மணி தான் ஆனாலும் சொல்லி கொடுத்தத்து நான் தான் ...சரி இந்த அமைதி கம்பார்ட்மெண்டில் பேசினா என்ன பண்ணுவாங்க?

அடுத்த ஸ்டேஷன் வந்தவுடம் TTR வந்து இறங்க சொல்லுவாரு.

இதுலயும் லேடீஸ் தனி .. ஜென்ஸ்ட்ஸ் தனி அமைதி கப்பார்மென்ட் இருக்கா?

முந்தி இருந்ததாம். அப்புறம் கான்செல் பண்ணிடாங்க.

ஏன்.

"லேடீஸ் அமைதி கம்பார்ட்மெண்ட்" வருஷம் முழுக்க காலியாவே இருந்திச்சாம், ஜென்ட்ஸ் அமைதி கபார்ட்மெண்ட் நிரம்பி வழிஞ்சதாம். அதனால் ரெண்டையுமே ஜென்ட்ஸ்ன்னு மாத்திட்டாங்களாம்.

புத்திசாலிங்க.

அது சரி.. நீ ஏன் விசு இந்த "ட்ரைன்" விஷயத்த இவ்வளவு தீர விசாரிக்கிற ?

மலரும் நினைவுகள் மணி.. மலரும் நினைவுகள்.

விவரமா சொல்லு.. ஒரு  தலை ராகம், ரயில் பயணங்களில், கூட்ஸ் வண்டியிலேன்னு ஏதாவது பிளாஷ் பேக் இருக்கா?

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. பாம்பே நாட்களில் வேலைக்கு போக காலையில் மூணு ரயில் பிடிப்பேன். அதில் ஏறி உக்கார்ந்தவுடனே நம்ம எப்ப இறங்குவோம்னு எதிரிலேயே  கூட்டமா உரசின்னே வருவாங்க. இங்கே பார்.. அமைதி கம்பார்ட்மெண்ட்.. ஆட்டுக்குட்டி கம்பார்ட்மெண்ட் போட்டு  தாக்குறாங்க.. அதை நினைச்சேன்.

பின் குறிப்பு :

அம்மா... இது என்ன வெள்ளை கலர் கூட்டு?

சுரைக்காய்.

சுப்பாரா இருக்கே .. ஏன் இவ்வளவு நாளா செய்யல.

உங்கப்பாக்கு இதை செய்ய தெரியும்னு  எனக்கு எப்படி தெரியும்?

அப்பா செஞ்சாரா?

செஞ்சது என்னமோ நான் தான்.. சொன்னது அவர்.
6 comments:

 1. அது எப்படி உங்க நண்பர் கொயட் கம்பார்ட்மெண்டில் அமைதியாக சும்மா இருப்பது அது நல்லதாக படவில்லை அவருக்கு வலைத்தளம் பற்றி சொல்லி ஒன்று ஆரம்பித்துவிடுங்கள்

  ReplyDelete
 2. நல்லா இருக்கு சார் சுரைக்காய் கூட்டு,,,

  ReplyDelete
 3. ஆகா...விசு சுரைக்காயை எடுக்கிறாரே....ஏட்டுசுரைக்காயாய் மாறுமோ என நினைத்தால்..அது அழகான கூட்டுச்சுரைகாயாக மாறி...ரயில் பணங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டது...ஆறு அதன் போக்கில் போவதுபோல் செல்லும் நடையும் முடிப்பும் விசுவின் ஸ்பெசல்..விருந்து....எழுதுனது அவருதான்...சிரிச்சது நான்...

  ReplyDelete
 4. விசு, உங்களுக்கு ஒன்னு தெரியுமா? அமைதி கம்பார்ட்மென்ட்ல லேடீஸ் வந்துட்டுதான் இருந்தாங்களாம்! மனைவியைக் கழட்டிவிட்டுட்டு வந்த ஹீரோக்கள் எல்லாம் வழிய வழியப் பேசியதால் பெண்கள் ஏனடா வம்பு என்று அதில் செல்வதை நிறுத்திவிட்டாங்களாம். பாவம் அந்த ஹீரோக்கள், கம்பார்ட்மென்ட் மாறிச்சென்று பேசவும்முடியாமல் அமைதி கம்பார்ட்மென்ட்டில் பயணிக்கவும் பிடிக்காமல் வாயடைச்சுப் போய்ட்டாங்களாம்!
  ஹாஹாஹ்ஹ

  ReplyDelete
  Replies
  1. க்ரேஸ் அட! இதுதான் காரணமா!!!...விசு என்னடானா மாத்திச் சொல்லுறாரு பாருங்க !! ஹஹாஹஹ்

   கீதா

   Delete
 5. ஹஹஹ் நல்லாருக்கே ரயில்பயணம்...அமைதியா பயணிக்க சூப்பர்...இங்கயும் அந்தமாதிரிப் பெட்டிக் கொண்டுவந்தா நல்லாருக்கும்தான்..

  கீதா: அங்கிருக்கும் போது கேட்டதுண்டு பயணிக்க நினைத்ததுண்டு ஆனால் அதற்குள் இங்கு வருகை..

  அது சரி நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்களா அதையே தானே அவங்களும் எங்கள் ஊரில் இப்படித்தான் செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்...சரி அப்போ இன்னொரு பதிவு நீங்கதான் சொல்லிக் கொடுத்தீங்கனு சொல்லி மாட்டிக்கிட்ட பதிவு...ஹஹஹ

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...