சனி, 10 அக்டோபர், 2015

யார் இந்த பாடகி ! வலைப்பதிவு சந்திப்பில்...

 புதுகோட்டையில் நடந்து கொண்டுள்ள வலைபதிவு சந்திப்பின் நேரலையை பார்த்து கொண்டு இருக்கின்றேன்.  9000 மைல்களுக்கு அப்பால் என் இல்லத்தில் அமர்ந்து கொண்டு



https://www.youtube.com/watch?v=qNmGS8kniK



 என்ற தொடர்பில் மகிழ்ச்சியாக பார்த்து கொண்டு இருக்கின்றேன். நிகழ்ச்சி ஆரம்பித்ததுமே பரவசம்.



தமிழ்தாய் பாடலை பாட வந்த அந்த பெண்மணி என்ன ஒரு அருமையான குரல் வளம், அட்டகாசமான உச்சரிப்பு. அருமை .. அருமை. இன்னும் என்ன என்ன அதிசயமோ, இருந்து பார்க்கலாம்.

இந்த நிகழ்ச்சியை நேரில் காண உதவி செய்த அணைத்து நண்பர்களுக்கும்  நன்றி !

9 கருத்துகள்:

  1. அந்த சிறுமி புதுக்கோட்டை பதிவர் மகாசுந்தரின் மகள். இனிமையாகப் பாடினார்.
    தொலை தூரத்தில் இருந்தாலும் பதிவர் விழா சிறப்புற நடைபெற்றதற்கு ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, முரளி அவர்களே. நேரலையில் தங்களையும் கண்டேன். அங்கே இருக்க முடியவில்லையே என்ற தாக்கம் மனதில் இருந்தது. அருமையான நிகழ்ச்சி.
      இந்த சிறுமி மிகவும் அழகாக பாடினார்கள். அவர்களுக்கும் மற்றும் இந்த ராசாத்தியை பெற்றடுத்த பெரியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. சொல்ல வந்த செய்தி மூங்கில் காற்றின் வழி வந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  3. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    நன்றி...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  4. அன்பு நண்பர் விசு அவர்களே! தங்களின் இந்தப் பாராட்டை -அப்போதே தாங்கள் என்னிடம் செல்பேசியில் சொன்னதை- உடனே விழாவிலேயே சொல்லி, அதுவும் விழாவில் பகிரப்பட்டு மகிழ்ச்சி ரெட்டிப்பானது போங்க..

    பதிலளிநீக்கு
  5. தொழில்நுட்பம் தூரங்களை குறைதிருக்குது. நேரலையை செயல்படுத்திய விழாக் குழுவினருக்கு ஒரு சல்யூட்

    பதிலளிநீக்கு
  6. அய்யா ..வணக்கமும் நன்றியும்..!.
    அந்தச் சிறுமியின் தந்தை நான்தான்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! போற்றி பாராட்ட படவேண்டிய ராசாத்தி பொக்கிஷம் ஐயா.. சீராக பராமரியுங்கள். பிரகாசமான எய்திர்காலாம் அமையும். வாழ்த்துக்கள் .

      நீக்கு
  7. அருமையான குரலில் பாடிய குழந்தையைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி..சகோ.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...