செவ்வாய், 2 டிசம்பர், 2014

அப்பாக்கள் ஏன் - எப்படி - எப்ப இளிச்சவாயர்கள் ஆனார்கள்?

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய 'கேக் வேணும்மா ... கேக்கவே வேண்டாம் " என்ற பதிவை படித்து விட்டு நண்பர் மதுரை தமிழன் (அவர்கள் உண்மைகள்) பின்னூட்டம் மூலமாக :

//என்னைப் போலவே நீங்களும் ஒரு அப்பாவியான அப்பாவா? அப்பாக்கள் எப்போது இளிச்சவாயர்களாக இருப்பது ஏன்? இதைப் பற்றி நீங்கள் பதிவு போடலாமே//

என்று கருத்து இட்டு இருந்தார்.



இந்த பின்னூட்டம் நகைச்சுவையாக இருந்தாலும் என் நினைவுகளை கசக்கியது.

என்னாடா இது..

சிறு வயதில் அம்மாவிற்கு பயம்.

அதன் பின் காதலிக்கு பயம்.                    

அதன் பின் மனைவிக்கு பயம்.

அதன் பின் மாமியாருக்கு பயம்

அதன் பின் மகளுக்கு பயம்..

ஒரு ஆணின் பிறப்பில் இருந்து இறப்பு வரை பயம் பயம் பயம்.... எப்படி தான் இந்த ஆண் மகன் வாழ்கிறான்?

என்று நினைத்து மதுரை தமிழனின் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று அசை போட ஆரம்பித்தேன்.

நான் இளிச்ச வாயனா ? எப்போது இளிச்ச வாயன் ஆனேன் என்று நினைத்து கொண்டு இருக்கையில்...

ஏங்க ... பிள்ளைகள் ரெண்டு பேரையும் கூட்டி கொண்டு இங்கே வாங்க. ஒரு "அவசர குடும்ப மீட்டிங்" என்று மனைவி அழைத்தார்கள்.

மூவரும் ஆஜாராகி... என்ன விஷயம் என்றோம்.

இந்த புது போர்டை பாருங்கள், இன்றில் இருந்து இது தான் நம் "இல்லத்தின் விதி முறைகள்". இதை நாம் வேதம் போல் கடை பிடிக்க வேண்டும்.

அப்படியா.. எங்கே அந்த "விதி முறைகள்"?
(ஆங்கிலத்தில் இருந்த அதை இங்கே என்னால் முடிந்தவரை மொழிபெயர்க்கிறேன்)

படுக்கையில் இருந்து எழுந்தவுடன் படுக்கையை  மடிக்க வேண்டும். 
துணியை அணிந்தவர்கள், அதை ஒழுங்காக மாட்டி வைக்க வேண்டும்.
உணவை உண்டவர்கள், பாத்திரங்களை கழுவி வைக்க வேண்டும்.
பெட்டியை திறந்தவர்கள், அதை மூடி வைக்க வேண்டும்.
கடைசியாக உபயோகபடுத்துபவர்கள், அதை நிரப்பி வைக்க வேண்டும்.
தொலை பேசி அலறினால், உடனடியாக பதிலளிக்க வேண்டும்.
வளர்ப்பு பிராணிகள் பசியில் கத்தினால், அதற்கு உணவளிக்க வேண்டும்.
யாரவது அழுதால், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.


அடே டே , இந்த விதி முறைகள் மிகவும் நன்றாக உள்ளதே என்று நினைத்து மனைவிக்கு நன்றி சொல்லிவிட்டு, ராசாத்திக்களிடம் .. 

"ஜாக்கிரதை ( வெண்ணிறாடை மூர்த்தி ஸ்டைலில் ), இனி தம் தம் வேலைகளை அவர் அவரே செய்ய வேண்டும்"

என்று ஒரு மிரட்டல் போட்டு பெருமையில் ஆழ்ந்தேன்.

"இந்த போர்டை எல்லாரும் எப்போதும் பார்க்கும் படி நடு வீட்டில் சுவற்றில் மாட்டி வைக்க போகிறேன் "

என்று மனைவி சொல்ல, அது நல்ல யோசனை என்று ஆமோதித்து விட்டு படுக்க சென்றேன்.

அடுத்த நாள் காலையில், மனைவி பிள்ளைகள் எனக்கும் முன் கிளம்பி சென்று விட, கொஞ்சம் நேரம் எக்ஸ்ட்ராவாக தூங்கிவிட்டு வெளியே வந்த நான் அந்த போர்டை பார்த்து பேய் அறைந்தது போல் ஆகி விட்டேன்  (பேய் அறைந்த கதையை பின்னர் ஒரு நாள் கண்டிப்பாக சொல்கிறேன்).

அந்த அருமையான போர்டில், என் ராசத்திக்கள் ஒரு எக்ஸ்ட்ரா வரி சேர்த்து விட்டார்கள். அந்த வரி தான் என்ன ?

"இந்த எல்லா வேலைகளையும் - விதிமுறைகளையும்  அப்பா செய்வார்"

 அன்றும் சரி, இன்றும் சரி , இந்த வேலைகளையெல்லாம் நான் தான் செய்து வருகின்றேன். மதுரை தமிழன் சொன்னது போல், அப்பாக்கள் எல்லாரும் இளிச்சவாயர்கள் தான்.


அந்த போர்டையும், எழுத்தையும் நீங்களே பாருங்களேன்..



www.visuawesome.com

11 கருத்துகள்:

  1. அய்ய நான் இளிச்ச வாய் என்று சொன்னது சிரிக்கும் வாயை ..அதாவது பெண்களை பார்க்கும் போது அப்பாக்களாகிய நாம் சிரிப்பதை சொன்னேன்...












    இங்கு நான் பெண்கள் என்று சொன்னது நம் மனைவி மற்றும் பெண் குழந்தைகளை நீங்கள் வேறு ஏதும் தப்பாக நினைத்து கொள்ள வேண்டாம் ஹீஹீ... எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியது இருக்கு. ஹும்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியது இருக்கு!!! :)

      நீக்கு
  2. எல்லா வேலைகளையும் நீங்கள்தான் செய்து வருகிறீர்களா,
    வேலை செய்யாதவர்களுக்கு நினைவூட்டத்தான் போர்டு வைப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. நல்லாவே மாட்டி விடறாங்க! பாவம்தான்!

    பதிலளிநீக்கு
  4. அதன் பின் மகளுக்கு பயம்..
    அதன் பின் மகளின் மாமியாருக்கு பயம்..
    ஆனால்
    பேத்தி இடம் மட்டும் பயம் இருக்காதுன்னு நினைக்கிறேன்..
    உணர்த்தவர்கள் சொல்லவும்... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயையோ இல்லைங்க பேத்திகளிடமும் பயம்தான் ங்க....போன ஜெனரேஷனான அம்மாவிடமே பயம்னா....இப்ப ஜெனரேஷனான பொண்ணுங்ககிட்டயே பயம்னா....எதிர்கால பேத்திகள்?!!!

      நீக்கு
  5. Daddy will do (all --> half) the work..
    நீங்கள், Daddy இந்த விதிகளின் முதல் பாதியை செய்வேன். மறு பாதியை மற்றவர்கள் செய்யுங்கள், என்று சொல்லிவிடுங்கள்..
    like sleep, eat, dress, open, empty, etc போன்ற கடினமான வேலைகளை நீங்கள் செய்து விடுங்கள்.. எளிதான பணிகளான folding, filling, closing, ironing, etc அவர்கள் செய்யட்டும்..
    வீடுனா ஒரு adjustment இருக்கனும் இல்லையா :)

    பதிலளிநீக்கு
  6. ஹஹஹ்ஹஹ் அப்ப ஆண்கள் எல்லாருமே தெனாலி நு சொல்லுங்க...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...