Thursday, October 8, 2015

விஷால் ரெட்டி to "விஷால் ரெடி"! (Vishal Reddy to Vishal Ready)

நன்றி திருமதி சரத்குமார் (Maiden Name : Radika Naayudu) அவர்களே, தோல்வி பயத்தினால் சமரசம் என்ற ஒரு போர்வையில் வந்து அமர்ந்து கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை "விஷால் ரெட்டி" என்று ஒரு சாதி மொழி வெறியை சங்கத்தில் நீங்கள் நுழைக்க நினைப்பது தெள்ளம் தெளிவாக தெரிந்தது.
விஷால் ரெட்டி  என்று அவரை அளித்த நீங்கள் ரஜினிகாந்தை ஏன் "சிவாஜி ராவ்" என்று அழைக்கவில்லை, தங்கள் சகோதரர் ராதாரவியை ஏன் ராதாரவி நாயுடு என்று அழைக்கவில்லை.


மேலும் பேசுகையில், துபாயில் ஏதோ ஒரு பிரச்சன்னையில் நான் விஷாலிடம் பேச முயற்சிதேன், ஆனால் அதை அவர் கேட்கும் நிலையில் இல்லை என்று அவரின் தனிப்பட்ட ஒழுக்கத்தை நாசூக்காக சொன்னீர்கள்.

மற்றவர்களின் தனிபட்ட ஒழுக்கத்தை நீங்களும் -சரத்குமாரும்- ராதாரவி நாயுடும் பேசலாமா?

இதில் அவசரம் அவசரமாக "சிம்பு" என்ற ஒரு நடிகரை அழைத்து வந்து " ராதா ரவி எங்கள் அப்பா போன்றவர், திட்டடுமே என்ற பேச்சு. சிம்பு அவர்களுக்கு,

"அப்பாவே, கொச்சை வார்த்தைகளில் தரம் குறைவாக பேசினாலும் அதை தவறு என்று சொல்பவன் தான் உண்மை மகன்"

சமரசம் செய்யவந்த இடத்தில நீ கையை சுட்டி சுட்டி தாறுமாறாக பேசி,  இருந்த இந்த அணிக்கு இருந்த கொஞ்சம் மரியாதையையும் கெடுத்துவிட்டாய்.


அது சரி, இந்த காணொளியில், ராதிகா அவர்கள் தான் வாயை கையினால் மூடி மறைத்து கொண்டு உனக்கு என்ன பேச வேண்டும் என்று சொல்லிகொடுப்பதை நாங்கள் பார்தோம். நீர் என்னவென்றால், அந்த இறைவன் பேச சொன்னார்  , நான் பேசினேன் என்கின்றீர்கள்.




1: 12 : 40 பாருங்களேன், வாயை மறைத்து அப்படி என்ன சொல்லி கொடுத்து இருப்பார்.

மற்றும், பத்திரிக்கையாளர் கூட்டத்தில், தாங்கள் பத்திரிக்கையாளரை செய்த நையாண்டி தனத்திற்கு தாங்கள் அழைத்து வந்த கூட்டம் " கை தட்ட" , அதை பத்திரிகையாளர்கள் தட்டி கேட்க, தாங்கள் முழித்த முழி வேடிக்கையாக இருந்தது.



பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஒரு நபரை ஒருமையில் .. நாய் நரி என்று நீர் பேசுவது, எங்களை போன்றோரை:



என்னடா இது, மரியாதை இல்லாமல் பேசுவது ராதாரவி நாயுடுவிற்கு பின் சங்கத்தில் இருக்காது என்றால், இல்லை இல்லை.. கேவலமாக மரியாதை இல்லாமல் பேச நான் இருக்கின்றேன் என்று நினைக்க வைத்தீர்கள்.

இதில் உங்கள் பேச்சில் .. நீங்கள் கேட்கும் கேள்வி..

பேசுவதற்கு ஒரு முறை இல்லையா?

முதலில் நீங்கள் பேச கற்று கொள்ளுங்கள். பிறகு அடுத்தவரை கேள்வி கேட்கலாம்.


பாண்டவர் அணிக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது எல்லாம், எதிர் அணியினர் தம் தோல்வியை தவிர்க்க செய்யும் ஒரே வழி, இந்த அணியை பிரித்தால் தான்" என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் போல் உள்ளது. அதற்குள் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து உங்கள் அணியை பிறக்க பார்ப்பார்கள்.
இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். பண பலம் - பதவி பலம் - அரசியல் பலம் அனைத்தும் இந்த வாரத்தில் வரும் . இவைகளை நீங்கள் எப்படி சமாளிக்க போகின்றீர்களோ. எனக்கே தெரியாது.

Let me repeat , their Mantra for the day is :

If you cant beat them, break them. 

இவர்களின் சூழ்ச்சிக்கு விழுந்து விடாதீர்கள்.


இப்போதைக்கு தேவை .. "மாற்றம்" .. சமரசம் இல்லை!


No comments:

Post a Comment

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...