Friday, October 2, 2015

ராதா ரவி ... ஏன் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேற்ற படவேண்டும்!
"யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"


சென்னையை தலைமையாக கொண்டு அமைந்துள்ள நடிகர் சங்கம், தமிழகத்திற்கு இதுவரை நான்கு முதல்வர்களை அளித்த ஒரு சங்கம். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவதை நான் என்றுமே ஆதரித்தது இல்லை. இருந்தாலும் இத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து அதுவும் முதல்வர் அளவிற்கு வெற்றி பெற்றவர்களை மதிக்க கடமை பட்டு இருப்பதை அறிந்துள்ளேன்.

இம்மாதிரியான ஒரு சங்கத்தில், காலத்தின் கட்டாயமாக தேர்தல் வந்து விட்டது. ஜனநாயக நாட்டில், ஜனநாய முறையில் தேர்தல் என்பது மிகவும் வரவேற்க தக்க நல்ல விஷயம். இந்த தேர்தலில் ராதாரவியை எதிர்த்து விஷால் பொது செயலாளர் பதவிக்கு போட்டி போடுகின்றார் . இப்படி இருக்கையில் .. சென்ற வாரம் எங்கேயோ ஒட்டு சேகரிக்க சென்ற ராதா ரவி .. ஒரு மேடையில் நின்று கொண்டு, விஷாலை ..."டேய் பரதேசி நாயே ..நாளைக்கு உன்னாலே வெளிய போக முடியாதுடா ... "

என்று ஏசுகின்றார். இப்படி பேசுவது சபை நாகரிகமா ?  இதை விட கீழ்தரம் என்னவென்றால், இவர் இப்படி பேசியதும் அதற்கு கை தட்டும் கூட்டம் வேற ஒன்று. நாகரீகம் அறிந்த யார் ஒருவர் அங்கு இருந்தாலும் இதை கேட்டவுடன் அந்த அரங்கத்தை விட்டு வெளியே அல்லவா வந்து இருக்க வேண்டும் .

இவர்  ஏன் இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொண்டு இருகின்றார் என்று கேட்டால் இவர் தங்கை ராதிகா சொல்கிறார் .

"என் அண்ணனை தவறாக நினைக்காதீர்கள். இவர் இப்படி பேச எங்கள் தந்தையிடம் கற்று  கொண்டார் . எங்கள் தந்தை எப்போதும் இப்படி பேசுவதால் தான் இவர் இப்படி பேசுகின்றார் . இவர் நல்லமுறையில் பேசினால் தான் நான் ஆச்சரியபடுவேன்".


ராதிகாவின் இந்த பதிலை கேட்டவுடன் அவரின் கணவர் சரத்குமார் அனைவரின் எதிரிலேயும் "என்னடா குடும்பம் இது " என்று சொல்ல அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். 

அடி காந்தா , ராதிகா , உங்கள் சுயநலத்திற்காக உங்கள் தந்தையின் பெயரை ஏன் கெடுக்கின்றீர்கள் . அவரை விட்டு விடுங்கள் .

இந்த நடிகர் சங்கம் பிரச்னை ஆரம்பித்ததில் இருந்தே சரத்குமார் அவர்கள், எங்களை எதிர்ப்பவர்கள் இதுவரை எங்களிடம் வந்து எதுவும்பேசவில்லை . கேள்வி கேட்கவில்லை என்று புலம்புகின்றார். இது ஒரு அர்த்தமில்லா புலம்பல்.

ஒரு பொது மேடையில் நான்கு பேருக்கு எதிரில் இவ்வளவு கீழ்த்தரமாக கேவலமாக மற்றவர்களை நடத்தும் ராதாரவி இருக்கும் இடத்தில எந்த ஒரு சுயமரியாதை உள்ள மனிதனும் தன் வாயை திறக்க மாட்டான் .


மூத்த நடிகர் குமரிமுத்து, ராதாரவியை பற்றி கூறுகையில், 
"இவர் யாரையும் மதிக்க மாட்டார். ஒவ்வொரு சொல்லிலும் கெட்ட வார்த்தைகள். எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டார்".

என்று குருப்பிட்டார் .

ராதாரவியும்  அவர் மைத்துனர் சரத்குமார் இருவரும் சேர்ந்து சில வருடங்களுக்கு முன் நடிகர் சங்கத்து சொத்தை சத்யம் நிறுவனத்திற்கு 30 வருடத்திற்கு குத்தகை விட்டு ஒரு ஒப்பந்தம் செய்து இருகின்றார்கள். இதை அறிந்த ஒரு மூத்த உறுப்பினர் ராதாரவியிடம் ..

ஏங்க .. முப்பது வருடத்திற்கு குத்தகை விட்டு இருகின்றீர்களே ... அதற்கு பின் இந்த சொத்து  நடிகர் சங்கத்திற்கு  மீண்டும் வருமா ?

என்று கேட்டதற்கு ..

யோவ் பெருசு, அதான் நீயே சொல்லிட்டியே முப்பது வருஷம்னு ... அதுக்கு அப்புறம் நீயும் இருக்கமாட்ட, நானும் இருக்கமாட்டேன் .. போயா .. போய் வேலைய பாரு ..(நடுவில் சில கெட்ட வார்த்தைகளையும் போட்டு கொள்ளுங்கள் )

என்று ஒரு பதில் .

ராதாரவி நடிகர் சங்கத்தில்இருந்து கண்டிப்பாக அகற்ற படவேண்டும். இதை இந்த சங்க உறுபினர்கள் புரிந்து கொண்டு  ராதாரவிக்கு எதிராக ஒட்டளிக்க வேண்டும் . மீண்டும் ராதாரவி மற்றும் அவர் குடும்பத்தினர் இந்த பதவிக்கு வந்தால்  ..

நடிகர் சங்கத்திற்கு ... கோவிந்தா .. கோவிந்தா!


 பின் குறிப்பு :

அது சரி விசு, நீ தான் இப்பெல்லாம் சினிமா பார்க்க மாட்டாயே .. உனக்கு எதுக்கு இவங்க மேல இவ்வளவு அக்கறை.. ?

நீங்க கேக்குறது சரிதான்..

நான் சினிமா
இப்ப  பாக்குறது இல்லை தான். இருந்தாலும், நாடக கலைஞர்கள் மேலே ஒரு மரியாதை. இதோ, இந்த வாரம் கூட ரெண்டு நாடகம் எழுதி அனுப்பினேன். என் போதாத காலம், ரெண்டுமே ஆங்கில நாடகம்.  அடுத்த முறை இந்தியா போகும் போது, நடிகர் சங்கத்தில் மாற்றம் இருந்தால், அங்கே போய் ஒரு தமிழ் நாடகம் போட வேண்டியது தான்.

என் இனிய நாடக நடிகர்களே, சுயமாய் சிந்தியுங்கள். உங்கள் எதிர்காலம் உங்கள் கையிலே..


மன்னிக்கவும்...

உங்கள் மையிலேயே!

6 comments:

 1. எம்.ஆர்.ராதாவை இதைவிட கேவலமா கேவலப்படுத்த முடியாது.
  இருந்திருந்தா மெய்யாலுமே ரத்தக் கண்ணீர் விட்டிருப்பார்..

  ReplyDelete
 2. மனிதநேயத்தை வாழ்க்கையாய் கொண்டவரின் மகனா இப்படி அதிர்ச்சியாய் உள்ளது...

  ReplyDelete
 3. எம். ஆர் . ராதாவின் பெயரைச் சொல்லி இவர்கள் இப்படி கேவலமாக பேசுவது கண்டிக்கத் தக்கது.

  ReplyDelete
 4. Radha ravi and Sarat kumar and other old bandicoots who loot Nadigar sangam
  should be defeated and let us give a chance to Vishaal. Those who speak foul words in
  day to day affairs should be defeated

  ReplyDelete
 5. ராதிகாவுக்கு எம்.ஆர் ராதா மேல் கோபம் போல் இருக்கிறது

  ReplyDelete
 6. ராதிகா, தந்தையில் மேடைப் பேச்சுக்களைக் குறிப்பிடவில்லை, அவர் தந்தை தமையன் ராதாரவியை வீட்டில் திட்டியதைக் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...