Friday, July 31, 2015

வானம் கீழே வந்தால் என்ன ...

ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் ...

பேருந்தை விட்டு இறங்கி என் மூத்த அக்காவின் இல்லத்திற்கு சென்று அடையும் போது மணி 9. தோசை, சாம்பார் மேசையில் பார்த்ததும்... மலரும் நினைவுகள்..

அது சரி... அந்த ஓரத்தில் இருக்கும் பாத்திரத்தில் என்ன?

அது .. நேத்து ராத்திரி ... பிரியாணி.

கறி இருக்க காய் கவர்ந்தற்று ... அதை எடுங்க..

வாய் வழியாக மூக்கு வரை சாப்பிட்டுவிட்டு ... எழுந்தோம்.

மணி 10.. எங்கே செல்லலாம் ?

சில இடங்களை சுற்றி பார்க்கலாம் ... கிளம்புங்கோ..

வண்டியில் ஏறி அனைவரும் கிளம்ப...

ரோட்டின் இரண்டும் பக்கத்தையும் நோட்டமிட்டேன் . ஜெர்மனிக்கு நான் ஏற்கனவே பலமுறை வந்து இருந்தாலும் ஒவ்வொரு முறையும் கிறிஸ்துமஸ் நாளை அக்காவின் வீட்டில் கழிக்க வந்தது தான். ஒவ்வொரு முறையும் பனி அதிகம் இருக்கும் அதனால் அதிகமாக வெளியே போக முடியாது. இந்த முறை தான் பனி இல்லாத நேரத்தில் வந்து உள்ளேன்.

இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று.. இயற்கையான மரம் செடி கொடிகள், நடு நடுவே கட்டிடங்கள். பார்க்க ஒரு அமைதியான நகரம் போல் தெரிந்தது.
இந்நகரில் இருந்து தான் இரண்டு உலக போரும் துவங்கியது என்று நம்ப மனது தயங்கியது.

என்ன தான் அழகாக இருந்தாலும் இதயத்தின் ஆழத்தில்  இரண்டாம் உலக போரின் போது மாண்ட கோடிக்கணக்கான மனிதர்களின் வலி - இழப்பு வந்து போனது.

வண்டியை பெர்லின் சுவர் (Berlin  Wall ) இருந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்த சுவற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அந்த சுவர் இருந்த தடம் தெரிந்தது.


ஒரு கால் கிழக்கு ஜெர்மனியிலும் . ஒரு கால் மேற்கு ஜெர்மனியிலும் .. இது இனிமேல் ஒருகாலும் நடக்க கூடாது...

இந்த ஒரு சுவற்றை வைத்து இந்த சுவற்றினால் வந்த சோகங்களை வைத்து காவியங்களே எழுதலாம்.  இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் ஒரே நாளில் எழுப்பப்பட்ட சுவர்.  கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளை, நண்பர்கள், தோழர்கள்- உற்றார் உறவினரை ஒரே நாளில் இந்த சுவற்றினால் பிரிந்து 50 வருட காலம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் ....

அந்த சுவற்றை சுற்றி நிறைய படங்களும் அதை பற்றிய விளக்கங்களும் இருந்தன. பார்த்து கொண்டே நடக்கையில் அருகே ஒரு "நீல நிற பலூன்"  வானத்தை நோக்கி உயர பறக்க ....

அக்கா .. அது என்ன பலூன்..
ஒ.. அது இங்கே வரும் சுற்றுலா பயணிகளுக்காக .. அதில் ஏறி போனால் பெர்லின் நகரை பத்து நிமிடத்தில் பார்த்து விடலாம்.

அக்கா.. ஜெனீவா மற்றும் பாரிஸ் நகரில் நடந்து நடந்து கால் ரெண்டும் செம வலி. பேசாமல் அதில் ஏறி ஒட்டுமொத்தமாக பெர்லின் நகரை பார்த்து விடலாம்.

ஏங்க.. உங்க சோம்பேறி தனத்திற்கு ஒரு அளவே இல்லையா ?

சோம்பேறித்தனத்த அளக்குற அளவுகோல் இன்னும் கண்டு பிடிக்கலையாம். அது கண்டு பிடித்தவுடன் கண்டிப்பா என் அளவ பத்தி உனக்கு சொல்றேன். இப்ப கிளம்பு.. வானை நோக்கி..

அங்கே சென்று டிக்கட் பற்றி விசாரிக்க ...அமர்ந்து இருந்த அம்மணி..

காற்று மிகவும் பலமாக வீசுவதால், இன்றைக்கு இனிமேல் பலூன் பறக்காது... மன்னிக்கவும்.

அட என்னடா .. கண்ணுக்கு எட்டியது ... காலுக்கு எட்டவில்லை என்று என்னும் போதே...

கேப்டனிடம் பேசினேன்.. இன்னும் ஒரு முறை மட்டும் போகலாம்

 என்று  சொல்ல.. குடும்ப சகிதம் அந்த பலூனில் ஏறினோம்.

மெல்ல மெல்ல அந்த பலூன் மேலே பறக்க ஆரம்பித்தது...

என்ன ஒரு அருமையான காட்சி. பெர்லின் நகரம் முழுவதும் எங்கள் கண்ணுக்கு எதிரில் .கட்டிடங்கள் - கோபுரங்கள் - மரங்கள் - பார்லிமென்ட்  அருமையாக வடிவமைக்க பட்ட தெருக்கள் .. என்று ..

பெர்லின் நகரம் ... பாதுகாப்புக்கான ஒரு சிறிய கயிர்வேலி 
அனைவரும் நிறைய புகை படங்கள் எடுக்க, அடியேன் மட்டும் அழகை ரசித்து கொண்டு இருந்தேன்..

அந்த அம்மணி கூறியபடியே .. காற்று கொஞ்சம் பலமாக தான் இருந்தது. அதனால் அந்த பலூன் கொஞ்சம் ஆடியபடியே தான் இருந்தது.. பாத்து நிமிடம் போல் மேலே இருந்து பின்னர் கீழே இறங்க ஆரம்பித்தது .


தீப்பெட்டிகள் போல் காட்சியளிக்கும் வாகனங்கள் 
கீழே வந்தவுடன் அந்த அம்மணி..

நீங்கள் ரொம்ப ராசியானவர்கள் .. வானிலை அறிக்கை இப்போது தான் வந்தது. இன்னும் மூன்று நாட்களுக்கு இந்த பலூன் மேலே போகாது..

ரொம்ப நன்றி..

ஒரு நல்ல நினைவு .. நல்ல நாளாக இந்நாட்டில் ஆரம்பித்தது. கீழே இறங்கி வந்ததும்.. என் அக்காவிடம்.. நீங்கள் எல்லாம் .. என்ன வேண்டுமோ அதை செய்யுங்கள். நான் அந்த சுவற்றின் அருகே சென்று சில விளக்கங்களை படிக்க  போகிறேன் என்றேன்..

சரி.. .சீக்கிரம் வந்து விடு...

ஒரு அரை மணி நேரம் தான் இருக்கும்.. கண்ணீரோடு அந்த சுவற்றை விட்டு விலகி வந்தேன்..
அடியேன் அறிந்தவரையில் .. இந்த இரண்டாம் உலகப்போரை போன்ற ஒரு சோகமான நிகழ்ச்சி இனிமேல் எப்போதும் நடக்க கூடாது.

ஹிட்லர் என்ற ஒரு தனி மனிதன் தன் வாய் பேச்சு திறமையினால் ஆயிரகணக்கான தொண்டர்களை சேர்த்து கொண்டு கோடி கணக்கான மக்களை கொன்ற கதை...

சரி .. ஹிட்லர் தான் ஒரு கொடூரன்.. ஆனால் அவன் எப்படி தன் தொண்டர்களை கவர்ந்தான் .. என்பது ஒரு கேள்வி குறியாக இருந்தது..

அக்கா.. ஹிட்லர் எப்படி இத்தனை பேரை கவர்ந்தான்?

அதுவா.. இதை படி என்று ஒரு விளக்கத்தை காட்டினார்கள்..

படித்து அதிர்ந்தே விட்டேன்..

தொடரும்..

www.visuawesome.com

5 comments:

 1. வணக்கம்,
  தங்கள் பயணம் அழகாக தொடர்கிறது, வாழ்த்துக்கள்,
  அதுசரி ஹிட்லர் எப்படி கவர்ந்தார்,, தாங்கள் சொல்லப் போவதைப்
  படிக்க நாங்களும்,
  நன்றி.

  ReplyDelete
 2. aarampathil irunthu thangal payana katturai vasithu varukiren. engalaiyum ungaludan alaithu senra anupavam.

  thodarkiren sir.

  ReplyDelete
 3. உச்சமான அனுபவம் - சோகத்திலும்... காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 4. சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்! தொடர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 5. ஆவலுடன் காத்திருக்கும்.
  -ஆரூர் பாஸ்கர்’ :)

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...