வெள்ளி, 23 ஜனவரி, 2015

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்....

என்ன சாரதி ... டைட்டானிக் கப்பலில் மாமியார அனுப்பி வச்ச மாதிரி "பீலிங்கா" இருக்க .....?

சித்தப்பூ.. நொந்து போய் இருக்கேன், நீ வேற இந்த நேரத்தில் ...

என்ன ஆச்சி, சொன்னா தானே தெரியும்

ஒன்னும் இல்ல..

டேய், முகத்தின் வழியலில் அகமே தெரியுது , விஷயத்த சொல்லு!

நேத்து வீட்டில் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது.. என்னத்த சொல்வேன்?

டேய் ... ஒரு ஆம்பிளைக்கு கல்யாணமே ஒரு அசம்பாவிதம் மாதிரி தான்
தோணும், விவரமா சொல்லு. என்னால் முடிந்த வரை ஏதாவது செய்யுறேன் .
வேணா விடு சித்தப்பூ..

இப்படி நானும் சராதியும் பேசி கொண்டு இருக்கையில் நண்பன் தண்டபாணி அங்கு வந்து சேர்ந்தான்.

என்னா வாத்தியாரே, சாரதி "பீலிங்கா" இருக்கான், நீ என்னமோ பாரதிராஜா படத்தில் வரும் தேவையில்லாத ஹீரோ போல ஒரு லுக் கொடுத்துன்னு.. என்ன விஷயம்?

ஒன்னும் இல்ல, சாரதி வீட்டில் நேற்று ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டதாம் .. அதுதான் பீலிங்கா இருக்கான்.

என்ன சாரதி? நீ வாங்குற சம்பளத்தில் இருந்து 200 டாலரை குறைத்து சொல்லி நீ கஷ்ட பட்டு உழைத்த சம்பளத்தில் நீயே திருடுவியே , வீட்டில் வசமா மாட்டிகினியா?

டேய் ,சாரதி.. சூப்பர் ஐடியாடா இது... இவ்வளவு நாளா எனக்கு கூட சொல்லி கொடுக்கவில்லையே..

சித்தப்பூ.... இவன் தண்டபாணி ஒருத்தன் சொல்றான்னு நீயும் அதை நம்புறியே... நான் போய் அப்படி செய்வேனா?

மாப்பு .. சாரதி.. மனசாட்சி தொட்டு சொல்லு, நீ உன் சம்பளத்தில் இருந்து மாதத்திற்கு 200 டாலர் திருடுலன்னு சொல்லு..

தண்டபாணி, நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா? சித்தப்பூசத்தியமா  நான் 200 டாலர் திருடுல.

உன் முகத்தில் நீ பொய் சொல்ற மாதிரி தெரியுதே,

200 டாலர் இல்ல சித்தப்பூ. 150 தான். இவன் தண்டபாணி தான் இந்த ஐடியாவ எனக்கு சொல்லி கொடுத்தான்.

அட பாவிங்கள .. இத்தனை வருஷம் கூடவே இருந்துட்டு இந்த நல்ல ஐடியாவ எனக்கு சொல்லாமல் விட்டு விட்டீர்களே.

வாத்தியாரே, மீன் குட்டிக்கு நீந்த சொல்லி தருன்னுமா? இத விட "தாறு மாறு" ஐடியா எல்லாம் நீ வச்சின்னு இருப்ப.. சரி, சாரதி விஷயத்திற்கு வா. என்ன  என்ன ஆச்சி வீட்டில்?

ஒன்னும் இல்ல... நேத்து காலையில் இருந்தே பிரேமா ... இன்றைக்கு என்ன நாள் தெரியுமா ?. என்ன நாள் தெரியுமான்னு ஒரே டார்ச்சர்.

என்ன சாரதி.. பிரேமா பிறந்த நாளா? உன் மனைவி பிறந்த நாளும் உன் பிறந்த நாளும் ஒரே நாள் தான .. அதை எப்படி மறந்த?

சித்தப்பூ .. பிறந்த நாள் இல்ல ?

பின்ன..

காலையில் எழும் போதே.. "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்"ன்னு வேற ஒரே பாட்டு"

அப்படியா? கேக்கவே நல்லா இருக்கே ..

சரி .. அப்புறம் என்ன ஆச்சி?

எனக்கு ஆபிசில்  வேலை நிறைய,அதனால்  சீக்கிரம் கிளம்பி வந்துட்டேன் .
அப்புறம் போன் பண்ணி.. திரும்பவும் இன்றைக்கு என்ன நாள்ன்னு கேட்டா?
நான் அங்கே இருந்த டென்சனில் "என்ன இழவு, நீ தான் சொல்லி தொலையேன்னு சொல்லிட்டேன்"

சரி.. அப்புறம் ..

சாயங்காலம் வீட்டிற்க்கு போனா.. ஒரே ஒப்பாரி ... உன்னை கட்டிக்கினு நான் என்னத்த கண்டேன்னு...

மேல சொல்லு ..

அப்புறம் "அவ என்னை" கண்டபடி திட்ட, "என்னை அவ"  கண்டபடி திட்ட ஒரே கலாட்டா..

அப்புறம்?

ஒருத்தரோடு ஒருத்தர் பேசாமல் தூங்க போய்டோம்.

டேய்.. மனைவி உன்ன கண்டபடி திட்ட, உன்னை மனைவி கண்டபடி திட்ட, இது எல்லாம் ஒரு அசம்பாவிதமா.. இது எல்லாம் எல்லா வீட்டிலும் தினமும் நடக்கின்ற விஷயம் தானே.. நான் என்னமோ ஏதோன்னு  நினைத்தேன்.

சித்தப்பூ ..அவசர படாத... நிதானமா கேளு.

சொல்லு..
இன்னைக்கு காலையில் நான் பாட்டுக்கு எழுந்து ஒரு காபி போட்டு கொண்டு ஆபிஸ் வந்து கம்ப்யூட்டர ஸ்டார்ட் பண்ணா...

என்ன ஆச்சி?

"திருமண நாள் வாழ்த்துக்கள் "ன்னு நிறைய நண்பர்கள் முக நூலில் போட்டு இருக்கின்றார்கள்.

அட பாவி.. திருமண நாளா மறந்துட்டியா?

தண்டபாணி, நீ அமைதியா இரு..சித்தப்பூ.. திருமணம் ரெண்டு பேருக்கும் தானே ஆச்சி, இவ நல்ல குடும்பத்து பெண் தானே.. காலையில் எழுந்தவுடன் , என்னை வாழ்த்தி இருக்கணும் இல்லை..

சாரதி.. பிரேமா தான் வாழ்த்துனாங்களே ..

எப்ப வாழ்த்துச்சி?

டேய், முட்டாள். காலையில் எழுந்து "சுந்தரி நீயும் ..." பாட்டு பாடுனாங்க  இல்ல, அதுக்கு என்ன அர்த்தம்?

எனக்கு என்ன தெரியும்? அந்த படம் பாத்து தான் , பல வருடம் ஆச்சே..

சரி இப்ப என்ன பண்ண போற?

என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே ..சாரதியின் அலை பேசி அலறியது..

சொல்லு பிரேமா.

சம்பளமா.. வங்கிக்கு நேர வந்து இருக்குமே.

அப்படி இருக்காதே . சரியாதானே போட்டு இருப்பாங்க..

என்னது ஒரு வருஷமா 150 டாலர் கம்மியா போட்டு இருக்காங்களா?

நான் நாளைக்கே விசாரிக்கிறேன்..

இதோ இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டில் இருப்பேன்..

அலை பேசியை அணைத்து விட்டு..

தண்டபாணி ... சம்பள விஷயத்தில் மாட்டி கொண்டேன் போல இருக்கு..
ஏற்கனவே திருமணநாள், இதுல சம்பள திருட்டு வேற.. சித்தப்பூ, இந்த மாதிரி விஷயம் எல்லாம் உனக்கு கண்டிப்பா நடந்து இருக்கும் இல்ல.. என்ன எப்படியாவது காப்பாத்து.

டேய்... பண்றது எல்லாம் திருட்டு வேலை, இதில் எனக்கும் நடந்து இருக்கோம்ன்னு தோராயமா ஒரு ஆராய்ச்சி வேற..

வாத்தியாரே.. ஏதாவது ஒன்னை எடுத்து விடு. பாவம், வளர்ற பையன், குப்பை கொட்டட்டும்.

ஓகே, இப்படி பண்ணு...

எப்படி வாத்தியாரே..

தண்டம், என்னமோ மாட்டியது நீ போல உணர்ச்சிவசபடுற..

வீட்டுக்கு வீடு வாசப்படி வாத்தியாரே, இது அடுத்த வருஷமே எனக்கும் நடக்கலாம் இல்ல.

தண்டபாணி.. கொஞ்சம் சும்மா இருக்கியா .. எரியுற நெருப்பில் எதையோ  ஊத்தினானாம் .

அது எதோ இல்ல மாப்பு .. எண்ணை!

ரொம்ப முக்கியம் தண்டபாணி, வாத்தியாரே, நீ சொல்லு.

சாரதி.. இந்த மாதம் மாதம் 150 சுட்ட தானே.. அதுல எவ்வளவு கையில் வைச்சி இருக்க?

அது எதுக்கு வாத்தியாரே..?

டேய்..

1000க்கும் மேல இருக்கு.

நேரா .. கடைக்கு போ, ஒரு வளையலோ , கம்மலோ வாங்கி கொண்டு வீட்டிற்கு போ.

அப்புறம் ..

கோபமா பிரேமா வருவாங்க..

நீ பாட்டு சிரித்து கொண்டே...நல்லா ஏமாந்தியா ? இந்த வருஷம் நமக்கு 10 வது திருமண நாள்ன்னு வருட ஆரம்பத்தில் இருந்தே சம்பளத்தில் இருந்து மாதா மாதம் 150 டாலர் எடுத்து சேத்து வைச்சி.. இதோ...
வளையல்... மற்றும் கம்மல்.

சூப்பர் ஐடியா வாத்தியாரே... அப்புறம் பார்க்கலாம் ....

பின் குறிப்பு ;

சில மணி நேரம் கழித்து ... அலை பேசி அலறியது..

சித்தப்பூ..

சொல்லு சாரதி..

ஐடியா சூப்பரா வொர்க் அவுட் ஆச்சி.. கோடி நன்றி...

நல்லா இரு,,, நல்லா இரு..

என்று நான் சொல்லும் போதே.. சாரதி... "சுந்தரி நீயும்" என்று பாடி கொண்டே  அணைத்தான்  அலை பேசியை தான்.

சில நொடிகளில்.. அலை பேசி மீண்டும் அலற..

வாத்தியாரே..

சொல்லு தண்டம்..

"சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தியே"வாத்தியாரே..

புரியல..

வீட்டிற்கு வந்ததில் இருந்து இங்கே சுந்தரி ஒரே டார்ச்சர்..

ஏன் அவங்களும் .. அதே பாட்டா, அவங்களுக்கு பாட வராதா?

ரொம்ப முக்கியம் ... வாத்தியாரே..

டேய், விஷயத்துக்கு வா..

சாரதி உன் நண்பன் தானே .. அவர பாரு.. எந்த ஒரு காரியத்தையும் என்ன அழகா பிளான் பண்ணி செய்யுறார். இந்த வருடம் அவர்களின் 10வது ஆண்டு திருமணநாள் என்று ..வருட ஆரம்பத்தில் இருந்தே மனைவிக்கு கூட தெரியாம டாலர் சேத்து வச்சி .. வளையல் கம்மல் வாங்கி வந்து இருக்காரு.. நீயும் இருக்கியே... உனக்கு கழுத்த நீட்டி என்ன சுகத்தை கண்டேன்னு ஒரே ஒப்பாரி..

சாரி, பாணி.. இது பூதம் கிளம்பும் போது கிணறு வெட்ட போன கதை மாதிரி போய்டிச்சி.

வாத்தியாரே.. பழமொழி தவறா ... சரி அதை விடு..நீ என்றைக்கு தான் பழமொழியை சரியா சொல்லி இருக்கே.. இப்ப நான் என்ன பண்றது?

தண்டம்.. மாதம் மாதம் 200 டாலர் சுட்ட இல்ல .. அதுல இப்ப  எவ்வளவு
கையில் இருக்கு ..

கிட்ட தட்ட 2000 டாலர் கிட்ட இருக்கு வாத்தியாரே..

நீ ஒரு காரியம் பண்ணு ... எனக்கு அவசரமா 1950 டாலர் கைமாத்தா தேவைபடுது. கொஞ்சம் கொடுத்து உதவி பண்ணு..

வாத்தியாரே... ...நீ. சொல். கொஞ்ச...கேட் .... வில்லை..

என்று தண்டமே விட்டுவிட்டு பேசி பழியை அலை பேசி மேல் போட்டான்.

www.visuawesome.com

நண்பர்களே,
என்னுடைய பதிவுகளும் மற்ற படைப்புகளும் www.visuawesome.com  என்ற தளத்திற்கு மாற்ற பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த  Blog Spot  ல் அடியேன் இருக்க மாட்டேன்.என்எழுத்துக்கள் தங்களுக்கு பிடித்து இருந்தால் www.visuawesome.com  என்ற தளத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்த்து..

6 கருத்துகள்:


  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  2. அருமையான நகைச்சுவை பதிவு மனதுவிட்டு சிரித்தேன். கலக்குங்க நண்பரே....இனிமேல் நான் பதிவுலகத்தில் இருந்து பொட்டியைகட்டிவிட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பெருந்தன்மையான பாராட்டிற்கு நன்றி. தம்மை போன்ற பிரபல பதிவர்கள் இவ்வாறு பாராட்டுகையில் எனக்குள்ளே இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணம் - உணர்ச்சி.
      என்னாது ? போட்டி கட்டுறிங்களா? நான் நேத்து பெய்த மழையில் முளைத்த காளான் நண்பரே .. பதிவுலகில் நீங்கள் ஆலமரம்!

      நீக்கு

  3. யாழ்பாவாணன் உங்கள் பதிவில் நீங்கள் இந்தியா வருவதாக பதிவிட்டாலே உங்களை பார்க்க விரும்புவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்களே அதற்கு பதிலாக எல்லோர் தளத்திற்கும் சென்று
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்! என்ற டெம்ளேட் கருத்து அவசியமா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  4. இதுபோன்று நண்பர்களுக்காக ஒரு (இலவச) ஆலோசனை மையமே தொடங்கலாம்.

    அருமையான பதிவு, அடேங்கப்பா நண்பர்கள்.

    வாழ்த்துக்கள்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...