Friday, December 19, 2014

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....

ஹலோ

சொல்லுங்க சார்..

உன்னை ரெண்டே நிமிஷத்தில் சரி பண்ண முடியும். புரிஞ்சதோ?

என்ன ஆச்சி சார்! ஏன் ?

உன்னை மாதிரி சில்லறை ஆட்களை ஒரு வேலை செய்ய சொல்லிட்டு நான் வேற அங்கே வந்து.... (கேடு கெட்ட கெட்ட வார்த்தைகள் ...)

அட்லீஸ்ட் என்ன ஆச்சின்னு சொல்லுங்க?உன்னிடம் என்ன சொல்வதற்கு இருக்கு? என்னை சாதாரணமா நினைக்காதே, அங்கே வந்தா முடியை (இங்கே வேறு வார்த்தையை போட்டு படிக்கவும்.. அது மட்டும் அல்லாமல் கெட்ட வார்த்தைகள் தொடர்கின்றன)....

அவன் என் குடும்பத்தில் ஓர் ஆள். அவனுக்கு அந்த இடத்தில வேலை தர சொன்னனே? அவனுக்கு என் இன்னும் அந்த இடத்தில வேலை போட்டு கொடுக்கவில்லை? நான் அவனுக்கு உடனே இதை செய்ய சொன்னேனே? இதை யார் செய்வது ... (கெட்ட வார்த்தைகள் தொடர்கின்றது) ஏன் இந்த காரியம் இன்னும் முடியவில்லை. அங்கே வந்து உன் அலுவலகத்தில்  வச்சி ... (கெட்ட வார்த்தைகள் ...மீண்டும்)..
அது மட்டும் அல்ல, இன்னொரு முறை நான் போன் பண்ணும் போது, நீ எடுக்காவிட்டால் ...(இங்கே வேற என்ன... இன்னும் கெட்ட வார்த்தை தான் ) .. நாளைக்கு அந்த ஆர்டர் வரணும்.. புரிஞ்சதா? நல்லா கவனமா கேட்டுக்கோ நாளைக்கு அந்த ஆர்டர் வரணும்.

ஒரு நிமிஷம் நான் சொல்வதை கேளுங்கள்.

நான் என்னத்த கேட்பது ?

தயவு செய்து நான் சொல்வதை ஒரு நிமிஷம் கேளுங்க. நான் உங்களை கெஞ்சி கேட்கின்றேன்.

நீ என்னத்த சொல்ல போற?

நீங்க அதை கேட்டால் தானே தெரியும்.

நான் என்னத்தடா கேட்கனும். நீ மட்டும் இப்ப என் எதிரில் இருந்த எட்டி ரெண்டு  உதை  விட்டு இருப்பேன். உனக்கு மனதில் என்ன நினைப்பு. நான் யார் தெரியும் இல்ல?
உன்னிடம்  எல்லா நிதானமா பேசினா . (வேற என்ன மீண்டும் கெட்ட வார்த்தைகள் தான் )

நீங்க தேவை இல்லாமல் கோப படுகின்றீர்கள் .. கொஞ்சம் நிதானமா கேளுங்க

என்னத்த கேக்கணும்

அந்த பையன் ஏற்கனவே அந்த இடத்தில 2000 மாத்திரைகள் திருடி இருக்கான் (இவர் குடும்பம் ஆச்சே..)அவனை இங்கே போட்டோம் என்றால் இங்கேயும் ஏதாவது பிரச்சனை பண்ணுவான்.

என் தொண்டர்கள் (குண்டர்கள் என்று படிக்கவும்) முன்னாலே என் மரியாதை  என்ன ஆவது ? தொ(கு)ண்டர்கள் என்னிடம் வந்து நீ எதுவுமே செய்ய வில்லை என்று சொல்கின்றார்கள். (கெ. வா. தொ ..ஒன்னும் இல்ல கெட்ட வார்த்தை தொடர்கின்றது.. ) மனதில் வைத்து கொள். உன் பிள்ளைகள் நிம்மதியா தூங்க முடியாது. நான் இந்த மாதிரி மரியாதையா பேசுவதால் (இதில் எங்கே மரியாதையான பேச்சு என்று எனக்கு தெரியவில்லை) தான் நீ பயப்படவில்லை. உன்னை மாதிரி ஒரு ஆள் நான் கொடுத்த வேலை செய்யவில்லை என்று என் தொ(கு)ண்டர்கள் என்னிடம் சொல்றாங்க. இதுக்காடா நான் அரசியலுக்கு வந்தேன்? நாளைக்கு அந்த ஆர்டர் என் கைக்கு வரணும். இல்லாவிடில் என் குண்டர்கள் (இவ்வளவு நடந்தாச்சி, இனிமேல் தொண்டர்கள் எதற்கு?) உன்னை கண்டம் துண்டமா போட்ருவாங்க. உன் ஆபீசில் வந்து உன்னை போட்டு தள்ளுவேன்.

நாளைக்கு காலையில் அந்த ஆர்டர் என் கையில் இருக்கவேண்டும். அது என் கையில் வராவிட்டால், நாளை மறுநாள் என்ன நடக்கும் (கெ. வா. தொ..)

நண்பர்களே.. இந்த உரையாடல் ஒரு படிப்பறிவில்லா அரசியல்வாதிக்கும் (குஜராத் MLA  மற்றும் ஒரு சீனியர் மருத்துவ அதிகாரிக்கும் நடந்த உரையாடல். இந்த மருத்துவ அதிகாரி இந்த அரசியல்வாதியிடம் இருந்து தப்பிக்க வேலைக்கு செல்வதை கூட விட்டு விட்டார்.

பிரதமர் மோடி அவர்கள் இம்மாதிரியான களைகளை உடனடியாக பிடுங்க வேண்டும் . இவரும் ஒரு கிராமத்தில் இருந்து வந்த படிக்காத MLA, அதனால் இவரை மன்னிக்க வேண்டும் என்று இவருக்காக வாய்தா வாங்க கூடாது.

உங்களில் சில பேர் இன்னும் இது நடந்து இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைக்கின்றீர்கள். உங்களுக்காக இந்த காணொளி தொடர்பு.. கண்டுகளியுங்கள்.

 (என்னே ஒரு அமைதி சாந்தம்.. இவரு இப்படி பேசி இருக்க மாட்டாரு ...)

பின் குறிப்பு:

அட சனியன் பிடித்த அரசியல்வாதிகளே, நம் நாட்டு மக்கள் இந்த "கேடு கெட்ட காங்கிரஸ்" ஆட்சி ஒழிய வேண்டும் என்று பெரும்பான்மையோடு உங்களை ஆட்சியில் அமர்த்தினால் .... நீங்க அவங்களோடு மோசமா இருப்பீங்க போல இருக்கே!

www.visuawesome.com


5 comments:

 1. நம்ப முடியவில்லை நண்பரே
  இப்படியுமா?

  ReplyDelete
 2. இப்படியும் கூடவா? தங்கள் பதிவு அருமை..

  இந்திய மக்கள் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நம்ம்கொரு கவ்லை இல்லைனு இருக்க வேண்டியதுதான் போல

  ReplyDelete
 3. பிரதமர் மோடி செய்வாரா...? ம்...

  ReplyDelete
 4. பசுதோல் போர்த்திய குள்ள நரி.

  நல்ல பதிவு இல்லை நான் சொல்வது வீடியோ பதிவை.

  கோ

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...