செவ்வாய், 1 டிசம்பர், 2015

அறிவுகெட்ட தமிழன் நான்...

உலகம் முழுவதும் வரமாக இருக்கும் மழை தமிழனக்கு மட்டும் சாபம். என்ன ஒரு கேவலம். எங்கே பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நின்று கொண்டு  இருக்கின்றது.



நீர்வழி அத்தனையையும் ஆக்கிரமித்து விட்டு இப்போது தன் இல்லத்தில் நீர் புகுந்து விட்டது என்று ஒப்பாரி.


ஐம்பது  வருடங்களுக்கு முன் இருந்த ஏரி அத்தனையும் காணவில்லை. அவை அனைத்தும் கல்லூரிகள் ஆகி விட்டன. குளம் குட்டைகள் காணவில்லை. அவை அனைத்தும் இல்லங்கள் ஆகி விட்டன.

இவனை கேட்டால்.. அவன் மேல் பழிஅவனை கேட்டால் இவன் மேல் பழி.

உலகத்தில் உள்ள பல பழமை வாய்ந்த நகரங்களுக்கு சென்று பாருங்கள். ஒவ்வொரு நகரின் மத்தியிலும் ஒரு நதி.. அலை பாய்ச்சலோடு ஓடி கொண்டு இருக்கும். ஒரு நகரின் நதியை பார்த்தே அங்கே வாழும் மக்களின் மனநிலை வாழ்க்கை தரம் தனி மனித ஒழுக்கம் அவற்றை அறிந்து கொள்ளலாம்.

ஒரு நதியை பார்த்தவுடன் அந்த இடத்தின் அதிகாரிகளின் மனநிலையும் ஆட்சியாளர்களின் திறமையையும் கண்டு கொள்ளலாம்.

சென்னையின் (இந்த பாழா போகும் இடத்தை மெட்ராஸ் என்று அழைக்க மனதில் இடம் இல்லை)  நடுவில் அமைந்துள்ள கூவம் நதியை பார்க்கையில் ... இங்கே வாழும் "மக்கள் - அதிகாரிகள் - ஆட்சியாளர்கள்" இவர்களை பற்றி என்ன நினைக்க தோன்றுகின்றது.

இன்று தமிழன் வாழும் நிலையை பார்த்தால் ஆங்கிலேயன் காலத்து அடிமை வாழ்வே "பொற்காலம்" என்று தோன்றுகின்றது.

கர்மவீரர் காமராஜ் அவர்களுக்கு பின் தமிழன் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு தலைவரும் சாபம். இந்த சாபங்களை வரம் என்று போற்றியதால் இன்று மழை என்னும் வரம் சாபமாகியது.

இந்தியாவில் அமைந்துள்ள மற்ற மாநிலங்களுக்கு ஒப்பிடுகையில் தமிழன் படித்தவனாம். அது உண்மையாக இருந்தால் இன்னும் வெட்க  கேடு.  இவன் படிப்பெல்லாம் ஏட்டு சுரைக்காய் தான்.

இலவசம் என்ற கேடு கெட்ட வார்த்தைக்கு அடிமையாகி விட்டான். என்றைக்கு இலவசத்தை "இழவாக" "இழப்பாக"  நினைகின்றானோ  அன்று தான் விடிவுகாலம்.



வருடத்துவக்கத்தில் .. புதிய சாலை அமைக்க ஒப்பந்தம். சாலையே போடவில்லை. அதன் பின் போடாத அதே சாலையை பராமரிக்க ஒப்பந்தம் ... சாலையே இல்லை.. எங்கே வந்தது பராமரிப்பு?அதன் பின்  மழையால் பாதிக்கபட்ட சாலையை சீர் செய்ய ஒப்பந்தம்.

இதை எல்லாம் பார்த்து கொண்டு எனக்கு என்ன? என்ற சுய நலத்தோடு வாழ்ந்து கொண்டு ...
வெட்க கேடு.

தமிழனுக்கு தன்மானம் கிடையாது. இப்போது தேங்கி நிற்கும் நீர் வடிந்தவுடன், குடிநீர் பஞ்சம் என்று மீண்டும் வரிசையில் நின்று கொண்டு இருக்கும் வெட்கம் கெட்ட ஜென்மம் தான் இவன்.

இவனுக்கு தேவை எல்லாம்.. இலவசம்.

அட முட்டாள் தமிழா.. மழையும் "இலவசம்" தானே.. அதை ஒழுங்காக பெற்று காத்துக்கொள்ள தெரியாத உனக்கு போய் இயற்கை அன்னை
இதை தருகின்றாளே, அவளை திட்ட வேண்டும்.

உன் மனநிலைக்கு உன் வாழ்க்கை தரத்திற்கு உனக்கு தேவை மழை அல்ல.

உன் தேவையே.. டாஸ்மாக், விசிறி- தொலைகாட்சி பெட்டி, மற்றும் மூன்று  வேளை உணவு.

அட முட்டாள் தமிழா..மீன் பிடிக்கும் போது செல்கையில் தூண்டிலுக்கு போட மண்ணை  நோண்டி மண்புழு எடுக்கையில் அந்த உதவியற்ற உயிர் ஒரு சிறிய போர் நடத்தும். அந்த மண் புழுவிற்கு இருக்கும் ஒரு தன்மான உணர்ச்சி... உனக்கு இல்லையே. ஒரு உணர்ச்சியற்ற பிணமாகிவிட்டாயே.. 



நீ இப்படி தான் இருப்பாய். உன்னை திருத்தவே முடியாது. இன்னும் சில நாட்களில் தேர்தல் வரும். அதில் யார் அதிகமாய் இலவசம் தருகின்றார்களோ அவர்களுக்கு உன் வாக்கை தாரை வார்த்து கொடுத்து விட்டு, தற்போது மழையினால் சற்று சுத்தம் செய்ய பட்டு நதியாக மாறும் கூவத்தை மீண்டும் சாக்கடையாக்கி விடு.

கவலையே படாதே. அதிக மழையின் காரணத்தினால் மின்சாரத்தை துண்டித்து விட்டு இல்லத்திற்கு ஒரு மெழுகுவர்த்தி இலவசமாக   தருவார்கள். அதை பிடித்து கொண்டு நில் ...

கேடு கெட்டவனே. தமிழன் என்று சொல்லடா .. தலை குனிந்து நில்லடா.

16 கருத்துகள்:

  1. ஆசம்...
    ஏன்
    எத்தனை
    ஆவேசம்...

    இயற்கை
    சொல்லித்தரும்
    பாடம் படிக்கிறோம்

    அன்பாய் சொல்லி
    அலுத்து
    அடித்துச்சொல்கிறது..

    கொட்டும்
    மழையென
    அதனால் தான்
    சொல்லியிருப்பார்கள் போல...

    பொத்துக்கொண்ட
    வானமாய்
    வந்துவிழுகிறது
    வார்த்தைகள்....

    அடைகாத்த
    வார்த்தைகளை
    அழைத்துவந்த
    மழைக்கு
    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. Ponga sir . Tamil still waiting for free stuff.

    பதிலளிநீக்கு
  3. நண்பரே,

    இன்னும் நூறு பதிவுகள் எழுதினாலும் அல்லது நூறு பேர் நூறு நூறு பதிவுகள் எழுதினாலும், கல்வி அறிவு இல்லாத பெருந்தலைவர் பாணியில் பணியாற்ற எவரும் வரபோவதில்லை. இது தலைவர்களுக்கு..

    கொட்டும் மழை வெள்ளமென உருண்டோட ,ஓடும் வெள்ளம் வீட்டுக்குள் புகுந்தோட , உடமைகளை இழந்து உணவின்றி,உறங்க இடமின்றி, சாக்கடை கலந்த மார்பளவு தண்ணீரில் நிற்கும் மக்களை கானொளியில் பதிவுசெய்ய செல்லும் தொலைக்காட்ச்சி கேமராவுக்கு பல்லிளித்துகொண்டு கையாட்டி, அதில் தம் தலை வரவேண்டும் என்று அந்த நேரத்திலும் நினைக்கும் நீங்கள் சொல்லும் தமிழனுக்கு ஒரு தொலைகாட்சி பெட்டியையே , மின் விசிரியையோ, மாவரைக்கும் மிஷினையோ இந்த நேரத்தில் இனாமாக கொடுத்தால் கூட தன் கவலையை மறந்து விட்டு வரிசையில் நிற்பானே, இவனுக்கு இன்னும் 100 ஆண்டுகள் அல்ல 1000 ஆண்டுகள் ஆனாலும் தன்னிலை உணரும் வாய்ப்பு கேவிக்குறியே. இது அவனுக்கு.

    இனி உங்களுக்கு.

    கூவம் பாவம் என்று கூவும் உங்களுக்கு இன்னும் அறிவு போதாததினால்தான் நீங்கள் அமெரிக்காவில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள், அறிவு இருந்திருந்தால்,கூவம் பக்கமே ஒரு நல்ல இடம் வளைத்துபோட்டு ஒரு சின்ன ஆப்பகடையாவது வைத்து இருந்திருப்பீர்கள்.
    அவ்வப்போது கிடைக்கும் இலவச மாவரைக்கும் மிஷினாவது உங்கள் ஆப்ப கடைக்கு உதவியாக இருந்திருக்கும்.

    ம்....வரமும் சாபமாகும் என்பது நம் நாட்டில் மட்டுமே சாத்தியமாகும் எனும் உங்கள் ஆதங்கம் புரிய வேண்டியவர்களுக்கு கண்டிப்பாக புரியபோவதில்லை என்பது தெளிவாக புரிகிறது.

    மழை வெள்ளம் பற்றியும் அங்கே நம் மக்கள் படும் துயரங்களையும் காணும்போதும் படிக்கும்போதும் நம் உள்ளத்தில் உதிரம் அன்றோ உதிர்கிறது.

    கோ

    பதிலளிநீக்கு
  4. மனதில் உள்ளதை கொட்டித் "தீர்த்து" விட்டீர்கள்... தீர்வு தான் சந்தேகம்...!

    பதிலளிநீக்கு
  5. இந்த மழை நமக்கு நிறைய செய்திகளை கற்று தந்திருக்கு. ஆனா, நாம தான் அந்த பாடத்தை நல்லா உள்வாங்கிக்கிட்டோமான்னு தெரில

    பதிலளிநீக்கு
  6. ஒன்று எதுவுமே இல்லை என்பது, அல்லது எல்லாம் இருந்தது என்பது இரண்டுமே தவறுதான் விசு (also Madurai Guy!) கண்ணதாசன் இப்படித்தான் பிடித்தால் போற்றுவான், பிடிக்கலயா புழுதிவாரித் தூற்றுவான். எலலாவற்றிலும் இரண்டு முனை இருக்கிறது, நல்லதும் கெட்டதும். அளவின் அமைப்பில் அது நன்மையா தீமையா என்பது புரியும். காமராசரிடம் ப்ளஸ் அதிகம்தான், அவரும் பெரியாரும் இல்லையெனில் இந்த முத்துநிலவன் உட்படப் பலகோடிப் பேர் படித்திருக்க முடியாது என்பதும் உண்மைதான். ஆனால், அவர்தான் கருவேல மரங்களைத் தமிழ்நாடு முழுவதும் பாவியவர் என்பதை என்ன சொல்வீர்கள்? அதே போல அண்ணாவிடமும் ப்ளஸ் அதிகம் அவர்தான் தமிழனை ஓரளவு யோசிக்க வைத்தவர். அவர் தனக்குப் பின்னால் வந்தவர்களைக் கணிக்கத் தவறியது மைனஸ் முக்கியமாக திரைத்துறைக்கு அவர் தந்த முக்கியத்துவம் பின் வந்த தலைமுறைகளையே பாழாக்கிவிட்டதை இனிவரும் தலைமுறைகள் மன்னிக்காது. இப்படி அவர்கள் செய்த உணர்ச்சி வசப்பட்ட வார்த்தைகளாலேயே விசுவும் கொட்டிக் கவிழ்த்து தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா என்பதை என்னால் ஏற்க இயலவில்லை விசு. குணம் நாடிக் குற்றமும் நாடி இவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்ற நம் தாத்தனும் (தன்னைத் தமிழன் என்று சொல்லிக்கொள்ளாவிட்டாலும்) தமிழன் தான்! அவனைத் தலைகுனியச் சொல்வதை ஏற்பீர்களா? எனினும் தங்கள் சொற்களின் பின்னால் சுருண்டுகிடக்கும் தற்காலச் சோகத்தின் கனத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சரியான சவுக்கடி (எனக்கும் சேர்த்துதான்).

    பதிலளிநீக்கு
  8. ஐயா முத்துநிலவன் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்... அதே சமயம் உங்கள் கோபமும் நியாயமானது தான்.. தேவையானதும் கூட‌

    பதிலளிநீக்கு
  9. இதே ஆவேசம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருந்தால் எப்போதோ நாம் முன்னேறியிருப்போம். இப்போது கூட ஒன்றுமில்லை, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு....

    பதிலளிநீக்கு
  10. //இதே ஆவேசம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருந்தால்.....?/

    அட விடுங்கள் முத்து நிலவன், கார்த்திக்.
    ஆவ்சமும், கோ.பிள்ளையும் இங்கே இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்களோ... அதைத்தான் நாமும் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்! அம்புட்டு தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான சவுக்கடி (கோ.பிள்ளைக்கும் சேர்த்துதான்).

      நீக்கு
    2. விசு...இதென்ன சவுக்கடின்னு சொல்றீங்க ... it is just a matter of fact. உங்க கோபம், வயித்தெரிச்சல், ஆதங்கம் எங்களுக்கும் இருக்கு. ஆனால் எல்லோருமா ஆம் ஆத்மி மாதிரி ஆரம்பிச்சி ஏதாவது செய்ய முடியும், ஆதங்கம் மட்டும் தான் மிச்சம்.

      நீக்கு
  11. ஐயா முத்துநிலவன் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்... அதே சமயம் உங்கள் கோபமும் நியாயமானது தான்.. தேவையானதும் கூட‌.
    நன்றி ஜெயசீலன்.. உங்கள் கருத்தை நானும் பதிவு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. இந்த மழை நம்மை எப்படி எல்லாம் கோபம் கொள்ள வைத்து, எழுத வைக்கின்றது இல்லையா விசு. ஆனால் பாருங்கள் நம் மக்கள் இந்த மழை எத்தனைப் பாடங்கள் கற்றுக் கொடுத்தாலும் நாம் கற்க மாட்டோம் என்றுதான் நினைக்கின்றோம்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...