Thursday, November 6, 2014

விளக்குமாறோடு ஒரு விளம்பர விரும்பியை பார்த்தால் விளக்குமாற்றால் அடித்து துரத்துங்கள்.

சென்ற மாதம் நம் பிரதமர் மோடி அவர்கள் விளக்குமாறை கையில் எடுத்து கொண்டு "சுத்தமான இந்தியா" என்று சிரித்து கொண்டே புகைப்படத்தில் வரும் போதே, இது இவருக்கு தேவையா? என்று நான் நினைத்தேன்.

அது சரி, 100 நாட்களில் தலைக்கு 15 லட்சம் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. மக்களை மகிழ்ச்சிபடுத்த தான் இந்த மாதிரி காரியத்தில் ஈடுபடுகின்றார் என்று நினைத்து நொந்தேன்.எதோ சரி, இந்த காரியத்திலேயும் நாட்டுக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரி என்று "இதுவும் கடந்து போகும்" என்று இருந்தேன்.

பிரதமர் மோடி தான் மட்டும் போட்டோவிற்கு போஸ் கொடுக்காமல் , "சும்மா இருந்த சங்கை ஊத்தி கெடுத்ததை" போல் , மற்ற சில அரசியல்வாதிகளையும், சினிமா நட்ச்சதிரங்களையும், வேறு சில பணக்கார முதலைகளையும் இந்த காரியத்தை செய்ய சொல்லி வரவேற்றார்.

இந்த முட்டாள்கள் , இந்த காரியத்தின் முக்கிய அம்சம் " நாட்டை சுத்த படுத்துவது" என்பதை மறந்து விட்டு,  இந்த முழு காரியமும் நல்ல ஒரு போட்டோ வாய்ப்பு என்று சிரித்து கொண்டே போஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

என்னா விசு? இது ஒரு நல்ல காரியம் தானே, இதற்க்கு போய் விசு ஏன் இவ்வளவு உணர்ச்சிவசபடுகின்றார்  என்று சிலர் கேட்பது  புரிகின்றது. 

நேற்று டெல்லியில் பிஜேபியின் டெல்லி தலைவர் தலைமையில் இந்த "சுத்தம் செய்யும் பணி" நடை பெற்றது. இந்த தலைவரும் மற்றும் வேறு சிலரும் சேர்ந்து வெள்ளையும் சொள்ளையுமாக உடுத்தி கொண்டு, கையில் ஆளுக்கு ஒரு விளக்குமாறை எடுத்து கொண்டு, டெல்லியில் உள்ள ஒரு பணக்கார ஏரியாவில் உள்ள இடத்திற்கு சென்று பெருக்க ஆரம்பித்தார்கள். 

இவர்கள்  அங்கே இருந்த குப்பைகளை கூட்டி பெருக்கி கொண்டு இருக்கையில், இந்த இடத்தில் எப்படி இவ்வளவு குப்பை வந்தது  என்று அருகே இருந்தவர்கள் ஆச்சரிய பட்டு கொண்டு இருந்தார்கள்  . ஏன் என்றால் இந்த இடம் டெல்லியிலேயே மிகவும் சுத்தமான இடம் இங்கு  குப்பை சேர வாய்ப்பே இல்லையே, என்று இவர்கள் வியந்ததிர்க்கு சிறிது நேரத்திலேயே விடை கிடைத்தது.

இந்த மாபெரும் தலைவர்களும், அதிகாரிகளும், பணக்காரர்களும் கூட்டி பெருக்கினார்களே, இந்த குப்பையை, காலையில் சில அதிகாரிகளின் தலைமையில் மற்ற இடத்தில் இருந்து ஒரு லாரியில்  எடுத்து கொண்டு வந்து சுத்தமாக இருந்த இடத்தில் கொட்டி பரப்பினார்கள். அருமையாக சுத்தமாக இருந்த இடத்தை குப்பை கொட்டி , அதை பரப்பி அதை சுத்தம் பண்ணுகின்றோம் என்று சொல்லி இந்த முட்டாள்கள் ஆளுக்கொரு விளக்குமாறை வைத்து கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பிகின்றார்கள்.

இந்த குப்பையை இங்கே வந்து கொட்டியவர்கள், மிகவும் நன்றாக உடுத்தி கொண்டு இருந்த அரசு ஊழியர்கள். இந்த ஊழியர்கள் இன்று செய்த ஒரே வேலை இந்த குப்பையை கொட்டியது தான். இவர்கள் அனைவர்களின் இன்றைக்கான சம்பளமும் சரி, மற்றும் இந்த லாரி, பெட்ரோல்- டீசல் பணம் மற்றும், கூட்டிய இந்த குப்பையை மீண்டும் எடுத்து கொண்டு போவதற்கும் ஆன செலவும் "நாம் கட்டும் வரி பணமே".


நல்ல வேளை நான் இந்தியாவில் இல்லை, நான் அங்கு இருந்தால், விளக்குமாறை தூக்கி கொண்டு புகைப்படகருவியோடு எந்த முட்டாளும் வந்தால், அந்த விளக்குமாறை வைத்தே அவர்களை அடித்து துரத்தி அதை போட்டோ எடுத்து வலை தளத்தில் போடுவேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன்.

பின் குறிப்பு ;

இந்த சனியன்கள் புது உடையை உடுத்தி கொண்டு, புது விளக்குமாரில் புது குப்பையை கூட்டி பெருக்குவது, தினந்தோறும் காலையில் எழுந்து எதுவும் உண்ணாமல் பசியோடு தெருவை பெருக்கி அதில் வரும் சில ரூபாயை வைத்து குடும்பத்திற்கு மூன்று வேளை உணவளிப்பதற்கு ஒரு ஏழை உழைப்பாளி படும் கஷ்டத்தை கிண்டல் செய்வது போல் இருகின்றது.

Pictures Courtesy : Google.

www.visuawesome.com21 comments:

 1. enna sir thodarnthu pathivu ezuthum ninga 2 nal gap vittutingale..
  hmm paaravala. mindum oru nalla pathivudan vanthirukkuringal.

  ingu irukkum antha arasu athkaarikalai ellam thiruththa mudiyuma theriyala:-)

  ReplyDelete
  Replies
  1. தொழில் கணக்கு பிள்ளை ஆச்சே. வருட இறுதி, இனி தினமும் எழுத நேரம் கிடைக்காது. ஆதலால், முடிந்த வரை வாரத்திற்கு இருமுறையாவது எழுத முயற்சி செய்கின்றேன். வருகைக்கு நன்றி.

   Delete
 2. இப்படிபட்ட செயல்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்...ஹும்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. என்னத்த சொல்றது தமிழா. இதை பற்றியான உங்கள் பதிவையும் படித்தேன். என்னத்த சொல்றது...

   Delete
 3. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 4. சுத்தம் செய்யும் லட்சணம் இதுதானா ?நாடு விளங்கிடும் !
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. சுத்தமாக இருக்கும் இடத்தில குப்பையை கொட்டி அதை விளம்பரதிற்க்காக மீண்டும் சுத்தம் செய்வதை நினைத்தால்... நீங்கள் சொன்னார் போல்.. நாடு விளங்கிடும்...வருகைக்கு நன்றி.

   Delete
 5. போர் ஏற்படுத்தி அமைதி பற்றி பேசுவதைப் போலத்தான்....

  ReplyDelete
  Replies
  1. என்னத்த சொல்றது. நீங்கள் சொல்வதும் ஒரு கசப்பான உண்மை தான்,...வருகைக்கு நன்றி காரிகன்.

   Delete
 6. Replies
  1. என்ன ஒரு அநியாயம் ஐயா....? ஒட்டு மொத்தமாக மக்கள் அனைவரையும்.. " நீங்கள் முட்டாள்கள்" என்று சொல்லும்படியல்லவா இருக்கு...

   Delete
 7. உங்களின் இந்த பதிவிற்கான லிங்கை நான் எனது தளத்தில் வெளியிட்ட பதிவில் இணைத்துள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தமிழா... தங்கள் பதிவில் அடியேனின் இணைப்பா? நன்றி...

   Delete
 8. அடக் கொடுமையே! பிஜேபிக்கு இந்த விளம்பரம் தேவையா?

  ReplyDelete
  Replies
  1. இதில் பிஜேபி மட்டும் இல்லை தளிர், மற்றும் சில கட்சியினரும், மத தலைவர்களும் வேறு.. இவங்க எல்லாருமே ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்பதை போட்டி போட்டு கொண்டு நிருபிக்கின்றார்கள்.

   Delete
  2. கேனப்பய நாட்டுல கிருக்குப்பயல்கள் நாட்டு ஆமை.
   நண்பா எமது மதுரை பதிவு காண வருக....

   Delete
 9. தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு...
  ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு...
  தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு...
  ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு...
  மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்...
  தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...

  வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே...
  தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே...
  வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே...
  தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே...
  ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்...
  தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்...

  படம் : நேற்று இன்று நாளை

  ReplyDelete
 10. இந்த பாழாய்போன அரசியல்வாதிகள் என்ற அழுகிப்போன குப்பையை பெருக்கித் தள்ள ஒரு மாய துடைப்பம் மக்களிடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா

  ReplyDelete
 11. அடப்பாவிங்களா! இப்பையுமா? குப்பைஅயி கொட்டி பெருக்கறாப்பல....

  அந்தப் படத்தைப் பார்த்தால் நம்ம கமலின் நம்மவர் படத்தின் பாடல் நினைவுக்கு வருது இல்லையா....சொர்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்...

  நல்ல விளம்பரம்! என்னவோ போங்க! அன்று ஒருநாள் தான் சுத்தமா? மற்ற நாட்கள்?!!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...