Wednesday, January 13, 2016

பொங்கலோ பொங்கல் டு யு டாடி..!

டாடி…
சொல்லு மகள்..
இவ்வளவு நாளா நீங்க வெளி நாட்டில் இருந்தாலும் உங்களுக்கு இன்னும் சரியா ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை.

என்ன ராசாத்தி, வைச்சிக்கினா இல்லன்னு சொல்றேன். வளர்ந்தது இந்தியாவில், தாய் மொழி தமிழ். ஆங்கிலம் பேச ஆரம்பித்ததே உயர் நிலை பள்ளியில் தானே மகள்.. அதனால் அங்கே இங்கே கொஞ்சம் தடுமாறும்.. அதை நீ கண்டுக்காத!


என்னா?  உயர் நிலை பள்ளியில் தான் ஆங்கிலம் பேச ஆரம்பித்தீர்களா? அதுவரை..
எல்லாம் எங்கள் செந்தமிழில் தான்.
சாரி டாடி, ஐ டிட்ன்ட் மீன் டு ஹர்ட் யு.
யு  கேன் நாட் ஹர்ட் மீ, ஈவன் இப் யு ட்ரை மகள்.. சரி இப்ப என்ன என் ஆங்கிலத்தில் தவறு கண்டு பிடித்த?
பரவாயில்லை டாடி.. இட்ஸ் ஓகே.
இல்லடா ராசாத்தி, நம்ம தவறு செய்றோம்னு ஒருத்தர் சொல்லும் போது , அங்கேயே அவர்களிடமே அந்த தவறை சரி செய்ய பதில் கேட்டு அந்த காரியத்த சரி பண்ணி கொள்ள வேண்டும்.
இல்ல டாடி.. இன்றைக்கு காலையில் வீட்டில் அம்மா நல்ல பொங்கல் செய்தார்கள்.
ஆமா.. பொங்கலுக்கு ஆங்கிலத்திலும் பொங்கல் தானே மகள்.
அய்யோ … பொறுமை.. நீங்களும் சரி அம்மாவும் சரி பொங்கல் நல்லா சாப்பிட்டிட்டு எல்லாரிடமும் போனில் ஹாப்பி பொங்கல் .. ஹாப்பி பொங்கல்ன்னு சொல்றிங்களே.. அதை நீங்க குட் பொங்கல்.. இல்லாவிடில் டேஸ்டி பொங்கல், அல்ல நைஸ் பொங்கல், இனிப்பா இருந்த சர்க்கரை பொங்கல்  அப்படிதானே சொல்ல வேண்டும். ஒரு சாப்பிடும் விஷயம் எப்படி “ஹாப்பி பொங்கல்” ஆகும்.. அதுதான்..
அட என் வரபிரசாத ராசாத்தி.. அதற்க்கு அர்த்தமே வேறே..
அதில் என்ன வேற அர்த்தம்.. பொங்கல் மீன்ஸ் பொங்கல்.. உப்புமா மீன்ஸ் உப்புமா, கிச்சிடி மீன்ஸ்..பேட் உப்புமா (அம்மா உப்புமா செய்ய ஆரம்பித்து அது சொதப்பிவிட்டால் அதன் பெயர் தான் கிச்சிடி என்று பிள்ளைகளிடம் சொல்லி வைத்து உள்ளேன்).
இல்லடி ராசாத்தி… உன் தங்கச்சியையும் கூப்பிடு.. ஒரு விஷயம் சொல்றேன் . இதை கொஞ்சம் நாள் முன்னாலே சொல்லி இருக்க வேண்டும், பரவாயில்லை.
ரெண்டு பெரும் அமர..
ஒவ்வொரு  வருடமும் ஜன 13-16 வரை நம்மை போன்ற தமிழ் மக்கள் “பொங்கல்” என்ற திருவிழா கொண்டாடுவார்கள்.
நாலு நாளா டாடி… நாலு நாளும் பள்ளிவிடுமுறையா.. ?
உன் பிரச்சனை உனக்கு.. (மனதில்.. அப்பனுக்கேத்த பிள்ளைகள்.. கிறிஸ்துமஸ் முடிந்து ஆங்கில புது வருடம் ஆரம்பித்து ரெண்டு வாரத்தில்  பொங்கல் விடுமுறை… என்ன ஒரு ஜாலியான நாட்கள் அவை)
இந்த விழாவை தமிழர்கள் எல்லாரும் கொண்டாடினாலும், தமிழ் விவசாயிகளுக்கு  இது ரொம்ப முக்கியம்.
குழப்பம் பண்றீங்க டாடி. ஒவ்வொரு நாளா என்ன விசேஷம் சொல்லுங்க.
முதல் நாள் .. “போகி பண்டிகை” மகள். பழையவை எல்லாம் ஒழிந்தன எல்லாம் புதிதாயின என்ற வார்தைகேர்ப்ப வீட்டில் உள்ள தேவையில்லாத  பழைய பொருகள் எல்லாவற்றையும் வெளியே போட்டு எரித்து விடுவார்கள்.
டாடி.. அதை இங்கே செய்யாதீர்கள். பக்கத்துக்கு வீட்டில் இருந்து 911க்கு போன் போட்டாங்கனா, தீ அணைப்பு நிலையத்தில் இருந்து வண்டி  வந்து விடும். அதனால் முதல் நாள் கொண்டாட வேண்டாம்.
இல்ல மகள்.. இந்த நாளின் முக்கிய குறிக்கோள்.. தேவையற்ற பழையவைகளை எரித்து விடு.. உதாரணதிற்கு …போட்டி,பொறாமை.. கபடு,  சுயநலம் அந்த மாதிரி தேவையற்ற காரியங்களை மனதில் இருந்து எரித்து விட்டு, நம்மிடம் இருக்கும் நல்ல காரியங்களை மட்டும் தக்க வைத்து கொள்.
குட் ஒன் டாடி.. அப்புறம்..?
இந்த முதல் நாள் அன்று சிறுபிள்ளைகள் எல்லாம் பெற்றோர்களிடம் மற்றும் உறவினர்களிடம் போனால் அவர்களுக்கு பணம் கிடைக்கும்.
“ஐ லைக் திஸ் பொங்கல்” டாடி.. எங்க பணம் எங்கே?
முழுசா கேளு ராசாத்தி..
ரெண்டாவது நாள்  நாள் தான் பொங்கல்.. அதாவது ஜன 14- இல்லாட்டி 15ம் தேதி.. இந்த நாளை “தமிழ் புத்தாண்டு நாள்” என்றும் சொல்வார்கள். இந்த நாளில் உழவர்கள் எல்லாரும்  வீட்டிற்கு வெளியே வந்து அரிசி பொங்க வைப்பார்கள். அது பொங்கி வரும் வேளையில்   ” பொங்கலோ பொங்கல்”என்று எல்லாரும் சத்தம் போட்டு வருடம் முழுவதும் நமக்கு வாழ்க்கைக்கு  வெளிச்சமா இருந்த சூரியனுக்கு நன்றி சொல்வார்கள்.
இந்த அரிசி பொங்கி வருது இல்ல, அதனால் தான் இந்த நாளுக்கு பொங்கல் என்று பெயர்.
வாட் இஸ் தி மீனிங் ஆப்பொங்கல் டாடி..
“Overflowing”  மகள்.
ரெண்டாவது நாளும் எல்லாரும் குடும்பத்தோடு சேர்ந்து கும்மாளம் போட்டு சந்தோசமா இருப்பாங்க..
பொங்கல் அன்றைக்கு கூட பிள்ளைகளுக்கு பணம் கிடைக்குமா டாடி..
உன் பிரச்சனை உனக்கு…
மூணாவது நாள்..
உழவர்கள் திருநாள் என்று சொன்னேன் இல்லையா.. உழவனுடைய நல்ல நண்பன் யார்??
நாயா டாடி…?
மகள், நாய் அந்த காலத்தில் ஒரு வீட்டின் பாதுகாப்பிற்காக வளர்க்க படுவது. இந்த காலத்தில் மக்கள் ஏன் நாய் வளர்கின்றார்கள் என்று கேட்டால்.. அவர்கள் சொல்லும் ஒரு பதிலும் எனக்கு புரியவில்லை.
சரி… உழவனின் நல்ல நண்பன் யார் டாடி..?
மாடு.. மகள்..
மாடா, ஏன் டாடி..
மகள் இங்கே நீ மாடுகள் உழவனுக்காக செய்யும் வேலையை பார்க்க சந்தர்ப்பமே இல்லை, இங்க எல்லாம் மிசின் தான். ஆனால் நம்ம தமிழ் நாட்டில் மாடு தான் உழவனின் வலது கை போல் .அதனால் மூன்றாவது நாள் தான் வளர்க்கும் மாடுக்கும் மற்றும் மற்ற விலங்கினங்களுக்கும் “சூப்பர் பார்டி” ஒன்னு வைப்பார்கள் .சில வருடங்களுக்கு முன் வரை சாயங்கலாம் இங்கே “டெக்ஸாஸ்” மாநிலத்தில் நடப்பது  போல்.. “ஜல்லி கட்டு விளையாட்டு” 
இப்ப ஜல்லிக்கட்டு என்ன ஆச்சி?
அதை எல்லாம் தேவை இல்லேன்னு சில சனியன்கள் சொன்னதால, இப்ப வீர ஆண்மகன்கள் எல்லாம் பல்லாங்குழி, கண்ணாம்பூச்சி, அந்த மாதிரி ஒரு ஆட்டம்..
இது எல்லாம் ஆம்பிளைங்க ஆடுற ஆட்டமா ? அசிங்கமா இல்ல?
உனக்கு தெரியுது, இந்த சனியன்களுக்கு தெரியலையே.. 
மாடுகளுக்கு “சூப்பர் பார்டி”சரி.. பிள்ளைகளுக்கு காசு..?
மாடு மாதிரி நாலு காலில் நடந்து வந்தா தருவாங்க..
ரியலி டாடி?
இல்ல மகள், சும்மா தமாசுக்கு சொன்னேன்.
நாலாவது நாள்..காணும் பொங்கல்.. இந்த ஊர் “தேங்க்ஸ் கிவிங்” நாள் மாதிரி. குடும்பம் அண்ணன் தம்பிகள், சக ஊழியர்கள், உறவினர்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவார்கள்..இந்த நாளில் பொதுவாக கூட்டமா சேர்ந்து ஒரு சினிமா, பிறகு வீட்டிற்கு வந்து ஒரு பாயசம்.
இந்த நாலாவது நாளில் இன்னொரு விசேஷம்..
பிள்ளைகள் பணம் பற்றி தானே டாடி?
அதே தான். முதல் மூணு நாளில் பிள்ளைகள் அனைவருக்கும் நிறைய பணம் கிடைத்தது அல்லவா.
ஆமாம்..
அந்த பணத்தை எல்லாம் பிள்ளைகள் அனைவரும் தம்தம் தகப்பனிடம்  கொடுக்க வேண்டும். யார் நிறைய கொடுகின்றார்களோ அவர்களுக்கு ஒரு பெரிய கரும்பு.
இந்த நாலாவது நாள் அவ்வளவு நல்ல இல்ல டாடி..
இது தான் பொங்கல் விழா, அதனால் தான் நானும் அம்மாவும் எல்லாரிடமும்  “ஹாப்பி பொங்கல்”ன்னு சொன்னோம்..
ஹாப்பி பொங்கல் டு யு டு டாடி
அன்று இரவு..: தூங்கி கொண்டு இருந்த என்னை எழுப்பி.. டாடி..
உண்மையாகவே அந்த நாலாவது நாள் அன்று பிள்ளைகள் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டுமா?
இல்ல டா ராசாத்தி.. அப்பா தமாஸ் பண்ணேன்.
நான் அப்பவே யோசித்தேன் டாடி.. நீங்க என்றைக்கு தான் ஒரு பொய்ய கரெக்டா சொல்லி இருக்கீங்க..
என் இனிய தமிழர்களே.. இந்த பொங்கல் நன்னாளில் நம்மிடம் உள்ள வேற்றுமைகளை மறப்போம். நம்மை பிரிக்கும் சக்திகள் எதுவாய் இருந்தாலும் அவற்றை நிராகரித்து ” ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.
அனைவருக்கும்  “பொங்கல் நல் வாழ்த்துக்கள்”
சில சிறிய மாற்றங்களோடு ஒரு மீள் பதிவு தான். 

7 comments:

 1. சூப்பர் விசு சார்.அமெரிக்கால இருக்கிறஉங்க ராசாத்திக்கு மட்டுமில்ல. சென்னையில இருக்கிற பல ராசாத்திகளுக்கும் பொங்கல் பத்தி சொல்ல வேண்டிய நிலையில்தான் இருக்காங்க என்ன சுவாரசியமா சொல்லி இருக்கீங்க . பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. // போட்டி,பொறாமை.. கபடு, சுயநலம் அந்த மாதிரி தேவையற்ற காரியங்களை மனதில் இருந்து எரித்து விட்டு //

  அப்படிச் சொல்லுங்க...!

  இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. பொங்கல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. போனவருடம் படிச்ச மாதிரி இருக்கே என்று யோசித்தேன்! பொங்கல்விளக்கம் சூப்பர்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
  மகிழ்வோடு நவில்கின்றேன்
  கனிவோடு ஏற்றருள்வீர்

  ReplyDelete
 6. சூப்பர் விசு!! அழகான விளக்கம். அருமையான பொங்கல் வைத்துள்ளீர்கள்.
  ஐயோ போகி அன்று இங்கு என்னத்த சொல்ல..ஒரே ஸ்மாக்...புகை மயம். தொண்டை, கண்ணு எல்லாம் எரிச்சல் வெளிய போக முடியல..ஏன் இப்படி ஒரு கலாச்சாரம் என்ற பெயரில் டயர், ப்ளாஸ்டிக் எல்லாத்தையும் எரிக்கறாங்களோ...சுற்றுப்புறச் சூழல் பற்றிய அக்கறையே இல்லாமல்...தவறான புரிதல் பழையன கழிதல் புதியன புகுதல் என்று.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...