Thursday, January 14, 2016

ஒருவேளை சுயநலவாதிகளா?

பதிவுலகில் எழுத ஆரம்பித்து இரண்டு வருடத்திற்கும் மேல் ஆகி விட்டது. சில நாட்களில் எழுத எவ்வளவோ விஷயங்கள் இருப்பது போல் தெரியும், அடுத்த நாளே.. என்னடா இது ? ஒன்றுமே எழுத தோன்றவில்லையே என்றும் தோன்றும்.
என்னை பொறுத்தவரை என் இல்லத்தில் நடக்கும் தினந்தோற நிகழ்சிகளை யாரையும் புண் படுத்தாமல் ( என் இல்லத்தோரையும் சேர்த்து தான்) எழுத்து வடிவில் உருவாக்குவேன். அதை எழுதி முடித்ததும் ..இந்த பதிவை என் தாய் - துணைவி-ராசாதிக்கள் படித்தால் முகம் சுளிப்பார்களா என்று ஒரு முறை கவனமாக படிப்பேன். அவர்கள் முகம் சுளிக்க மாட்டார்கள் என்று எனக்கு நானே உறுதி செய்து கொண்ட பின் அந்த பதிவை வெளியிடுவேன். இது இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு.

அடுத்து பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகள். வாலிப வயதில் கல்லூரி நாட்களில் பிரமச்சாரி நாட்களில் நடந்த நிகழ்சிகள் அல்லவா? இவைகள் மிகவும் சுவராசியமாக இருக்க வாய்ப்புண்டு. இவைகளை எழுதும் போது, இதனால் இந்த நிகழ்ச்சியில் உள்ளவர்களுக்கு எந்த தலைகுனிவும் வரகூடாது என்று கவனமாய் இருப்பேன்.

அடுத்து.. நண்பன் தண்டபாணி. பதிவுலகில் என்னை அறியாமல் இருக்கலாம் ஆனால் ஒரு பதிவு கூட எழுதாமல் அருமை நண்பன் தண்டபாணி மிகவும் பிரபலமாகி உள்ளார். அவரை பொறுத்தவரை.. எனக்கு தன்னை பற்றி என்ன வேண்டுமானுலும் எழுதி கொள் என்ற ஒரு வார்த்தை சொல்லிவிட்டார். அதனால் பதிவுகளுக்கு பஞ்சமே இல்லை.

மற்றும். அரசியல்.. சொல்லவும் வேண்டுமா? நான் எந்த ஒரு கட்சியையும் ஆதரிப்பவன் அல்ல. எல்லா அரசியல்வாதிகளும் சனியன்கள் என்று நினைப்பவன். அதனால் எழுதுவது சுலபம். ஒரு முறை வாசகர் ஒருவர், பிரதமர் மோடியை பற்றி நான் எழுதிய பதிவை படித்து விட்டு ... நீ காங்கிரஸ் ஆதரவாளன், அதனால் தான் மோடியை பற்றி விமரிசிக்கிறாய். சோனியா - ராகுல் அவர்களை பற்றி எதுவுமே எழுதுவது இல்லை என்ற ஒரு குற்றசாட்டை வைத்தார். நியமான குற்றசாட்டு தான். நான் காங்கிரஸ் கட்சியை பற்றி அவ்வளவு எழுதியது இல்லை.. செத்த பாம்பை அடிப்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை, உற்ச்சாகமும் இல்லை, உந்துதலும் இல்லை.

நாட்டு நடப்பு..அடேங்கப்பா.. இதற்கு நாம் மிகவும் நன்றியாக இருக்கவேண்டும், எதுவுமே எழுத தோன்றாத நேரத்தில் ஒரு தமிழ் செய்தி தாளை திறந்துவிட்டால் போதும்..எண்ணற்ற பதிவுகள் நிமிடத்தில் கிடைக்கும். இதில் சென்னையின் வெள்ளம் போய்.. இப்போது ஜல்லி கட்டு வந்து இருகின்றது... அடுத்து என்ன ? பொறுத்திருந்து பார்ப்போம்.

சரி இப்போது தலைப்பிற்கு வருவோம்.

சென்ற வாரம் இந்தியாவில் வாழும் உறவினர் ஒருவரிடம் "கதைத்து" கொண்டு இருந்தேன். அப்போது அவர்கள் ... நான் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் தவறாமல் படித்து விடுவேன். உங்கள் பதிவை பற்றி என்ன வேண்டுமானலும் கேளுங்கள் என்னால் சொல்ல முடியும் என்று சவால் விட்டார்கள்.  நான் பதிலுக்கு .. சரி.. என் பதிவில் தங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்க .. நகைச்சுவை தான். மீண்டும் மீண்டும் படித்து சிரிப்போம் என்றார்கள்.

மிகவும் சந்தோசம் என்று கூறிய நான்.. அதுசரி.. இரண்டு வருடமாக படிக்கின்றீர்களே .. ஒரு முறையாவாது ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தால் அது என்னை போன்றவர்களை இன்னும் உற்சாகபடுத்தி இருக்குமே...என்றேன்.. அதற்கு அவர்கள் ..
அது.. நான்.. எனக்கு .. நேரம்.. இல்லை.. என் பெயர் வெளியே வேண்டாம் என்று தான் பின்னூட்டம் இடுவதில்லை என்றார்கள்.
இந்த பதிலை கடந்த சில மாதங்களில் நான் நிறைய முறை கேட்டுள்ளேன். இதை கேட்க்கும் போது மனதில் ஒரு வருத்தம் வரும்.
பதிவுலகில் நாம் எழுதவது ஒரு மன நிம்மதிக்கு. இதனால் பொருளாதார நன்மை எதுவும் கிடையாது.  இப்படி இருக்கையில் இதில் நமக்கு கிடைக்கும்  ஒரே வருமானம் இந்த பின்னூட்டம் . அதை நமக்கு தர நம் வாசகர்களால் இயலவில்லையே. ஒரு வேளை நாம் அவர்களை முழுமையாக கவர தவறிவிட்டோமா என்ற ஒரு எண்ணம் வந்தது.

நேற்று ஐரோப்பாவில் இருந்து ஒரு வாசகரிடம் பேசி கொண்டு இருந்தேன். அவரோ.. நான் தமிழ் மணத்திற்கு சென்று அங்கே அதிக வாக்குகள் பெற்ற பதிவுகளை மட்டுமே படிப்பேன் என்றார்.  அப்போது என்னுடைய பதிவுகளை நீங்கள் இதுவரை படித்ததில்லையா என்றேன்? அவரோ.. அல்ல, தங்கள் பதிவுகள் எனக்கு மின்னஞ்சலில் வருகின்றது அதனால் படித்துவிடுவேன். பின்னூட்டம் தர நேரம் இல்லை, இனிமேல் முயல்கிறேன் என்றார்.

நம் பதிவுகளை ஏனோ தானோ என்று படிப்பவர்களை விட்டுவிடுங்கள். நம் எழுத்துக்களை விரும்பி தேடி வந்து படிப்பவர்கள் அதற்கு பின்னூட்டம் இடுவது என்பது ஒரு கடமை அல்லவா? ரசித்து படித்தவர்கள் (ரசித்து படித்து இருந்தால் ) தாங்கள் ரசித்தோம் என்று சொல்வது தானே நாகரீகம். அதே போல்.. பதிவை படித்தவுடன்.. தங்கள் நேரம் வீணானது என்று பின்னூட்டத்தில் சொன்னால் தானே நம்மை நாமே திருத்தி கொள்ள முடியும்.

இப்படி பின்னூட்டம் இடாமால் செல்கின்றவர்களும் சுயநலவாதிகள் தானே.

அவர் பேசி முடித்ததும் தமிழ் மணத்திற்கு சென்றேன். என்னுடைய நிறைய பதிவுகளுக்கு ஒரு வாக்கு கூட இல்லை. ஒரு வேளை தமிழ் மணத்தில் வரும் வாசகர்கள் யாருக்கும் நேரம் இல்லை என்று ஒரு ஆறுதல் கூறிக்கொண்டே .

இந்த வாரம் வாசகர்களால் அதிகம் படித்த இடுகைகள் என்று ஒரு இடம் இருந்தது. பொதுவாகவே என்னுடைய பதிவுகள் இந்த இடத்தில் இடம் பெரும்.

அடுத்து "கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகைகள்" என்ற ஒரு பகுதி இருந்தது. நிறைய பதிவுகளுக்கு 10 -15 பரிந்துரைகள் இருந்தன. இதில் தான் அடியேனின் அதிக பட்ச இடுகைகளுக்கு ஒரு பரிந்துரை கூட இல்லை என்று அறிந்து சிறிது விசனபட்டேன்.

என்னடா இது ...? அதிகம் படித்த இடத்தில் நான் இருக்கின்றேன், ஆனால் படித்தவர் ஒருவர் கூட பரிந்துரைக்கும் அளவிற்கு நம் பதிவு இல்லையா?


இவ்வளவு எழுதிவிட்டோமே.. .நீ எத்தனை பேரின் இடுகைகளை பரிந்துரை செய்து இருக்கின்றாய் என்ற கேள்வி கண்டிப்பாக வரும், வர வேண்டும்.

கண்டிப்பாக பரிந்துரை செய்கிறேன் . பரிந்துரை செய்வது மிகவும் எளிது. அதற்கு தேவை ஒரே ஒரு சொடுக்கு. ஆனால் படித்த அனைத்தையும் நான் பரிந்துரை செய்யமாட்டேன்.  எனக்கு பிடித்ததை மட்டும் என் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்திய பதிவுகளை கண்டிப்பாக பரிந்துரை செய்வேன்.

என் பதிவுகளில் பல சில பல்லாயிரம் பேர் படித்தவை . அவை எதற்குமே ஒரு பரிந்துரை அல்ல.

இங்கே நான் எதையாவது தவறாக புரிந்து கொண்டேனா ? தெரிந்தவர்கள் ஒரு பரிந்துரை போட்டுவிட்டு, ஒரு பின்னூட்டமும் தாங்களேன்.

நன்றி .

பின் குறிப்பு :

ஏன் .. விசு.. இது உனக்கு தேவையா? உன் பதிவு பிடித்து இருந்தால் படிக்கிறவங்க கண்டிப்பாக பரிந்துரை செய்து இருப்பார்கள். படித்தார்கள் .. பிடிக்கவில்லை, பரிந்துரை செய்யவில்லை.  இந்த ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு முதலில் நல்லா எழுத கத்துக்கோ என்று .. பல குரல்கள் என் காதுக்கு எட்டுகின்றது.

என்ன ? நானும் மனுஷன் தானே.. என் ஒரு பதிவிர்காவது குறைந்த பட்சம்  ரெண்டு பரிந்துரைய பார்க்கனும்னு ஆசை படறது தவறா?

அப்ப முதல் பரிந்துரையை நீயே போட்டுக்கோ .. ரெண்டாவதா நான் போடுறேன்னு கிழக்கு சீமையில் இருந்து ஒருவர் கதறுவது தெரிகின்றது.
நண்பரே.. என் பதிவை நான் பரிந்துரை செய்வது.... ஹ்ம்ம்..... 

12 comments:

 1. இன்று முதல் கண்டிப்பாக படித்த பதிவுக்கு பின்னூட்டம் இடுவது என முடிவெடுத்து உள்ளேன்

  ReplyDelete
 2. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. "ஏன் .. விசு.. இது உனக்கு தேவையா? உன் பதிவு பிடித்து இருந்தால் படிக்கிறவங்க கண்டிப்பாக பரிந்துரை செய்து இருப்பார்கள். படித்தார்கள் .. பிடிக்கவில்லை, பரிந்துரை செய்யவில்லை. இந்த ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு முதலில் நல்லா எழுத கத்துக்கோ" என்று நான் சொல்லமாட்டேன், நகைச்சுவை புரண்டோடும் உங்கள் எழுத்தும் நடையும் ஈர்த்து பதிவர்கள் ஆனவர்கள் என்னைப்போல் பலர்.

  நீங்கள் பகவத் கீதை மட்டும் சாரி....கடமையை மட்டும் செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காமல்.

  வரும் பின்னூட்டம் ஒரு உந்து சக்திதான், ஆனால் வராத பின்னூட்டம் உங்கள் படைப்பாற்றலை பிந்து சக்த்தியாக்கிவிடாமல் முந்தி போலவே பதிவர்களை முந்தி(கொண்டு) பயணியுங்கள் பயன் - பலன் உங்கள் பின்னால் ஓடிவரும்.

  (அப்படியே என்னுடைய பதிவுகளுக்கும் கொஞ்சம் பின்னூட்டம் அளிக்க மறந்துடாதீங்க, இப்படி நான் சொன்னதை யாரிடமும் சொல்லிடாதீங்க.)

  கண்ணில் என்ன சோகம், ஏங்காதே,

  கோ

  ReplyDelete
 4. நாமே ஒரு புதிய முயற்சியில் இருக்கும் போது கவலை ஏன்...? சுயநலவாதிகள் என்பதை விட ஒரு வித சோம்பேறித்தனம் என்றும் கூறலாம்...

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  எனக்கும் இந்த அனுபவம் உண்டு. அதிகமானவர்கள் பதிவை வாசித்தாலும் பின்னூட்டமும் வாக்கும் குறைவாகவே இருக்கும். இதற்கு காரணம் நாம் மற்ற பதிவர்களின் பதிவுகளை படித்து கருத்திட்டு வாக்கிட்டால்தான் நமக்கும் நிறைய பரிந்துரை கிடைக்கும். ஆனால், நமது வேலைப் பளுவால் அது பெரும்பாலும் முடிவதில்லை. அதனால், முடிந்தவரை கருத்துரையிடுவோம். நமது நண்பர்களும் அதையே செய்வார்கள். நான் கூட உங்கள் பதிவின் ரசிகன்தான். ஆனால், கருத்துரை இடுவது குறைவுதான். பெரும்பாலும் மொபைலில் படிப்பதாலும் கருத்திட முடியாமல் போகிறது.

  நண்பர் கோயில் பிள்ளை சொன்னதுபோல் கடமையை செய்வோம், பலனை எதிர்பார்க்காமல்.
  t m 2

  ReplyDelete
 6. நல்ல கருத்தை முன் வைத்துள்ளீர்கள் விசு! நீங்கள் சொல்லியிருக்கும் தமிழ்மணம் பற்றிய விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அதைப் போய்ப் பார்ப்பது இல்லை. பரிந்துரை என்றால் என்ன? அதாவது ஓட்டு போடுவதா இல்லை அங்கு சென்று பரிந்துரைக்க வேண்டுமா? அப்படி ஒன்று இருந்தால் நிச்சயமாகச் சென்று பரிந்துரைக்கலாமே என்ற எண்ணத்தில்தான் இந்தக் கேள்வி.

  நீங்கள் சொல்லுவது போல் சைலன்ட் ரீடர்ஸ் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஏன் கருத்துச் சொல்லுவதில்லை என்று தெரியவில்லை. பொதுவாக என்னவென்றால், பதிவுலகில், நல்ல பதிவுகள் பார்த்துப் படித்துக் கருத்து இடுபவர்கள் மிக மிகக் குறைவே. நீ என் தளத்திற்கு வருகின்றாயா? நான் உன் தளத்திற்கு வருகின்றேன் என்ற அடிப்படையில்தான் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கின்றன. நாங்கள் அதில் விதிவிலக்கு. நல்ல பதிவுகள் கண்டால் அதை வாசித்துப்பாராட்டிக் கருத்து இடுவதுண்டு. பெரும்பான்மையான தளங்களுக்கு சப்ஸ்க்ரிப்ஷன் கொடுத்திருப்பதால் மெயிலில் பதிவுகள் வந்துவிடும். உங்கள் பதிவுகள் உட்பட..எனவே தமிழ்மணம் பற்றி அவ்வளவாகத்தெரியவில்லை.

  கருத்துகள் கொடுத்து ஊக்குவிக்கலாம்தான். சந்தோஷமாகவும் இருக்கும். நம்மைத் திருத்திக் கொள்ளவும் உதவும்தான். பலபதிவர்களின் மனக்கருத்துகளையும் முன்வைத்துள்ளீர்கள். நல்ல பதிவு!

  ReplyDelete
 7. Thanks for your writing I too reading your blog regularly but never given any comment
  It's due to two reasons ,one is unable to type in Tamil ,because you are writing So much in Tamil but I unable to type few words in Tamil ,another one is laziness

  ReplyDelete
 8. Mr. Sundarajan, Thank you so much for your feedback. I am thrilled that you read my blogs too. Dont worry if you are unable to type in Tamil. Feel free to type your thoughts in English. It really encourages me. Thanks again... Pongalo Pongal...

  ReplyDelete
 9. I read your blog regularly but never given any comment.. you are doing a great job.

  ReplyDelete
  Replies
  1. Dude..Thanks for the lovely note man. Do appreciate it. Keep dropping by.

   Delete
 10. I really like reading your blogs especially at times when I feel sad or in bad moods. Most of your blogs are very humorous which are written based on your daily incidents. I like the way you narrate and relate those incidents in such an attractive way. Thanks, keep on rocking.

  ReplyDelete
  Replies
  1. Thanks for dropping by. And Man, you just made my day. Its good to know that my writing bring the changes to your mood as you find 'em humorous. Keep coming. Thanks for your comment as well.

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...