Saturday, October 3, 2015

சரத்குமார் ! இது அறியாமையா ? இல்லை அறியாதவர் போல் நடிக்கின்றீர்களா?

நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அவர்களின் நேர்முக பேட்டி ஒன்றினை கண்டேன். அதை கண்டவுடன், மனதில் முதலில் வந்தது " இவர் உண்மையாகவே அறியாமையில் இருகின்றாரா ? இல்லை அறியாதவர் போல் நடிகின்றாரா?

சரத்குமார் மீண்டும் மீண்டும் கேட்கும் ஒரு கேள்வி

"இவர்கள் ஏன் எங்களிடம் வந்து கேள்வி கேட்கவில்லை" . இது ஒரு முட்டாள்தனமான கேள்வி.

மூத்த நடிகர் கமல்ஹாசன் அவர்கள் துவங்கி கடைசி நடிகர் வரை உங்களிடம் கேள்வி கேட்கவில்லையென்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு.


அந்த காரணம் " ராதாரவி" !

யார் என்ன கேட்டாலும் உடனே சிறிதும் மரியாதை இல்லாமல் கொச்ச கொச்ச வார்த்தைகளினால் ..பரதேசி .. போடா.. நாய்.. மற்றும் கெட்ட வார்த்தைகளில்  பேசும் ஒரு நபர் இருக்கும் இடத்தில், சுய மரியாதை உள்ள எந்த மனிதனும் பேச மாட்டான்.

சென்ற வாரம் நடந்த ஒரு பேட்டியில் சரத்குமாரின் அணியினரை கண்டேன் .. அதில் அமர்ந்து இருந்தது..

"சரத்  -ராதிகா - ராதாரவி - ராம்கி - நிரோஷா "

ஏதோ, இவர்கள் வீட்டு சொந்த நிகழ்ச்சி போல் இருந்தது. இவர்களே ஒருவரை ஒருவர் பாராட்டி கொண்டு தங்களோடு ஒத்து போகாதவர்களை மிகவும் கீழ் தரமாக பேசி வருகின்றார்கள்.

இங்கே இன்னொரு கேள்வி ? ராதிகா அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, ராதாரவி  நன்றாக படித்தவர் என்று சொல்கின்றார். இவர் என்ன படித்தார் என்று எனக்கு தெரியாது (தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் இட்டால் அறிந்து கொள்வேன் ), ஆனால் பண்பு இல்லாத படிப்பு "குப்பை" தான்.

மேலும் ராதிகா .. சரத் குமார் அவர்கள் நன்றாக படித்தவர் என்கின்றார்கள். இவரும் என்ன படித்தார் என்று தெரியவில்லை.

இருவருமே மிகவும் பெரிய படிப்பு படித்தவர்கள் என்றே வைத்துகொள்வோம் , நிர்வாகம் சரியாக செய்ய உதவாத படிப்பு .. ஏட்டு "சுரைக்காய்" தான்.

கடைசியாக ஒரு பேட்டியில் சரத்குமார் அவர்கள் , இந்த நடிகர் சங்கத்து  ஒற்றுமையை கலைத்ததே கமல்ஹாசன் என்று சொல்லி இருகின்றார்கள். அது உண்மையென்றால் நம் நடிகர் சங்கம் கமல்ஹசன் அவர்களுக்கு நன்றியாக இருக்க வேண்டும்.

இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று அனைவரும் இருக்கையில்  அதற்கு கமல்ஹாசன் கட்டினர் என்றால், அது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம்.

விஷால் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இந்த குடும்பத்தை எதிர்த்து போராட கண்டிப்பாக ஒரு தைரியம் வேண்டும். இந்த தேர்தலில் தோற்கும் பட்சத்தில், இவரை தமிழ் சினிமா உலகத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக அகற்றிவிடுவார்கள். அந்த உண்மையை புரிந்து கொண்டு இவர் இந்த போராட்டதிற்கு வந்து இருகின்றார் என்றால் , அதற்கு சலாம் போட்டாகவேண்டும் .

இன்னொரு விஷயம்.. எதற்கு எடுத்தாலும் சரத்குமார், நான் அவர்களுக்கு உதவினேன், இவர்களுக்கு உதவினேன் என்று சொல்வது மிகவும் கீழ் தரமானது. தனி மனிதனாக நம் செய்த உதவியை வெளியே சொல்வது நாகரீகம் அல்ல. இங்கே பிரச்சனை, தனி மனிதன் சரத்குமாரை பற்றி அல்ல. சங்கத்தின் தலைவர் சரத்குமாரை பற்றி.  தலைவராக இவர்  செய்ய தவறியதை பற்றி . அதை சரத்குமார் புரிந்து கொள்ள வேண்டும்.

குடும்ப அரசியல் நல்லதல்ல .. நாட்டிற்கும் சரி.. சங்கத்திற்கும் சரி. இந்த குடும்பத்தின் பிடியில் இருந்து நடிகர் சங்கத்தை மீட்க்க வேண்டும்.

பின் குறிப்பு:

சங்க உறுப்பினர்களே, இது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. மீண்டும் இந்த மாதிரி வாய்ப்பு ஒன்று உங்களுக்கு கிடைக்குமா? யோசித்து பாருங்கள்.  உங்கள் உரிமை உங்கள் கையிலே, மன்னிக்கவும்  .. உங்கள் மையிலே.
இந்த முறை நீங்கள் தவறினால், மீண்டும் ராதாரவி அந்த சங்கத்தில் அமர்ந்து கொண்டு ...

போங்கடா.. போங்க ..(சில கெட்ட வார்த்தைகளையும் போட்டு கொள்ளுங்கள்) !

9 comments:

 1. என்னங்க நம்ம நீயூயார்க் தலைவர் & வலைப்பதிவர் பரதேசியை எப்படி அவர் திட்டலாம். ராதாரவிக்கு எனது கண்டனங்கள்,,,  ReplyDelete
  Replies
  1. நம்ம பரதேசிய இல்ல தமிழா! இவர் எல்லாரையும் பரதேசின்னு திட்டுவாராம். இதுக்கு நம்ம பரதேசி தான் ஒரு வழக்கு போடணும்.

   Delete
 2. விசு இந்த பதிவை மட்டும் ராதாரவி கண்ணில் பட்டது என்றால் அவர் உங்களையும் கண்டபடி திட்டப் போகிறார்

  ReplyDelete
 3. ராதா ரவியை விடுங்க.. பின்னூட்டத்தில் ஒரு அன்பர், ஒரு ஜாதியையும் குறுப்பிட்டு ஒரு மிரட்டல் விட்டு இருக்கார் . ஜாதி பெயர் அதில் வந்ததால் அந்த கருத்தை இங்கே போடவில்லை.

  என்னத்த சொல்ல ?

  ReplyDelete
 4. மாற்றம் வரவேண்டியது அவசியம்தான்!

  ReplyDelete
 5. radha ravi dgree holder( i tink arts dgree not know;) he is 'ba-kthi- man IYYAPPAN temple goer; SARATH KUMAR also well educat he hindi english telgu tamil malayalam kannda know media person

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் ரொம்ப படிச்சவர் தான்னு தெரிஞ்சு போச்சு.....

   Delete
  2. ஒரு வாக்கியத்துல விசுவாசத்துக்கு இணையா நகைச்சுவையைக் கொண்டுவந்துவிட்டீர்கள் தருமி ஐயா...

   Delete
  3. நகைச்சுவையில் அவர் கலைமாமணி.. மற்றவர்களை சிரிக்க வைக்க நான் கட்டுரை எழுத வேண்டும், அவருக்கு ஒரு வார்த்தையே போதும். வருகைக்கு நன்றி.

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...