Tuesday, November 11, 2014

"பல்கலை நூலகத்தில் பெண்கள்"

காலையில் எழுந்து நம் நாட்டு நடப்புகள் பற்றி அறிந்து கொள்ள வலை தளத்திற்கு சென்றேன. நல்ல நேரம் தான். இந்த நாள் நல்ல நாள் தான் போல் இருகின்றது. ஏன் என்றால் எந்த ஒரு "பிரபல சனியனும்" விளக்குமாறை கையில் தூக்கி கொண்டு நாட்டை சுத்தம் செய்கின்றேன்  என்று போஸ் கொடுக்கவில்லை. என் இனிய அப்பரன்டிஸ்களே,  இருக்கும் குப்பையை எளிதாக சுத்தம் செய்யலாம், முதலில் குப்பையை எங்கே போட வேண்டும் என்பதை மக்களுக்கு சொல்லி கொடுங்கள். அதை விட்டு விட்டு உங்கள் புகை படத்தை நாங்கள் பார்க்குமாறு போஸ் கொடுப்பதை தவிருங்கள்.
சரி தலைப்பிற்கு வருவோம் . இந்த சனியன்கள் யாரும் எதிரில் வராததால் சந்தோஷ பட்டுக்கொண்டே காபியை குடித்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன்.

முதல் செய்தி, நம் கல்வி துறை மந்திரி "  "ஸ்மிரிடி இராணி" அவர்களை பற்றியது. இந்த அம்மையார் அவர்களே ஒரு செய்தி தானே, இவர்களிடம் இருந்து ஒரு செய்தியா? என்று நினைத்து படிக்க ஆரம்பித்தேன். இவர்களே ஒரு செய்தியா? என்பதை படித்தவுடன் ஆச்சரிய படும் வாசகர்களுக்கு ஒரு விளக்கம்.

இந்த 21 வாது நூற்றாண்டில் உலகமே கல்வி துறையில் அதிக அக்கறை காட்டி கொண்டு இருக்கையில், நம் அருமை பிரதமர் மோடி அவர்கள் ஒரு இளங்கலை பட்டம் கூட இல்லாத இந்த அம்மணியை கல்வி துறை அமைச்சாராக நியமித்து உள்ளார்.  இதில் என்ன தவறு? படிக்காதவர்கள் அமைச்சராக கூடாதா?  நல்ல கேள்வி. கண்டிப்பாக ஆகலாம். "படித்த பல முட்டாள்களை" விட "படிக்காத மேதை கருமவீரர் காமராஜின்" மேல் எனக்கு அதிக மரியாதை. அவரின் தலை விசிறி நான்.
நடுவில்  இருப்பது தான் நம் அமைச்சர்  
 
பின் ஏன் அம்மையார் மேல் இந்த  கருத்து ? படிக்காதவர்கள் பதவியில் இருப்பது தவறு  இல்லை .ஆனால் படிக்காத ஒருவர் தான் படித்தவன் என்று பொய் சொல்வது மன்னிக்கமுடியாத  குற்றம். இந்த அம்மையார் , முதலில் ஒரு வேட்பு மனு தாக்கலில் " பி காம் முதல் வருடம்" , மற்றும் அடுத்த வேட்பு மனுதாக்களில் "பி எ முதல் வருடம்" என்றும் அதை தொடர்ந்து , தான் அமெரிக்காவில் உள்ள தலை சிறந்த  Yale பல்கலைகழகத்தில் இருந்து பட்டம் வாங்கினேன் என்று சொல்ல அடியேனையும் சேர்த்து அவனவன் அதிர்ந்தான். ஐயையோ மாட்டி கொண்டோமே என்று  அவசர அவசரமாக, இல்லை இல்லை .. நான் இந்த பல்கலை கழகத்திற்கு ஒரு வாரம் சென்று இருந்தேன் அங்கே எனக்கு ஒரு சான்றிதழ் வழங்கினார்கள் என்றார். மருந்திற்கும் கல்லூரி பக்கமே செல்லாத இந்த அம்மையார் தான் நம் கல்வி துறை அமைச்சர். அது தான் இவர்களை பற்றிய செய்தி.

சரி இன்றைக்கான செய்திக்கு வருவோம்.
அட்ரா சக்கை .. அட்ரா சக்கை !

இந்தியாவில் பெயர் பெற்ற "அலிகார் பலகலைகழகத்தில் பெண்களுக்கு நூலகத்தில் அனுமதி இல்லை"  என்பது தான் செய்தி. இது ஏன் என்று கேட்டதற்கு "அந்த நூலகத்தில் அத்தனை பேருக்கு அமர இட வசதி இல்லை, அதனால் தான். அது மட்டும் இல்லாமல் பெண்களை இந்த நூலகத்தில் அனுமதித்தோம் என்றால், ஒவ்வொரு பெண்ணோடு குறைந்த பட்சம் நான்கு ஆண்களும் இங்கே வந்து விடுவார்கள்" என்று அந்த நிர்வாகிகளிடம் இருந்து பதில் வந்தது.இந்த பதில் பொறுப்பற்ற முறையில் இருகின்றது என்பதை யாராலும் மறுக்க இயலாது. அதே நேரத்தில்  இந்த பதிலில் உண்மை உண்டு என்பதை கல்லூரியில் சென்று பயின்ற ஒவ்வொரு மாணவர் மாணவிகளினாலும் மறுக்க இயலாது.
இந்த கல்லூரி நிர்வாகத்தின் இந்த பதிலை கேட்டவுடன் அமையார் அவர்கள் "உலகமே கல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது   இவ்வாறான  பதில் பெண்களை இழிவு செய்கின்றது என்கின்றார்கள். 

கல்லூரி பக்கமே செல்லாத இவர்களுக்கு அங்கே என்ன நடகின்றது என்று சற்று புரிய வைக்கலாம் . ஐந்து வருடம் கல்லூரிக்கு சென்றதால் அங்கே நூலகம் எப்படி செயல் படுகின்றது, என்பது எனக்கு புரிகின்றது. அதை இந்த அம்மையார்க்கு எப்படி புரிய வைப்பது?

நீங்கள் யாராவது ஒரு பதிவை போட்டு புரிய வையுங்களேன்.

www.visuawesome.com

பின் குறிப்பு :

அப்படியே இந்த அம்மையாருக்கு புரிய வைத்தாலும், இவங்க சொல்றத எந்த கல்லூரி நிர்வாகமாவது மரியாதை நிமித்தமா கேட்க்குமா? இவர்க அரசியல் செல்வாக்கை பார்த்து பயந்து கேட்டாதான் உண்டு. பிஜேபி இ படித்த அறிவில் முதிர்ந்த எவ்வளவோ அம்மணிகள் இருக்கையில், இவர்கள் எப்படி இந்த பதவிக்கு ? கேட்டகாமல் இருக்க முடியவில்லை!

Pictures Courtesy : Google.

11 comments:

 1. கல்லூரி நிர்வாகத்தின் பதில் மிகவும் பொறுப்பற்ற ஒன்று.. குழந்தைகள் நிறைய சத்தம் போடுகின்றன.. அதனால் இனி பூங்காக்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்பது போன்ற கருத்து இது. கண்டிப்பாக கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று. யார் கண்டித்தால் என்ன என்ற அளவில் ஸ்ம்ருதி கருத்துடன் நான் உடன்படுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி பண்டு அவர்களே. கல்லூரி நிர்வாகத்தின் பதில் பொறுப்பற்றது என்பதை நான் அறிவேன் அதை தெளிவாகவும் எழுதி விட்டேன். ஆனால் கல்லூரிக்கே செல்லாத ஒருவர் நாட்டில் உள்ள அத்தனை கல்லூரிக்கும் முதன்மையான ஆளாய் இருந்தால் அவரின் வார்த்தகைகளை ஒருவரும் மதிக்க மாட்டார்கள் என்பதே என் கருத்து. இந்த பதவிக்கு ஓர் பெண்ணை தேர்ந்தெடுத்தது மிகவும் வரவேற்க்கப்பட தக்கது. ஆனால் இந்த அம்மணி ஏன்? எனக்கு என்னமோ, இது சரி பட்டு வரவில்லை.

   மேலே பட்டமளிப்பு விழாவில் கல்லூரியில் காலை வைக்காத இவரை பட்டமளிப்பு உடையில் பார்த்தால்......

   Delete
 2. நல்ல கேள்வி நண்பரே.. அதுவும் இந்தியாவின் விடிவெள்ளி?? மோடி.. இன்னும் கொஞ்சம் நாட்டு மக்களின் நலத்தை கவனிச்சி தேர்ந்து எடுத்து இருக்கலாம். இந்த மாதிரி Obvious தவறுகளை தவிர்த்து இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா! ஒரு பதிவை போட்டவுடன் தம்மை போன்றவர்களின் கருத்திற்காக காத்து இருப்பவன் நான். நன்றாக சொன்னீர்கள். மக்களின் நலனை கவனத்தில் வைத்து தேர்ந்து எடுத்து இருக்கலாம்.

   Delete
 3. பல்கலைக் கழகத்தின் பொறுப்பற்ற பதில் கேட்கப்பட வேண்டிய ஒன்று... அதே சமயம் நண்பர் ஒருவர் கேட்டபடி அரசியலில் இறங்க எத்தனை பேர் குழந்தைகளைத் தயார் செய்கிறோம்... அப்படியிருக்க நமக்கு கேள்வி கேட்க எந்த அருகதையும் இல்லை....ஸ்மிர்தா ராணிக்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. அம்மையாரை அரசியல்வாதியாக அமைச்சராக ஏற்று கொள்வதில் ஒன்றும் பிரச்சனை இல்லை, எழில் அவர்களே. இவர்களை கலி துறை அமைச்சராக ஏற்று கொள்ள முடியவில்லை, மேலே சென்று மீண்டும் ஒரு முறை அந்த பட்டமளிப்பு விழா விழாவில் பட்டமளிப்பு உடையில் அவரை பாருங்கள். அந்த உடையை அந்நாளில் அணிய ஒருவர் எவ்வளவு உழைக்க வேண்டும் தெரியுமா? எந்த ஒரு கல்லூரிலேயும் எதுவும் படிக்காமால் இவர் அந்த உடைகளை உடுத்தி கொண்டு அங்கே நிற்பது...?

   ஒரு வேளை, பிரதமர் மோடி இவர் உண்மையாகவே சிறந்த நிர்வாகி என்று நினைத்து இருந்தால், இவரை வேண்டுமானால் வேறு ஒரு துறைக்கு மந்திரி ஆகி இருக்கலாம்.

   இவரை நான் ஏற்கா முடியாததிற்கு மற்றொரு காரணம்... இவரின் பொய்

   .மேலும் ஒரு காரியம். என் குழந்தைகளை அரசியலில் ஈடுபடு என்று நான் சொல்லி வளர்க்காத காரணத்தை காட்டி இதை கேட்க்க அருகதையே இல்லை என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. நீங்கள் சொல்வதை பார்த்தால் பிள்ளையே பெறாதவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்று சொல்வதை போல் இருகின்றதே.. அப்படியானால் இந்த.. மோடி-லேடி-டிடி இவர்கள் நிலைமை எல்லாம் என்ன ஆகும்?

   Delete
 4. பல்கலைக்கழகம் பொறுப்பற்ற பதிலை சொல்லியது போல பொறுப்பற்ற ஒருவரை கல்வி மந்திரியாக மோடி நியமித்துள்ளார் என்றும் தெரிகிறது. படிக்காதவர்கள் பதவிக்கு வருவதில் தப்பில்லை! அதே சமயம் பொய்யர்கள் பதவிக்கு வருவது தப்பு என்ற உங்கள் கருத்தில் உடன் படுகிறேன்! நன்றி!

  ReplyDelete
 5. என்னைப் பொறுத்தவரை பொறுப்பற்ற பதில்தான் நண்பரே
  இடப் பற்றாக்குறை என்றால் ஆண்களுக்கு அனுமதி மறுத்திருக்லாம் அல்லது
  திங்கள் கிழமை ஆண்களுக்கு, செவ்வாய் கிழமைப் பெண்களுக்கு என் பிரித்திருக்கலாம், ஆனால் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது, பெண்களை மட்டுமல்ல, அதற்குக் கூறப்படும் காரணம் ஆண்களையும் அவமதிப்பதாகும்

  ReplyDelete
 6. அருமையான பதிவை அழகாக தங்கள் நடையில் ஒரு ஹாஸ்ய உணர்வுடன் சொல்லி இருப்பது அருமயே! நம் நாட்டில் எந்தப் பதவியுமே அதைச் சார்ந்தவர்களோ அதில் நல்ல அறிவு உள்ளவர்களோ நியமிக்கப் படவில்லையே! மன்மோகன் ஒரு நல்ல பொருளாதார நிபுணர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால் ஆனால்....? அவரின் அந்த நிபுணத்துவம் அவர் பதவி வகித்த போது எங்காவது துளியாவது உபயோகப்படுத்தப்பட்டதா? உபயோகபடுத்தினாரா?!! ப. சிதம்பரம்?

  அதே போலத்தான் இந்த ராணியும் அவங்க படிச்சிருந்தாலும் இந்தப் பதவியில ஒண்ணும் கிழிக்கப் போவதில்லை...அதனால கவலைப் படவேண்டாம்..ஹஹஹ் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி !

   இந்த அம்மையார் மேல் எனக்கு இருக்கும் பிரச்சனை இவர்கள் படிக்காதது அல்ல . படித்தேன் என்று பொய் சொன்னது. பள்ளி கூடம் போகாமலே, பாடங்களை கேட்காமலே பாசாக இவர்கள் என்ன சின்னப்பா தாசா?

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...