Sunday, January 11, 2015

வாழையடி வாழையாக வளரும் சுயநலம்..

சென்ற வாரம் அலுவக விஷயமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. அங்கே பன்னாட்டில் இருந்து வந்த பல அதிகாரிகளை சந்திக்க வேண்டி இருந்தது.வெவ்வேறு  நாட்டை சேர்ந்தவர்கள். அலுவலக வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை உணவு நேரத்தில், எல்லாரும் தங்கள் குடும்பத்தினை பற்றியும், மற்றும் நாட்டினை பற்றியும் பேச ஆரம்பித்தனர்.

என் அருகே கனடாவை சேர்ந்த ஒரு வெள்ளைகார மனிதரும் மற்றும் மெக்ஸிகோ நாட்டினை சேர்ந்த மற்றொருவரும் அமர்ந்து இருந்தனர். ஒருவரை ஒருவர் அறிமுக படுத்திகொண்ட பிறகு, அவர்தம் குடும்பம் மற்றும் பூர்விகத்தை பற்றி பேசி கொண்டு இருந்தோம்.அப்போது அந்த கனடாவை சேர்ந்தவர்..

என்ன உங்க நாட்டில் புது ஆட்சி வந்துள்ளதாமே? கனடா மீடியாவில் இதை பற்றி நிறைய செய்திகள் வருகின்றது, இந்த புது ஆட்சியை பற்றி நீ என்ன நினைகின்றாய்?

(மனதில்.. அட பாவிங்களா... ஆரம்பிச்சிடிங்களா? எதிரில் இவ்வளவு அட்டகாசமான  சாப்பாடு இருக்கும் வேளையில் இப்ப அரசியல் அவசியமா? இருந்தாலும் அதை வெளியே சொல்ல முடியாது அல்லவா.. அதனால்..)

எஸ்.. நான் இந்தியாவில் வாழாவிட்டாலும் , நாட்டுநடப்பை அறிந்து கொள்ள விரும்புவேன், நிறைய செய்திகளை படிப்பேன். நீங்கள் கூறியது போல், புது ஆட்சி பெரும்பான்மையோடு வந்து உள்ளது.

சரி, இந்த புது ஆட்சியினால் இந்தியா முன்னேற வாய்ப்புண்டா?

மனதில்.. (அட பாவிங்களா, எங்க நாடு என்ன ஒரு அருமையான நாடு. எங்களிடம் இல்லாத விஷயமா? இந்த பாழா போன அரசியல் வாதிகளின் சுயநலத்தினால் எங்களை ஒட்டு மொத்தமாக பிச்சை காரர்கள் போல அல்லவா பார்கின்றீர்கள், இதையும் வெளியே சொல்ல முடியாதே... ) அதனால்..

சென்ற 10 வருடத்தில் காங்கிரெஸ் தலைமையில் நடந்த ஆட்சி எங்கள் நாட்டின் "கெட்ட காலம்" என்று சொல்லலாம். இந்த 10 வருடங்களில் எங்களை ஆண்டவர்களும் சரி - அதிகாரிகளும் சரி ஊழல் என்ற ஒரே காரியத்தில் ஈடுபட்டதால், நாடு குட்டி சுவர் ஆகிவிட்டது.. அதனால் தான் மக்கள் காங்கிரஸ் கட்சியை எட்டி உதைத்து விட்டு மோடி அவர்கள் தலைமையில் இருந்த BJP கட்சிக்கு பெரும்பான்மை கொடுத்து ஆட்சியில் அமர்த்தி உள்ளார்கள். நாங்கள் அனைவரும் ஏதாவது நல்ல காரியம் நடக்கும் என்று தான் எதிர் பார்த்து கொண்டு இருகின்றோம்.

சரி, ஆட்சி வந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டதே..ஏதாவது நல்லது நடந்ததா?

நான் வெளிநாட்டில் வாழ்பவன், இந்தியாவில் நல்லதோ கெட்டதோ, செய்திகளின் மூலம் தான் அறிபவன் , அதனால் எனக்கு ஆணித்தரமாக எதையும் அடித்து சொல்ல முடியாது.

சரி ஒன்பது மாதங்களில் நடந்த நல்ல செய்திகளை ஏதாவது கூறுங்கள்..

வெளிநாட்டில் திருட்டுத்தனமாக சேர்த்துவைக்க பட்ட இந்த பொது மக்களுக்கு சொந்தமான கோடிகணக்கான டலார்கள்  " கருப்பு பணம்"  .. கண்டிப்பாக மீண்டும் எங்கள் நாட்டிற்க்கு வந்து சேராதுன்னு இந்த ஒன்பது மாதத்தில் உறுதி ஆகிவிட்டது.

அதை ஏன் அவ்வளவு சந்தோசமா சொல்ற?

ஒன்னும் இல்லை, இனிமேலும் சும்மா தேர்தல் நேரத்தில் யாரும் மக்களை , இந்த உறுதி கொடுத்து வெற்றி பெற முடியாது அல்லவா?

சரி, வேற என்ன நல்ல காரியம்?

நாடு முழுக்க சுத்தமா இருக்கின்ற இடத்தில அழுக்கை கொட்டி பெருக்கி எடுத்தோம்..

உங்களுக்கு இந்த ஆட்சிகார்களை பிடிக்கவில்லை போல இருக்கு அதனால் கிண்டல் பண்றீங்க என்று நினைகின்றேன்.

அப்படி எல்லாம் இந்த ஆட்சி அந்த ஆட்சின்னு இல்லை. இவங்க யாரையுமே பிடிக்காது. விடுதலை வாங்கி வருடங்கள் தான் போனது. ஒரு நல்ல காரியம் நடந்த மாதிரி தெரியல..  If you dont mind, can we talk about something else..?

சரி அரசியலை விடுங்க... சமூகத்த பற்றி பேசலாம். இந்தியா மிக பெரிய ஜனநாயக நாடு.  இந்நாட்டின் மிக பெரிய பிரச்சனை என்று நீங்கள் எதை கருதுகின்றீர்கள்?

மனதில் ( அரசியல்வாதிகள் தான்... ஆனால் அதை பற்றி பேச வேண்டாம்னு நானே சொல்லிட்டனே..இதையும் வெளியே சொல்ல முடியாதே, அதனால்..) மிக பெரிய பிரச்சனை...
பொது மக்களின் சுய நலம் தான்..

பொது மக்களின் சுயநலமா? விளக்கமா சொல்லுங்க..

சுயநலம்..ஒவ்வொரு இந்தியனுக்கும் மனதில் ஆணித்தரமாக இருக்கும் ஒரே காரியம்.. தன் பிள்ளைகளுக்கு பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்பது தான். யார் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை, என் பிள்ளைகளுக்கு நான் என்ன சேர்த்து வைக்க வேண்டும் என்று போட்டி போட்டு கொள்வதில் எங்களுக்கு நிகர் நாங்களே . ஒரு வீடு வைத்து இருப்பவன், வீட்டில் உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைப்பான். நம்ம சாவும் போது நம்ம பிள்ளைகளுக்கு எவ்வளவு சேர்த்து வைத்தோம் என்று சந்தோசமாக சாவதில் இந்தியனை யாரும் அடித்து கொள்ள முடியாது.
பிள்ளைக்கு படிப்பு வருதோ இல்லையோ.. காசை கொடுத்து மருத்துவர் ஆக்கிவிட வேண்டும். படிப்பு வருதோ இல்லையோ.. காசை கொடுத்து பொறியியல் நிபுணர் ஆக்கி விடவேண்டும், என்ற ஒரு போட்டி.  எங்க அப்பா அம்மா எனக்கு சேர்த்து வைத்ததை விட நான் என் பிள்ளைகளுக்கு இன்னும் அதிகமாக சேர்த்து வைக்க வேண்டும் என்ற குறிக்கோள்.

இது ஒரு வித்தியாசமான பிரச்சனை போல் இருக்கே..

ஐய்யா.. உங்களுக்கு இது வித்தியாசமான பிரச்சனையாக இருக்கலாம், அனால் இங்களுக்கு இது தான் விஷ பிரச்சனை. இதில் என்ன ஒரு விசேஷம் என்றால், இந்த சுய நலம் அடித்தர இந்தியனிடம் ஆரம்பித்து கோடீஸ்வர இந்தியன் வரை இருக்கு... அப்ப நாடு எப்படி முன்னேறும்?

இங்கே அமெரிக்காவிலும் சரி, மற்றும் பல முன்னேறிய நாடுகளிலும் சரி,  அப்பன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் பிள்ளை (பையனோ - பெண்ணோ) 18 வயது ஆனவுடன் பெற்றோர்களோடு இருந்தால் அது அந்த பிள்ளைக்கும் மற்றும் பெற்றோருக்கும் அவமானம். 18 வயது ஆனவுடன் ஒரு நபர் கல்லூரிக்கோ, அல்ல வேலைக்கோ போறாங்களோ  இல்லையோ .. ஆனால் தனியாக போய்விடுவார்கள்.  நாலு இடத்தில போய் நாலு நல்லது கெட்டது அறிவார்கள், இந்தியாவில் அப்படி இல்லையே. ஒரு 18 வயது பையனோ பெண்ணோ வீட்டை விட்டு போனால் ( இப்போது நிலைமை மாறியதா தெரியவில்லை) அந்த வீட்டில் ஒப்பாரி தானே. ஒரு பிள்ளைக்கு படிப்பு வராவிட்டால் ஒப்பாரி தானே.. அதை கரை ஏத்த .. " யாரு எக்கேடு கேட்டு போனால் என்ன என்று ஒரு சுயநலம்." இந்த சுயநலம் இருக்கும் வரை முன்னேறுவது கடினம்.

அப்ப இந்த கோடீஸ்வரர்கள் எல்லாரும் நாட்டின் நல்லதிற்கு என்று ஏதாவது நன்கொடை ...?

மனதில் ( உனக்கு உண்மையாவே தெரியாத , இல்லை என் வாயை கிளருகின்றாயா, இதையும் வெளியே சொல்ல முடியாதே)  ..ஐயா.. இங்க பில் கேட்ஸ் மற்றும் மற்ற பணக்கார்கள் போல் எங்க பணக்கார்கள் தாங்கள் சம்பாதித்ததை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். அடுத்த 18 பரம்பரை உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பது தான் இவர்கள் முக்கிய குறிக்கோள்.

அப்ப நீங்க உங்கள் பிள்ளைகளுக்கு எதுவும் கோடி கணக்கில் ...?

நல்லா கேட்டிங்க போங்க.. எல்லாம் வல்ல இறைவனின் மேல் பற்று , அருமையான படிப்பு, இசை பயிற்சி, விளையாட்டு  பயிற்சி, மற்றும்   தனி மனித ஒழுக்கம். அவசரத்திற்கு எங்களால் முடிந்த  பண உதவி.. அம்புட்டுதேன்.. 40 மணிநேரத்திற்கும் மேலே வேலைக்கு போனால் என் ராசாத்திகளே என்னை  வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரு வேளை நீங்கள் இந்திய பிரதமர் ஆனால் மக்களுக்கு புதுசா என்ன சொல்வீர்கள்.

என் இனிய இந்திய மக்களே, நீங்கள் உங்கள் சுய நலத்தை விடுங்கள், நாடு தானாக மாறும்".

www.visuawesome.com

13 comments:

 1. சுயநலம் - பயங்கர விஷ பிரச்சனை தான்...

  பலதும் உண்மைகள் - (மனதில் நினைத்து வெளியில் சொல்ல முடியாதது...)

  ReplyDelete
  Replies
  1. இந்த விஷம் நம்மை விட்டு போகாவிட்டால்.. நம் கதி அந்தோ பரிதாபம்...
   வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 2. உண்மைதான் மக்கள் தங்கள் அடிப்படை சுயநல எண்ணங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. மாற்றி கொள்ள வேண்டும், நன்றாக சொன்னீர்கள்.. மாறுவார்களா? காலம் தான் பதில் சொல்லும். வருகைக்கு நன்றி...

   Delete
 3. உண்மைகளை அழகாக பகிர்ந்து இருக்கின்றீர்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. உம்மை போல் படம் போட்டு காட்ட முடியாவிட்டாலும் , எதோ ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை போல்.. என்னால் முடிந்தது.. வருகைக்கு நன்றி.

   Delete
 4. இந்தியா முன்னேற எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கிறது. அதுதாங்க நம்ப நண்பர் ஆல்பிரெட்டை பிரதமர் ஆக்கிவிட வேண்டியதுதான் என்ன நான் சொல்லுவது சரிதானே

  ReplyDelete
  Replies
  1. தமிழா... அல்ப்ரெட், நன்றாக படித்த நபர். உண்மையை பேசும் மனிதன். இந்த பொய் பித்தலாட்டம் எல்லாம் தெரியாதவர்.. He is not fit to be in Indian Politics.

   Delete
  2. இதை நான் முன்மொழிகிறேன்..

   Delete
 5. தன்னலமே நாட்டின் பெரிய தடைக்கல் என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள்! அருமையான பதிவு! நன்றி!

  ReplyDelete
 6. அருமையான பதிவு ஐயா.
  வாரிசு இருப்பவர்கள் ஓரளவு சேர்த்து வைக்கலாம்.....

  ஆனால் வாரிசே இல்லாத தலைகள் சேர்ப்பது என்? இதை சுயநலம் என்று சொல்லாமா...?

  ReplyDelete
 7. sonna vishayangal ellam 100% unmai sir. sinthikka vaitha pathivu

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...