திங்கள், 22 டிசம்பர், 2014

நன்றி கூத்தபிரான் அவர்களே...

"இதோ வருகிறார், மால்கம் மார்ஷல், விக்கடிற்க்கும் மேல் அரபு நாட்டு குதிரை போல் நளினமாக ஓடி வந்து வேகமாக வீசுகிறார். மார்பளவு உயரத்தில் குதித்து விக்கடிற்க்கும் வெளியே சென்ற பந்தை வெங்கசர்க்கார் தொட்டு விட அந்த மட்டையின் விளிம்பில் பட்டு  ஸ்லிப் திசையை நோக்கி பறக்க, செல்லாமாக தான் வளர்த்த பச்சை கிளியை தன கையினால் அள்ளி அணைத்து வாரி கொள்வதை போல் சிறித்து கொண்டே பிடித்து கொண்டார் ஹார்ப்பர். இது விக்கடிற்க்கும் வெளியே சென்ற பந்து. இதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை விட்டு விட்டு தொட்டு விட்டார் வெங்க்சர்கார். வெளியில் போகும் பாம்பை ஏன் அடிக்க வேண்டும் அது நம்மை சீண்ட வேண்டும் நாம் இறக்க வேண்டும்? "



இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் அன்று மதராசில் நடக்கும் கிரிக்கட் விளயாட்டிர்க்கான தமிழ் நேர்முக வர்ணனை தான் அது. பொங்கலும் அதுவுமாய்  வீட்டில் அருமையான சிற்றுண்டி முடித்து விட்டு வானொலியை தட்டிவிட்டால் வரும் நேர்முக வர்ணனை, அதுவும் தமிழில்.  அதை ஆரம்பித்து நடத்தி வைப்பவர் அருமையான தமிழர் " கூத்தபிரான்".

இன்று காலையில் செய்தி படிக்கையில் கண்ணில் பட்டது, "கூத்தபிரான் இறந்த செய்தி" . மிகவும் விசனமான செய்தி. இவர் கிரிக்கட் வர்ணனையாளர் மட்டும் அல்ல. நிறைய நாடகங்களிலும் நடித்தவர். தமிழ் பேச்சு தமிழ் மூச்சு என்று வாழ்ந்தவர். யார் ஒருவருக்கும்  தீங்குநினைக்காதவர்.

Picture Courtesy : Google

இவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

கூடுதல் செய்தி (எங்கேயோ எப்போதோ படித்தது) :

ஆல் இந்தியா ரேடியோவில் பணி புரிந்த இவர் தினந்தோறும் வேலைக்கு வருகையில் தனக்கு மட்டும் அல்லாமால் தன அறையின் சன்னலில் வந்து உட்காரும் காகங்களுக்கும் மதிய உணவு எடுத்து வருவாராம். கூத்தபிரான் அலுவலத்தில் இருந்து விடுமுறை எடுத்தார் என்றால், மதிய வேலை அவரை தேடி வரும் காகங்கள், கதியே அவரை காட்டி கொடுத்து விடுமாம். மிக நல்ல மனிதர். அவர் சேவையை போற்றுவோம்.

www.visuawesome.com

5 கருத்துகள்:

  1. நெஞ்சம் மறப்பதில்லை
    வானொலியின் நேர்முக வர்ணனையாளர் சிட்டென்று பறக்கும் சிட்டுக் குருவியின் சிலிர்ப்பை நம்மையும் உணர வைக்கும் தமிழ் நடைக்கு சொந்தக்காரர்!
    கூத்தபிரானை நினைக்கும்போது எனது உள்ளமானது
    துடித்துத்தான் போகிறது.

    புதுவை வானொலியின் நிலைய நாடக நடிகராக நான் (புதுவை வேலு) இருந்தபோது நடந்த நிகழ்வுகள் யாவும்
    என் கண்முன் தெரிகிறது!

    காக்கைக்கும் விருந்து படைத்த
    கருணை உள்ளம் படைத்தவர் கூத்தபிரான் புகழ் அழியாதுஎன்றும் வாழும்.
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்!

    "உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை" - இது பழமொழி
    "உணவிட்ட விவசாயிகளுக்கு, வாழ்த்தும், நன்றியும் சொல்வதற்கு
    "குழலின்னிசை"- வலைப் பூ பக்காமாய் வாருங்களேன்!

    "இன்று விவசாயிகள் தினம்" (23/12/2014)

    நன்றி!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  3. நானும் அவரின் வர்ணனைகளை டிவியில் மேட்ச் போட்டுவிட்டு mute செய்துவிட்டு, ரேடியோவில் அவர் தமிழ் வர்ணனை கேட்டது லேசாக ஞாபகம் வருகிறது.. ஹிந்தியில் வர்ணனை கேட்டுக்கும் பொழுது ஏன் தமிழில் இருப்பது இல்லை என்று ஒரு கோவத்தோடு யோசித்தும் நினைவுக்கு வருகிறது..
    அன்னாரது ஆத்மா சாந்தி ஆகட்டும்..

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...