Tuesday, August 18, 2015

மதுரை தமிழனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம் - அன்புமணி..

அவர்கள் உண்மைகள், தமிழனுக்கு .. கடந்த சில நாட்களாகவே தாம் தம் பதிவுலேயும் சரி, மற்றும் சில சமூக வலைதளங்களிலேயும் சரி என்னையும் என் கட்சியையும் அளவுக்கு அதிகமாக கலாய்த்து கொண்டு இருகின்றீர்கள். ஏன் ... ஏன் .. ஏன் என்று யோசிக்கையில் ... வந்த விடை தான் இந்த மடல்...

நான் என்ன அரசியலுக்கு நானாகவா வந்தேன் . காலத்தின் கட்டாயம்.


"எனது குடும்பத்தினர் அரசியலுக்கும் கட்சிப் பதவிகளுக்கும் வரமாட்டார்கள் என்றும் அப்படி வந்தால் தன்னை "முச்சந்தியில் சாட்டையால் அடிக்கலாம்" "

இந்த வார்த்தைக்கள் நினைவு இருகின்றதா? இதை சொன்னவர் என் தந்தை. அப்படி சொன்ன அவர் இப்போது என்னை வாரிசாக ஏற்று கொண்டு இருகின்றார் என்றால் ... எங்கள் கட்சியில் என்னை தவிர இந்த பதவிக்கு யாரும் லாயக்கு இல்லை என்று தானே அர்த்தம்.

என் அறிவை பார்த்து.. மருத்தவ தொழில் நான் எட்டிய உச்சத்தை கண்டுதானே என்னக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. இங்கே நீங்கள் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.  எங்கள் கட்சியில் மட்டும் வேறு யாராவது அடி மட்ட தொண்டனிடம் இந்த தகுதிகள் இருந்து இருந்தால், இந்த பதவி அவனுக்கே கொடுத்து இருக்க படும். ஏதோ என் நல்ல காலம், மக்களின் போதாத காலம் .. அப்படி பட்ட தொண்டன் யாரும் எங்களுக்கு கிட்டவில்லை.

சரி, அதை விடுங்கள். இப்ப நாங்கள் என்ன அடுத்த தேர்தலில் ஆட்சியையா  பிடிக்க போகின்றோம். ஏதோ, பொழுது போக்கிற்காக நாங்கள் பேசும் பேச்சை நீங்கள் மந்திரமாக எடுத்து கொண்டு எங்களை கலாய்க்கின்றீர்கள்  போல் உள்ளது.

தமிழகத்தை பல ஆண்டுகள் ஆண்டு குட்டிசுவாராகிய திராவிட கட்சிகள் இன்னும் சில ஆண்டுகளில் தலைமை ஏற்க ஆள் இல்லாமல் தடுமாறும். இந்த விஷயம் உமக்கும் தெரியும். "அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்" என்று நாங்கள் நினைத்து கொண்டு இருக்கும் வேளையில் தங்களின் கலாய்த்தல் " வெண்ணை திரண்டு வரும் போது பானை உடைந்த கதை" போல் ஆகிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு வருகின்றது.

சரி.. நடந்தது நடந்து விட்டது.. மறப்போம் .. மன்னிப்போம். எப்படி என்னால் காமடி பண்ணாமல் இருக்க முடியாதோ.. அவ்வாறே தம்மால் கலாய்க்காமல் இருக்க முடியாது என்றும் நான் அறிவேன்.

அடுத்த சில நாட்கள் நீங்கள்  கலாய்க்க இதோ சில செய்திகள்..

பிரதமர் மோடி :

துபாயில் இந்து கோயில் கட்ட இடம் கொடுத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி.. (இது 2013ல் கொடுக்க பட்டது)

கப்டன் : " மவி துலக்கு " கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும்.

செய்தி படிக்காத தமிழன் : என்னாது .. S V சேகர் பிஜேபி யில் சேர்ந்துட்டாரா ? சொல்லவே இல்லை.

இவங்க மூணு பேரை இப்ப காலாயுங்கள்..

www.visuawesome.com

17 comments:

 1. மதுரைத் தமிழனிடம் ஏற்கனவே மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். இதில் நீங்கள் வேறு எடுத்துக் கொடுகிறீர்களே!

  ReplyDelete
  Replies
  1. ஏதோ நம்மால முடிஞ்சது ...பண்ணி வைப்போம்... அம்புட்டுதேன்..

   Delete
 2. யாரப்பா அது அன்புமணியை கலாய்க்கிற மாதிரி மதுரைதமிழனை கலாய்க்கிறது?

  ReplyDelete
  Replies
  1. ஐயகோ... என்ன வார்த்தை சொல்லி புட்டிங்கோ.. உங்களை.. அதுவும் உங்களை யாரவது காலாய்க்க முடியுமா ?

   Delete

 3. மறப்போம் மன்னிப்போம் அன்புமணி

  ReplyDelete
 4. துபாய் ஷேக் கோயில்கட்ட அனுமதி தந்திருக்கிறானா அவனுக்கு சாதகமாக இந்தியாவின் வளத்தை சுரண்ட மோடி நிச்சயம் ஏதாவது வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருப்பார் அதில் பங்குதாரர்களாக அதனானி குருப் கட்டாயம் இருக்கும் அதனாலதான் துபாய் ஷேக் கோயில் கட்ட அனுமதி அளித்திருப்பார், பெரிய நாமம் போடுற கோயிலா கட்டப் போறாங்க பாருங்க

  ReplyDelete
  Replies
  1. கிளீன் இந்தியா.. கிளீன் இந்தியா .. ன்னு சொல்லிட்டு கிளீன் போல்ட் இந்தியா ஆகபோது போல...

   Delete
  2. சூப்பர் இருவரின் பதில்களும்...

   Delete
 5. என்ன விசு வழக்கமாக நீங்க Smriti Zubin Irani யைதானே கலாய்ப்பீங்க இன்று அன்புமணியை கலாய்க்கிறீங்க என்ன விஷேசம்

  ReplyDelete
  Replies
  1. அட போங்க தமிழா. அந்த அம்மா BA வா .. B Com மா ன்னு கண்டு பிடிக்கிருதுக்குல ... நம்ம பிரதமர் அவருடைய MA வை காணமல் போட்டுட்டார் . ரொம்ப கன்புயுசன். அதனால் தான் " நாம் தமிழர்" ன்னு சொல்லிட்டு தெற்கு பக்கம் வந்தேன்...

   Delete
  2. நான் எங்க அன்புமணிய காலாய்ச்சேன். 234 தொகுதியையும் குத்தகை எடுத்த மாதிரி நீங்கதான் அவரை கொஞ்சம் கூட விட்டு வைக்கலையே..

   Delete
 6. நன்கு ரசித்தோம்.

  ReplyDelete
 7. செம விசு நண்பரே! ரொம்பவே ரசித்தோம்.....உங்கள் இருவரின் பதில் கருத்துகள் உட்பட...

  ReplyDelete
 8. சரி சரி நாரதர் கலகம் நன்மையில் முடியும் அப்படினு சொல்லுவாங்க...உங்கள் கலாய்த்தல்கள் நன்மையில்??? முடிந்தால் சரிதான்...

  ReplyDelete
 9. மரம் வெட்டுதலிலிருந்து தேர் எரித்தல் என மாற்றம், முன்னேற்றம் கண்டுள்ள சின்ன மருத்துவர் ஐயாவைப் போய் கலாய்க்கலாமா?
  ஒரு பாராட்டுப் பத்திரம் கொடுத்துடுவோமா?

  ReplyDelete
 10. வணக்கம்! தங்கள் தளத்திற்கு புதியவன்!!! கலாய்த்தல் அருமை! இனி தொடர்வேன் நன்றி ஐயா!!!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...