Sunday, January 3, 2016

அறைய வேண்டாமா இந்த தரித்தரத்தை ...


ஆண்டின் முதல் பதிவில் ஏதாவது நல்ல காரியம் எழுதலாம் என்று எழுதி தயார் செய்து வைத்து அதை வெளியீடுவதர்க்கு முன் என் போதாத காலம்  செய்திகளை படிக்க ஆரம்பித்தேன்.


நாஞ்சில் சம்பத் அவர்கள் பதவி பறிப்பு - செய்தி!

அட பாவி, இந்த மானகட்டவனை இப்போதாவது நீக்கினார்களே, என்று சந்தோஷ பட்டு கொண்டே ஏன் என்று பார்த்தேன்.

அங்கே கிடைத்த கேள்வி பதில்..

அருகில் ஒப்பாரி இருப்பதால் ஒரு திருமணத்தை நிறுத்தமுடியுமா? 

இந்த தரித்திரம் கொடுத்த பதில்.

அடே கேடு கெட்டவனே..


"வாடின பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்"

என்ற வம்சமடா தமிழ் வம்சம்.

அருகில் ஒப்பாரி வைக்கின்றார்கள் என்பதற்காக திருமணத்தை நிறுத்த வேண்டாம். ஆனால் அங்கே காரியம் நடந்து கொண்டே இருக்கும் போது அவர்கள் எதிரில் கடாவெட்டி விருந்து வைக்கீன்றீர்களே ..

மானம் கெட்ட மனிதர்களே.

அடுத்து..

ஐந்நூறு பேர் வெள்ளத்தில் அடித்து கொண்டா சென்றார்கள்? வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றவர்கள்...

அட கேடு கெட்டவனே ..

எனக்கு தெரிந்த வயதான தம்பதிகள் இருவர் தங்கள் இல்லத்திலேயே இறந்து போனார்களே. தூங்கி கொண்டு இருந்தவர்களின் இல்லத்தில் எச்சரிக்கையில்லாமல்  எரியை திறந்து விட்டதால் வந்த இறப்பை - இழப்பை வேடிக்கை பார்க்க போய் இறந்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு இறுமாப்பு.  

என்ன ஒரு திமிர். இந்த கேடு கெட்டவனை என்ன செய்வது ?

மேலும் .. 

"அத்திபூத்தது போல் என்றாவது மக்களை சந்திக்கும் முதலவர்" ... அடே முட்டாளே.. இதை போய் அந்த முதல்வரிடம் சொல். இந்த விஷயத்தை பெருமையாக வேறு சொல்கின்றாயே... 

தமிழகம் உன்னை எப்படி பொருத்து கொள்கின்றது.

தேர்தல் கூட்டணியில் கொள்கை என்ன கோட்பாடு என்ன? வெற்றி தான் முக்கியம்.

ஒரு கேவலமான உண்மையை இவ்வளவு தைரியமாக சொல்லும் அளவிற்கு நெஞ்சழுத்தம். கொள்கை - கோட்பாடு என்பதெல்லாம் இங்கு ஒன்றுமே இல்லை என்று மார்தட்டி கொள்கின்றானே. 

தமிழா... நாம் அனைவரும் ஒட்டு மொத்தமாக தலை குனியும் நேரம்!

13 comments:

 1. அன்பின் நண்பரே,,உங்கள் அறச்சீற்றம் புரிகிறது..மனப்பாட சக்தியும்,வெறும் வாயும் போதும் என்னும் கூட்டத்தை சேர்ந்தவர்.முன்பு வேறொரு மேடையில் இவர் அந்தம்மாவை எப்படியெல்லாம் பேசியவர் தெரியுமா?ச்சீ...நாயும் இந்த பிழைப்பு பிழைக்காது..

  ReplyDelete
 2. தமது நல்ல பேச்சு திறமையை விபசாரப்படுத்தியதால் கிடைத்த பலன்

  ReplyDelete
 3. ஹலோ உங்கள் தளத்திற்கு வயசானவர்களும் வந்து படிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு (Font)லெட்டர் அளவை கொஞ்சம் பெரிது படுத்தவும்

  ReplyDelete
  Replies
  1. அண்ணனுக்கு நல்ல டிசைன்ல மூக்கு கண்ணாடி பார்சேல்

   Delete
  2. யாரைச் சொல்லுகின்றீர்கள் வயசானவர்கள் என்று! ஓ சரி சரி உங்களைத்தானே! நாங்கள்லாம் யன்" காக்கும்!!ஹ்ஹாஹஹ்

   Delete
 4. May be he did it intentionally to wander to greener pastures!

  ReplyDelete
 5. ஹும் விசு நீங்கள் இன்னுமா நம்ம அரசியல் மக்களைப் புரிஞ்சுக்கல!! அம்மா அத்திப் பூத்தாபுல மக்களைச் சந்திச்சாங்களா? ஹை ஜோக்..அவங்க இப்பத்தானே 5, 6 நாள் முன்னாடிதானே இறங்கி வந்தாங்க! அதுவும் அவங்க மீட்டிங்குக்கு...உளறலுக்கு..

  ReplyDelete
 6. அம்மா, அறைஞ்சு போட்டாவே!

  ReplyDelete
 7. அறைய வேண்டாமா இந்த தரித்தரத்தை மட்டும் தானா... அக்கட்சியில் உள்ள அனைத்து சோம்புகளும் + தலைவர்களும் நல்லவர்களா. அவர்களும் அதே மனப்பான்மையோடு தானே இருகிறார்கள்.

  ReplyDelete
 8. அரசியல்வாதிகள் மக்களை நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள்! மக்களுக்குத்தான் அவர்களை புரியவில்லை!

  ReplyDelete
 9. அவர் இன்னொரு கட்சிக்குத் துண்டு விரித்துவிட்டார். அதனால் ஜெ வின் கோபத்துக்கு ஆளானார். அல்லது, வேறு ஏதாகிலும் செய்து அவர் மாட்டிக்கொண்டாரா என்னவோ. அதனால் தெனாவெட்டாக இந்தப் பேட்டி கொடுத்திருக்கலாம். "வாயை" வாடகைக்கு விடும் இத்தகைய மனிதர்களைப் பற்றிப் பேசுவது வீணே..

  ReplyDelete
 10. எழுதி எழுதி மாய வேண்டியதுதான் ... ஆணவமும் இளக்காரமும் தானே தலைவிரித்து ஆடுகிறது...மக்கள் புரிந்து செயல்பட்டால்... அட..போங்க விசு..

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...