செவ்வாய், 18 நவம்பர், 2014

இலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.

வெள்ளி கிழமை காலை !

காலை 6 மணி போல் மூத்த மகளை பள்ளியில் விட செல்லும் வழியில்..

டாடி.. சாயங்காலம் என்ன பிளான்?

நத்திங் மகள்.. ஜஸ்ட் வான்ட் டு ஸ்டேஹோம் அண்ட் ரிலாக்ஸ்.

டாடி, என் பிரண்ட்ஸ் ரெண்டு பேர் இன்றைக்கு சாயங்காலம் ஒரு Football போட்டியில் ஆடுகின்றார்கள். நம்ம போய் பார்க்கலாமா?

எங்க மகள்?


 இங்கே பக்கத்தில் தான் டாடி.. (எங்க ஊரில் பக்கத்தில் என்பது 100 கிலோமீட்டர் வரை கூட இருக்கலாம், நான் எதிர் பார்த்ததை போல் இந்த இடம் 100  கிலோ மீட்டர் தொலைவில் தான்).

சரி மகள். ஆட்டம் எத்தனைக்கு ஆரம்பிக்கும்?

7 மணி போல் டாடி. இந்த ரெண்டு பள்ளிகூடமும் விளையாட்டு போட்டிகளில்  பரம எதிரிகள். அதனால் ஆட்டம் நன்றாக இருக்கும். 

உன் பிரண்ட்ஸ் எந்த அணி?

ரெண்டு பெரும் வெவ்வேறு அணிக்கு ஆடுகின்றார்கள். 

சரி, நாம் சாயங்காலம் போகலாம்.

மாலை, கிளம்பும் நேரத்தில்...

டாடி. சிவப்பு அல்ல நீல நிறத்தில் உடை அணியுங்கள். அது தான் இந்த ரெண்டு அணியின் நிறங்கள்.


இதை படிக்கும் அனைவரும் ஒன்றை மனதில் வைத்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பள்ளிகூடங்களும் அரசு பள்ளிகூடங்கள். மற்றும் இந்த இரண்டு பள்ளிகூடங்களும் இருக்கும் ஊர் ஒரு பெரிய நகரமோ அல்ல பணக்காரர்கள் மட்டும் வாழும் இடமும் அல்ல. ஒரு சாதாரண சிறிய ஊர். அவ்வளவு தான்.

மேலே படிக்கையில் இதை மனதில் வைத்து கொண்டு படியுங்கள்.

ரெண்டு மகள்களுடன் அந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தோம். நாங்கள் ஆட்டம் துவங்கும் போது வந்ததால் வண்டியை அருகே நிறுத்த இடமில்லை. சற்று தொலைவில் இருந்த பார்க்கிங் பகுதியில் வண்டியை நிறுத்தி விட்டு மைதானத்தின் நுழைவாயிலை அடைந்தோம்.

டாடி.. போய் டிக்கட் வாங்குங்கள்.

என்னது? உயர்நிலை பள்ளி விளையாட்டிற்கு டிக்கெட்டா? இது என்ன புது கதை என்று நினைத்து கொண்டே, டிக்கெட் விற்கும் இடத்திற்கு சென்றேன்.

மூன்று டிக்கட் ப்ளீஸ்.

நீங்கள் இந்த பள்ளி சப்போர்டரா இல்லை, விசிடிங் பள்ளியின் சப்போட்டரா?

ரெண்டு டீமிற்கும் சப்போர்டர்தான். ஏன் கேட்கின்றீர்கள்?

இல்லை இரண்டு அணியின் ஆதரவாளரும் இந்த பக்கம் ஒருவர்,அந்த பக்கம் ஒருவர் என்று அமருவார்கள், அதனால் தான்.

இந்த பள்ளியின் சப்போர்ட்டர்கள் இடத்தில அதிக கூட்டம் போல் உள்ளது அதனால் நாங்கள் வேறு பள்ளியின் இடத்திற்கு போகிறோம்.

சரி..எத்தனை டிக்கெட்.

மூன்று பேர்...

பிள்ளைகளுக்கு என்ன வயது.?

15 மற்றும் 12.

ஓகே ரெண்டு அடல்ட், ஒரு பிள்ளை. மொத்தம் 22 டாலர் (8+8+6)


பணத்தை கொடுத்து விட்டு, உள்ளே சென்று அமர சீட் தேடுகையில் அங்கே சீட் எதுவும் இல்லை. அங்கேயே ஒரு இடத்தில் நின்று ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தேன். என்ன ஒரு அட்டகாசமான சூழ்நிலை.இங்கே படிக்கும் மாணவர்கள் தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். அருமையான மைதானம். ஆட்டம் நடக்க.. மிக பெரிய மின் விளக்குகள். ஒரு திருவிழாவே அங்கே நடந்தது.இரண்டு அணியின் ஆதரவாளர்களும் பெற்றோர்களும் போட்டி போட்டி கொண்டு ஆட்டம் - பாட்டம். பார்க்கவே  அவ்வளவு நன்றாக இருந்தது.

இந்த ஆட்டம் பொதுவாகவே கையில் பந்தை வைத்து கொண்டு தானே ஆடபடுகின்றது, இதற்க்கு ஏன் புட்பால் என்று பெயர் என்று கேட்பவர்களுக்கு,,,இந்த "Foot  என்பது... ஒரு "அடி" இந்த பந்தின் மொத்த நீளம் ஒரு அடி என்பதால், இதற்க்கு தான் Football  என்று பெயர் வந்ததாம்.

அறிவிப்பாளர் ஒலிபெருக்கியில் தேசிய கீதத்தோடு ஆரம்பிக்கலாம் என்று கூற அங்கிருந்தத அனைவரும், எழுந்து நின்றனர். தொப்பி அணிந்து இருந்த அனைவரும் தம் தம் தொப்பியை கழட்டினர்  (அடியேனையும் சேர்த்து) . அங்கு இருந்த ஒரு பள்ளி மாணவி கீதத்தை பாட அனைவரும் தம் தம் வலது கையை இதயத்தின் மேல் வைத்து கூடவே சேர்ந்து பாட ஆரம்பித்தனர். அதை காட்சியை காணும் போதே அங்கே உள்ள சிறுவர் -சிறுமியருக்கு தேசிய கீதத்தின் மேல் ஒரு மரியாதை பாசம் வரும் என்று தான் தோன்றியது.

அங்கே நடந்த ஆட்டத்தையும் பாட்டத்தையும் படம் பிடித்து எடுத்து வந்தேன். நீங்களும் பாருங்களேன்.


தமிழன் ஆயிற்றே.. அடுத்தவன் வண்டியை பார்த்தவுடன் அருகே நின்று ஒரு போட்டோ .. தொட்டில் பழக்கம் ...



கள்மாடி (களவாடி)  காமன் வெல்த் ஆட்டத்திற்கு அமைத்து கொடுத்தாரே, அதை விட சிறந்த மைதானம், உயர் நிலை பள்ளிக்கு!


பாதுகாப்புக்கு காவல் துறை !
  

உற்சாக படுத்தும் Cheer Leaders


மாற்று திறன் கொண்டோருக்கு சிறப்பு சலுகை (மைதானத்திற்குள் செல்லலாம்)

உலக தரம் வாய்ந்த மின்கம்பங்கள் (பள்ளி கூடத்திற்கு) 


தற்காலிக கழிவறை 


அருமையான போட்டி முடிந்து வெளியே வரும் போது மனதில் சற்று சோகம். அடே விசு, உன் பள்ளி நாட்களில் இதை எல்லாம் அனுபவிக்க உனக்கு கொடுத்து வைக்க வில்லையே என்று. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா? 

என்ன டாடி , சோகமாகி விட்டீர்கள், ஆட்டம் பிடிக்கவில்லையா?

இல்லை மகள், என் பள்ளி கூட காலத்தில் என் பள்ளியில் மைதானம் கூட இல்லை.

"யு மஸ்ட் பி கிட்டிங்", விளையாட்டிற்கு என்ன செய்தீர்கள்?

ங்கே விளையாடினோம். நீங்கள் எல்லாரும் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் மகளே, 

ஏன் டாடி?

இங்க பாரு, அரசாங்க பள்ளியிலேயே இலவசமாக இவ்வளவு வசதி , நம்ம ஊரில் அரசாங்க பள்ளி என்றாலே ஒரு கேவலமாக பார்ப்பார்கள். இன்னும் சொல்ல போனால் அரசாங்க பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்களே  அவர் தம் பிள்ளைகளை வேறு ஒரு தனியார் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள்.

அப்படியா? பட் நீங்க ஏன் அரசாங்க பள்ளிய இலவசம் என்கின்றீர்கள் டாடி?

அது இலவசம் தானே மகள், இதை  எல்லாம் அனுபவிக்க எதுவும் பணம் கட்ட தேவையில்லையே..

யு ஆர் வ்ராங், டாடி. இந்த வசதிக்கு எல்லாம் நம்ம எல்லாரும் தான் பணம் காட்டுகின்றோம்.

என்ன குழப்புற?



இங்கே பாருங்க...

பின் குறிப்பு : 
நாங்க கூட அங்கே வரி கட்டினோம் என்றால், அது எங்கே போச்சு என்று மகள் கேட்பாளே என்று .. 
thank you for bringing me to this game, my girl, i really enjoyed it. Thanks again!

என்று சொல்லி வீடிற்கு வண்டியை விட்டேன்.. மனதில் ஒரு பாட்டு...

மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு 
கீழ் இறங்கி வந்தவுடம் சொன்னதெல்லாம் போச்சி
நல்ல பணத்த மாத்து , கள்ள கணக்க ஏத்து 
நல்ல நேரம் பார்த்து , நண்பனை ஏமாத்து..


6 கருத்துகள்:

  1. அருமையான பதிவு நண்பரே! நம் அரசாங்கப் பள்ளிகளையும் அங்குள்ள அரசாங்கப் பள்ளிகளையும் நிஜமாகவே ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.

    தமிழன்.....தொட்டில் பழக்கம்....ஹஹஹஹஹ படம் சூப்பர்...அந்தக் கார் தாங்க... ....-துளசி, கீதா

    இது கீதா.........நண்பரே! அங்கு அரசுப் பள்ளி மைதான் என்பது மிகவும் சூப்பராக இருக்கும். நாங்கள் உங்கள் மாகாணத்தில், க்யூப்பர்டினோவில், ஒருவருடம் இருந்தோம். மகன் கென்னடி மிடில் ஸ்கூலில் 7 ஆம் வகுப்பு. பப்ளிக் பள்ளி. ஃபீஸ் என்று அதிகம் சொல்லுவதற்கில்லை. ஆனால் பள்ளியோ ஆஹா! பள்ளியில் வழங்கப்பட்டப் புத்தகங்கள் (திரும்பக் கொடுக்க வேண்டுமே அதனால் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் உங்களுக்குத் தெரியுமே) எவ்வளவு அழகாக ஏதோ பெரிய வகுப்புகள் படிப்பது போல் இருந்தன நல்ல புத்தகங்கள். தினமும் மகனது வகுப்பு முதல் 0 ஹரில் மைதானத்தைச் சுற்றி ஓட வேண்டும். நல்ல விஷயம். சிறிய கற்றல் குறைபாடு இருந்த மகனுக்கு அந்த வாழ்க்கையை மிகவும் ரசித்து, அனுபவித்து வந்தான். நாங்களும் தான். பின்னர் இங்கு....

    இங்கு கேம்ஸ் வகுப்பு என்றால் வேறு வகுப்புகள் அந்த பீரியடில் நடக்கும்...விளையாட்டு? அரிதாக....ம்ம்ம் உங்கள் பதிவு அந்த நினைவுகளை மீட்டியது.

    பதிலளிநீக்கு
  2. சிரிப்பு வருது சிரிப்பு வருது
    சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
    செயலை பார்த்து சிரிப்பு வருது

    பதிலளிநீக்கு
  3. இப்போதுதான் இங்கே சில அரசாங்கப் பள்ளிகள் சில ஆசிரியர்களின் முயற்சியால் ஓரளவிற்கு உயிர்பெற்று வருகின்றன! நீங்கள் சொல்வது போல நடக்க இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?

    பதிலளிநீக்கு
  4. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    சொல்லி கருத்து சரியாக உள்ளது.அமுலுக்கு வந்தால் நன்று...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. இலவசம் என்ற வார்த்தையை
    ஒழிக்க வேண்டும் - அப்ப தான்
    நம்மாளுகள் முன்னேறுவாங்க...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...