Thursday, January 21, 2016

மாணவர் தற்கொலை! எங்கே தவறினோம்?

இந்த பதிவை  எழத தூண்டியதே ..

ரோஹித் என்ற மாணவனின் தற்கொலை நிகழ்ச்சி தான்.,

என்ன ஒரு மாபெரும் இழப்பு.  உயர்கல்வி படிக்கும் மாணவன் ஒருவன் இனிமேலும் என்னால் இதை தாங்கி கொள்ள முடியாது என்ற முடிவு. இது நாம் ஒரு சமூதாயமாக தவறிவிட்டோம் என்று தான் காட்டுகின்றது.

மிகவும் பழமைவாய்ந்த புகழ்பெற்ற ஒரு பல்கலைகழகம்.  அதில் "டாக்டரேட்" வாங்குவதற்கு வந்த மாணவர்கள், அதில் ஒருவர் தான் இந்த ரோஹித்.

அங்கே இரு  மாணவ அமைப்புகளுக்கு ஒரு பிரச்சனை.

இம்மாதிரியான பிரச்சனைகளில் கல்லூரி  நிர்வாகம் மட்டுமே தலையிட வேண்டும் என்ற சட்டம் வர வேண்டும்.  அதற்கும் முன்பு.. ஒர் நிமிடம்,  கல்லூரி நிர்வாகிகள் நியமிப்பதில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது.  இந்த தறுதலை அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் கல்லூரி அருகே மருந்துக்கு கூட செல்லாதவர்கள்.

உதாரணம் : பிரதமர் மோடி, கல்வி அமைச்சர் ஸ்மிரிடி இராணி,  காங்கிரஸ் தலைவி சோனியா, ராகுல், முதல்வர் ஜெயலலிதா, முன் னால் முதல்வர் கருணாநிதி, "கும்பிடறேன் சாமி பன்னீர்செல்வம்", மற்றும் பலர்.

உயர்கல்வி வாழ்கையை சற்றும் அறியாத இந்த மாதிரி ஆட்கள் இந்த நிறுவனங்களின் நிர்வாகத்தில் தலையிட்டால் இந்நாட்டிற்கு "அயையோ"

கல்வி கூடங்களில் பாகுபாடுகள் இருக்க கூடாது. ரோஹித் பிரச்சனயில் ..ஒரு அமைப்பு தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மற்ற அமைப்பை எவ்வளவு இழிவாக செய்யவேண்டுமோ அப்படி செய்து உள்ளது.

தவறு.. தவறு.. தவறு.

ரோஹித் தலித் என்ற சமூதாயத்தில் இருந்து வந்தவர்.இவரும்  மற்றும் சிலரும் சேர்ந்து அம்பேத்கார் என்ற பெயர் கொண்ட ஒரு இயக்கத்தில் சேர்கின்றார்கள். அதே நிறுவனத்தில் பி ஜே பியின் மாணவர் பிரிவிற்கான ஒரு அமைப்பும் உள்ளது.

கொள்கை ரீதியாக இந்த இரு அமைப்பின் உறுப்பினர்களுக்கும் நீண்ட கால பனிபோர். இந்த  பகைமை கொஞ்சம் கொஞ்சமாக முற்றி கடைசியில் தற்கொலை வரை வந்துள்ளது!

இந்த சோகத்தின் அடிப்படை காரணம் என்ன? சாதி, வெறி, மதம் என்று நாம் என்னத்தான் கூறினாலும், என்னை பொறுத்தவரை இந்த சோகத்தின் அடிப்படை காரணம் நமக்கு அமைந்த அரசியல் "தருதலைகளே".

மாணவர்கள்  கண்டிப்பாக அரசியலில் ஈடுபட வேண்டும். தன மனதிற்கு பிடித்த கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சியுடன் சேர்ந்து, கூடவே தம் படிப்பையும் தொடர்ந்து வருவது ஒரு மாணவருக்கான அழகு. இம்மாதிரியான அரசியலில் விருப்பம் காட்டும்  மாணவர்களுக்கு வளர்ந்த அரசியல்வாதிகள் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

ஆனால், இன்று நம் நாட்டின் நிலைமையோ வேறு. எந்த ஒரு அரசியல்வாதியையாவது நாம் நமக்கு வழிகாட்டியாக எடுத்து கொள்ள முடியுமா? நாட்டு அரசியலை விடுங்கள். தமிழக அரசியலக்கு வாருங்கள்.  நமக்கு வாய்த்த இந்த "ஏழரைகள்" யாராவது நம் மரியாதையை பெற்றவர்களா? அங்கே தான் பிரச்சனை ஆரம்பிகின்றது. இந்த மாதிரியான தறுதலைகளை தேர்ந்தடுத்த நாம் மீண்டும் மீண்டும் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்கின்றோம்.

இந்த கல்லூரியில் இந்த இரு அமைப்புகளுக்கும் பிரச்சனை. பொதுவாக மாணவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்களானாலும் ஒரு பொது பிரச்சனைக்காக ஒன்று கூட வேண்டும். ஆனால் நாம் நம் அடுத்த தலைமுறையை இப்படியா வளர்த்துள்ளோம்? அவர்களின் அறிவை தான் கெடுத்து குட்டி சுவராக்கியுள்ளோமே.

சென்ற வருடத்தில் ஒரு நாள் இந்த அமைப்பில் இருந்த ஒருவர் அடுத்த அமைப்பினரை "குண்டர்கள் " என்று  தம் முகநூலில் விமரிசிக்க அதையும் பலர் ரசிக்க, மேலும் சில விமர்சனங்கள் விட, அடுத்த அமைப்பினர் இவரிடம் மன்னிப்பு கேட்கும் படி சென்று இருகின்றனர்.

அந்த இடத்தில் ஒரு அமைப்பினர், மன்னிப்பு  கேட்க வந்தவர்கள் தம்மை கடுமையாக தாக்கினார்கள் என்று ஒரு குற்ற சாட்டை வைத்தனர்.  அடுத்தவரோ நாங்கள் அவ்வாறு தாக்கவில்லை என்று சொல்ல வழக்கு நீதிமன்றம் சென்றது. ஆவர்கள் கல்லூரியில் ஒரு சீர்திருத்த குழு போல் அமைத்து அந்த குழுவும் நடந்தவற்றை விசாரித்து இப்படி "அடி தடி" எதுவும்  நடக்கவில்லை என்ற முடிவிற்கு வந்து அம்பேத்கார் அமைப்பை சேர்ந்தவர்களை கடுமையாக கண்டித்து அனுப்பிவிட்டனர்.

இந்த பிரச்சனை இங்கே முடிந்து இருக்கவேண்டும். முடிந்ததா? அதுதான் இல்லை. இங்கே தான் நம் தறுதலைகள் வருகின்றார்கள்.

இந்த பிஜேபி சார்ந்த அமைப்பினர் இந்த முடிவு வந்ததும் அதை ஒரு இழிவாக எடுத்து கொண்டு, அவர்களை சார்ந்த மத்திய அமைச்சர் பண்டாரு அவர்களிடம் சென்று இருகின்றார்கள்.

ஒரு மத்திய அமைச்சர், பொறுப்பில் உள்ளவர் என்ன செய்யவேண்டும்? தீர விசாரிக்க வேண்டும் அல்லவா?  தீரவிசாரித்து இருந்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு குழு அமைத்து அந்த குழுவும் முடிவு எடுத்து விட்டது. இனிமேல் சமாதானமாக இருங்கள் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

இவர் என்ன செய்தார் ? உடனடியாக .. மத்திய அமைச்சர் ஸ்மிரிடி இராணியின் துறைக்கு ஒரு கடிதம். இந்த அம்மையாரை பற்றி சொல்லவே தேவையில்லை. 90ல் B Com   முதல் வருடம், 95ல் BA  முதல் வருடம், மற்றும் யேல் பலகலைகழகத்தில் ஒரே வாரத்தில் டிகிரி வாங்கிய அபூர்வ சுந்தரி.

இந்தியாவின் ஒட்டுமொத்த கல்வித்துறைக்கும் இவர் தான் தலைமை.

இந்த கடிதம் வந்தவுடன் இவர் என்ன செய்து  இருக்க வேண்டும்? தீர விசாரித்து இருக்கவேண்டும். என்ன செய்தார்? அடுத்த ஐந்து வாரத்தில் கல்லூரியின் நிர்வாகத்திற்கு ஆறு கடிதம்?

என்ன செய்தீர்கள் ? இது ஒரு VIP  இடம் இருந்து வந்த குற்ற சாட்டு. என்ன செய்தீர்கள் .. என்ன செய்தீர்கள் ?

கல்லூரியின் தலைமை என்ன செய்யும்? அவர்களும் இவர்களின் கீழ் பணியாற்றுபவர்கள் தானே. அதனால், மீண்டும் ஒரு குழு அமைத்து, இந்த முறை, இவர்கள் அந்த நபரை தாக்கீனார்கள்  என்று முடிவு செய்து தண்டனை அளித்தார்கள்.

என்ன தண்டனை. கல்லூரிக்கு வரலாம். விடுதியில் தங்ககூடாது. உணவு கிடையாது. நூலகத்தில் நுழைய கூடாது. மாதந்தோறும் வரும் சன்மான தொகை அளிக்க படாது.

இந்த சனியன் பிடித்த அரசியல்வாதிகள் கல்லூரிக்கு சென்று இருந்தால்  இதில் வரும் கஷ்டம் அவர்களுக்கு தெரிந்து இருக்கும். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் தங்களுடைய கட்சி, தங்களுடைய உறவு.  இவர்களை எதிர்த்து யார் பேசினாலும் அவர்கள் தண்டிக்க படவேண்டும்.

என்ன செய்வார் இந்த மாணவர். தன் பிறப்பே ஒரு விபத்து என்று எழுதிவைத்து விட்டு தன உயிரை மாய்த்து கொண்டார்.

 ஒரு அறிவியல் எழுத்தாளராக வர வேண்டும் என்ற கனவு சிதைந்ததின் காரணம் என்ன? அரசியல்வாதிகளின் அலட்சிய போக்கே. தான் என்ற ஒரு சுயநலமே.

மாணவர்கள் அடித்து கொண்டார்கள் என்றால் பெரியவர்கள் தானே அனைவரையும் கூட்டி சமாதானம் செய்ய வேண்டும் . ஆனால் இவர்களோ.

என்னை பொறுத்தவரை, ஒரு துறையில் படித்தவரே, தேர்ந்தவரே அந்த துறைக்கு மந்திரியாக வேண்டும்.  எதற்கு எடுத்தாலும் காலில் விழும் "கும்பிடறேன் சாமி பன்னீர் செல்வத்தினால்" தேநீர் போடும் போது பாலில் எவ்வளவு நீர் கலக்க வேண்டும் என்று தெரியும் ஆனால் பொது பணித்துறை அமைச்சராக வெள்ளத்து நீரை எப்படி கட்டு படுத்தவேண்டும் என்று தெரியகண்டிப்பாக வாய்ப்பு  இல்லை.

ஸ்மிர்தி இராணி அவர்கள் இந்த பதவியை எடுத்ததில் இருந்தே, தங்கள் கட்சிக்கு வேண்டியவர்களை ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் நியமித்து வருகின்றார்கள்.

இம்மாதிரியான செயல்கள் நம் நாட்டிற்க்கு ஒரு கேடு. 60 வருடம் காங்கிரஸ் செய்த அநியாயம் அட்டூழியம் எல்லாம் அழிந்தது என்று மகிழ்ச்சி அடைந்த நாம் நாம் அனைவரும், இப்போது.. " நமக்கு விடிவு  காலமே இல்லையா" என்ற நிலைக்கு தள்ள பட்டு இருகின்றோம்.

கடைசியாக ஒரு விஷயம்.

இந்த மாணவன் தன் இறப்பு குறிப்பில், தான் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன் என்பதே தான் செய்த குற்றம் போல் உள்ளதே என்று எழுதி இருகின்றார்.

கடந்த இரண்டு தினங்களாக நம் அரசியல்வாதிகள் இந்த இறப்பை ஒரு  கூத்தாடி நிகழ்ச்சியாக மாற்றி விட்டார்கள்.

காங்கிரஸ் இதை தங்களுக்கு சாதகமாகவும், BJP தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லாததை போலவும் .. என்ன ஒரு அநியாயம்.

இந்த மாணவர் தலித் அல்ல என்று BJP கட்சியை சார்ந்த ஒருவர் வாதிடுகின்றார். அட நாதாரி , அவன் இறந்த பின் அவன் சடலத்திலுமா உனக்கு சாதி?

இன்னொரு BJP பேச்சாளார்.. டாக்டரேட் படிப்பது மிகவும் கடினம். அதை சமாளிக்காமல் இறந்ததை போல் பேசுகின்றார்.

இன்னொருவர் .. இறந்த இவர் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியை ஆதரித்தார் என்று பேசுகின்றார்.

பிணந்தின்னி கழுகுகளை விட கேவலமானவர்கள் என்பதை தம் பேச்சில் சொல்லி  வருகின்றனர்.

அமைச்சர் ஸ்மிரிடி இராணி இந்த பிரச்சனை  ஒரு தலித் - மற்றவர்கள் பிரச்சனையே அல்ல என்று கொக்கரிகின்றார்.

அதுவும் ஒரு விதத்தில் சரியே..

இதன் பிரச்சனையே.. மருந்துக்கும் கல்லூரிக்கு செல்லாமல் கல்வித்துறையின் மந்திரியாக இவரை வைத்துள்ளோமே.. நம் அரசியல் சாசனம் தான் பிரச்சனையே.

தாழ்த்த பட்ட கருப்பு இன மக்களுக்காக தான் வாழ்வையே அர்பணித்த மார்டின் லூதர் கிங் பிறந்த அதே வாரத்தில் இந்த தாழ்த்தபட்ட மாணவன் அணைந்து போய் இருகின்றான்.

மார்டின் லூதர் அவர்களின் பொன்னான வாக்கு தான் நினைவிற்கு வருகின்றது.

“Injustice anywhere is a threat to justice everywhere.”
வாழ்க பாரதம்.

7 comments:

 1. மனதைத் தொட்ட வெளிப்படையான பதிவு.

  ReplyDelete
 2. மனம்தொட்ட பதிவு விசு.. வேதனையும் கோபமும் தெரிகிறது :-(

  ReplyDelete
 3. WHAT EVER YOU WRITE BASED ON MEDIA REPORTS...THE FACTUAL IS DIFFERENT...THERE IS NO DISCRIMINATION AGAINST DALIT...

  ReplyDelete
 4. இதற்கு விடிவு காலம் என்று பிறக்குமோ...?

  ReplyDelete
 5. //....இன்னொருவர் .. இறந்த இவர் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியை ஆதரித்தார் என்று பேசுகின்றார்.// ... The main accused in serial Mumbai blasts of 1993, Mr Yakub Memon was found guilty on several counts. Death sentence imposed by trial court was confirmed by Supreme Court; He was hanged. Some persons under the banner of Ambedkar Students Associationhad protested against hanging; in a meeting held in the University campus, they declared: " tum kitne yakub maar denge, har har ghar se yakub nikalega; i.e.: How many yakubs you kill? From every house one yakub will emerge!" Muzzarfarpur riots were not in the picture; nor was any Dalit-non-Dalit issue. further, when an ABVP student protested against this Yakub-sympathy line, he was thrashed; for that thrashing five students were originally rusticated; and later new VC reduced the pusnishment to eviction from hostel only and no rustication. நடந்தது இது தான். இதில் தலித் அல்லது தாழ்த்தப்பட்ட ஜாதி விஷயங்கள் இல்லை.. மாணவர் ஏதோ காரணத்துக்காக தற்கொலை செய்து அரசியல் வாதிகள் எடுத்து பா ஜ க வை வசை பாடுகின்றனர்.

  ReplyDelete
 6. அந்த மாணவர் தவறே செய்து இருந்தாலும் தற்கொலை என்ற முடிவை எடுத்திருக்க கூடாது. அதே சமயம் அதற்கு தூண்டிய அரசியல் அல்லக்கைகள் அட்டூழியம் அதிகம் என்றும் உணர முடிகிறது. சிறப்பான பதிவு! நன்றி!

  ReplyDelete
 7. சென்னை ஐ ஐ டி யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் ஒன்று ஆரம்பித்தார்கள். துர்வாசருக்கும், விவேகாநந்தருக்கும் அமைப்புகள் கொண்ட ஒரு நிறுவனம் ஐ ஐ டி. அதில் வேலை பார்க்கும் 480 பேராசிரியப்பெருந்தகைகளுள் 10 பேர் தலித், ஒருவர் பழங்குடியினர் 7 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர். பாக்கி உள்ள அனைவரும் 462 பேர் ஐயர் அல்லது ஐயங்கார் சாதியினர்.அந்த படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதன் பின்னணி என்ன என்று காண்பது மிக எளிது. ஏ பி வி பி என்ற அமைப்பைச்சேர்ந்தவர்கள் எந்தப்பின்னணி உடையவர்கள் என்று சொல்லத்தேவையில்லை. மனுவாதிகள். அப்புறம் எங்கே சமூக நீதி கிடைக்கும். ஹைதராபாத்தில் ஐந்து மாணவர்களை வெளியேற்றியது முற்றிலும் சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை. ஒருவரின் விலைமதிப்பற்ற உயிரைக்கொடுத்த பிறகு பாக்கி 4 மாணவர்களை உடனே உள்ளே எடுத்துக்கொள்கிறது. ஆனால் அதுவரை அவர்கள் லைப்ரேரியைக்கூட பயன்படுத்தத்தடை இருந்திருக்கிறது. தலித் என்ற ஒரு காரணத்துக்காக ஒரு இளைஞனை ஓட ஓட விரட்டும் உயர்சாதி ஆணவம் தவிர வேறெதுவும் இல்லை

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...