Monday, July 20, 2015

சுவிஸ் நாட்டில் கட்டு கட்டாக .......

சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் உறவினர் ஒருவரின் இல்லத்தில் அமைந்துள்ள தோட்ட பகுதியில் அமர்ந்து கொண்டு மனதில் ஒரு பாரத்தோடு எழுதும் பதிவு.

என்னடா நல்ல ஓர் நாள் அதுவும் ஒரு அருமையான நாடு. இந்நாளில் சந்தோசமாக இருப்பதை விட்டு ஏன் மனதில் ஒரு பாரம்... சொல்கிறேன் கேளுங்கள் .


நேற்று காலை லண்டன் நகரில் இருந்து ஒரு விமானத்தில் ஏறி 80 நிமிட பயணத்திற்கு பிறகு ஜெனிவா வந்து இறங்கினோம். விமானம் தரை தட்டும் முன் ஜன்னல் வழியாக பார்த்த காட்சி அருமை. எங்கேயும் பச்சை பசேல் என்று புள் வெளி மரம் ... மலை செடி கொடிகள்.

விமானத்தில் இருந்து கீழே இறங்கி குடிவரவு அதிகாரிகளை நோக்கி சென்றோம்.
எவ்வளவு நாட்கள் இருக்க போகின்றீர்கள்.
3-4 நாட்கள் .
வெல்கம் டு சுவிஸ் ...
என்று சொல்லி வெளியே அனுப்பி வைத்தார்கள்.
உறவினரின் வண்டியில் ஏறி வீட்டை நோக்கி செல்கையில் .. தான் வந்தது இந்த மனபாரம் .
எங்கே பார்த்தாலும் ஒரு அழகு. சாலையின் அருகே உள்ளே ஆறுகளில் தண்ணீர் பொங்கி ஓடி கொண்டு இருகின்றது. ஒவ்வொரு கட்டடமும் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.
கண்ணுக்கெட்டிய எந்த இடத்திலும்  குப்பை மற்றும் எந்த ஒரு ஒழுங்கீனமும்  இல்லை. அவ்வளவு நேர்த்தியாக உள்ளது.
சாலைகளும் மற்றும் பொது மக்களுக்கு தேவையான போக்கு வரத்து வசதிகளும் சொல்லி மாளாது.  ரயில் - பேருந்து ஒவ்வொன்றும் அற்புதம்.

இதில் என்ன மனபாரம் என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது.

இந்நாட்டின் முக்கியம் வருமானம் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயம், பால். இவை இந்நாட்டிற்கு வருமானத்தை பெற்று தந்தாலும்  இந்நாடு செழிக்க மிக முக்கிய காரணம் இந்நாட்டின் வங்கியில் மற்ற நாட்டை சேர்ந்தவர்கள் போட்டு வைத்துள்ள பணம்.

இங்கே உள்ள வங்கியில் நம் பாரத தேச பக்தர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணம் மட்டும், ஒழுங்காக நம் நாட்டிற்க்காக செலவு செய்ய பட்டு இருந்தால் ... நம் நாடும் இவ்வாறாக இருந்து இருக்கும் அல்லவா ?

சுயநல வாத அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் பேராசையினால் திருடி திருடி அல்லவா  இங்கே போட்டு வைத்துள்ளார்கள்.

அந்த நினைப்பு வந்ததால் தான் இந்த மனபாரம்.

சரி மனபாரத்தை குறைக்க ஒரு டீ குடிக்கலாம் என்று அருகே இருந்த ஒரு கடைக்கு சென்றேன். அங்கே இருந்த ஒரு விஷயம் கண்ணை கவர்ந்தது. இது எங்கேயோ பார்ததாயிற்றே என்று கூர்ந்து கவனித்தேன்.  மங்களூர் கணேஷ் பீடி ஒரு கட்டு 2.50 சுவிஸ். ஏற குறைய 150 ருபாய் என்று நினைக்கின்றேன்.

அந்த கடைகாரரிடம் இங்கே இந்த பீடியை யார் வாங்குவார்கள் என்றேன். அவரோ பதிலாக இந்நாட்டு மக்கள் நிறைய பேர் இந்தியாவிற்கு  சுற்றுலா செல்வார்கள் அங்கே இந்த பீடி பழக்கத்தை கற்று  கொண்டு அதற்கு அடிமையாகி விடுகின்றார்கள். அவர்களுக்காக  தான் இதை இறக்குமதி செய்து இதை விற்று, நம் நாட்டின் கருப்பு பணத்தை  கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு கொண்டு வருகின்றேன் என்று கூறினார்.


கருப்பு பணத்தை கட்டு கட்டாக இங்கே நம் ஆட்கள் எடுத்து வந்ததாலோ என்னவோ இவரும் பீடியை கட்டு கட்டாக வைத்து அதை மீட்க்க பார்க்கின்றார்.

வாழ்க பாரதம் .

www.visuawesome.com

12 comments:

 1. எப்படி எல்லாம் "மீட்ட" வேண்டியிருக்கு...!

  ReplyDelete
 2. அருமையான வித்தியாசமான செய்திக்கு நன்றி.
  ""ஒழுங்காக நம் நாட்டிற்க்காக செலவு செய்ய பட்டு இருந்தால்"" -- அனைத்து மக்களின் ஏக்கமும் இது தான்..
  நம்பிக்கை தானே எல்லாம்.. !!! :)

  ReplyDelete
 3. இங்கே உள்ள வங்கியில் நம் பாரத தேச பக்தர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணம் மட்டும், ஒழுங்காக நம் நாட்டிற்க்காக செலவு செய்ய பட்டு இருந்தால் ... நம் நாடும் இவ்வாறாக இருந்து இருக்கும் அல்லவா ?// ஆம் நண்பரே! ஆதங்கம்...

  அடபாவிங்க்ளா இங்க உள்ள பீடி அந்த நாட்டு மக்களைக் கவர்ந்துருச்சா...எத்தனையோ நல்ல விஷயங்கள் நம் நாட்டில் இருக்க போயும் போயும் இந்த பீடி படுத்தும்பாட்டைப் பாருங்க....கட்டுகட்டா மீட்க முடியுமா....

  ReplyDelete
 4. எல்லா நாட்டுக்காரங்களும்
  சுவிஸ் வங்கியில தான் போட்டு வைக்கிறாங்க.
  "கருப்புப் பணம்"

  ReplyDelete
 5. //பாரத தேச பக்தர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணம் மட்டும், ஒழுங்காக நம் நாட்டிற்க்காக செலவு செய்ய பட்டு இருந்தால் //

  ஆமாங்க ... வருத்தமாகத்தானிருக்கு....... ஆனாலும் ஒரு சந்தேகமும், சந்தோஷமும் ..... எங்கள் அரசியல்வியாதிகளும், பேரதிகாரிகளும் இவ்வளவு மோசமா இருந்தாலும் எப்படி எங்கள் நாடு இப்படி வளர்ந்து வந்துள்ளது?
  உங்களுக்குப் பதில் தெரியுமா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க தருமி ஐயா...
   "எங்க" என்று சொல்வதை விட நம்ம என்று சொல்லி இருந்தால் நலம். முன்னேற்றம் என்று எந்த அளவுகோலை வைத்து சொல்கின்றீர்கள் என்று புரியவில்லை. அடுத்த முறை சந்திக்கும் போது இதை பற்றி கண்டிப்பாக பேசுவோம்.

   Delete
 6. இப்படி பீடி விற்றே மொத்தப் பணத்தையும் மீட்டு விடலாம்..

  ReplyDelete
 7. புத்திசாலித்தனமான தலைப்பு விசு. :) வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 8. ஆற்றங்கரைகளை River Bank என்று சொல்லுவதன் அர்த்தம் ,ஜெனீவாவில் ஓடும் எல்லா ஆற்றங்கரைகளிலும் உலகின் எல்லா புகழ்பெற்ற வங்கிகள் இருப்பதால் தானோ என்னவோ என என்ன தோன்றியது கடந்தமுறை ஜெனீவாவில் தங்கி கடந்து சென்ற பயணத்தின்போது.

  அது சரி, ஒரு ஒன்னரியனா பீடி கட்டுகளை விற்று நமது அந்த கட்டுகளை மீட்பது சாத்தியம் தானா?

  பயணங்கள் எப்படி போகின்றன?

  கோ

  ReplyDelete
 9. சுவிட்சர்லாந்து போனது பற்றி சந்தோஷம் அதைப்பற்றிய பதிவும் அருமை ஆனால் இந்த பதிவில் நீங்கள் ஒன்றை பதிய மறந்துவிட்டீர்களே அதுதாங்க 100 ஏக்கர் நிலம் வாங்கி அதில் நீங்க கட்டி இருக்கும் பண்ணைவீட்டை பற்றிய போட்டோவும் இல்லை அது பற்றிய தகவலும் இல்லை அப்புறம் பண்ணை வீட்டில் நீங்கள் நிறுத்தி இருக்கும் ஹெலிகப்டர் படத்தையும் பதிந்து இருக்கலாம் இது எல்லாம் எப்படி எனக்கு தெரியும் என நினைக்கிறீர்களா எல்லாம் நீயூயார்க்க பக்கம் இருந்துதான் எனக்கு தகவல் வந்திருக்கிறது

  ReplyDelete
 10. சுவாரஸ்யம்! தொடர்கின்றேன்!

  ReplyDelete
 11. வணக்கம்,
  நல்லா தான் இருக்கு பயணம், வாழ்த்துக்கள்,
  நன்றி.

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...