Tuesday, October 6, 2015

நடிகர் சங்கம் : உனக்கும் எனக்கும் தான் என்ன?

நடிகர் சங்க பிரச்சனைக்கும்  உனக்கும் என்ன சம்மந்தம் விசு. இப்படி பதிவு மேல் பதிவு போட்டு தாக்குறியே என்ன விஷயம்? என்று பலர் கேட்டதினால், அதற்க்கு பதிலாக இந்த பதிவு !

 “If the misery of the poor be caused not by the laws of nature, but by our institutions, great is our sin.”

― Charles Darwin, Voyage of the Beagle

மனித இனத்தை சேர்ந்த நாம் அனைவரும் வாழ்நாளில் சில காரியங்களை செய்ய தவறி இருப்போம்.  எத்தனை வருடங்கள் ஆகினும் இந்த காரியம் நம் மனதை உறுத்தி கொண்டே இருக்கும். ஒரு தவறு செய்து விட்டோமே என்ற இந்த உணர்வு நம்மை விட்டு நீங்காது. எனக்கு அப்படி நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி.


பலவருடங்களுக்கு முன் வளைகுடா  பகுதியில் தங்கிவாழ்ந்து இருந்த நாட்கள். பிரம்மச்சாரி  வாழ்க்கை.


நம்பியார் பாணியில் .. "ஆண்டவன் படைச்சான் , என்கிட்டே கொடுத்தான், அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்" ( வெயிட் எ நிமிட், இது சிவாஜி பாடிய பாடல் அல்லவா, நம்பியார் அருகில் இருந்து விசில் தானே அடிப்பார்..? சரி விடுங்க.. வாழ்க்கையிலே நம்பியார் சந்தோசமாக இருக்கும் ஒரே பாட்டு. அது தான்) என்று இருந்த நாட்கள்.

வியாழனும் அதுவுமாய் ஒரு நாள் காலையில் நண்பர்களோடு "கோல்ப்" ஆட காலை 9 மணி போல் வண்டியை விட ஆரம்பித்தேன்.

கூட கூட பேச படாது.. அங்கே வியாழன் தான் வார இறுதி!

பத்து மணிக்கு எல்லாம் "கோல்ப்" மைதானம் சென்று விடவேண்டும், இல்லாவிடில் அடியேனை ஆட்டத்தில் சேர்க்கமாட்டார்கள். அடித்து பிடித்து வண்டியை ஓட்டினால் தான் போய் சேர முடியும் என்று நினைத்து மிதித்தேன்.

வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு 3 கிலோ மேட்டர் இருக்கும் .இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு கணவன் - மனைவி (என்று நினைக்கின்றேன்) சாலை ஓரத்தில் நடந்து கொண்டு இருந்தார்கள். என் வண்டி பின்னால் வருவதை அவர்கள் பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன்.

அந்த கணவன் அந்த பெண்மணியை "பளார்" " பளார்" என்று அறைய அந்த பெண்மணி வலியால் கதறி துடித்து  கீழே விழுந்துவிட்டார்.

என் வண்டி அருகில் சென்றதும் அந்த கணவன் என்னை பார்த்தவுடன் சிறிது பயந்து.. அந்த பெண்மணியை தூக்கிவிட, அந்த பெண்மணியின் கண்ணில் மரண பயம். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

வெளிநாடு, பல வித்தியாசமான சட்டங்களை கொண்டுள்ள நாடு, இது ஒரு குடும்ப பிரச்சனை இது நமக்கு தேவையா? என்று எல்லாம் எண்ணாமல்,

 "கோல்ப்" விளையாட்டிற்கு நேரமாகிவிடுமே என்று வண்டியை நேராக விட்டேன். மைதானம் சென்றேன், அனைத்தையும் மறந்து விட்டு விளையாடி விட்டு மீண்டும் வீட்டுக்கு வருகையில் அந்த சம்பவம் நடந்த இடத்தை பார்த்தேன்.

அப்போது தான் மனசாட்சி பேசியது .. அட சுய நலவாதி விசு.. நீ எல்லாம் ஒரு மனிதனா ? கண்ணுக்கு எதிரில் ஒரு அநியாயம் நடந்தது. அதை கண்டும் காணாமல் போவதை போல் வண்டியை விட்டாயே.. வெட்க கேடு... வெட்க கேடு.

இதுவே உனக்கு தெரிந்த ஒரு பெண் மணிக்கு நடந்து இருந்தால் இப்படி சுயநலமாக இருந்து இருப்பாயா ? யார் அந்த பெண். கணவனையே நம்பி சொந்தத்தை விட்டு வந்த இந்த பெண்மணியை அவன் தினமும் அடித்து துன்புரித்து கொண்டு இருந்தால்..

இப்படி இருந்தால்.. அப்படி இருந்தால்.. என்ற குற்ற உணர்ச்சி.

இது நடந்து ஏறக்குறைய இருபத்தி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நினைவுகள் மனதில் எப்போதும் வந்து கொண்டே இருக்கும்.

அன்றில் இருந்து இன்று வரை, எதிரில் அநியாயம் நடந்தால் சற்று தட்டி கேட்பேன். என்னால் முடிந்த எதையாவது செய்து விட்டு தான் கிளம்புவேன்.

சரி, இதற்கும் நடிகர் சங்கத்து பிரச்சனைக்கும் என்ன சம்மந்தமா?
சொல்கிறேன். கேளுங்கள்.

நலிந்த நாடக நடிகர்களுக்கு உதவுகின்றேன் என்று ராதாரவியும் சரத்குமாரும் செய்த காரியங்கள் தான். இந்த நடிகர்களுக்கு இவர்கள் உதவினார்களா - இல்லையா என்பது எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம். ராதாரவியின் பேச்சு வார்த்தை நடவடிக்கையை பார்த்தால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தான் தோன்றுகின்றது.


எல்லாம் உங்களுக்காக..! 

கட்டிட விஷயத்தில் இவர்கள் தலைக்கு 5 கோடி லஞ்சமாக கேட்டார்கள் என்ற புகார் வந்து உள்ளது. அதற்கு இவர்களிடம் இருந்து பதிலை காணவில்லை.

ஒரு மனிதன் இந்த விஷயத்தில் இவர்கள் தன்னிடம் வந்து லஞ்சமாக ஆளுக்கு 5 கோடி கேட்டார்கள் என்று பொது மேடையில் குற்றசாட்டு வைக்கின்றார். இவர்களின் பதில் அனைத்தும்.

அவன் யோக்கியனா ? அவனை பற்றி எனக்கு தெரியாதா?

அந்த நபர் அய்யோகியனாகவே இருக்கட்டும். அவர் கேட்ட கேள்விக்கு என்ன பதில்?

யார் என்ன கேள்வி கேட்டாலும், இவனை பற்றி எனக்கு தெரியாதா ? இவன் யார்.. அவன் யார் என்ற முரண்பாடான பதில் தான்.

அந்த பெண்மணி தான் நலிந்த நாடகர்கள் என்றால் இவர்கள் கேட்ட  "ஐந்து கோடி "அவளுக்கு கிடைத்த அறை அல்ல. அவள் முதுகில் குத்திய கத்தி. ஒரு குடும்பமாக சேர்ந்து இவர்கள் இந்த சங்கத்தை தங்கள் கைவசத்தில் வருடகணக்கில் வைத்துகொண்டு உள்ளார்கள்.

"பொருத்தது போதும் பொங்கி எழு" என்று ஒரு அணி உருவாகி இருகின்றது.  இந்த அணி வெற்றி பெற்றால் சங்கதிர்க்கே ஒரு மாற்றம். இந்த அணி தோல்வியுற்றாலும் நான் அதை ஏமாற்றமாக கருத மாட்டேன்.

ஏன் ஏமாற்றமாக கருதமாட்டேன் ! இவர்களை எதிர்த்து யாருமே கேள்வி கேட்க்க மாட்டார்களா என்று இருந்தேன், கேட்டு விட்டார்கள். அதுவே பெரிய வெற்றி.

பின் குறிப்பு:

சங்க உறுப்பினர்களே, இது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. மீண்டும் இந்த மாதிரி வாய்ப்பு ஒன்று உங்களுக்கு கிடைக்குமா? யோசித்து பாருங்கள்.  உங்கள் உரிமை உங்கள்கையிலே, மன்னிக்கவும்  .. உங்கள் மையிலே.
இந்த முறை நீங்கள் தவறினால், மீண்டும் ராதாரவி அந்த சங்கத்தில் அமர்ந்து கொண்டு ...

போங்கடா.. போங்க.(சில கெட்ட வார்த்தைகளையும் போட்டு கொள்ளுங்கள்) !


8 comments:

 1. நான் கூட விசு சினிமா துறையில நுழையப் போறாரோன்னு நினைச்சேன். நல்ல விளக்கம்.

  ReplyDelete
  Replies
  1. நானா.. சினிமாவா.. அது ஆண்டவனுக்கே வெளிச்சம்...

   Delete
 2. சங்கம் பற்றி சிங்கமாக போல பொங்கி எழுந்து ஹாலிவுட்டிலில் இருந்து கோலிவுட்டிற்காக குரல் கொடுப்பது விசுதான்... பாராட்டுகள் ஹாலிவுட்டு ராக்ஸ்டார்

  ReplyDelete
  Replies
  1. என்னமோ, நம்மால முடிந்தது தமிழா... சொல்வதை சொல்வோம், மற்றது மையில் ..

   Delete
  2. அட ஆமாம்! ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட்!

   நீங்கள் பார்த்ததைப்போல எத்தனைப் பெண்கள்!! :(

   Delete
 3. யார் என்ன கேள்வி கேட்டாலும், இவனை பற்றி எனக்கு தெரியாதா ? இவன் யார்.. அவன் யார் என்ற முரண்பாடான பதில் தான்.

  இதுதான் இன்றைக்கு பலராலும், பல கட்சிகளாலும் பின்பற்றுகின்ற முறை. கேள்விக்கு மட்டும் பதில் சொல்பவர்கள் மிக அரிது.
  கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். நல்ல பதிவு. நன்றி.

  ReplyDelete
 4. தைரியமாக எழுதும் உங்கள் பாணி பிடித்து இருக்கிறது!

  ReplyDelete
 5. I have done all kinds of corruption in Nadigar Sangam - Radha Ravi : https://www.youtube.com/watch?v=T6wQCZ8o6GA

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...