Wednesday, October 7, 2015

மெட்ராஸ் டு சென்னை ... ரயில் பயணங்களில்..

சீக்கிரம், சீக்கிரம் எல்லாரும் கிளம்புங்க.

காலையில் 4:30க்கு அலாரம் அடித்தவுடன் அனைவறையும் எழுப்ப ஆரம்பித்தேன்.

என்ன டாடி...? இப்ப தான் 4:30 .. ஏன் எழுப்புரிங்க?

நம்ம இன்றைக்கு மெட்ராஸ் போறோம் இல்ல அதுதான்.

விமானம் எத்தனை மணிக்கு ?

விமானம் இல்ல மகள், இது ரயில்...?

என்ன ரயிலா.. ?


ஆமா ... 6 மணிக்கு கிளம்பிடும் . ஷாதாப்தி  .. ஒரே ரயில் தான் மாற
வேண்டியது இல்ல . பெங்களூர் டு மெட்ராஸ் ... அஞ்சு மணிநேரத்தில் போயிடலாம்.

விமானத்தில் எவ்வளவு நேரம் டாடி..

ஒரு மணிநேரம் போல..

பின்ன ஏன் .. ரயில்..?

அடியே நான் பெத்த ராசாத்தி.. இந்த வழியில் ரயிலில் போனா .. அப்பா வளர்ந்த ஊர் நிறைய வரும் அப்படியே பாத்துனே போகலாம் ..

டாடி, அமெரிக்காவில் இருந்து கிளம்பும் போது தண்டபாணி மாமாவுடைய பொண்ணு ஒரு விஷயம் சொல்லுச்சி..?

என்ன சொல்லுச்சி ?

ரயில் பிரயாணத்தில் ரொம்ப கவனமா இருக்க சொல்லுச்சி..

அப்படியா .. கவனமா இருக்கலாம் .. கிளம்புங்க .. கிளம்புங்க..

வீட்டை விட்டு போவதற்கு முன் ரெண்டு பேரும் இன்னொரு முறை பாத்ரூம் போயிட்டு வந்துடங்க ..

ஏன் டாடி..

இதோட பாத்ரூம் மதராசில் தான், அஞ்சி மணி நேர பிரயாணம் ..

என்ன? அப்ப ரயிலில் பாத்ரூம் இல்லையா?

பாத்ரூம் இருக்கு .. ஆனால் தண்டபாணி பொண்ணு சொல்லுச்சி இல்ல, அந்த கவனம் பாத்ரூம் தான்.

ஏன்..

இல்ல மகள், எனக்கு தெரிஞ்சவரை, ரயில் பாத்ரூம் கொஞ்சம் சுத்தமா இருக்காது .. அதுதான் . இங்கே விட்டா இதோட மதராசில் தான் ... சீக்கிரம் கிளம்புங்க..

காரை பிடித்து ரயில் நிலையத்தை வந்து அடையும் போது மணி  5:45. நால்வரும் ஆளுக்கொரு இருக்கையில் அமர வண்டி புறப்பட்டது.

டாடி,

இளைய ராசாத்தி அலறினாள்.

என்ன ?

தப்பான ரயிலில் ஏறிட்டோம்...

யார் சொன்னா ?

இது மெட்ராஸ் போகல .. வேற எதோ ஊருக்கு போது..

என்ன சொல்ற ?

அங்கே பாருங்க .. "பெங்களூர் டு சென்னை" போட்டு இருக்கு ..

அடியே என் ராசாத்தி ரெண்டுமே ஒன்னு தான்.

என்ன சொல்றிங்க?

முந்தி மெட்ராஸ் தான் பெயர், இப்ப சென்னை..?

ஏன் மாத்திடாங்க..

ஒன்னும் இல்ல, எங்கள் தலைவர்கள் ஏதாவது ஒரு முக்கிய மக்கள் பிரச்னையை திசை திருப்பனும்னா,  இந்த மாதிரி ஊர் பேரை மாத்தி வைப்பாங்க, மக்களும் அந்த முக்கியமான விஷயத்த மறந்துட்டு இதை பத்தி பேசுவாங்க..

புரியல டாடி..

சரி.. இது புரியுதான்னு பார்.

நீ அவசரமா என்னிடம் வந்து உனக்கு ஒரு புது செருப்பு வேணும்னு சொல்ற..

ஓகே ..

எனக்கு வாங்கி கொடுக்க இஷ்டம் இல்ல ..

ஏன்  டாடி.. ?

கதைக்கு சொல்றேன் ..

சரி, இஷ்டம் இல்ல ...

நான் இப்ப வாங்கி தர மாட்டேன்னு சொல்லாம .. செருப்பா?  வாங்கிடலாம்னு சொல்லிட்டு .. என்ன நிறத்தில் வேணும்னு கேப்பேன்..

கருப்பு டாடி...

நீ கருப்புன்னு சொன்னவுடன் நான் உடனே ..

வேண்டாம் மகள், பிரவுன் வாங்கி தரேன்னு சொல்லுவேன்.

நீ உடனே கருப்பு தான் வேணும்னு அடம் பிடிப்ப.. நான் உனக்கு ஏன் பிரவுன் தான் நல்லா இருக்குன்னு சொல்லி தருவேன் .. அதுக்குள்ள ரெண்டு மணி நேரம் போய்டும், நீயும் செருப்பை மறந்துட்டு.. கருப்பா  - ப்ரௌனான்னு யோசித்திட்டு தூங்க போய்டுவ.. அப்படிதான்..

திஸ் இஸ் சீட்டிங், டாடி..

எக்சாக்ட்லி ..

சோ .. இவ்வளவு நாளா என்ன இப்படிதான் ஏமாத்துனிங்களா?

அப்படியும் சொல்லலாம்.

என்று சொல்லும் போதே,.

டாடி.. பாத் ரூம்...

மகள் .. இன்னும் 2 மணி நேரம் .. வீட்டுக்கு போய்டலாம்..

இல்ல இப்ப போகணும்..

சரி இங்கேயே இரு, ஒரு அஞ்சு நிமிடத்தில் நான் கை காட்றேன் வா...

ஓகே ..

முன் எச்சரிக்கையோடு கையில் எடுத்து கொண்டு வந்த .. பாத் ரூம்  ஸ்ப்ரே, ஈரமான டிஷு, மற்றும் ஒரு சிறிய டவல், கொஞ்சம்  கிளீனிங்  திரவம் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு போய், கையுறை  ஒன்றை அணிந்து அந்த பாத்ரூமை நன்றாக சுத்தம் செய்து விட்டு ஸ்ப்ரே அடித்து விட்டு ராசாத்தியை அழைத்தேன்.

ராசாத்தி உள்ளே செல்ல மிகவும் சோர்வோடு நான் வந்து என் இருக்கையில் அமர்ந்து..

என்ன விசு.. எந்த பிரச்சனை வந்தாலும் 234 தொகுதியா பிரிச்சி .. அட்டகாசம் பண்றியே .. என்னமோ போ, விசு என்று நானே பாராட்டி கொண்டு இருக்கையில், இருக்கையில்..


என்னமோ போ, விசு

ராசாத்தி தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

டாடி.. நீங்க சொன்ன மாதிரி இந்த பாத்ரூம் அவ்வளவு மோசம் இல்ல,  நல்லா தான் இருக்கு . உள்ளே நல்ல ஸ்ப்ரே வாசனை, டிஷு, டவல் எல்லாம் சுத்தமா தான் இருக்குது.

அப்படியா மகளே, ரொம்ப சந்தோசம்! ஆச்சரியமா இருக்கு .. என்று நொந்து கொண்டே கொஞ்சம் சாய்ந்து அமர்ந்தேன், ஐந்து நிமிடம் கழித்து,

எதிரில் இருந்த 60 வயது பெரியவர் தன் மனைவியிடம் சொன்னார்..

நான் தான் சொன்னேனே..மோடிவுடைய "கிளீன் இந்தியா" திட்டம் சூப்பரா
வரும்னு.. அங்கே போய் பாத்ரூம் பாரு.. அவ்வளவு சுத்தமா இருக்கு , சுத்தம் மட்டும் இல்ல ..அமெரிக்கா ரயிலில் இருக்கிற மாதிரி எல்லா சாமானும் இருக்கு ..

என்று சொல்ல..

அட பாவி.. எல்லாவற்றையும் அங்கேயே வைத்து விட்டேனே.. என்று அடித்து பிடித்து ஓட.. அங்கே..

நான் வைத்த சமாச்சாரம் எல்லாம் காணமல் போய் .. பாத்ரூம் மட்டும் மீண்டும் அழுக்காய் இருந்தது.

ஒருசமாச்சாரம்  இல்லாமல் எல்லாவற்றையும் சுத்தமாக திருடி கொண்டு போய் விட்டார்களே.. அதனால் தான் இதற்கு பெயர் "கிளீன் இந்தியா" என்று வைத்து இருப்பார்களோ .....

பின் குறிப்பு :
புதுகோட்டை சந்திப்பிற்காக  இந்தியா வந்துள்ளேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். இது நான் சென்ற முறை இந்தியா வந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சி.

16 comments:

 1. கடைசி வரி வரையில் நீங்கள்
  பதிவர் சந்திப்புக்காக இந்தியா வந்துள்ளதாகவே
  நினைத்துக் கொண்டுப் படித்தேன்
  சுவாரஸ்யமான பகிர்வு
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 2. கலக்கல் பதிவு, ரசித்து படித்தேன்....உங்களின் பலமே இந்த மாதிரி நகைச்சுவையாக விஷயத்தை நாசுக்காக சொல்லுவதுதான். இவ்வளவு திறமையை வைத்து இவ்வளவு நாள் எங்கே ஒழிந்து இருந்தீங்க விசு.பாராட்டுக்கள். நல்லவேலை நீங்கள் கொஞ்சம் லேட்டாக வந்தீங்க இல்லைன்னா மதுரைத்தமிழன் ஆள் அடையாளம் இல்லாமல் ஒடி ஒழிந்து இருப்பான். நீங்க போடுற பதிவை பார்த்தா சிக்கிரம் நான் இடத்தை காலிபண்ணிவிட வேண்டியதுதான் போலிருக்கிறது. பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. வஞ்ச புகழ்ச்சி இல்லை என்று நான் நினைத்தால், தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

   மற்றபடி... என் மனதில் பட்டதை என் அறிவுக்கு எட்டிய படி சொல்லி வருகின்றேன். எவ்வளவு நாள் போகும் என்று தெரியாது, போகிறவரை போகட்டும்.

   நீங்கள் எல்லாம் பதிவுலகின் ஜாம்பவான்கள்.. நீங்கள் மலை நாங்கள் மடு தான் ஐயா !

   Delete
  2. பிடித்து இருந்தால் கண்டிப்பாக அது யாராக இருந்தாலும் பாராட்டுவேன் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அதுதான் மதுரைத்தமிழன் அதுமட்டுமல்லாமல் பாராட்டுவது என்றால் பொதுவிலும் குறைகள் இருந்தால் அதை தனிப்பட்ட முறையில் இன்பாக்ஸில்தான் சுட்டிக்காட்டுவேன்

   Delete
  3. தூரத்தில் இருந்து பார்த்தால் இமயமலையும் மடு போலத்தான் அது போலத்தான் நீங்களும் இமயமலை போல இருக்கிறீர்கள்

   Delete
 3. //எங்கே ஒழிந்து இருந்தீங்க //

  எங்கே ஒளிந்து இருந்தீங்க?

  "ஒழிந்து" ன்னா அர்த்தம் வேற.

  ReplyDelete
  Replies
  1. நான் ஒளிந்து - ஒழிந்து தான் இருந்தேன் ஐயா.

   Delete
  2. தவறை சுட்டிகாட்டியதற்கு நன்றி....

   Delete
 4. மதுரை தமிழன் அவர்கள் சொல்வது போல எந்த ஒரு தகவலையும் நகைச்சுவையாக சொல்வதுதான் உங்களின் பலம்! அசத்திட்டீங்க! உங்களை வேலூரில் சந்திக்க முடியாமல் போனது வருத்தமே!

  ReplyDelete
  Replies
  1. என் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் படித்து நேரம் எடுத்து பின்னூட்டம் இடும் என்னை உற்சாக படுத்தும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. சந்திக்க இன்னொரு முறை சந்தர்ப்பம் கிடைக்காமலா போய் விடும்.. ?

   Delete
 5. கலக்கல் அய்யா!
  தொடக்கத்திலிருந்து முடிவுவரை என்னவொரு விறுவிறுப்பு! அதிலும் மெலிதாக ஒட்டிக்கொண்டிருக்கும் நகைச்சுவை அருமை. கிளின் இந்தியாவுக்கு புது விளக்கம் தந்ததற்கு நன்றி!
  புதுகை பதிவர் சந்திப்பில் தங்களின் நூல் பரிசுக் கேடயத்துடன் கிடைத்தது. இப்போதுதான் படிக்க தொடங்கியிருக்கிறேன். உங்களின் நடை அருமை!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. வாரும் நண்பரே. உற்சாகபடுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி. புத்தகத்தை படித்த பின் நிறை குறைகளை கண்டிப்பாக தெரிவிக்கவும்.

   Delete
 6. இதையும் ,இவர்களையும் கிளீன் பண்ண யார்தான் வருவார்களோ ?

  ReplyDelete
 7. ஹஹாஹா நீங்க க்லீன் பண்ணா பேரு மோடிக்குப் போயுடுச்சே.. அதுக்கும்மேல யாரோ ' க்லீன்' பண்ணிட்டுப் போய்ட்டாங்களே..
  ரயில் பிரயாணக் கொடுமையை நகைச்சுவையாச் சொல்லிட்டீங்களே..
  அது சரி, மெட்ராஸ் சென்னையாக மாறி இவ்ளோ நாளா ராசாத்திகளை அழைத்துச் செல்லவில்லையா :-)

  ReplyDelete
 8. யதார்த்தமான நகைச்சுவைப் பதிவு. கிட்டத்தட்ட சென்னை என்று பெயர் மாற்றி 20 வருடங்களுக்கு மேலாகிறது. இன்னும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு மெட்ராஸ் என்றா சொல்லிக்கொடுப்பீர்கள்? எனக்குக்கூடத்தான் பெயர் மாற்றம் பிடிக்கவில்லை. இது குறித்து பத்திரிகையில் அப்போது கட்டுரை கூட எழுதினேன். ஆனாலும் மாற்றத்தை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்!

  ReplyDelete
 9. Sema kalakkal pathivu.... sirithu sirithu.... clean India, hahahha!
  //ஒன்னும் இல்ல, எங்கள் தலைவர்கள் ஏதாவது ஒரு முக்கிய மக்கள் பிரச்னையை திசை திருப்பனும்னா, இந்த மாதிரி ஊர் பேரை மாத்தி வைப்பாங்க, மக்களும் அந்த முக்கியமான விஷயத்த மறந்துட்டு இதை பத்தி பேசுவாங்க..// - sema!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...