Wednesday, September 16, 2015

ஈ ரோடு போய் திருச்சி வருமோ ....?

இன்று காலை அருமை நண்பன் குஞ்சு குஞ்சுவிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு.

சொல்லுங்க குஞ்சு...நம்ம பேசி வருடக்கணக்கில் ஆச்சி. நீங்க இந்தியா போய் செட்டில் ஆகிடிங்கன்னு கேள்வி பட்டேன். எப்படி இருக்கீங்க?

நல்லா இருக்கேன் விசு. விஷயத்த கேள்வி பட்டிங்களா?

நீ என்னை கூப்பிட்டு விஷயம் என்றாலே கேரளாவில் தமிழன் எதையோ சொதப்பி இருப்பதை பத்தி தானே இருக்கும், சொல்லுங்க., என்ன நடந்தது?

உடனே கூகிள் போய்

" Kerala woman falls on road after floor panel of bus breaks

ன்னு போடு.. அப்புறம் உனக்கு மானம், ரோஷம்,  சூடு, சொரணை ஏதாவது  இருந்தா எனக்கு ஒரு போனை போடு, என்று சொல்லிக்கொண்டே தொலை பேசியை துண்டித்தார், நண்பர் குஞ்சு குஞ்சு.

அவர் சொல்லிய படியே செய்தேன்... நீங்களும் பாருங்களேன் அந்த காட்சியை..

தமிழன் என்று சொல்லடா .. தலை குனிந்து ... 

என்ன ஒரு கண்கொள்ளா காட்சி. தமிழக அரசு பேருந்து ஒன்று கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு நகரில் போய் கொண்டு இருகின்றது .  சில நொடிகளில் அந்த பேருந்தில் இருந்து ஒரு பெண்மணி கீழே விழுகின்றார்.

 இது நம் மாநிலத்திற்கே நடக்கும் கேவலம் அல்லவா. இலவசம், இலவசம் என்று அரசாங்கம் போடும் பிச்சையை கையேந்தி வாங்க தான் நாம் லாயக்கு. அந்த மாநிலத்தில் நம் நிலைமையை பார்த்து சிரிக்கின்றார்கள். 

ஒரு அரசு பேருந்தின் அவல நிலையை கவனியுங்கள். இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது.  நாங்கள் முன்னேறி விட்டோம், வல்லரசு ஆகிவிடுவோம். ஊழலை ஒழித்து விடுவோம் என்று எல்லாம் வைக்கும் ஒப்பாரி தான் நினைவிற்கு வருகின்றது.

இது ஒரு அரசு பேருந்து. இதை வாங்குவதற்கும் பராமரிப்பதற்கும் மக்கள் கட்டிய வரி பணம் தான் உபயோக படுத்தப்படும். இந்த மாதிரியான பேருந்துகளை பொது மக்கள் உபயோக படுத்த அனுமதித்தால் அதை விட அநியாயம் எதுவும் கிடையாது. இந்த மாதிரி பாழடைந்த பேருந்தை மக்கள் பயன் படுத்த வைப்பது, அரசாங்கம் மக்களை பார்த்து..

"கேடு கெட்ட மானம் ரோசம் சூடு சொரணை இல்லாத மக்களே, உங்கள் தகுதிக்கு இது தான் சரி. இந்த பயணத்திலும் சாகாவிட்டால் ஆளுக்கொரு முழம் (Make in india  தான்) கயிறு வாங்கி தூக்கு போட்டு கொள்ளுங்கள்"

என்று சொல்வதை போல் உள்ளது.

இந்த பேருந்துகளை புதுப்பிக்க வருடா வருடம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க படுகின்றது. இந்த பேருந்து பொது மக்களின் பாதுகாப்பிற்கு ஏற்றதா என்று பரிசோதித்து சான்றிதழ் வாங்க இன்னொரு அலுவலகம் மற்றும் அதில் மாதந்தோறும்  சம்பளம் வாங்கும் அதிகாரிகள் வேறு. இதை பராமரிக்கும் செலவு கணக்கை பார்த்தால், ஒரு விமானத்தையே பராமரிக்கலாம், அவ்வளவு கணக்கு. ஆனால், இந்த பேருந்தின் நிலைமையை பாருங்கள்.

இது தான் தமிழனின் விதியா ..

நெஞ்சு பொறுக்குதில்லையே...


பின் குறிப்பு :

இதை படித்தவுடன் மதுரை தமிழனின் மனதில்..

தமிழக அரசு இந்த மாதிரி பேருந்துகளை வேறு மாநிலத்திற்கு தான் அனுப்பும். அதனால் மற்ற மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபர்கள் தங்களை அறியாமலே அவர்கள் ஊரிலேயே இறக்கி விட படுவார்கள். அது மட்டும் அல்லாமல், இந்த பேருந்தில் பயணிகள் யாரும் படிக்கட்டை நோக்கி நடக்க தேவை இல்லை. தம் தம் இடத்தில இருந்தே தமக்கு தேவையான நேரத்தில் எங்கே வேண்டுமானாலும் இறங்கி கொள்ளலாம்.

இந்த மாதிரியான நவீன பேருந்தை விசு கலாய்ப்பதை மதுரை தமிழனாகிய நான் மென்மையாக கண்டிக்கிறேன்.

7 comments:

 1. வணக்கம்
  சொல்லிய விடயத்தை படித்போது. மனம் நெகிழ்ந்தது...வாழ்த்துக்கள் த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. பராமரிப்பு செலவு எல்லாம் ஏசி பஸ், ஏசி பஸ் ஸ்டாப் என சென்னையைக் குறி வைத்தே செலவிடப் படுகின்றன...
  அரசு பஸ்களை RTO முன் நிறுத்தப்பட்டு Fitness Certificate வாங்குவது கிடையாது...
  Comprehensive Insurance எனப்படும் பஸ், ஓட்டுனர், பயணி, மற்றும் third party coverage எதுவுமே தமிழக அரசு பஸ்களுக்குப் பொருந்தாது....
  துஷ்டனைக் கண்டால் தூர விலகு மாதிரி சில அரசு பஸ் டிரைவர் நாய்கள் விதிகளை மீறி ஓட்டும் போது மூடிட்டு ஒதுங்கிப் போயிடணும்...
  I have shared this info in my FB page, hope you wont mind...

  ReplyDelete
  Replies
  1. என்ன ஒரு வயிதெரிச்சல் நண்பரே. இன்னும் எத்தனை காலம் தான் என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது. ஷேர் செய்ததற்கு நன்றி.

   Delete
 3. காணொளி பார்க்க முடியவில்லை விசு, எடுத்துட்டாங்களோ?
  ரொம்பக் கேவலமா இருக்கு..நம் நாட்டு நிலைமை!

  ReplyDelete
 4. இந்த பிரச்சனைக்கு டிரைவரையோ அல்லது நடத்துனரையோ குறை சொல்லுவது தப்புதான். இந்த பிரச்சனைகளுக்கு காராணம் அந்த துறையை சார்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் காரணம் ஆவார்கள், பஸ்ஸை பராமரிக்கை பெரும் தொகை ஒதுக்கப்படுவது என்பது என்னவோ உண்மைதான் எனினும் அது பஸ் பாரமரிக்க பயன்படுத்தாமல் அமைச்சர்களின் அதிகாரிகளின் வரவு செலவுகளை பராமரிக்கவே பயபடுத்தப்படுகிறது

  ReplyDelete
 5. அவமானமான ஒரு விஷயம் ....ஏற்கனவே கேரளத்துக்காரர்கள் தமிழ்நாட்டைக் கேலி செய்து கொண்டிருக்கின்றார்கள். நம்மூர் மானம் கப்பல் ஏறியது, ப்ளேன் ஏறியது, ராக்கெட் ஏறியது இப்போது பேருந்தும் ஏறிவிட்டது....என்னத்தச் சொல்ல..இன்னும் ஏறுவதற்கு என்ன இருக்கு...

  ஆனா இன்னுண்ணு விசு.....கேரளத்துல அண்டை மாநிலத்தாரோம் இல்லை இலங்கைக்காரர்களுக்கோ இடம் கொடுப்பதில்லை....யாரும் அங்கு அகதிகளாக நுழைய முடிவதில்லை. பாப்புலேஷனும் மிக மிகக் குறைவு. ஆனால் பாருங்கள் தமிழகத்தில், தமிழர் மட்டுமா? கேரளத்து பாப்புலேஷன் எவ்வளவு தெரியுமா? அங்கிருக்கும் சினிமா புள்ளிகள் இங்குதான் டேரா ஏனென்றால் இங்கு டெக்னாலஜி.....ஒன்று சொல்ல வேண்டும் மனதிற்கு நான் மிகவும் கஷ்டப்படும் ஒன்று...அவர்கள் தமிழகத்தைக் கேலி செய்யும் போது.....மனதிற்குள் தோன்றும் இப்போது சொன்னதும், ஆமாம் நீங்க இங்கருன்ந்து எல்லாத்தையும் சுரண்டிக் கொள்வீர்கள் ஆனால் குற்றம் சொல்லுவீய்ர்கள் என்று..யூஸ் செய்து கொண்டு குற்றம்.

  அங்கு ஆற்றில் மணல் அள்ள முடியாது. ஆனால் அவர்களுக்கு வீடு கட்ட எங்கிருந்து மணல் செல்கின்றது ? இங்கிருந்துதான்...மானம் கெட்ட அரசியல் தமிழ் நாட்டு அரசியல். கேரளத்தாரும் நன்றாகக் குளிர் காய்கின்றார்கள்...அதே போல் அங்கு கள்ளுக் கடை ஒழிட்நு விட்டது ஆனால் இங்கிருந்து கள்ளு செல்லுகின்றது. அதே போல் இங்கிருந்து அரிசி, காய்கறிகள்...எல்லாமே.....ஆனால் அவர்கள் சொல்லுவது தமிழ் நாட்டிலிருந்து வரும் காய் அரிசி எல்லா வற்றிலும் கெமிக்கல் என்று....மானம் கெட்ட தமிழ்நாடு மனதுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும்..ஆனால் அவர்கள் படிப்பதும் வேலை செய்வது எல்லாம் இங்குதான்....என்னத்த சொல்ல ...

  ReplyDelete
  Replies
  1. வந்தோரை வாழ வைப்போம்.வாழ்வோரை சாகடிப்போம்..

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...