சனி, 8 ஆகஸ்ட், 2015

மாமாவுக்கு குடுமா ... குடுமா...

விடுமுறை முடிந்து இல்லம் வந்த முதல் வார இறுதி. குளிர் சாதன பெட்டியில் "வெட்டு குத்தும் "இல்லை.. "புள் பூண்டும்" இல்லை. சனிகிழமை காலை 5  மணிக்கு அலாரம் வைத்து எழுந்து நேராக கடற்கரையை நோக்கி வண்டியை விட்டேன்.  என் இல்லத்தில் இருந்து ஒரு 20 மைல் தொலைவில் உள்ள ஒரு மீன் சந்தை (எங்க ஊர் காசிமேடு) என்று கூட சொல்லலாம்.

சுட சுட ஒரு காப்பியை போட்டு கொண்டு .. எனக்கு பிடித்த பாடலையும் தட்டிவிட்டு .. வண்டியை உருட்டினேன்.... மனதும் உருண்டது... ஒவ்வொரு நாளும் ஆண்டவன் போட்ட பிச்சை என்று வாழ்பவன் நான். அவன் புண்ணியத்தில் ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன.


வாழ்க்கையும் சரி வாழும் விதமும் சரி, நமது வயதுகேர்ப்ப மாறுவதை  சற்று யோசித்தேன்... எண்ணமோ எனக்கு 25 இருக்கும் போது நான் சந்தித்த ஒரு 60 வயது நபரை நோக்கி சென்றது.

பல வருடங்களுக்கு முன்... இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டு வாழ்க்கை ஆரம்பம். அந்நாட்கள் இந்நாட்கள் போல அல்ல. இப்போது எல்லா நாடுகளிலும் தடுக்கி விழுந்தால் இந்திய கடை,இந்திய சினிமாக்கள் எங்கே பார்த்தாலும் இந்தியர்கள் .. இந்திய தமிழக உணவகங்கள்.. ஆனால் 80'களில் அவ்வாறு இல்லை.  என்றைக்காவது ஒருமுறை அத்திப்பூத்தாற்போல் ஒரு இந்தியர்  கண்ணுக்கு மாட்டுவார்கள் .

அவ்வாறு அறிமுகமானவர் தான் இந்த நபர். அவர் வாழும் நகரில் நானும்  சில நாட்கள் வாழ்ந்து பிறகு வேறு ஒரு நகருக்கு சென்று அங்கே குப்பை கொட்டி கொண்டு இருந்த நாட்கள் ...

தொலை பேசி ரிங்கியது ... (அந்த காலத்தில் அலை பேசி இல்லை)..

ஹலோ ... விசு பேசுறேன்..

ஹலோ... என்னமோ கூட்டு குடும்ப்பத்தில் இருக்கிற மாதிரி விசு பேசுறேன் .. ஏன் சொல்ற ..நீ தனி கட்டை தானே... இதுல என்ன விசு பேசுறேன்...?

நீங்க யார்...

நானா.. உங்க மாமா...?

சார்.. நான் ஒண்ணுமே பண்ணுல சார்.. யாரோ என்னை பத்தி தப்பா சொல்லி இருக்காங்கோ..

டேய்... அரன்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல... ரிலாக்ஸ்....நான் தான் ராஜு மாமா பேசுறேன்.. எப்படி இருக்க ?

அய்யோ... சாரி மாமா.. நீங்க மொட்டையா மாமான்னு சொன்னதும் ..நான் பேய் அறைந்த மாதிரி ஆயிட்டேன்..

அது சரி விசு.. எதுக்கு எடுத்தாலும் பேய் அறைந்த மாதிரி பேய் அறைந்த மாதிரின்னு சொல்றியே ...உன்னை எப்ப பேய் அறைந்தது...?

அது ஒரு கதை மாமா, அதை இன்னொரு நாள் சொல்றேன்.. எப்படி இருக்கீங்க..

நல்லா இருக்கோம்.. ஆமா. நாளைக்கு சனி தானே.. நீ என்ன பிளான் ?

கழுதை கெட்டா குட்டி சுவர்... எனக்கு என்ன .. குடும்பமா .. புள்ள குட்டியா ... வீட்டுல தான் ..

ஒரு காரியம் பண்ணு.. நேரா வண்டிய கிளப்பிட்டு இங்கே வந்து சேரு..

மாமா..கிட்டத்தட்ட 6 மணி நேரம் தனியா ஓட்ட வேண்டி இருக்கும்.. திடு திப்புன்னு இப்படி சொன்னா ?

சரி நான் வேனும்ம்னா போன்ன கட் பண்ணிட்டு திரும்பவும் நிதானமா  கூப்பிட்டட்டா .. ?

மாமா ..?

டேய்.. சீக்கிரம் தூங்க போ. காலையில் 2 மணிக்கு அலராம் வைச்சு கிளம்பு.. 8 மணிக்கு வந்துடலாம்..

என்ன மாமா அவசரம் .. வீட்டுல ஏதாவது விசேஷமா..

ஆமா.. காடு வா வான்னு சொல்லுது இல்ல .. அதை தனியா கேட்டு ரொம்ப போர் அடிடுக்குது.. நீயும் வா... ஒன்னா உக்கார்ந்து கேட்கலாம்..

சாரி மாமா. அடுத்த வாரம் கொஞ்சம் பிசி.. அதுதான் ரெஸ்ட் எடுக்கலாம்னு...

டேய்.. ஒழுங்கா கிளம்பி வா.. காலையில் சந்திப்போம்.. "யு வோன்ட் ரிக்ரெட் .."

சரி.. பேச்சை தட்டாமல் .. ரெண்டு மணிக்கு வண்டியை விட்டேன். போக்கு வரத்து குறைந்து இருந்ததாலும் வயது கொழுப்பு அதிகமாக இருந்ததாலும் ...7 மணி போல மாமா வீட்டை அடைந்து விட்டேன் ...

டிங் டாங்..

என்ன விசு .. சொல்லிகாம .. கொல்லிகாம..

மாமா சொல்லலையா அத்தை..

ஒன்னும் சொல்லாலேயே ...என்ன விஷயம் .. "யு வோன்ட் ரிக்ரெட் .." உடனே கிளம்பிவானு சொன்னாரே .

"யு வோன்ட் ரிக்ரெட் .. "என்னை கல்யாணம் பண்ணிக்கோ சொல்லி என்னை கவுத்துட்ட்டார்.. இப்ப நீ மாட்டினே.. பாவம் நீ..

அத்தை.. உங்களுது காதல் திருமணமா ..

அந்த இழவு தான்.. சொந்த செலவில் சூனிய கதை கதை தான்..

மாமா தான் வர சொன்னார் .. உங்களிடம் நான் வரேன்னு சொல்லலையா ?

அவருக்கு இப்ப எல்லாம் மரதி நிறைய...

என்று சொல்லும் போதே...

வா விசு.. எங்க வர மாட்டியோன்னு பயந்துட்டேன் ...

என்ன விஷயம் மாமா..?

டேய் ஒரு ஆறு மாதம் கழித்து ஒரு "பாக்கட்" உளுந்து கிடைத்தது. இன்றைக்கு இட்லி - தோசை - உளுந்து வடை .. உன் நாக்கும் செத்து போய் இருக்கும் இல்ல .. அது தான்..

மாமா நீங்க . ..சாதாரண மாமா இல்ல, தலாய் லாமா..

அது யாரு விசு, தாலாய் லாமா ...?

எனக்கும் தெரியாது .. ஒரு ப்ளோவில் சொல்லிட்டேன்..

என்று சொல்லும் போதே...அத்தை..

வாங்க .. நாஷ்டா ரெடி..

இட்லி - தோசை - வடையை தாக்கி விட்டு .. ஒரு பில்டர் காபியும் கிடைத்தது. 5 மணி நேரம் ஓட்டம்  என்ன.. இந்த உணவிற்கு ஐம்பது மணி கூட ஓட்டலாம் என்று ...நினைக்கையில்...

விசு .. எப்ப ரிட்டர்ன்..?

சாயங்காலம் மாமா..

டேய் இருந்துட்டு நாளைக்கு போ ..

இல்ல மாமா.. கொஞ்சம் பிசி...

அத்தை அங்கு இருந்து நகர்ந்தவுடன்... மாமா மெதுவாக .... ஒரு குறும்பு சிரிப்புடன் ... நாளை வரை இரு .. "யு வோன்ட் ரிக்ரெட் " என்று மீண்டும் சொல்ல..

என்னவாய் இருக்கும்...

ஒருவேளை.. உளுத்த பருப்பு கூடவே கடலை பருப்பும் கிடைத்து இருக்குமோ... ? ஒருவேளை நாளைக்கு காலையில் இட்லி -தோசை- மசாலா வடை வித் சாம்பாரோ என்று நினைத்து கொண்டே ...

என்ன மாமா... எது எடுத்தாலும்.. யு வோன்ட் ரிக்ரேட்.. யு வோன்ட் ரிக்ரேட்ன்னு .. வாட் டூ யு மீன்... ?

என்று கேட்க்கையில்... இருபது நிமிடம் கழிய ... இங்கே மீன் சந்தை வந்தடைந்தேன்...


என்னா .. கூட்டம் ..இங்கே ஏன் இவ்வளவு கூட்டம்னு பிறகு சொல்றேன்.

அட என்னடா .. இது காசிமேட்டை விட கூட்டம் அதிகமா இருக்கே..

...மாமாவின் பிளான் அப்படி என்ன இருக்கும் ...?

தொடரும்.. தொடருங்கள்..

தொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்குங்கள் ...

வயதும் வாழ்வும் ... (மாமாவுக்கு குடுமாவின் தொடர்ச்சி..)

www.visuawesome.com

7 கருத்துகள்:

  1. ---மாமா..கிட்டத்தட்ட 6 மணி நேரம் தனியா ஓட்ட வேண்டி இருக்கும்.. திடு திப்புன்னு இப்படி சொன்னா ?

    சரி நான் வேனும்ம்னா போன்ன கட் பண்ணிட்டு திரும்பவும் நிதானமா கூப்பிட்டட்டா .. ?----


    விசு,

    இதுதான் விசு பஞ்ச். செம கலக்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா.. அந்த டைலாக் .. என்னுடையது அல்ல.. மாமாவுடையது..

      நீக்கு
  2. மீன் சந்தைன்றது எல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல..!!
    ij it a glass room or bhis marketன்னு (அவரோட உச்சரிப்பை அப்படியே தந்திருக்கேன்) எங்க political sociology வாத்தி அடிக்கடி சொல்லும் போது, இந்தாளுக்கு மீன் மார்க்கட்ல என்ன வேலைன்னு சிரிப்போம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் முறையாக தம்மை இங்கே காண்கிறேன் நண்பரே. வருகைக்கு நன்றி. உங்கள் வாத்தியார் ஒருவேளை தம் ஆரம்ப பள்ளியை குஜராத் மாநிலத்தில் படித்து இருப்பார் போல் உள்ளது..

      நீக்கு
  3. ஆறு மாசம் கழிச்சு உளுத்தம் பருப்பு கிடைச்சிருக்கு! அந்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹஹ ...செம...//மாமா..கிட்டத்தட்ட 6 மணி நேரம் தனியா ஓட்ட வேண்டி இருக்கும்.. திடு திப்புன்னு இப்படி சொன்னா ?

    சரி நான் வேனும்ம்னா போன்ன கட் பண்ணிட்டு திரும்பவும் நிதானமா கூப்பிட்டட்டா .. ?

    மாமா ..?//

    ரசித்தோம்...தொடர்கின்றோம்...ஸோ வண்டி ஃபார்முக்கு வந்துருச்சுனு சொல்லுங்க...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...