வியாழன், 26 நவம்பர், 2015

பங்கஜ"வலி" அம்புஜ நேத்திரி ...

அடுத்த நான்கு  நாள் "நன்றி திருநாள்" ஆயிற்றே.. அதனால் புதனும் அதுவுமாய் அருமை நண்பர் பரதேசிக்கு ஒரு போன் போட்டேன்.

ஹலோ...

அல்பி ...

அண்ணே.. விசு..

சொல்லு..

என்ன அண்ணே .. குரலில் தெம்பே இல்ல .. நல்லா இருக்கீங்களா?

ஏதோ போது ...

அண்ணே உடம்புக்கு ஏதாவது ..

உடம்புக்கு என்ன ....?

அண்ணே... எதோ உங்க மனச புண் படுத்தின்னு இருக்கு... நான் தவறான நேரத்தில் கூப்பிட்டேன் போல் இருக்கு...அப்புறமா கூப்பிடட்டா?

அப்படி எல்லாம் இல்ல...

என்ன அண்ணே.. சாதா நாளில் சக்கரை பொங்கல் சாப்பிடற ஆள், பொங்கலும் அதுவுமா கேப்ப கூழ் குடிச்சமாதிரி .. நன்றி திருநாள் வாரமும் அதுவுமா இவ்வளவு சோகமா ...

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல..

அண்ணே .. அகத்தின் அழகு.. அலைவரிசையில் தெரியுது... "இதுவும் கடந்து போகும் ".. விடுங்க அண்ணே..

சரி...

அப்படி என்ன தானே ஆச்சி..?

உனக்கே தெரியும் விசு...அண்ணி "ஏசு பிரான் பிறந்த இஸ்ரேல்" நாட்டுக்கு போய் இருக்காங்க...

ஆமா அண்ணே.. அவங்க என்ன அங்கேயாவா இருக்க போறாங்கா.
ரெண்டு வரம் தானே, வந்துடுவாங்க..இதுக்கு போய் இவ்வளவு சோகமா..

நீ ஈசியா சொல்லிட்டா.. எனக்கு தானே தெரியும்..

என்ன அண்ணே.. அவங்க போன அன்னிக்கு ...அஞ்சப்பர் சாப்பாடு.. வொர்க் ப்ரம் ஹோம்.. அது இதுன்னு தாக்குனீங்க. இப்ப சோகம் ஆகிடீங்க..

எல்லாம் கொஞ்ச நாள் தான் விசு...

சரி, விடுங்க.. வேறோ ஏதோ உங்களுக்கு மனசுல வருஷம்.. அண்ணி ஊருக்கு போன சோகம்ன்னு என்னிடம் மறைக்குரிங்க..

விசு.. உனக்கு இது புரியாது..

அண்ணே.. ஒரு திருமணம் ஆனா முனுஷனை அவன் மனைவி ரெண்டு வாரம் தனியா விட்டுட்டு போறது.. குறுஞ்சி பூ பூத்த மாதிரி..பனிரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான் நடக்கும்..

அது எனக்கும் தெரியும்.

பின்ன என்ன சோகம்..? "நோ தங்கமணி என்சாய்"னு சந்தோசமா இருக்குறத விட்டுட்டு.. இப்படி புலம்பின்னு இருக்கீங்க..

என் கஷ்டம் உனக்கு புரியல.

ஏன் .. சமையல் கஷ்டமா இருக்கா? சாப்பாடு எப்படி சமாளிச்சிங்க?

சாப்பாடு? என்ன நாலு பேருக்கு சமைப்பேன், இப்ப மூணு பேருக்கு சமைக்கிறேன்.

பின்ன என்ன பிரச்சனை?

அண்ணி இஸ்ரேல் நாட்டுக்கு ரெண்டு வாரம் போனாங்க இல்ல?

ஆமா, அதுக்கு தான் சந்தோசமா "என்சாய்" பன்னுங்கோன்னு சொன்னேனே..

நேத்தோட அந்த ரெண்டு வாரம் முடிந்தது. இன்னைக்கு திரும்பி வராங்கோ.. அவங்கள கூப்பிட தான் விமான நிலையம் போறேன் .

ஐயோ.. சாரி அண்ணே.. இப்ப புரியுது. ஆல் தி பெஸ்ட்.

பின் குறிப்பு ;
இது அண்ணனை கலாய்க்க மட்டுமே எழுதிய பதிவு. அண்ணி இல்லாமல் ஒரு நாளும் அவரால் இருக்க முடியாது என்பது நாடறிந்த உண்மை.

8 கருத்துகள்:

  1. அல்பி மனைவி இஸ்ரேல் போனதால் அவர் மனைவியை மிஸ் பண்ணுகிறார் அது போல என் மனைவி போனால் நான் பூரிக்கட்டையை மட்டும்தான் மிஸ் பண்ணுவேன்

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் கலாய்ப்பு
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஆக கடைசியில்
    ஒரு சிங்கம்
    மீண்டும்
    கூண்டுக்கு
    திரும்புகிறது..

    அடடே !!! ஆச்சரியகுறி ???

    பதிலளிநீக்கு
  4. சோகத்திற்கு காரணம் இது தானோ...? ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  5. ஹஹஹ் ! இதுவும் கடந்து போகும்!!!!

    அகத்தின் அழகு.. அலைவரிசையில் தெரியுது// அருமையான சொல்லாடல்!

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இது அண்ணனை கலாய்க்க மட்டுமே எழுதிய பதிவு. அண்ணி இல்லாமல் ஒரு நாளும் அவரால் இருக்க முடியாது என்பது நாடறிந்த உண்மை. ha ha ha ha............
    Joshva

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...