Thursday, November 13, 2014

கிளிஞ்சது கிருஷ்ணகிரி !

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நம்ம பிரதமர் மோடிக்கு நம் நாட்டு கல்வி துறை மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு?

யாராவது தெரிந்தா சொல்லுங்களேன்.

நான் ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கேன், நம்ம கல்வி துறை அமைச்சர்  "ஸ்மிரிடி இராணி" அவர்களை பற்றி. மீண்டும் அவர்களை பற்றி சொல்லி உங்களை வெறுப்பேத்த விரும்பவில்லை, இருந்தாலும் அவர்கள் மேல் எனக்கு ஏன் வெறுப்பு என்று இங்கே ஒரு சிறிய போட்டு வைத்து விட்டு விஷயத்திற்கு வருகின்றேன்.

+2 வரை படித்த இந்த அம்மையாரை நம் பிரதமர் மோடி கல்வி துறை அமைச்சராக நியமித்து உள்ளார். இவர்கள் படிக்காது பெரிய காரியம் இல்லை , இருந்தாலும் படித்தேன் என்று பொய் (Yale  பல்கலைகழகத்தில் டிகிரி வாங்கினேன் என்பது உட்பட) சொன்னது தான் என்னுடைய பிரச்சனை என்று என் பதிவை படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

சரி , பிரதமர் மோடி ஒரு நல்ல நிர்வாகி என்று நிறைய நண்பர்கள் சொல்கின்றார்களே, ஒருவேளை  இந்த அம்மையாரிடம் நமக்கு அறியாத நல்ல  விஷயங்கள் ஏதாவது இருக்கும் என்று நினைத்து இவர்களை சகித்து வந்தேன்.

அப்படியே இவர்கள் கல்லூரிக்கு போகாதவர்களாக இருந்தாலும் இவருக்கு கீழ் பணி புரியும் துணை அமைச்சர்கள் நன்றாக படித்தவர்களாக இருப்பார்கள், அவர்கள் துணையோடு இவர்கள் கல்வி துறையை மேம்ப்படுத்த செய்வார்கள் என்ற என் எண்ணம் "கிளிஞ்சது கிருஷ்ணகிரி" ஆகி விட்டது.

நேற்று நம் அருமை பிரதமர் மோடி அவர்கள் தம்  மந்திரி சபையை விரிவு செய்தார். அங்கே தான் என் பிரச்சனை ஆரம்பித்தது. இதில் கல்வி துறைக்கு துணை மந்திரியாக "பேராசிரியர் கதேரியா" அவர்களை நியமித்தார். அடே  டே, முக்கிய அமைச்சர் இராணி அவர்கள் தானே கல்லூரிக்கு போகவில்லை, துணை அமைச்சர் கதேரியா அவர்கள் பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருந்து இருகின்றாரே, இவர் மூலம் கல்வி துறை முன்னேறும் என்று நினைத்த என் எண்ணத்தில் பேரிடி.

இராணி அம்மையாரவது பரவாயில்லை நான் படித்தவள் என்று பொய் தான் கூறினார்கள். இந்த பேராசிரியரோ இளங்கலை படிப்பிலேயும்   சரி முதுகலை படிப்பிலேயும் சரி, தேர்வு எழுதிவிட்டு தனக்கு தானே மதிப்பெண் போட்டு கொள்வாராம்.

எடுத்த மதிப்பெண்ணும் கெடுத்த மதிப்பெண்ணும் (picture courtesy : NDTV)
 
 இது மட்டும் இல்லாமல் இந்த பேராசிரியரின்  மேல் இன்னு ம்20 குற்ற சாட்டுக்கள் உள்ளதாம் (பூர்ணம் விஸ்வநாதன் பாணியில் "ஈஸ்வரா" என்று சொல்லுங்கள், இல்லாவிடில் VK ராமசாமி பாணியில் "மூதேவி" என்று இரண்டில் ஒன்றை  ஒன்றை இங்கே சொல்லி கொள்ளுங்கள்)
 
அட பாவமே, இந்த மாதிரி சனியன்கள் காங்கிரஸ்  தலைமையில் இத்தனை வருடங்களாக ஆண்டதில் தானே நம்நாட்டின் நிலைமை சீரழிந்து உள்ளது. இப்போது இந்த காங்கிரஸ் கட்சியின் சாபகேட்டில் இருந்து நம் நாடு வெளிய வந்துள்ளது என்று நினைத்தவர்களுக்கு இது ஒரு மரண அடி.
எந்த கட்சி ஆண்டாலும் நமக்கு விடிவு காலம் இல்லை என்பதையே இந்த கல்வித்துறையின் அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் நியமிப்பு காட்டுகின்றது.
 
120 கோடி மக்கள் வாழும் நாட்டில் கல்வித்துறையை நடத்தி செல்ல படித்த -பொய் சொல்லாத - திருட்டு வேலை செய்யாத ரெண்டு பேர் கூடவா மோடி அவர்களி ன் கண்ணுக்கு தெரியவில்லை ..

அய்யோ பாவம் .. இந்தியா !
 
www.visuawesome.com

பின் குறிப்பு :
கல்வி துறை அமைச்சர் "ஸ்மிரிடி இராணி"அவர்களும் துணை அமைச்சர் "பேராசிரியர் கதேரியா" அவர்களும் சேர்ந்து கல்வித்துறையின் முன்னேற்றத்தை பற்றி எப்படி விவாதிப்பார்கள் என்று கற்பனை பண்ணி பார்க்கலாம் என்று .. நினைத்தேன், மண்டை காய்ந்து விட்டேன்!

12 comments:

 1. ----இது மட்டும் இல்லாமல் இந்த பேராசிரியரின் மேல் இன்னு ம்20 குற்ற சாட்டுக்கள் உள்ளதாம் (பூர்ணம் விஸ்வநாதன் பாணியில் "ஈஸ்வரா" என்று சொல்லுங்கள், இல்லாவிடில் VK ராமசாமி பாணியில் "மூதேவி" என்று இரண்டில் ஒன்றை ஒன்றை இங்கே சொல்லி கொள்ளுங்கள்)--

  விசு,

  நான் வி கே ராமசாமி பாணியை பின்பற்றுகிறேன். அதுதான் பொருத்தம்.

  ----ஒருவேளை இந்த அம்மையாரிடம் நமக்கு அறியாத நல்ல விஷயங்கள் ஏதாவது இருக்கும் என்று நினைத்து இவர்களை சகித்து வந்தேன். ------

  நானும் அப்படித்தான் நினைத்தேன்....

  ReplyDelete
  Replies
  1. இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்வது காரிகன். நாம் நாடு முன்னேற்றம் ஜான் ஏறுனா முலம் சறுக்குது.

   Delete
 2. அதுக்கும் நாங்க ஒரு பதில் வச்சிருப்போமே !
  இல்லாதவனுக்குத்தானே இருக்கிறதோட அருமை தெரியும்!

  ReplyDelete
  Replies
  1. முதல் முதலாக தம்மை இங்கே காண்கிறேன். வருகைக்கு நன்றி ஐயா! நல்ல பதில் சொன்னீர்கள். இல்லாதவனுக்கு தான் என்று... இல்லாதவன் பொல்லாதவனாய் இருகின்றானே... அதுதான் பிரச்சனை.
   தொடர்ந்து வரவும், தம் கருத்தை தரவும்.

   Delete
 3. சிறந்த நிர்வாகி.. இந்தியாவே தலைகீழாக மாறி விடும்..ஓளிரும்..அப்படி இப்படி என்று நிறைய பிரச்சாரங்கள்..

  ஆனால் ஒரு அடிப்படை நிர்வாக விஷயமான தகுதியான நபர்களை அந்த அந்த பதவிக்கு தேர்ந்து எடுப்பதில் இவ்வளவு சொதப்பல்..அதுவும் இப்போது உள்ள மீடியாகளின் புலனாய்வு மற்றும் rating வெறிக்கு, இந்த மாதிரி obvious mis-selections எல்லாம் மிகுந்த ஏமாற்றம்...

  ReplyDelete
  Replies
  1. வேறு எல்லா துறையிலும் கேப்மாரி , முள்ளமாரி , எந்த மாரியையாவது வைத்து கொள்ளுங்கள். கல்வி துறையை கொஞ்சம் பரிதாப பட்டு விட்டு விடுங்கையா...

   எனக்கு என்னமோ சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்து விட்டோமா என்ற பயம் வந்து விட்டது. நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.

   Delete
  2. எனக்கும் அதே பயம் தான்..
   அதுவும் எதிர்கட்சி? என்று எதுவும் இல்லாமல் இருக்கும்போது, இன்னும் பயமாக இருக்கிறது..

   எந்த social media'வை வைத்து இந்த நிலையை அடைந்தார்களோ..
   அதுவே அவர்களை கடுமையாக கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிருக்கும்..

   Delete
 4. மைனஸ் + மைனஸ் = பிளஸ் ன்னு யாரோ ஒரு யேல் பல்கலையில் டிகிரி வாங்கினவன் ஐடியா கொடுத்திருப்பானோ....?

  ReplyDelete
 5. Kizhinjadhu* (zha not La)

  ReplyDelete
 6. தலையே ஒழுங்கு கிடையாது! இவர்களை சொல்லனுமா? மனைவி இருக்கிறார் என்று இந்த தேர்தலில்தான் மோடி ஊடகங்களுக்கு பயந்து ஒத்து கொண்டார்!

  ReplyDelete
 7. Thala...
  Tension aagathinga...
  Less tension more work...
  More work less tension...
  Its all fate :)

  Regards,
  A Yusuf

  ReplyDelete
 8. ஐயோ பாவம் இந்தியா!//

  நண்பரே என்றைக்குமே இந்தியா ஐயோ பாவம்தான்....!!!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...