Tuesday, January 27, 2015

ஒ"பாமா" விஜயம்!அருமையான படத்தை அளித்த நண்பர் மதுரை தமிழனுக்கு கோடி நன்றி..


என்ன , மாண்புமிகு அமைச்சர் ஸ்மிரிடி இராணி அவர்களே , கையில் நர்சரி புத்தகத்த வைத்து கொண்டு ..."C, A, T is Cat .... M, A, T is Mat"ன்னு புலம்பி கொண்டு ...யாரவது பெரியவா பிறந்தநாளை நர்சரி தினமா கொண்டாடலாம்னு ஏதாவது திட்டமா ?வாங்க  விசு . நம்ம ஒபாமா வாராரு இல்ல, அது தான்.


என்னாது?  நம்ப ஒபாமாவா?  எப்ப இருந்து அவர் நம்ம ஒபாமா ஆனார்?10 வருஷமா இல்லாத விசாவை மோடிக்கு  கொடுத்தார் இல்ல, அன்றே அவர் நம்ம ஒபாமா ஆகிவிட்டார், என்ன சொல்றிங்க சுஷ்மா!பத்து வருடம் இல்லாத விசான்னு கதை அடிக்காத .. ஒரே வாரத்தில் உனக்கு யேல்  பல்கலைகழகத்தில் இருந்து டிகிரி கொடுத்தார் இல்ல, அதனாலன்னு சொல்லு.சரி அவர் வருவதற்கும் இந்த  C A T ..is  Cat  க்கும் என்ன சம்மந்தம்?.உலகிலேயே பெரிய ஜனநாயகநாடு , அதின் கல்வி துறை அமைச்சர் நான், நான் கல்லூரிக்கு கூட போகாத ஆள்ன்னு ஒபாமாவிற்கு தெரிஞ்சா நம்ம நாட்டு கதை கந்தல் தான் ... அதனால் அவர்  எதிரில் பேஷா பேச வேண்டாமா? அதுதான் C A T  is Cat.வாங்க மோடி சாப்... என்ன முகத்தில் பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பிவைத்தவன் போல் ஒரு சிரிப்பு.உன் பிரச்சனை உனக்கு விசு! ஒபாமா வர நேரத்தில் நீ என்ன சாதாரண பேன்ட் ஷர்ட் ? கோட்  சூட் ஏதாவது அணிந்து கொண்டு வா .ஏன் ?சரியான மரமண்டையா இருக்கியே! அப்படி டிரஸ் பண்ணாதானே ஒபாமாவிற்கு இந்தியர்கள் மேல் ஒரு மரியாதை வரும்ஒ, அதனால் தான் நீங்க சூப்பர் டிரஸ் பண்ணி இருக்கீங்களா? வெரி குட்.மோடிஜி .. அது என்ன உங்க துணியில் மூவாயிரம் இடத்தில எதோ எழுதி இருக்கு?

இது எப்படி இருக்கு?  
அதுவா? அது ஒன்னும் இல்லை . என் பெயர் தான் 

ஓ,,,  உங்க ஊர் ஹோட்டலில் டபரா செட்டில் போட்டிருப்பது போல இந்த கோட் மோடியிடம் இருந்து திருடப்பட்டது என்று போட்டு இருக்கீங்களா?

விசு, நீ  அந்த மதுரைதமிழன் கூட சேர்ந்து நீயும் ரொம் நக்கல் பண்ணுற . சரி சரி அதில் இருப்பது என் பெயர் மட்டும்தான்  போடுற துணியில் நேரா கோடு போடுவதற்கு பதிலாக என் பெயரை மூவாயிரம் முறை எழுத சொன்னேன். இந்த மோடி ஒரு விளம்பர பிரியன் என்பது உனக்குதான்  நல்லா தெரியுமே இப்ப எப்படி இருக்கு சொல்லு நல்லா இருக்கா ?


சூப்பர் ஐடியா ! எவனும் உங்க பெயர மறக்க கூடாது. மறக்கவும் மாட்டான் .


இந்த   சூட்  விலை  என்ன  தெரியுமா  உனக்கு ? கிட்டத்தட்ட 9 லட்சம்.


மோடிஜி, ஒரே ஒரு துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்ட காந்திஜி வந்த குஜராதில் இருந்து வந்த நீங்கள்...?


விசு .. எப்ப பாரு, மோகன்லால் காந்தியை பற்றியே பேசிக்கொண்டு இருக்க  கூடாது.


அது சரி மோடி ஜி ,சுஷ்மா ஏன் மூஞ்ச தூக்கி வைச்சி இருக்காங்க .ஒன்னும் இல்ல ஒபாமா எதிரில் இந்தியாவிலே சிறந்த பெண்மணி இவங்க தான்னு சொல்லனும்மா ,அதுக்கென்ன .. காசா பணமா, சொல்ல வேண்டியது தானே ?அது எப்படி சொல்ல முடியும் ? போன வாரம் BJP யில் சேர்ந்த கிரண் பேடி .. என் அழகான முகத்தை பற்றி எவ்வளவு அருமையாக பேசினார்கள் ? சுஷ்மா இதுவரை ஒரு முறை அப்படி  பேசி இருப்பார்களா ?அதுவும் சரி தான் .சரி , ஓபாமாவ வரவேற்க விமான படையை சேர்ந்த பெண் அதிகாரிய தலைமை தாங்க சொன்னீர்களாமே ? நம்ம ராஜ்நாத் சிங்கை  வச்சி ஏதாவது பண்ணி இருக்கலாமேநல்லா கேட்ட போ . நான் அமெரிக்கா போகும் போது ... அங்க ஒபாமா என்னிடம் ... என்ன உங்க ஊரில் பெண்கள் ஜீன்ஸ் போட கூடாது ... காதலர் தினம் கொண்டாட கூடாது .. அது இதுன்னு சொல்ரிங்கலாமேன்னு கேட்டார் .. அது எல்லாம் பொய் .. எங்க ஊரில் பெண்கள் விமானபடையில் கூட இருகின்றார்கள் என்று காட்டி கொள்ள தான் இந்த பிளான்.அப்ப ராஜ்நாத்  சிங், கதை ?அவரை கொஞ்சம் தூரமாவே வைக்க வேண்டும் . ஓபாமாவ "கர் வாப்சி" செய்ய வேண்டும்ன்னு ஒரே தொல்லை.ஆட்சி நமது தானே.. சொல்லி தான் பாருங்களேன், மோடிஜி..அது பெரிய பிரச்சனை ஆச்சே ..ஏன் ...?என்ன விசு...? புரியாதமாதிரி பேசுற ..ஒபாமா வெளிப்படையா தான் ஒரு கிறித்துவன் என்று சொல்பவர் . அவர் பெயரில் "ஹுசைன்" என்று உள்ளது . இவர் மீண்டும் வருவது என்றால் இதுக்கு 4 லட்சம் , அதுக்கு 2 லட்சம்னு ..கொஞ்சம் ஜாஸ்தி இல்லை ?இப்ப புரியுது.. 6 லட்சம் கொஞ்சம் ஜாஸ்தி தான்.சரி விடு விசு.. அதுவா இப்ப பிரச்சனை ? சரி எங்க இந்த அருண்  ஜேட்லி   காணோம் ?அவர் எதுக்கு இப்ப ?அவர் ஒருத்தர் தான் பார்க்க கொஞ்சம் லட்சணமா இருக்கார், அதுமட்டும் இல்லாமல் கொஞ்சம்  அறிவா பேசுவார் .வாங்க கிரண் பேடி ! துப்பாக்கி பிடித்த கையில் இது என்ன விளக்குமாறு? அதை கொஞ்சம் விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்.பெருசா ஒன்னும் இல்லை.  இப்ப எல்லாம்  நாலு பேருக்கு எதிரில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றால் கையில் ஒரு விளக்குமாறோடு ஒரு போஸ், அதுதான்.அப்படியா ? நான் ஒரு நிமிஷம் நீங்க "அம்  ஆத்மி" கட்சிக்கு தாவிட்டீங்கலோன்னுயோசித்தேன்.இவர்கள் எல்லோரும் இங்கே அமர்க்களம் பண்ணி கொண்டு இருக்க அங்கே எதிர் வீட்டில் ராகுல்  காந்தி  (பாமா விஜயம் ஸ்ரீகாந்த் பாணியில் ) .. I have no Name .. No position .. No Respect..  எனக்கு கொஞ்சம் தயவு காட்டுங்களேன் ...பின் குறிப்பு :சுற்று பயணம் முடிந்து திரும்புகையில் ....மிசெல் ஒபாமா .ஏங்க,  அவர் மோடியை பாருங்க .. அவர் முகத்தில் என்ன ஒரு சந்தோசம். இவ்வளவு பெரிய நாடு .. இவ்வளவு பிரச்சனை, பக்கத்து ஊரு காருங்க வேற எப்ப பாரு பயமுறுத்தினே  இருக்காங்க  . இருந்தாலும் அதை எல்லாம் மறந்து அவர் எப்ப பாரு சிரித்த முகத்தோடு இருக்காரே ... நீங்களும் இருக்கீங்களே  .. சுடு மூஞ்சி ..அடியே மிஷல் .. என் செல்லம் ... அவருக்கும் எனக்கும் ஒரு பெரிய வித்தியாசம் ..அது என்ன வித்தியாசம் ? பெரிய வித்தியாசம் ?எனக்கு பக்கத்தில் நீ எப்பவுமே இருக்க இல்ல .. ஆனால் அவருக்கு அப்படி இல்லை .www.visuawesome.com

5 comments:

 1. என்னது 9 லட்சமா...?

  மமமகாத்மாமாமா...

  ReplyDelete
 2. உண்மையை அப்படியே கற்பனை/கதை போலவே எழுதி இருக்கிங்க..
  அருமை.. ;)

  ReplyDelete
 3. கடைசி வரிதான் சூப்பர்ப்ப்ப்ப்ப்...........

  ReplyDelete
  Replies
  1. வாங்க பொன் சந்தர். முதல் முறையா வந்து இருக்கீங்க. சந்தோசம்.

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...