Monday, January 19, 2015

சென்சார் போர்டு...ஒன்னுமே புரியல .. உலகத்தில ...!

அட பாவிங்களா !

போன வாரம் "லீலா சாம்சன்" தலைமையில் இருந்த சென்சார் போர்டு ஒட்டுமொத்தமா ராஜினமா பண்ணத பார்த்து ..

அடே டே, இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்  வரும் என்று நினைத்தேன்.  இதை பற்றி யோசிக்கும் போதே ..
விசு, உனக்கு இது தேவையா? கடந்த பதினைந்து வருடங்களில் வெளி வந்த படங்களில் நீ மொத்தமா பார்த்ததே பதினைந்து கூடஇருக்காது (கடந்த பதினைந்து வருடங்களில் வெளிவந்த படங்கள் தான், அதற்கும் முன்னால் வெளி வந்த படங்களை நிறைய முறை DVD மற்றும் "You Tube" ல் பார்த்து உள்ளேன்) .

சரி, நம்ம சமீபத்திய படங்களை பார்க்க விட்டாலும் நாட்டு நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இந்த ராஜினமா செய்தவர்களை பற்றி கொஞ்சம் அறியலாம் என்று தளத்திற்கு சென்றேன். எங்கே பார்த்தாலும் இவர்கள் அனைவரும்  "இந்தியாவை பிடித்த சனியன் காங்கிரஸ்" தலைமையில்ஆட்சி நடந்த போது   அவர்களால் அவர்களின் "செல்ல பிள்ளைகளுக்கு" அளிக்கபட்ட பதவி என்று ஒரு  கருத்து தான் நிலவுகின்றது.
Picture Courtesy : Google

சரி, இந்த "செல்ல பிள்ளைகள்" புதிய ஆட்சியில் நிலைக்க வாய்ப்பே இல்லை அல்லவா? அதனால், அவர்கள் "வெளியே போ" என்று சொல்வதற்கு முன் இவர்கள் தாங்களாகவே வெளியேறி விட்டார்கள்.

வெளியேறும் போதே, "ஆலமரத்து பிசாசு போகும் போது, மரத்த ஒரு உலுக்கு உலுக்கிட்டு தான் போகும்" என்பதை நிருபிக்கும் வகையில் ..

அரசியல்வாதிகளின்  தலையீடு நிறைய இருப்பதால் (அரசியல்வாதிகளின் தலையீடு  தான் நம் நாட்டின் சாபக்கேடு,அதை யாரால் மறுக்க இயலும்? ) நாங்கள் ஒட்டுமொத்தமாக விலகுகிரோம்   என்று அறிவித்தார்கள்.


சரி, இப்போ தலைப்பிற்கு வருவோமா!


பிரதமர் மோடியின்  தலைமையில் பெரும்பான்மை ஆட்சி வந்தவுடன் நான் (மற்றவர்களை பற்றி அறியேன்) எதிர்பார்த்தது ...
இந்த "செல்ல பிள்ளைகளின்" நியமனம் இனிமேல் ஒழிந்தது என்று.

இந்த சென்சார் போர்டு விலகியதும், ஆஹா.. அருமை! புது ஆட்சியில் இந்த போர்டில் யார் யார் வருகின்றார்கள்? எப்படி வருகின்றார்கள்?என்று பார் ப்போம் என்ற ஆவலில் அமர்ந்து இருக்கையில் ... முக புத்தகத்தில் தமிழ் சினிமா மற்றும் நாடக கலைஞ்சர் S. V. Sekar  அவர்கள் :


//My heartiest thanks to Sri.MODI ji for the recognition & appointing me as the Regional Censor Board chair person.  If God be with us,who can be against us//

என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார் . அடே டே ..இவர் கிட்ட தட்ட 35-40 வருடம் கலையுலகில் இருந்தவராயிற்றே, அதனால் கிடைத்த பலன் என்று நினைத்து கொண்டே இருக்கையில் ..

விசு, இவர் BJP கட்சியை சார்ந்தவர் .. அதனால் இந்த "செல்ல பிள்ளை" பாணி தொடருது என்று மனதில் ஒரு  குரல்.


என்னாது? SV சேகர் பிஜேபியில்சேர்ந்தாரா? அவர் அதிமுக வில் தானே இருந்தார் என்று இன்னொருமுறை தளத்தில்  தேடியதில் சற்று தடுமாறிவிட்டேன். சரி, இப்போது அவர் பிஜேபி ல் இருகின்றார் என்று தெரிந்து கொண்ட பிறகு, ஒரு வேளை, இவர் ஒருவர் தான் BJP கட்சியை சேர்ந்தவர், மற்றவர்கள் எல்லாம் எப்படி என்று பார்க்கலாம் என்று ஒரு சிறிய ஆராய்ச்சியில் இறங்கினேன்.


இதுக்கு எல்லாம் ஒரு ஆராய்ச்சியா? SV சேகர் இல்லாமல் மற்றவர்கள் யார் இருகின்றார்கள் என்று மட்டும் கொஞ்சம் பாரு என்று மனதில் ஒரு குரல் கேட்க்க ..அந்த புது போர்டில் இருந்த அடுத்த பெயர் "நடிகை ஜீவிதா"  ..  ஒ .. சரி இவங்க எப்படி என்று பார்க்காலாம் என்று போனால் .. இவர்களும் சமீபத்தில் பிஜேபியில் சேர்ந்தவர்களாம் .

சரி, இதுகூட ஒரு தற்செயலாக நடந்த நிகழ்ச்சியா இருக்காலாம் .. இந்த புது குழுவின் தலைவர் யார் என்று பார்க்கலாம் என்று போனால் ..

அவர் பெயர் .. " பஹல்ஜ் நிஹாலனி " ...சென்ற பொது தேர்தலின் போது "ஹர் கர் மோடி" என்ற ஒரு பிரபல பாடலை அமைத்து தேர்தல் நேரத்தில் மோடி அவர்களின் பெயரை நாட்டின் மூலை முடுக்குக்கு எல்லாம் சேர்த்தவராம்.

அப்படியே இன்னமும் சில பெயர்கள் , ஒட்டுமொத்தமாக பிஜேபி யை சார்ந்தவர்கள். இதில் ஒரு இஸ்லாமிய பெயரும் இருந்தது. அவர் BJP கட்சியை சார்ந்தவரா இல்லையா என்று தெரியவில்லை.
ஆக மொத்தம் ... "எக்கட்சி ஆளுங்கட்சியோ அக்கட்சி நம் கட்சி" என்று பலர் சந்தோசபடுவது தெரிகின்றது.

வாழ்க .. வளர்க ..

www.visuawesome.com

நண்பர்களே,
என்னுடைய பதிவுகளும் மற்ற படைப்புகளும் www.visuawesome.com  என்ற தளத்திற்கு மாற்ற பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த  Blog Spot  ல் அடியேன் இருக்க மாட்டேன்.என்எழுத்துக்கள் தங்களுக்கு பிடித்து இருந்தால் www.visuawesome.com  என்ற தளத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்த்து..

4 comments:

 1. இதற்காத்தான் சேர்ந்தார்களா...? வெளங்கிடும்...!

  ReplyDelete
 2. பின்னணியில இம்புட்டு விஷயம் இருக்கா...? சரித்தான்.

  ReplyDelete
 3. காலையிலே நியுஸ் படிச்ச போதே விளங்கிருச்சு!

  ReplyDelete
 4. நண்பரே! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தச் செல்லப் பிள்ளைகள் உள்ளே நுழைவது என்பது நடக்கும் ஒன்றுதான்..அதற்கு மோடியும் விதி விலக்கு அல்ல...துதி பாடும் கும்பலுக்கு எப்போதும் ஒரு தனி இடம்தான்.....

  அது சரி எஸ் வி சேகர் எப்போதோ பிஜேபி சேர்ந்துவிட்டாரே...தேர்தலுக்கு முன்னரே! நாங்கல்லாம் எந்தக் கட்சி ஜெயுக்கும்னு தெரின்சுதானே அந்தக் கட்சியில சேருவோம்...அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...