திங்கள், 11 ஜனவரி, 2016

"ஜல்லி கட்டு "....அடக்க போவது யாரு?

ரிங் … ரிங் .. அலைபேசியில் நண்பனின் பெயரை தட்டினேன்… அதுவும் ரிங்கியது….
இந்த பாடல் உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்பர் 2 தட்டுங்கள், இந்த பாடலை நீங்கள் இலவசமாக பெறலாம் .


“உன் பார்வையில் ஓர் ஆயிரம் கவிதைதான் எழுதுவேன் காற்றில் நானே …”
அடே  டே…முதுகலை இரண்டாம் ஆண்டு வெளி வந்த பாடல் அல்லவா .. எப்படி மறக்க இயலும்?
அலை பேசியோடு சேர்ந்து நானும் பாட ஆரம்பித்தேன்.
“தினமும் உன்னை நினைக்கின்றேன் … நினைவினாலே மறக்கின்றேன்.. உன் பார்…”
ஹலோ திஸ் இஸ் தண்டபாணி …
என்ன தண்டம்? நல்ல ரசித்து பாடும் போது சிவ பூஜையில் கரடி நுழைந்த மாதிரி நடுவில் வந்துட்ட?
வாத்தியாரே .. ஒரு விஷயம் கேட்பேன், தவறாக நினைக்க மாட்டியே ?
நீ என்ன கேட்க போகின்றாய் என்று எனக்கு தெரியும், நானே சொல்லுட்டா?
எங்கே சொல்லு?
கரடி நுழையர  இடத்தில நீ ஏன் சிவா பூஜை நடத்துற? அது  தானே !
எப்படி வாத்தியாரே, இவ்வளவு சரியா சொன்ன?
தண்டம், முயல் புடிக்கிற நாயை மூஞ்சை பாத்து கண்டு பிடிக்கலாம்.
வாத்தியாரே, ஒரு சின்ன பழமொழி விஷயம் . அதுக்கு போய் என்னை  நாய் பூனைன்னு சொல்றியே ?
பழமொழி சொன்னா ரசிக்கணும் தண்டம், ஆராய கூடாது.
இத எங்கேயோ கேட்டு இருக்கேன், வாத்தியாரே!
உன் சொந்த ஊர் “பம்மல்” தானே !
இல்ல வாத்தியாரே, மானமதுரை. பம்மலில் இருப்பது எங்க அப்பா அம்மாவுடைய  சம்பந்திகள் …
அடேங்கப்பா, மாமனார் மாமியார இவ்வளவு மரியாதையாக இப்படி கூப்பிட்டதை நான்  இப்ப தான் கேக்குறேன்.
அதனால தான் எங்க அப்பா அம்மாவை எல்லாரும் ” பம்மல் சம்பந்தி” ன்னு கூப்பிட ஆரம்பித்தார்கள்.
சரியா சொன்ன , இந்த பழமொழி “ஆராயற மட்டேரை” சொன்னது “பம்மல் K  சம்மந்தம்”!
ரொம்ப அவசியம், இப்ப, ஏன் கூப்பிட்ட வாத்தியாரே?
உனக்கு பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லலாம்னு தான்.
இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது.
ஏன் தண்டம்?
வாத்தியாரே, நீ என்ன வடி கட்டின அடி முட்டாள்ன்னு முடிவே பண்ணிட்டியா ?
பாணி, நல்ல நாளும் அதுவுமா ஏன் இப்படி பேசுற ?
பின்ன என்ன வாத்தியாரே  .. பொங்கல் நேத்திக்கி தான? நீ வேணும்னே ஒரு நாள் தாமதமாக என்னை கூப்பிட்டு “ஹாப்பி பொங்கல்னு” சொன்னா என்ன அர்த்தம்?
புரியல தண்டம்,
உனக்கு? , புரியல ..! வாத்தியாரே .. இன்னைக்கு மாட்டு பொங்கல். நான் மனிதனே இல்லை, ஒரு மாடுன்னு என்னை யோசித்து நீ மாட்டு பொங்கல் அன்றைக்கு என்னை கூப்பிட்டு வாழ்த்துர?
பாணி , எப்படி தண்டம், ரூம் போட்டு யோசிப்பாயா?
நீ உண்மையா அந்த எண்ணத்தில் இப்படி செய்யலையா?
சத்தியமா இல்லை தண்டம் !
அப்ப “சேம்  டு யு”…
தண்டம் இது தானே வேண்டான்றது .
வாத்தியாரே , சுந்தரி இங்கே தான் இருக்கா, அவளுக்கும் வாழ்த்து சொல்லிடு, “மாட்டு பொங்கல்” அன்னிக்கு வாழ்த்தாம போனா கோச்சிக்குவா .
ஹாப்பி மாட்டு பொங்கல் … சாரி , “ஹாப்பி பொங்கல்” சுந்தரி ..
என்ன அண்ணே கிண்டலா ?
என்னமா? உன் புருஷன் மாதிரியே நீயும் .. பீலிங் ஆகுற?
இல்ல அண்ணா , இன்றைக்கு மாட்டு பொங்கல், அதுக்கு என்னை வாழ்த்தி  கல்லாயிக்கிரிங்கன்னு தோணிச்சி.
நேத்து கொஞ்சம் பிசி, அது தான் கூப்பிட முடியல, சாரி !
தேங்க்ஸ் அண்ணா! ஹி ஹி ஹி !
என்ன சுந்தரி கிண்டலா சிரிக்கிற?
ஒன்னும் இல்லை…
ஒன்னும் இல்லையா? அந்த சிரிப்பை விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் போல இருக்கு, ஆனால் ஒன்னும் இல்லையா ?
இல்லை .. அந்த காலத்து ஜல்லி கட்டு விளையாட்டை யோசித்து பார்த்தேன், அது தான் சிரிப்பு வந்தது.
 அது வீர விளையாட்டாச்சே, அதை யோசித்தால் வீரம் தானே வரும், இங்கே சிரிப்பு வருது?
இல்ல அண்ணா , அந்த காலத்தில் ஆம்பிளைகள் எல்லாரும் ஆளுகொரு காளையை அடக்குனாதான் கல்யாணத்திற்கு  பெண் கிடைக்குமாம்.
சரி அதுக்கும் இந்த கிண்டலான சிரிப்புக்கும் என்ன சம்பந்தம்?
இல்ல, இந்த மாதிரி முறை எல்லாம் இப்ப இருந்தா உங்க நிலைமை தண்டம் நிலைமை யோசித்து பார்த்தேன்,  இந்த வயதிலும் ரெண்டு பேரும் பிரமசாரியா இருந்து இருப்பிங்க.
கிண்டல் … ஹ்ம்ம்? எங்கள பார்த்த காளையை அடக்கற மாதிரி தெரியல ?
நீங்க ரெண்டு பெரும்? காளையை?
சுந்தரி … “காளைதிருபுறசுந்தரி” .. அந்த காலத்து ஆம்பிளைங்க அடக்கிய காளைகள் .. ஜுஜுபி ..அதை ஒரு “காளை” தூக்கி தவம் செய்து கொண்டே அடக்கிவிடலாம். இந்த காலத்து பொம்பளைங்களை எங்கள மாதிரி துணிவா அடக்கி காட்ட சொல் .
சூப்பர் வாத்தியாரே !
என்று தண்டபாணி சொல்ல ... 
சுந்தரியோ...என்ன அண்ணே.. என்னமோ நாட்டமை போல் ஒரு சிரிப்பு.... 
ஒன்னும் இல்ல சுந்தரி... அரிவாள் மீசை வச்சிக்கினு ஒரு காளைய அடக்கிட்டு அந்த காளையுடைய கொம்பை வெற்றி பரிசா எடுத்துன்னு வீர நடை போட்டுன்னு வர மாதிரி நினைச்சு பார்த்தேன்.. அது தான் ஒரு வீர சிரிப்பு..
அதை கேட்ட சுந்தரியும் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தார்கள். 
ஏன் சுந்தரி... இப்படி சிரிக்கிற?
நீங்க கையில "கொம்பு"ன்னு சொன்னது எனக்கு "சொம்பு"ன்னு கேட்டுச்சி. அதை  கொஞ்சம் கற்பனை பண்ணி பார்த்தேன் . 
நானோ ..
பின் குறிப்பு : அன்று மாலை ..
ஏங்க … என்னமோ சுந்தரியிடம் வீட்டில் எங்க எல்லாத்தையும் துணிவா அடக்கி வைத்து இருக்கேன்னு போனில் சொன்னீங்களாமே?
ச்சே ச்சே .. அந்த போன் லைன் சரி இல்ல, அவங்களுக்கு தவறா கேட்டு இருக்கு!
அப்ப என்ன தான் சொன்னீங்க ?
வீட்டில் எல்லா துணியையும் அடுக்கி வைச்சேன்னு தான் சொன்னேன் .
அது …

முன்னாடியே படிச்ச மாதிரி தெரியுதா.. சில மாற்றங்களோடு வந்த பொங்கல் மீள் பதிவு தான். 

5 கருத்துகள்:

  1. நல்ல அடுக்கியிருக்கிறீர்கள்..வார்த்தைகளின் ஜாலமில்லை ஆனால் ஜீவன் இருக்கிறது..நகைச்சுவை இழையோடும் வரிகளுக்குள் ஒரு சமூக சிந்தனை..மருந்தை இனிப்புக்குள் வைத்து வழங்கும் லாவகம்....விசு உங்கள் எழுத்துக்களில் உயிர் இருக்கிறது...ரத்தமும் சதையுமாய் அது நடமாடுகிறது....படித்து முடித்த பின்பும் வீசிக்கொண்டே இருக்கிறது அதன் வாசம்....நன்றி விசு அய்யா...உங்கள் பதிவுகள் என்னை உயிர்ப்பிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. ஹா... ஹா... சுந்தரி அவர்கள் சொன்னது... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  3. மீள் பதிவென்றாலும் மீளாத சிரிப்பு தந்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. தலைப்பை மாற்றுங்கள். சரியான தலைப்பு: ஜல்லிக்கட்டு... அடங்கப் போவது யாரு?

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...