Friday, September 18, 2015

வெங்காய சாம்பாரும்.... வேகாத தலைவர்களும் ...

வெங்காய விலை உச்சகட்டத்திற்கு போய் விட்டது என்று கேள்வி பட்டேன். தமிழகத்தின் முதலீடு ஆயிரகணக்கான கோடியில் இருக்கட்டும். இந்தியா வல்லரசாகி மோடி அவர்கள் உலகத்திற்கே தலைவராகி யோகா சொல்லி கொடுக்கட்டும்.


என் அருமை தலைவர்களே!
ஹிந்தி தெரியாமல் வாழலாம்.
சமஸ்கிரிதம் தெரியாமல் வாழலாம்.

அம்மாவின் இலவசங்கள் இல்லாமல் வாழலாம்.
கோடிகணக்கா முதலீடுகள் இல்லாமல் வாழலாம்
இல்லந்தோறும் 15 லட்சம் திரும்பி வரபோகும் கருப்பு பணம் இல்லாமல் வாழலாம்.
யோகா இல்லாமல் வாழலாம்.
ஏன் அசைவ உணவு இல்லாமல் கூட வாழலாம்..
ஆனால் வெங்காயம் இல்லாமல் வாழ முடியுமா?


தனி ஒரு சாம்பார் தாளிக்க வெங்காயம் இல்லையேல்... என்னத்த செய்வோம். பெரியார் பாஷையில் சொன்னால்.. "போங்கடா வெங்காயம்" கடந்த சில நாட்களாக வெங்காய விலையை பிரதிபலிக்கும் வகையில் அடியேன் இட்ட முக நூல் ஸ்டேடஸ் ( ஸ்டேடஸ் . இதுக்கு தமிழில் என்ன வார்த்தை)

வெங்காயத்தை தான் அனுபவிக்க முடியவில்லை .. இதையாவது பார்த்து அனுபவிக்கலாம்!
பின் குறிப்பு :

நண்பர்களே, மேலே உள்ள எழுத்துக்கள் தான் என்னுடையவை. அந்த படங்களை எனக்கு வரைந்து தந்தவர் நண்பர் "தமிழ்". தமிழின் திறமையை சொல்லி மாளாது. என்னை பொறுத்துவரை நான் கண்டவரை வரைபட ஆசிரியர் மதன் அவர்களுக்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்தவர் தமிழ். அவர் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள். 

15 comments:

 1. வெங்காயம் னு இனி யாரையாவது திட்டுவாங்க?
  படங்கள் மிக மிக அருமை..கேட்கனும்னு நினைச்சேன், நீங்களே சொல்லிட்டீங்க.
  'தமிழ்' அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ஸ்டேடஸ் - நிலைத்தகவல் அப்டின்னு சொல்றாங்க :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிரேஸ்! படத்தை போட்ட தமிழை புகழ்ந்தீர்கள்! நிலை தகவல் என்ற புது தகவலையும் கொடுத்தீர்கள். ஆனால் விடிய விடிய அமர்ந்து வாசனைகளை எழுதியவரை பற்றி எதுவும் சொல்லாமல் விசனப்பட வைத்து விட்டீர்களே ... :(

   Delete
 2. ஹ்ம்ம் வெங்காயம் உள்ளவன் பஜ்ஜி தின்னறான் , நமக்கெல்லாம் தமிழுக்கு கொடுத்து கட்டுப்பிடி ஆகுமா ? தமிழுக்கு நிகர் தமிழ்தான் . விசுவுக்கு நிகர் விசுதான்

  ReplyDelete
 3. தமிழ் மிக சிறந்த இளைஞர் மற்றும் மதிக்கதக்க மனிதர்......அவருக்குள் நல்ல திறமை ஒளிந்திருக்கிறது ஆனால் அதை வெளிப்படுத்தும் வழிதான் அவருக்கு தெரியவில்லை. அவரிடம் அதிக நேரம் பேச டைம் கிடைக்கவில்லை.......

  ReplyDelete

 4. மக்கள் மறந்து போன வெங்காயத்தை மீண்டும் நினைவுபடுத்தி அழுக வைத்த விசுவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் செய்யப்படும் என அறிவிக்கிறேன் விசு அவர்கள் மன்னிப்பு கேட்ககும் வரை இந்த போராட்டம் தொடரும் என விசுவிற்கு எச்சரிக்கையும் விடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. தமிழா உங்களுக்குத் தெரியாதா....நம்ம ஊர்ல எந்த எதிர்ப்புதான் நீடித்து முடிவு வரும் வரை தொடர்ந்திருக்கிறது...மக்கள் உறுதியாக இல்லாததால்தான் அரசியல் வாதிகள் அவர்களின் தலைக்கு மேல் ஏறி நின்று ஆட்டம் போடுகின்றார்கள்....எதைப் பற்றி எல்லாமோ எழுதும் பத்திரிகைகள் காய் விலை, வெங்காய விலை ஏற்றத்தைப் பற்றிப் பேசி எதிர்ப்பதில்லை....பீன்ஸ் விலை 70 ரூபாயாக இருந்தது. வெங்காய விலை இப்போது 50......ல் நிற்கிறது. டெல்லியில் 38 என்று என் கசின் சொன்னார்...டெல்லியில் மட்டும் 38?

   நமது எதிர்ப்புகள், இப்போது ஹெல்மெட் சட்டம் மெதுவாக நீர்த்துவருவது போல் எப்போதுமே வலு இழந்து விடுவதால்தான் அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

   Delete
 5. ஹஹஹஹஹ் செம வாத்தியாரே! நானும் கூட இப்ப ஒருபொண்ணு பாக்கற நிகழ்வுக்குப் போனேன்...சுந்தரியோட ஒண்ணுவிட்ட தம்பிக்குப் பொண்ணு பாக்கற நிகழ்வு... உங்கிட்டச் சொன்னா ஜனதா மீல்ஸ் போல அங்க போட்ட வெங்காய பஜ்ஜிக்குப் போட்டிக்கு வந்துருவியேனுதான்.....ஏன் நம்ம பிள்ளை, சாரதிக்கு எல்லாம் கூடத் தெரியாது.....அங்க தகராறு...மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட பொண்ணு வீட்டுக்காரங்க சொன்னது இதுதான்....கல்யாணத்துல சாப்பாட்டுச் செலவுல வெங்காயம் மாப்பிள்ளைவீட்டுக்காரங்கதான் வாங்கணும் அப்படினு.....போங்கடா வெங்காயம் அப்படினு வந்துட்ட்டோம்...
  .
  சரி வெக்கம் இல்லாம வெங்காய பஜ்ஜி நல்லா தின்னுருப்பியே - விசு

  ம்ம்ம் அத ஏன் கேக்கற வாத்தியாரே.....நல்லா தின்னோம் உன்ன, சாரதிய பிள்ளைய எல்லாரையும் நினைச்சுக்கிட்டு தின்னேன்...கல்யாணத்துக்கு மொய் வைக்கறது கேட்டுறப்ப ..நாங்க பொண்ணு பாக்கறதுக்கே மொய் வைச்சுட்டுத்தான் வந்தோம்

  ஹஹஹ்ஹஹ்-..நினைச்சேன் பாணி நீ தின்னதுக்கே அவங்க காசு வாங்கிருப்பாங்களே----விசு

  ..ஆமாம் நாங்க போங்கடா வெங்காயம் நு சொன்னதும் இப்ப சாப்ட பஜ்ஜிக்கு காசு வைச்சுட்டுப் போங்கனு.....அட! எப்படி வாத்தியாரே நீ இவ்வளவு கரெக்டா சொல்லுற...

  பாணி .....நான் கணக்குப் பிள்ளை

  ---on behalf of தண்டபாணி....


  ReplyDelete
 6. கார்ட்டூன்ஸ் செம....அழகா யூஸ் பண்ணி இருக்கீங்க விசு...

  தமிழன் சொன்னது போல் தமிழ் மிகச் சிறந்த இளைஞர் அவருக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை.

  ReplyDelete
 7. முக நூல் ஸ்டேட்டஸ்.....நிலைத் தகவல்

  ReplyDelete
 8. படங்கள் ரசிக்கும்படி இருந்தன. பயன்படுத்திய விதம் நன்று.

  ReplyDelete
 9. அப்பா,, தாங்கள் கணக்குப்பிள்ளை என்று நினைத்தேன்,,,,,,,, படமும் ????????
  அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அடியேன் கணக்கு பிள்ளையே தான். அதில் சந்தேகமே இல்லை.

   Delete
 10. ஜோக்ஸ் அருமை! ஓவியம் மதன் ஸ்டைலில் இருக்கிறதே! போட்டோஷாப்பில் மாற்றினீர்களோ என்று நினைத்தேன்! தெளிவு படுத்தியமைக்கு நன்றி! நண்பர் தமிழுக்கு எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. இரசித்தேன். என்னை மறந்து சிரித்தேன். வாழ்த்துக்கள் உங்களுக்கும் திரு தமிழ் அவர்களுக்கும்

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...