திங்கள், 5 அக்டோபர், 2015

கொஞ்சலில் “"பிரிஞ்சி"” கெஞ்சல் !

 ஒரு மீள் பதிவு..ஏற்கனவே படிக்காத நண்பர்களுக்காக ...

என்ன வாத்தியாரே… காலையில் இருந்து ஆளையே காணோம்? எங்களுக்கு தெரியாம ஏதாவது பிளான்னா ?

சொல்லி கொண்டே நுழைந்தான் நண்பன் தண்டபாணி…

மற்றொரு நண்பன்சாரதி வீட்டில் ஒரு விசேஷம் … அங்கே அமர்ந்து கொண்டு இருக்கையில் நடந்த ஓர் உரையாடல் தான் இது…

ஒன்னும் இல்ல தண்டபாணி … ராசாத்திக்கள் இங்கே அருகே இருக்கும் ஒரு கோல்ப் மைதானத்தில் ஒரு போட்டியில் பங்கேற்றனர், காலையில் 10 மணி போல் ஆரம்பித்தது ,,, மாலை 5:30 போல் தான் முடிந்தது.. அதுதான் …


போட்டி எல்லாம் இருக்கட்டும்.. நான் எத்தனை முறை போன் பண்ணி இருப்பேன் .. அதை கூட நீ அட்டெண்ட் பண்ணலையே …

பாணி… "கோல்ப்" போட்டியின் சமயத்தில் போன் பேச கூடாது.. உடனடியாக நம்மை வெளியேற்றிவிடுவார்கள் ..

ஏன் வாத்தியாரே.. இந்த "கோல்ப்" ஆட்டத்த பத்தி ஒன்னு கேக்கணும், தப்பா யோசிக்க மாட்டியே ?

தப்பா யோசிக்க சான்ஸ் இருக்கும் போது ஏன் அதை கேக்கணும் ?

சரி, தப்பா யோசித்தா பரவாயில்ல.

நீ ஒன்னும் கேக்க தேவையில்லை .. உன் கேள்வியை நானே கேக்கறேன்…

எங்க நான் கேக்க வந்த கேள்விய கேளு பார்க்கலாம் ..

நீ கேக்க வந்தது.. ” ஏன் வாத்தியாரே.. இந்த கோல்ப் போட்டி .. ஆடுறவங்க .. எதோ மணமேடைக்கு போற கல்யாணபெண் போல் ஆடாம அசையாம போறாங்களே.. இது எப்படி ஒரு விளையாட்டு ஆகும்"?

வாத்தியரே…ஒவ்வொரு வார்த்தையும் நான் கேக்க வந்தது தான் …சரி .. பதிலை சொல்லு..

பாணி… ஒவ்வொரு விளையாட்டிலேயும் ஒவ்வொரு “சலஞ்” இருக்கு .. கோல்ப் ஆட்டம் பார்க்க ரொம்ப எளிதா இருந்தாலும், ஆடுவது ரொம்ப கஷ்டம் .. நீ ஒரு நாள் வந்து “ட்ரை” பண்ணி பாரு .. தென் யு வில் அண்டர்ஸ்டான்ட்.

இருந்தாலும் வாத்தியாரே.. டிவில இந்த ஆட்டம் வரும் போது எல்லாம் வெறும் வயசானவங்க தானே ஆடுறது போல் இருக்கு..

டேய்.. அது எல்லாம் அந்த காலம் .. இப்ப நிலைமை மாறிடிச்சி …உலக தரத்தில் முதல் 10 விளையாட்டுவீரர்களில் 8 பேர் 25 வயதிற்கும் கீழே உள்ளவர்கள்..

இதுல பரிசு தொகை எல்லாம் எப்படி? வாத்தியாரே..

நம்ம கிரிச்கெட் வீரர்களை விட ஒரு பத்து மடங்கு ஜாஸ்தின்னு வைச்சிக்கோ ..டென்னிஸ் மட்டும் மற்ற ஆட்டங்களை விட அதிக பரிசுதொகை. இன்னும் சொல்ல போனால் விளையாட்டு துறையில் அதிக அளவான பரிசு தொகையில் .. முதலில் இருப்பது.. கார் ரேசிங் (Formula 1) இரண்டாவது … கோல்ப் தான்…

சரி வாத்தியாரே … நேத்து முழுக்க “சோ”ன்னு மலை பெஞ்சதே .. ராசத்திங்க எப்படி ஆடினாங்க ?

பாணி .. உன்னை ஒன்னு கேக்கணும்.. தப்பா யோசிக்க மாட்டியே …?

நீ என்ன கேக்கறது .. நீ கேக்க வந்ததை நானே கேக்கறேன் ..

எங்க கேளு?

மழை .. எங்க எப்ப “சோ”ன்னு பெஞ்சது ? “சோ”ன்னு பெய்ரதுக்கு என்ன அர்த்தம்.. ? அது தானே …

பாணி.. எப்படி…பாணி.. அதே தான் !

நம்ம  துக்ளக் ராமசாமி "சோ" இருக்கார் இல்ல! அவர் நம்ம "அம்மா" முதல்வர் ஆவதற்கும் "மோடி" பிரதமர் ஆவதற்கும் ரொம்ப உதவி பண்ணார் இல்ல.

ஆமா.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?

பொறுமை வாத்தியாரே, பண்ணார் இல்ல.. அதுக்கு நன்றியா.. இவர் பெயர் எப்போதுமே நிலைத்து இருக்கனும்னு, யோசித்து..

யோசித்து..

இனிமேல் அதிகமா மழை பெஞ்சா ...

பெஞ்சா..?

அதுக்கு "சோ" ன்னு மழை பெய்யுதுன்னு வைச்சிட்டாங்க..

தண்டம்.. இது எங்கேயோ இடிக்குதே. இவங்க இப்ப தானே முதல்வர், பிரதமர் ஆனாங்க.. இந்த "சோ" விஷயம் நான் சின்ன வயசிலே கேள்வி பட்டு இருக்கேனே..

நம்பிட்டியா. நான் தமாஸ் பண்ணேன் வாத்தியாரே.

டே, எனக்கு கொஞ்சம் குழைந்தை மனசு, எல்லாத்தையும் நம்பிடுவேன்.. 

“சோ” என்பது ஒரு பேச்சு தமிழ் வாத்தியாரே ..நீ மழையில் எப்படி விளையாடினார்கள் என்று மட்டும் சொல்..

டேய்.. எல்லா பிள்ளைகளிடமும் கொடை இருக்கும்…?

என்ன வாத்தியாரே.. கொடை பிடிச்சி ஆடுற ஒரு ஆட்டதிற்கு இவ்வளவு பணமா ?ஒன்னும் புரியல..
11187436_10152912311532998_7304882083551890599_o

பேசி கொண்டே இருக்க  பிள்ளை ,சந்தானம் தம் தம் குடும்பத்தோடு வர .. அமர்ந்து இருந்த மேசையில் இடம் இல்லாத காரணத்தினால் தண்டபாணி தன் இருக்கையை விட்டு எழுந்து அவன் இருக்கையை சாரதியின் மனைவி பிரேமாவிற்கு விட்டு கொடுத்து, தன மனைவி சுந்தரியின் பின் நின்று கொண்டான்..


தண்டம்.. “யு ஆர் எ ரியல் ஜெண்டல்மன்”..இடத்தை இன்னொரு அம்மணிக்கு விட்டு கொடுத்து உன் மனைவியின் பின் சென்று நின்று கொண்டாய்.. குட் ஜாப்..

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல வாத்தியாரே.. கொஞ்ச நிக்கலாம்ம்னு தான் .

டேய்.. லேடீஸ் எல்லாம் இருக்காங்க.. அவங்க எதிரில் இப்படி கொச்சையா பேசாதே..

நான் இப்ப என்ன சொன்னேன்,,,? கொஞ்ச நிக்கலாம்னு சொன்னேன்.. இதுல எங்க கொச்சையும் .. பச்சையும்..?

ஒ கொஞ்ச நிக்கலாம்னு சொன்னீயா ? எனக்கு “கொஞ்சினு இருக்கலாம்னு” கேட்டுச்சு…

உன் எண்ணம் அப்படி.. உனக்கு அப்படி தான் கேக்கும்… அவனவனுக்கு கெஞ்சுரதுக்கே நேரம் இல்லை .. இதுல எங்க கொஞ்சுறது?

டேய் கெஞ்சலின் நடுவில் ஒரு காலை தூக்கி போடு.. அது கொஞ்சல் ஆகிவிடும்..

இப்படி கொச்சையா பேசாதே..

அடபாவி.. தமிழில் எழுதும் போது “கெஞ்சல் – கொஞ்சல் ” இந்த வார்த்தை ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு கால்..

அதுதான் .. கெஞ்சலின் நடுவில் ஒரு காலை தூக்கி போட்டால் கொஞ்சல்..

ஒ.. நான் நீ என்ன கொச்சையா பேசுரியேன்னு நினைத்தேன் ..

உன் எண்ணம் அப்படி தண்ட பாணி.. நீ அப்படி தான் நினைப்பேன்..

சரி .. சாப்பிடலாம்னு மஞ்சள் சாயம் போட்ட சாதம் ஒன்று மேசைக்கு வர..

வாத்தியாரே.. பிரியாணி மாதிரி இருக்கு ? ஆனால் பிரியாணி இல்ல போல இருக்கே..

இது பிரியாணி இல்ல தண்டம்.. இதுக்கு பேர் “பிரிஞ்சி”

என்னாது .. “பிரிஞ்சியா” . ஆரம்பம் ‘பிரி”ன்னு பிரியாணி போல நல்லா தான் இருக்கு .. பினிஷிங் தான்.. இஞ்சி .. பூண்டு…. ன்னு.. இதை எல்லாம் எவன் கண்டுபிடித்தானோ.. “பிரிஞ்சி ” பெயரே சரியில்லை வாத்தியாரே..
டேய்,இந்த “பிரிஞ்சி” என்ற பெயர் இந்த ஐட்டத்திற்கு எப்படி வந்தது தெரியுமா ?

“பிரிஞ்சி” மேசைக்கு வருவதே இன்னைக்கு தான் தெரியும் .. இதில் இந்த பெயர் எப்படி வந்தது எவனுக்கு தெரியும்? நீ தான் சொல்…என் அறிவை பெருக்கிகிறேன்.

பிரியாணியில் இருந்து கறி “பிரிஞ்சி” போனதால் இதுக்கு பேர் “பிரிஞ்சி“…

சோக்கா சொன்ன வாத்தியாரே..

2 கருத்துகள்:

  1. பிரிஞ்சிக்கு இப்படியும் ஒரு பொருள் உள்ளதா?

    பதிலளிநீக்கு
  2. பிரிஞ்சி பொருள் விளக்கம் சிறப்பு! கோல்ப் தகவலும் அறிந்து கொள்ள முடிந்தது! நன்றி!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...