Friday, July 10, 2015

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தான் !நல்ல சினிமா என்பது என்ன?

நான் இதற்கு பதில் சொல்ல மாட்டேன்.

நல்ல சினிமாவிற்கான தகுதி என்ன?

நான் இதற்கும் பதில் சொல்ல மாட்டேன்..

கேள்வியை கேட்டவர் … “டைம்ஸ் நொவ்” தொலைகாட்சியின் அர்னாப் கோஸ்வாமி ..
பதில் சொல்லமாட்டேன் என்று சொன்னது FTII (Film and Television institute of India)ன் புதிதாக நியமிக்க பட்ட தலைமை அதிகாரி (Chairman) கஜேந்திரா சௌஹான்.

இந்நிகழ்ச்சியை பார்க்கையில் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை . மிகவும்
புகழ்வாய்ந்த இந்திய சினிமாவின் பள்ளிகூடமான FTII க்கு இந்த கஜேந்திரா சௌஹான் அவர்களை பாரதி ஜனதா கட்சி தலைவராக நியமித்து இருகின்றது.

இவரை நியமித்ததில் இருந்து இந்த நிறுவனத்தின் மாணவர்கள் ஏறக்குறைய ஒரு முறை மாதம் ஸ்ட்ரைக் செய்து வகுப்பிற்கு செல்லாமல் இவரை இந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று போராடுகின்றார்கள்.

1434397698-169_FTII1
Picture Courtesy : Google
கிட்ட தட்ட ஒரு மாதம் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரை ஏன் என்று வேண்டாம் என்று ஆராய்ந்தேன். அதில் கண்டறிந்த சில விஷயங்கள் .

இந்த கஜேந்திர சௌஹான் என்ற நபர் 1990 போல் வெளிவந்த மகாபாரத் என்ற தொலை காட்சி நிகழ்ச்சியில் நடித்தவர். அதுமட்டும் அல்லாமல் இரண்டாம் தர நீல படங்கள் (Soft Porn) சிலவற்றில் நடித்தவர். கடந்த சில வருடங்களாக மோடி அவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த மோடி ஸ்துதிக்கு நன்றி கடனாக இவருக்கு இந்த பதவியை BJP தந்துள்ளது என்பது தான் இந்த மாணவர்களின் போராட்டதிற்கு காரணம்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் தணிக்கை குழுவில் ஏற குறைய அனைவரையும் மோடி ரசிகர்களுக்கு தாரைவார்த்து கொடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே.

சினிமா என்பது ஒரு கலை (புது படங்களை நான் பார்ப்பதை நிறுத்தி நிறைய வருடங்கள் ஆகிவிட்டாலும், பழைய படங்களை விரும்பி பார்ப்பேன்) இந்த கலையை கற்கும் நிறுவனத்திற்கு ஒரு தகுதியான நபரை நிரூபிக்க வேண்டாமா? இதிலேயுமா அரசியலை காட்டவேண்டும்?

இந்த கஜேந்திர சௌஹான் இன்று அமர்ந்துள்ள பதவியில் இதற்கு முன் இருந்த சிலரின் பெயர்களை இங்கே குறுப்பிட வேண்டியது அவசியம் .
அடூர் கோபாலகிருஷ்ணன்
ஷ்யாம் பெனேகல்
மிரினால் சென்
கிரீஷ் கர்னாட்
வினோத் கன்னா (இந்த நடிகரை பற்றி சற்று பின்னர் பார்க்கலாம்)

இம்மாதிரியான சினிமா துறையில் ஜாம்பாவான்களாக இருந்த பதவிக்கு உங்களை எப்படி தேர்வு செய்தார்கள் என்ற கேள்விக்கு ..

அதை என்னை தேர்வு செய்த அரசாங்கத்திடம் போய் கேளுங்கள் என்று பதில் தருகின்றார்,நம் புதிய தலைவர்.

இவரின் நியமிப்பு அரசியல் சார்ந்தது என்ற குற்றசாட்டிற்கு BJP பேச்சாளர்கள் .. ஏன் காங்கிரஸ் மட்டும் அவர்கள் அபிமானியான வினோத் கன்னாவை நியமிக்க்வில்லையா என்ற கேள்வி..

இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.

சில நாட்களாகவே BJP பேச்சாளர்களிடம் கேட்கப்படும் கேள்விகளும், அவர்களின்
பதில்களும் …

கேள்வி : ஸ்மிர்தி இராணி என்ன படித்தார்கள் ?
பதில் : சோனியா காந்தி என்ன படித்தார்கள்.?

கேள்வி:சுஷ்மா சுராஜின் மற்றும் மகள் பல வருடங்களாக லலித் மோடியின் வக்கீலா ?
பதில் : சிதம்பரத்தின் மனைவி யார் யாருக்கு வக்கீலாக இருந்தார்கள் தெரியுமா ?

கேள்வி:வசுந்தரா ராஜே – லலித் மோடிக்கு என்ன உறவு ?
பதில் :இப்படி கேட்டால் நங்கள் காங்கிரஸ் தலைவர்களின் உறவுகளை பற்றி கேட்க்க நேரிடும் .

கேள்வி: வசுந்தரா ராஜேவின் மகனிற்கு குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு கோடிகணக்கில் பணம் சேர்ந்தது?
பதில் :ராபர்ட் வட்ராவிர்க்கு எப்படி சேர்ந்தது ?

அடே … BJP பேச்சாளர்கள் என்று சொல்லி கொண்டு இருக்கும் அப்பரண்டீஸ்களே..
இந்த காங்கிரஸ் கட்சி செய்த அநியாயம் எல்லாம் எங்கள் எல்லாருக்கும் தெரியும் .அதனால் தான் அவர்களை 40 சொச்சம் கொடுத்து ஒரு ஓரத்தில் உட்காரவைத்துள்ளோம். உங்களுக்கு மகத்தான வெற்றியை கொடுத்து ஆட்சியில் அமர வைத்ததின் காரணமே, நீங்கள் காங்கிரஸ் கட்சியை போல் நாட்டை குட்டி சுவர் ஆக்காமல் நல்ல வழியில் எடுத்து செல்வீர்கள் என்று தான். ஒவ்வொரு தவறுக்கும் காங்கிரஸ் செய்யாததா காங்கரஸ் செய்யாததா என்ற பதில் சொன்னால் .. அடுத்த தேர்தலில் உங்களுக்கும் 40 சொச்சம் தான்.

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் “வியாபம்” ஊழல் வழக்கில் லட்ச கணக்கான மாணவர்களின் வாழ்க்கை பறிபோனது மட்டும் அல்லாமல் கிட்ட்டத்தட்ட 50 பேரின் உயிரும் பறி போய் உள்ளது.. எதற்கு எடுத்தாலும் காங்கிரஸ் கட்சியை பார் என்று சொல்வதை நிறுத்திவிட்டு உங்கள் வேலையை ஒழுங்காக செய்யுங்கள்.
சரி மீண்டும் FTII விஷயத்திற்கு வருவோம்.

கஜேந்திரன் அவர்களிடம் உலக சினிமாவைப்பற்றி தங்கள் கருத்து…

எனக்கு உலக சினிமாவை பற்றி தெரியாது .

வருடாவருடம் பாம்பாயில் நடைபெறும் சர்வதேச சினிமா விழாவிற்கு இதுவரை போய் இருகின்றீர்களா ?

இல்லை.

இந்த பதவியை அரசாங்கமே கொடுத்து இருந்தாலும் .. நீங்களே .. இதற்கு நான் தகுதியற்றவன் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நான் சரியாக செய்யாவிட்டால் எடுத்து விடுங்கள் .

இது என்ன ஒரு வேளை சமையல் செய்யும் வேலையா?. வாய்ப்பு கொடுக்க.?இந்த நபர் தொலைகாட்சியில் அளிக்கும் பதிலை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.இந்த மோடி முகஸ்துதி பாடியவர்கள் இன்னும் என்ன என்ன பதவியில் வந்து நம்மை இம்சை படுத்த போகின்றனரோ.. ஆண்டவனுக்கே வெளிச்சம் .

www.visuawesome.com

7 comments:

 1. இரண்டு இடத்திலும் வேண்டாம்... இங்கேயே தொடரவும்... அதுவே நல்லது... நன்றி... (.com மாறும் போது பலமுறை கேட்டேன் ஞாபகம் இருக்கிறதா...?)

  ReplyDelete
 2. வலைப்பதிவுக்கு நல்ல தலைப்பு !!

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாஸ்கர் அவர்களே. நிறைய தலைப்புகள் மனதில் வந்து போனது. கடைசியில் இந்த தலைப்பு நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். தங்களின் பின்னூட்டதிற்கு நன்றி.

   Delete
 3. மீண்டும் வருக.. நிறைவான செய்திகளை/நகைச்சுவையை அள்ளி தருக..
  அருமையான கேள்வி.. நிரம்ப தகவல்கள்..
  வாழ்க வளமுடன்..

  ReplyDelete
 4. ///கஜேந்திர சௌஹான் கடந்த சில வருடங்களாக மோடி அவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த மோடி ஸ்துதிக்கு நன்றி கடனாக இவருக்கு இந்த பதவியை BJP தந்துள்ளது ///

  இது தெரியாமல் நான் மோடியை கிண்டல் செய்து நிறைய பதிவுகள் போட்டுவிட்டேன்.ஹும்ம் இது மட்டும் எனக்கு தெரிஞ்சு இருந்தா நான் மோடியை புகழ்ந்து பேசி எழுதி மத்திய அமைச்சராகவே ஆகி இருப்பேன்

  ReplyDelete
  Replies
  1. மத்திய அமைச்சர் ஆவதற்கு புகழ்ந்தால் மட்டும் போதாது. 91ல் BA முடித்து இருக்க வேண்டும் 95ல் BCOM முதல் வருடம் முடித்து இருக்க வேண்டும்.

   Delete
 5. இரண்டு பதிவுகளுக்கான விசயத்தை ஒரு பதிவுகளாக ஆக்கிவீட்டீர்கள்

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...