Wednesday, January 20, 2016

So , தமிழ் நாட்டிலும் இப்படி நடக்க ஒரு வாய்ப்பு இருக்கா?

First thing First.

சுகவீனமாய் இருந்த நடிகர் - எழுத்தாளர் சோ. ராமசாமி அவர்கள் மீண்டும் சுகம் பெற்றி வெளியுலகிற்கு வந்துள்ளார் என்பதில் ஒரு மகிழ்ச்சி . துக்ளக்கின் இந்த ஆண்டு விழாவிற்கு வந்த அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த நிகழ்ச்சியை அருமையாக நடத்தி முடித்தார்.


சோ  அவர்கள் மேல் எனக்கு எப்போதுமே ஒரு "Love - Hate" உறவு. தனக்கு பிடித்தமானவர்களை கோபுரத்தில்  தூக்கிவைப்பார், பிடிக்கவில்லையென்றால்  குப்பைதொட்டி தான்.  மற்றும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதம் வேறு.

சோ அவர்களை ஒரு நகைச்சுவை நடிகனாக நான் அதிகம் பார்த்து இல்லாவிடிலும் ... பள்ளி நாட்களில் அவர்  நடித்த எதோ ஒரு ஒலிநாடா கிடைத்தது. அது சினிமாவா நாடகமா என்று தெரியவில்லை. நான் அந்த ஒலிநாடாவை அடிக்கடி போட்டு கேட்டுள்ளேன்.

அதில் ஒரு காட்சியில் சோ அவர்கள், கணக்கு பாடம் கற்று கொள்ள செல்வார் . அங்கே கழித்தல் கணக்கை சொல்லி கொடுக்கும் ஆசிரியயை  அவரை  கீழே  இருக்கும் எண் மேலே  இருப்பதை விட பெரிதாக இருந்தால்  உடனே பக்கத்தில் கடன் வாங்கு என்பார். சோ அவர்கள், பதிலாக .." இப்பதான் தெரியுது, ஏன் படிச்சவன் எல்லாம் வெட்கம் இல்லாமல்  கடன் வாங்குறான் என்று " என்பார். இது போல் அந்த நிகழ்ச்சியில் பல பஞ்ச்.

பிறகு, வெளி உலகம் அறிய ஆரம்பித்ததும் சோ அவர்களின் துக்ளக் பத்திரிக்கை  வாங்கி படிக்க ஆரம்பித்தேன். நல்ல நையாண்டி தனமாக இருக்கும். அதில் வரும் கார்டூன்கள் எனக்கு அதிகம் பிடிக்கும்.

பொதுவாக சொல்ல  வேண்டும் என்றால் இவர் எப்போதுமே ஒரு எதிர்வினையாக நினைக்க கூடிய மனிதர்.  அதனால் தன் பொதுவாழ்க்கையில் பெரும்பாலும் எதிர் கட்சியாகவே செயல் பட்டுவந்தார்.

காங்கிரஸின் ஊழலான ஆட்சியில் இருந்து இந்தியாவை யார் காப்பாற்றுவார்கள் என்று நிறைய பேர் ஏங்கும் போது, "அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்" என்று  அத்வானி காத்து கொண்டு இருக்கையில்.. "விழ போகும் பனம்பழத்தின்" மேல் மோடி அவர்கள் அமர... சோ மோடியின் தீவிர ரசிகர் ஆனார்.  மோடி அவர்களை சோ பாராட்டி பேசுவதை கேட்டால் நடுநிலையினருக்கு  கொஞ்சம் கூசும். அப்படி பாராட்டுவார்.

இதேபோல் கருணாதியின் தி மு க வில் இருந்து தமிழகத்தை யாராவது காப்பாற்றுவார்களா என்று தேடுகையில் தான் இவர் ஜெயலிதா அவர்களுக்கு நெருங்கிய ஆலோசகராக மாறினார்.

இப்படி மோடி - ஜெயலிதாவோடு  நெருங்கிய உறவு தொடர்வதால், சோ அவர்கள் இவர்கள் இருவரையும் எப்போதும் விட்டு கொடுக்கவே மாட்டார்.  அவர்கள் என்னதான் தவறு செய்தாலும்.. காங்கரஸ் - தி மு க விடை இவர்கள் பரவாயில்லை என்றும், இவர்களின் ஆட்சியில் குறையை விட நிறைகளே அதிகம் என்றும் ஒரு கருத்தை முன் வைப்பார்.

மற்றும், சோ அவர்களுக்கு ஏழை எளிய பாட்டாளி மக்கள் மேல் எப்போதும் அக்கறை இருந்ததாக நான் கருதுவது இல்லை. அவர் புத்தகமும் சரி, பேச்சுகளும்  சரி நடுத்தர மற்றும் பணக்கார வாசகரக்ளை மனதில் வைத்தே இருக்கும்.

தான் நம்பிய விஷயத்தை துணிச்சலாக சொல்வார். யாருக்கும் பயப்படமாட்டார்.

கடந்த சில மாதங்களாக இவர் நோய் வாய் பட்டு மருத்துவமனையில் இருந்தார். தற்போது நலம் திரும்பி  சக்கர நாற்காலியில் அமர்ந்தாலும் பேசும்  - கேட்கும் திறனோடு வந்துள்ளார்.

அவர் முழு பூரணம் அடைய அடியேனின் பிரார்த்தனைகள்.

இப்போது தலைப்பிற்கு வருவோம்.

இங்கே நான் வாழும் அமெரிக்காவிலும் சரி, மற்றும் இந்தியாவில் சில மாநிலங்களிலும் சரி. அரசியல் நாகரீகம் என்று ஒன்ற உண்டு. அது என்னவெனில், என்னதான் கொள்கை ரீதியாக எதிரியாக இருந்தாலும்  எல்லாரும் ஒரு நல்ல கெட்ட காரியத்தில் ஒன்றாக கலந்து கொள்பவர்கள், உறவாடுவார்கள்.

தமிழகத்திலும் பெரியார்- ராஜாஜி -அண்ணா - காமாராஜ் காலத்தில் இந்த பழக்கம் நீடித்தது என்று கேள்வி. ஆனால் கடந்த சில வருடங்களாக  தி மு க மற்றும் அ தி மு க என்ற இரு கட்சிகளின் தலைமை என்று கூறி கொள்ளும்      "ஏழரைகளால்" இந்த பழக்கம் முற்றும் மாறிவிட்டது.

பெரிய தலைவர்களில்  இருந்து அடிமட்ட தொண்டன் வரை அடுத்த கட்சிகாரனை பார்த்தால் ஒரு பரமஎதிரியாக பார்கின்றார்கள். இது தமிழகத்திற்கு வந்த கேடு.

ஒரு வெள்ள நிவாரணமாய்  இருக்கட்டும், அல்ல என்ன ஒரு பொது  பிரச்சனையாக இருந்தாலும் அனைத்து  கட்சி கூட்டம் என்ற பேச்சே தமிழத்தில் இல்லாமல் போய்விட்டது. அதற்கு  இந்த இரு கட்சிகளின் தலைவர்களே கரணம்.

இவர்கள் கட்சியை பற்றி யாராவது எதிர்த்து பேசினால் அவர்களை ஒட்டுமொத்தமாக ஒட்டி விடுவார்கள். ( ஐயோ.. ஐயோ.. என்று யாரோ சொல்வது கேட்கின்றது) .

இப்படியான ஒரு கேடு கெட்ட விவேகமற்ற அரசியல் சூழ்நிலையில் சோ அவர்கள் நடத்திய துக்ளக் ஆண்டு விழா சற்று வித்தியாசமாக இருந்தது.

இந்த விழாவில், சோ அவர்களை தவிர ... பழ கருப்பையா, இளங்கோவன், பொன் ராதா கிருஷ்ணன், அன்புமணி ராமதாஸ் , சரத்குமார் (அது சரி , இப்படி பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மட்டும் நேரம் இருக்கே , கொஞ்சம் அந்த நடிகர் சங்கத்துக்கு கணக்கையும் முடித்து  கொடுக்கலாமே, அப்படியே அந்த கும்பகோணம் தீ விபத்திற்கு  வந்த  அறுபது லட்சம் நிதி உதவி எங்க போச்சுனு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்)  போன்றவர்கள் மேடையில் அமர்ந்து இருந்தார்கள்.

இந்த காட்ச்சியை பார்த்ததும் நான் என்னை அறியாமலே மயங்கி விழுந்த நிலைமைக்கு  வந்து விட்டேன். என்ன ? தமிழக அரசியில் எதிரிகள், ஒரே மேடையிலா ? என்னால் எண் கண்ணையே நம்ப முடியவில்லை. சற்று நேரம் கழித்து சுதாரித்து எழுந்து நிகழ்சியை பார்க்க ஆரம்பித்தேன் .

இவர்கள் பேசுகையில் ஒருவரையொருவர் நட்ப்போடு  தாக்கி கொண்டதையும் , பேச்சின் நடுவே சோ அவர்களின் நக்கலும் மிகவும் ரசிக்கும் படி இருந்தது.

குறிப்பாக இளங்கோவன் அவர்கள் "மரம் வெட்டகூடாது" என்ற நக்கல் மற்றும் அன்புமணியின் "விஜயகாந்த்" நக்கல் கடைசியாக வந்த பழ கருப்பையா அவர்களின் ஜோரான  பேச்சும் ... மிகவும் நன்றாக  இருந்தது.

பழ கருப்பையா அவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்து விட்டார். அவர் சார்ந்த ஆளும் கட்சியினரை  ஒட்டு ஒட்டு என்று ஓட்டியவர்..

இளங்கோவனை ..

காந்தி அவர்கள் வளர்த்த காங்கிரஸ் கட்சியை  வளர்க்க இன்று நக்மா.. குஷ்போ.. என்று இளங்கோவனை கேட்க.

இவர் பேசி  முடித்து வந்தவுடன், இளங்கோவனும் இவரும்  கை குலுக்கி
வாழ்த்திகொள்ள .. சோ அவர்களோ..

பழ கருப்பையா அவர்கள் இப்போது  அ தி மு கவில் இருக்கார் !? (நாளை இருப்பாரோ என்ற தொனியில் )

என்று இன்னொரு நக்கல் அடிக்க .. நிகழ்ச்சி நன்றாக இருந்தது.

இந்த இரண்டு "ஏழரைகளின்" அரசியல் காலம் முடிந்தவுடன் ,இம்மாதிரியான நிகழ்சிகள் தொடர வேண்டும்.  முட்டாள் தானமான இந்த   தேவையில்லா பகைமை கண்டிப்பாக ஒழிய வேண்டும்.

நிகழ்ச்சிக்கு நன்றி சோ அவர்களே.

7 comments:

 1. விசு, சோ அவர்கள் நீங்கள் சொல்லியது போல்தான் என்றாலும், அவர் பலரையும் நக்கல் நையாண்டி அடித்திருந்தாலும். அடித்தாலும் அவரால் நக்கலடிக்கப்படுபவர்கள் கூட அவருடைய நண்பர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவரே ஒரு முறை தன்னைப் பற்றி ஒரு தொடர் ஏதோ ஒரு பத்திரிகையில் (குமுதம் என்று நினைக்கின்றேன்) எழுதிவந்த வேளையில் ஒரு நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இவர் கார் ஓட்டிக் கொண்டு வந்திருந்த போது சாலையில் வேகமாகவோ இல்லை ஏதோ ஒரு தவறு என்று நினைக்கின்றேன் ஓட்டியதை சோவின் காரின் அருகில் காரில் வந்துகொண்டிருந்த கருணாநிதி அவர்கள் பார்த்ததை வீட்டிற்கு வந்ததும் சோவைக் கூப்பிட்டிருக்கிறார். அப்போது சோவின் குட்டிப் பேத்திதான் எடுத்திருந்திருந்திருக்கிறார். அவரிடம் கருணாநிதி, உன் தாத்தாவை சாலையில் கவனமாக ஓட்டச் சொல் என்று அன்புடன் கடிந்து கொண்டாதக் குறிப்பிட்டிருந்தார். ஒரு சில எதிர்ப்புகள், மிரட்டல்கள் முன்பு வந்தது உண்டுதான். ஆனால், அவர் அசருபவர் இல்லை. எல்லா அரசியல் பிரமுகர்களுடனும் நல்ல தொடர்பில் இருப்பதாகத்தான் தெரிகின்றது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்.
  நாங்கள் கூட முன்பு எழுதிய ஒரு பதிவில் இந்தக் கருத்தை மட்டும் முன்வைத்திருந்தோம். அதாவது மேலைநாடுகளில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பொதுவான நிகழ்வுகள், முடிவுகளில் கலந்து ஆலோசிப்பது பற்றி இங்கு இல்லையே என வருந்தியது உண்டு, மத்தியிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி. கேரளத்தில் இந்த நிலைமை இல்லை.
  நல்ல பதிவு விசு..

  ReplyDelete
 2. மாறுபட்ட கருத்துகொண்டவர்களை இவ்வாறு ஒருங்கிணைத்து மேடையில் அமர்த்தி சமாளிப்பது என்பது அசாத்தியமானது. அதற்கு சோவை பாராட்டவேண்டும்.

  ReplyDelete
 3. சோ அவர்கள் சுகம் பெற்று வந்துள்ளார் என்பது மகிழ்ச்சி.

  ReplyDelete
 4. சோ அவர்களின் நிகழ்ச்சியில் இப்படி பல கட்சிக்காரர்கள் கலந்து கொண்டது வியப்புதான்! உங்களின் ஆசை எனக்கும் உண்டு. நிறைவேறினால் நன்றாக இருக்கும். இதே சோ அவர்கள்தான் 96ல் த.மா.கா ரஜினி அலையை உருவாக்கி திமுக ஆட்சி அமைக்க உதவினார். ஆனால் இப்போது ஓவர் ஜால்ராவாக ஆகிப்போனது கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. நீங்கள் சொல்வது போல சோ உயர்தட்டு மக்களுடனேயே அதிகம் பழகி இருப்பதால் அதற்கேற்ப எழுதி பேசி வருகிறார் என்று நினைக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 5. சந்தோசப்பட வேண்டிய நிகழ்வு...?!

  ReplyDelete
 6. உங்களை அசத்தினால் அது பெரிய விசயம்தான்

  தம +

  ReplyDelete
  Replies
  1. என்ன நண்பரே.. வஞ்சக புகழ்ச்சியா ?
   வருகைக்கு நன்றி ... :)

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...