புதன், 21 அக்டோபர், 2015

என்னை மன்னிச்சிடுங்க.... தெரியாமல் கேட்டுட்டேன் ..

சேவல் ஒன்று கூவ அதிகாலையிலே எழுந்து விட்டேன். பலமாதங்கள் கழித்து இந்தியாவிற்கு விடுமுறைக்காக வந்துள்ளேன். சேவல் கூவி நான் எழுந்து எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும். கடிகாரம் கண்டுபிடிக்காத காலத்திலேயே இந்த சேவல்கள் நம்மை அதிகாலையில் எழுப்பிவிடும் அருமையான அலாரம் ஆயிற்றே!

அந்த சேவலுக்கு ஒரு நன்றியை செலுத்திவிட்டு, என் வேலையை கவனிக்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அந்த சேவல் கூவி கொண்டே இருந்தது. அடே டே, இந்த சேவல் நம்மை எழுப்புவதற்கு உதவினாலும் எழுந்தவுடன் கூவி கூவி எரிச்சலை கொடுக்கின்றதே என்று எண்ணி கொண்டு இருந்தேன்.

பல மாதங்கள் கழித்து இந்தியா ... அதுவும் பெண்  எடுத்த வீடு. எப்போது இங்கே வந்தாலும் உணவிற்கு பஞ்சம் இல்லை. என்ன வேண்டும் என்று கேட்டு சமைத்து கொடுப்பார்கள். காலை 7 மணி போல் வரும் நாஷ்ட்டாவை நினைத்து கொண்டே இருக்கையில், உறவினர் இல்லத்தில்  கேட்டார்கள்...


தம்பி .. காலை உணவு என்ன வேண்டும் ?

(மனதில் ஒன்றை வைத்து கொண்டு வெளியே ) எது இருகின்றதோ அதை செய்யுங்கள் ..

இல்ல சொல்லுங்கள், என்ன வேண்டும்?

தோசை .. வெங்காய சட்டினி .. மற்றும் பருப்பு சாம்பார்.. இருந்தால் நல்லா இருக்கும்.

ஒ.. இருங்க வரேன்.

சிறிது நேரம் கழித்து .. என் வீட்டு அம்மணி எழுந்து வந்தார்கள்!

ஏங்க.. உறவினர் வீட்டிற்கு வந்து இருக்கோம், இங்கே கொஞ்சம் கூட நாகரீகமா இருக்க தெரியாதா?

என்ன,  என்ன ஆச்சி ? நான் அலாரம் கூட வைக்கலையே. சேவல் தானே எழுப்புச்சி ..

சேவலாவது.. கோழியாவது, கொஞ்சம் நாகரீகமா நடந்துக்குங்க ..

நான் என்ன தப்பு பண்ணேன்..?

காலை சாப்பாட்டிற்கு என்ன கேட்டிங்க ?

என்ன இருக்கோ அது பரவாயில்லைன்னு சொன்னேன் .

அது முதலில், அதுக்கு அப்புறம் .. என்ன கேட்டிங்க?

ஒ.. அதுவா ? தோசை .. வெங்காய சட்டினி .. மற்றும் பருப்பு சாம்பார்..
அதுல என்ன தப்பு..?

அதுல என்ன தப்பா? அதுக்கு பதிலா வீட்டை எழுதி தர சொல்லி இருக்கலாம்.

புரியல ..

என்ன தான் புரிஞ்சது.. அடுத்தவங்க நிலமைய கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டாமா?

இப்ப என்ன? இடியாப்பம் - பாயா மற்றும் ஆட்டு கரி குருமாவா கேட்டேன்.. சிம்பிள் ..தோசை .. வெங்காய சட்டினி .. மற்றும் பருப்பு சாம்பார்..அதுக்கு போய் ஏன் இப்படி அலட்டிகிரிங்க ?

அந்த பாயா ஆட்டு கறியை கேட்டு இருந்தா தான் செஞ்சு போட்டு இருப்பாங்களே .. இப்படி தோசை .. வெங்காய சட்டினி .. மற்றும் பருப்பு சாம்பார், இப்படி கேட்டு எல்லாரையும் தொல்லை படுத்துரிங்களே.

புரியிற மாதிரி சொல்லு..

ஏங்க.. உளுத்த பருப்பு - வெங்காயம் - கடலை பருப்பு எல்லாம் இப்ப எல்லாம் ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை தான்.

ஏன்?

"அச்சா தின்"வந்துடுச்சி இல்ல, அது தான்.

மீண்டும் புரியல..?

இல்லங்க.. கொஞ்சம் நாளாவே, "அந்நிய முதலீடு , கருப்பு பணம் மீட்ப்பு , கிளீன் இந்தியா- மன் கி பாத்- மேக் இன் இந்தியா " இந்த மாதிரி விஷயத்தில் கவனம் காட்டி வந்தோம் இல்ல, அதுல இந்த அத்தியவாச பொருள்களின் விலையை கவனிக்காமல் விட்டுடோம்.

சரி, அந்த விஷயத்தில் கவனம் காட்டுனோம்னு  சொல்ற, அந்த விஷயத்தில் தான் ஒன்னு கூட வேலைக்கு ஆகலையே..

அத பத்தி எனக்கு தெரியாது.

சரி இப்ப காலை சாப்பாடு என்ன?

பழையது.

ஒ.. கொஞ்சம் மோர் மிளகாயவது கிடைக்குமா? 

அதை இப்ப சாப்பிடங்கனா மதியம் என்ன சாப்பிடுவிங்க?

அப்ப மதியமும் பழையதா?

அதே தான்.

மதிய நேரம் வந்தது..

தம்பி .. மதிய சாப்பாடு என்ன வேண்டும்?

வெங்காயம் - பருப்பு இல்லாமல் இருக்குற எதுவும் பரவாயில்லை.

ஆட்டு கறிகொழம்பு ?

நான் கிட்ட தட்ட 30 வருஷம் வெளி நாட்டில் வாழ்ந்துட்டேன். அங்கே இந்த ஆட்டுக்கறி அவ்வளவு எளிதா கிடைக்காது. அதுமட்டும் அல்லாமல் கிடைக்கிற ஆட்டுகறியிலும் கொழுப்பு வாசனை நிறைய வரும், அதனால் அங்கே எல்லாரும் பீஃப் தான் விரும்பி சாப்பிடுவாங்க. வேண்டும் என்றால் பீஃப் வாங்கி ஏதாவது செய்யுங்க.

சில மணித்துளிகள் கழித்து...

ஏங்க.. உங்களுக்கு உண்மையாகவே மனசாட்சி இல்லையா?

இப்ப என்ன ஆச்சி...?

மதியம் "பீஃப்" பண்ண சொன்னீங்களா?

அதுல தான் வெங்காயம் - பருப்பு இல்லையே.. அதுதான்.

இப்படி புரியாத ஆளா இருக்கீங்களே. வெங்காயம் பருப்புக்கு காசுதான் 
போகும். பீஃப் வாங்க போனால் உயிரே போகும்.

கொன்னா பாவாம் தின்னா போகும்.

நான் சொன்னது நம்ம உயிர்.

புரியல.

இப்ப எல்லாம் பீஃப் சாப்பிட்டா நம்ம தர்ம அடிப்பட்டு சாக கூட வாய்ப்பு இருக்கு.?

ஏன்..

மாடு ரொம்ப புனிதமாம் .. அதுதான்..

அட பாவிங்களே..  வெங்காயமும் இல்ல.. பருப்பும் இல்ல .. கறியும் இல்ல.. பின்ன என்னதான் சாப்பிடறது ?

ஒன்னும் சாப்பிட தேவையில ..யோகா பண்ணுங்க, பசி பறந்து போகும்..

இது எப்ப இருந்து?

"கிளீன் இந்தியா" ஆரம்பிச்சோம்  இல்ல. அது கூடவே இதையும் ஆரம்பிச்சோம் .



என்னமோ. போ.. சரி.. காபியில் கொஞ்சம் பால் கம்மியா இருக்கு ? கொஞ்சம் வாங்கி தாயேன்..

ஏங்க .. உங்களுக்கு கொஞ்சம் கூட நாகரீகமே இல்லையா?

ஏன்..மாடு புனிதம்னு சொல்லு பால் கறப்பதை விட்டுவிட்டார்களா ?

அப்படி இல்ல.. இப்ப எல்லாம் .. கடவுளுக்கு-தலைவருக்கு-நடிகருக்கு அபிஷேகம் பண்ண மொத்தமா வாங்கினு போயிடறாங்க .. அதனால் நமக்கு கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் விலை நிறைய..

சரி, பால் தான் இல்ல.. கொஞ்சம் சக்கரை.. ப்ளீஸ்...

ஏங்க.. கொஞ்ச...

....ம் கூட நாகரிகம் இல்ல தான் .. சக்கரைக்கு என்ன ஆச்சி.?

கரும்பு எல்லாத்தையும், மொத்தமா "மது" தயாரிக்க அனுப்பி வைக்கிறாங்க .. அதுனால சக்கரை விலை ஏறிடிச்சு.

அப்ப, என்ன தான் கிடைக்க போகுது?

உங்களுக்கு என்ன வேணுமோ நீங்களே போய் கடையில் வாங்கிக்குங்க ?

சரி.. ஒரு "லிஸ்ட்" எழுதிக்கிறேன், ஒரு பேனா இருந்தா கொடு..?

ஏங்க .. கொஞ்சம் கூட நா....

.....கரீகமே இல்ல தான்.. பேனாவுக்கு என்ன ஆச்சி ?

பேனா ஒன்னும் ஆகலை.. ஆனால் எழுததான் "மை" இல்ல.

ஏன்..

சுதந்திரமா யாராவது எதையாவது சொன்ன உடனே, அவர் மேல் "மை "
 ஊத்துவாங்க.. அதுக்கு மொத்தமா வாங்கிடுறாங்க ..

இப்ப என்னதான் செய்ய சொல்ற..?

அடுத்த ப்ளைட் புடிச்சு ..ஊர போய் சேருங்க.. நானும் ராசாத்திக்களும் இங்க இருந்துட்டு, ரெண்டு வாரத்தில் வரோம் .



பின் குறிப்பு :

அம்மணி சொன்ன வார்த்தைகளை மந்திரமாக எடுத்து கொண்டு அடுத்த விமானத்தில் பாம்பே அடைந்தேன். பம்பாயில் இருந்து அடுத்த விமானத்திற்கு இன்னும் 4 மணி நேரம் இருக்கையில் பசி மிகவும் எடுக்க, உள்ளே இருந்த உணவகம் சென்று..

ஒரு "பீஃப் பர்கர்" கிடைக்குமா?

"பீஃப் பர்காரா".. என்று சத்தம் போட்டு கொண்டு அவர் அடியாள்களோடு அரிவாள் -  துப்பாக்கியோடு ஓடி வர.. நானோ..

என்னை விட்டுடுங்க.. விட்டுடுங்க.. என்னை மன்னிச்சிடுங்க.... தெரியாமல் கேட்டுட்டேன் ...

என்று சத்தம் போட்டு அலற..

என் மூத்த ராசாத்தி..

டாடி.. எழுங்க.. கனவில் யாரிடம் வசமாய் மாட்டுனிங்க?

சும்மா, தமாஸ் பண்ணேன்.

என்று சொல்லுகையில்,..அம்மணி, அங்கே வர..

சமையல் அறையில் இருந்து நல்ல வாசனை .. என்ன நாஷ்ட்டா ?

 தோசை- வெங்காய சட்டினி - பருப்பு சாம்பார்.

வெங்காயம் - பருப்பு எல்லாம் ரொம்ப விலை ஆச்சே.. எங்கே வாங்கின ?

இங்கே தாங்க.. இந்தியன் கடையில்.எல்லாம் ப்ரெஷ்.அது மட்டும் இல்லாமல் ரொம்ப குறைந்த விலை.

அது எப்படி.. இது எல்லாம் இந்தியாவில் ரொம்ப விலை ஆச்சே ... இங்கே மட்டும் எப்படி.. இவ்வளவு சீப்..

நீங்க தான் கணக்கு பிள்ளை .. அது எப்படின்னு நீங்க தான் கூட்டி கழித்து பார்த்து எனக்கு சொல்லனும். அது சரி.. மெனு எப்படி..

சூப்பர்.. "பருப்பு தான் எனக்கு புடிச்ச உணவு.."

34 கருத்துகள்:

  1. நக்கல் உமக்கு ரொம்ப ஜாஸ்திய போயிடுச்சு நீர் அடுத்த தடவை இந்தியா போகும் போது நீர் பீஃப் வைச்சிருந்தீர் என்ற சந்தேக கேஸில் போட்டு தள்ளப் போறாங்க ஜாக்கிரதை

    பதிலளிநீக்கு
  2. செம பதிவு:)

    அருமை ரசித்தேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மகேஷ். எப்படி சுகம். புதுகோட்டை பயணம் எல்லாம் இனிதாக போனது என்று படித்தேன். சந்தோசம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. என்னமோ கேட்க வரீங்க..? என்னனு தான் தெரியல.. கொஞ்சம் விவரம் ப்ளீஸ்..

      நீக்கு
  4. இந்த ந(க்)கலின் மூலதனத்தை நேற்றுதான் சந்தித்தேன் சாரி தரிசித்தேன்.
    அவங்க இங்க இருக்குற ஆயிரக்கணக்கான சொந்தக்காரங்களோட சந்தோஷமா.. உங்களைமாதிரி (தூங்கி அலறாமல்) இல்லாம, ரொம்ப பிசியா இருக்குறாங்க..

    அப்புறம் உங்களை ஜெயந்தி அம்மா ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னாங்க..

    மற்ற விஷயங்களை பகிர ரொம்ப ஆசையா இருந்தாலும்.. எனக்கு அனுமதி இல்லை.. நாளைக்கு எங்க ஊருக்கு வர்ரதா சொல்லியிருக்காங்க போய் பாத்துடுவேன்ல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி பட்டேன் நண்பரே, நீங்கள் சென்றதாக கேள்வி பட்டேன். மிக்க நன்றி. நேரம் கிடைக்கும் போது அங்கே சென்றால் பார்த்து நலம் விசாரிக்கவும். நன்றி.

      நீக்கு
  5. ஜாக்கிரதையா இருங்க. இந்தியா பக்கம் வந்தா சிக்கல்தான். நானெல்லாம் அடையாளம் தெரியக் கூடாதுனு ஹெல்மெட் போட்டுக் கொண்டுதான் வெளியே போறேன். வீட்டுக்கு ஆட்டோ வராதவரை ஃசேப்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு அந்த பிரச்சனை இல்லை. எல்லாம் கனவு தான். வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  6. பதிவர் விழாவில் தங்கள்
    புத்தகம் வாங்கி இப்போது
    படித்துக் கொண்டிருக்கிறேன்
    பழைய குறைந்த வயது நாகேஷின்
    இரசிக்கத் தக்க நகைச்சுவை சேஷ்டைகள் தரும்
    அதே நகைச்சுவை வீச்சு தங்கள் எழுத்தில்..

    இனி தங்கள் பதிவுகளை விடுவதாக இல்லை
    தங்கள் எழுத்துக்கு இன்னொரு புதிய அடிமை
    கிடைத்தான் என வைத்துக் கொள்ளுங்கள்

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு பதிவும் நம் பிள்ளைகள் போல் அல்லவா. ஏதோ என் ராசாதிக்களை நண்பர் ஒருவர் பாராட்டினது போல் இருந்தது. தங்கள் அன்பான உற்சாகமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. நாட்டு நடப்பு! இன்றைய நிலை! தெளிவாக காட்டும் இயல்பான உரையாடல்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரும் ஐயா ! வருகைக்கு நன்றி. சோகத்தை நகைச்சுவையாக அளிக்க முயற்சித்தேன்.

      நீக்கு
  8. சிந்திக்கவேண்டிய சிறப்பான பதிவு. நகைசுவையுடன் இன்றைய நிலைமையை சொல்லியுள்ளிர்கள். makkal புரிந்துகொள்ளவேண்டும் .

    அன்புடன்
    M. செய்யது
    துபாய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் புரிந்து இருந்தா தான் இந்த நிலைமையே வந்து இருக்காதே சையத் பாய். A nation deserves its Leader என்ற பொன் மொழிதான் நினைவிற்கு வருகின்றது.

      நீக்கு
  9. அண்ணே, இப்பவெல்லாம் நீங்க பெரிய பருப்பு மாதிரி பேசுறீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச நாளுக்கு முன்னால நீ என்ன "வெங்காயம்" என்று என்னை ஏளன படுத்தினார்கள். இப்போது நீ என்ன பெரிய பருப்பா என்று கூறுகிறார்கள். அடுத்து என்னவோ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. Today's Dream .....Tomorrow's real.....sathasthu....

    பதிலளிநீக்கு
  11. வெளிநாட்டில் இருந்தாலும், உள்ளூர் நிலவரம் அத்துப்படிய தெரிஞ்சு வைச்சு இருக்கீங்க !

    நகைசுவை அருமை!

    ஆனால் நாட்டில் நடப்பதை நினைத்தால் கஸ்டமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாட்டில் இருக்கும் உனக்கு இந்தியாவின் மேல் இவ்வளவு அக்கரை என்று தூற்ற அநேகர் இருக்கையில், ஒரு உற்சாகமான கருத்து. வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி!

      நீக்கு
  12. Quite hilarious and rocking!keep such skits with updates!
    Vishwanathan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pleasure is mine, Dude! Appreciate you dropping by and taking time to write a encouraging note. Loved reading it.

      நீக்கு
  13. பதில்கள்
    1. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் , நாம் அழுது கொண்டே சிரிப்போம்!

      நீக்கு
  14. உள்நாட்டு நிலவரத்தை நகைச்சுவையாக சிறப்பாக எழுதிய விதம் அருமை! உங்கள் நூல் எங்கு கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தளிர். தில்லையகத்து கீதா அவர்களிடம் என்னுடைய புத்தகம் கிடைக்கும்.
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  15. ஹஹஹஹஹஹ்ஹ் செம நண்பரே! எல்லாம் கலந்து கட்டி ஒரு வழி பண்ணியிருக்கீங்க!!! ஹும் பருப்பு பீஃப்க்கெல்லாம் கூட மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை.....

    பதிலளிநீக்கு
  16. என்னாச்சு சுதந்திரம் வாங்கியாச்சுன்னு சொன்னாய்ங்க ?

    பதிலளிநீக்கு
  17. இதுக்குப்பயந்துக்கிட்டுதான் நான் எங்க போனாலும் தனியாவே போறது .

    பதிலளிநீக்கு
  18. விசு, உண்மை நிலையைச் சிரிக்கும்படி சொல்லி எதோ மன வருத்தத்தைக் குறையச் செய்கிறீர்கள். நகைச்சுவை உணர்வு மிக அருமை, அது ஒரு கலை. வாழ்த்துகள் விசு

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...