சனி, 19 செப்டம்பர், 2015

விசுAwesomeமின் 'புதுமை பெண்"



கள்ளி என்று கொஞ்சுவான் பாப்பா, அயர்ந்தால் கள்ளி பால் ஊத்துவான் பாப்பா
துவக்கமே துயரமடி பாப்பா, நீ துவண்டு விடாதே என் செல்ல பாப்பா ..

ஆறு வயதினிலே பாப்பா .. மடை ஆறு போல் புரண்டோடு பாப்பா...
அடக்க நினைப்பான் பாப்பா..நீ ஆர்ப்பரித்து ஆட்டம் போடு பாப்பா

விவரம் தெரியா  வயதில்   பாப்பா, விவேகமற்ற விவாகம் என்பான் பாப்பா..
விதி என்று சதி செய்வான் பாப்பா, நீ மதியால் மிதித்து விடு பாப்பா...


கன்னி வயதினிலே பாப்பா ,கண்ணி வைக்கவும் தயங்க மாட்டான் பாப்பா .
கற்க கசடற பாப்பா. கற்றபின், நிலையாய் நிற்கவும் கற்று கொள் பாப்பா .

பள்ளி உனக்கேன் என்பான் பாப்பா, உதறி தள்ளி நீ படித்து விடு பாப்பா.
கொள்ளிவாய் பிசாசு என்பான் பாப்பா, சொல்லி அவனை அடித்து வை பாப்பா..

"தரித்திரம்" ஏசுவான் பாப்பா, பொய்யாக்க சரித்திரம் நீ படைத்து விடு   பாப்பா,
"தருதலை" தூற்றுவான் பாப்பா, தாரகத்தின் தலையாகி வென்று விடு  பாப்பா.

திருமணம் என்றுரைப்பான் பாப்பா,  விரும்பினால் ஏற்று கொள் பாப்பா..
தட்சணை சொல் கேட்டால் பாப்பா, செருப்பால் அர்ச்சனை செய்து விடு பாப்பா.

தொழில் கற்று நீ செய்தால் பாப்பா, மற்றவர் உயில் உனக்கெதற்கு பாப்பா.
வயல் ஒன்று வாங்கி போடு பாப்பா, அயல் நாடும் போய் அசத்தி வா பாப்பா..

பெற்றோரின் துதி நாடு பாப்பா, கற்றோரின் மதி நாடு பாப்பா..
ஆன்றோரின் அருள் நாடு பாப்பா, அருமை சான்றோரின் பொருள் நாடு பாப்பா.

கணவனுக்கு கண்ணாயிரு பாப்பா, கள்ளனுக்கு புண்ணாயிறு பாப்பா
கவிஞனுக்கும்  பொய் ஆகாதே பாப்பா, காலத்திற்கும் மெய்யாய் இரு பாப்பா..

ஆசைக்கு பெற்றெடு பாப்பா, அவளையே ஆஸ்திக்கும் ஆக்கிவிடு பாப்பா..
கண்ணாயிரம் போல் காத்து வா பாப்பா, நீ அயர்ந்தால் கள்ளி என்று கொஞ்சுவான் பாப்பா!

இந்த சக்கரம் சுற்றி கொண்டே இருக்கட்டும்..




11 கருத்துகள்:

  1. தங்களை மண்டபத்தில் பார்த்ததாக யாரோ கூறினார்களே?
    அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்டபத்திற்கு நான் சென்றது உண்மை தான். ஆனால் அங்கே நான் நானே தான் எழுதினேன். புத்தக வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள் !

      நீக்கு
  2. ஹாஹாஹா!! உங்க தளத்துக்கு வந்தால் புன்னகை கேரண்டி!! அண்ணா! பாட்டு சூப்பரா இருக்கு!! நம்ம வீட்டு ராசாத்திகளுக்கும் பாடிக்கட்டப்(no...no...மைதிலி குழந்தைகள் பாவம்) சரி படிச்சுகாட்டபோறேன்!! பாருங்க கரந்தை அண்ணா கிட்ட போட்டுகொடுத்த அதே புண்ணிய ஆத்மா என்கிட்டயும் சொன்னதே!! உங்கள அதே மண்டபத்தில் பார்த்ததாக:)))

    பதிலளிநீக்கு
  3. இரசித்தேன் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  4. ராமேஸ்வரம் மண்டபத்துல நாங்க பாக்கலைப்பா பாக்கலைபா....ஆனா, வேற ஒரு மண்டபத்துல.....அஹஹஹஹஹ்

    "யாம் எழுதிய பாட்டில் ஒற்றுக் குறை இருப்பின் அதற்கான தொகையை...சரி டீல் போடுவோம்....ஒரு ஒற்றிற்கு எவ்வளவு என்று....நான் கணக்குப் பிள்ளையாக்கும்...."

    செம நண்பரே. பெண்கள் முன்னேற்றம் கூட ஒரு நகைச் சுவை இழையோட...

    வாழ்த்துகள்! னெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே அப்படினு சொல்றவங்களுக்கு எதிரா வாதாட ஒருத்தர ஏற்பாடு பண்ணிக்கலாமா ..அஹஹஹஹ்ஹ்

    பதிலளிநீக்கு
  5. ம்ம், கணக்குப்பிள்ளை கவிதையெல்லாம் கலக்கல் தான் போங்க,,,,,,,
    அருமை, வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா! புதிவிதமான பாப்பா பாடல்நன்றாக இருக்கிறது விசு..பிரமாதம்! பிரமாதம்!
    அதுவும் இந்த வரி //தட்சணை சொல் கேட்டால் பாப்பா, செருப்பால் அர்ச்சனை செய்து விடு பாப்பா.// மிகவும் பிரமாதம்!

    வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
  7. பாரதி பாடியது பழைய பாப்பா பாட்டு
    இங்கே விசுவின் புதிய பாப்பா பாட்டு
    பதிவர் சந்திப்பின் போது பாடியும் காட்டுங்கள். இசைக்கு ஏற்றதாகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. காலச்சக்கரத்தில் வாழ்க்கை வண்டியை அழகாய் ஓட்டிச்செல்லத் தேவையான அறிவுரைகள்.. பாப்பாவுக்குச் சொன்னவிதம் அருமை.. பாராட்டுகள். வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...