Tuesday, October 14, 2014

சுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....

டாடி... டாடி... 

ஓடி வந்தாள், என் 15 வயது மூத்த ராசாத்தி.

சொல்லு மகளே...

நான் சர்வதேச அரசியல் (International Politics) படிக்கறேன், அதற்கு உங்க உதவி தேவை, டாடி.இந்த கேள்வி கேட்டவுடன் என்ன கேட்க போகிறாள் என்று ஏற குறைய குத்துமதிப்பாக  அறிந்து கொண்டு , "அய்யய்யோ, அந்த கேள்விய மட்டும் கேட்க கூடாதே என்று மனதில் ஒரு சின்ன பிராத்தனை செய்து விட்டு...

கேளு ராசாத்தி, பதில் தெரிந்தா சொல்லுகிறேன் என்றேன்.

இந்த வாரம் எங்கள் ஆசிரியை ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு நாடுகளில் உள்ள நல்ல தலைவர்கள் யாரையாவது பற்றி பேச வேண்டும், நான் இந்தியாவை பற்றி பேச போகிறேன், நீங்க தான் எனக்கு யாராவது நல்ல தலைவரை பற்றி சொல்ல வேண்டும்.


மனதிற்குள்... நான் எதை கேட்க கூடாது என்று  நினைத்தேனோ, அதையே கேட்டு விட்டாளே,  எனன சோதனை இது.. இந்தியாவில் நல்ல தலைவருக்கு, எங்கே போவேன் நான், ஏதாவது வேறு நாடு சொல்லி இருந்தா, அங்கே இங்கே கூகிள் பண்ணி யாரை பத்தியாவது சொல்லி இருப்பேனே, இப்ப என்ன பண்ணுவேன், என்று யோசித்து கொண்டே..

எதுக்கு மகள் இந்தியா செலக்ட் பண்ண, நாளைக்கே வேறு ஓர் நாடு செலெக்ட் பண்ணு, நம்ம அதை பத்தி பேசலாம் என்றேன். 

நோ டாடி, எங்க டீச்சர்க்கு நம்ம பூர்வீகம் இந்தியா என்று தெரியும் அதனால் இந்தியாவிற்கு என்னை கேட்டார்கள்,, நானும் சரி என்று சொல்லி விட்டேன், எனக்கு ஒரு நல்ல தலைவரா சொல்லுங்க..

வைத்து கொண்டா இல்லை என்கிறேன்?

என்று சொல்லி மனதில் நொந்து கொண்டு,

ஒரு ரெண்டு நாள் நேரம் கொடு, என்னால் முடிந்த உதவி பண்றேன்.

தேங்க் யு டாடி,..


என்று சொல்லி அவள் ஓட, நான் மனதை ஓட விட்டேன்.   

இரண்டு நாள் முடிந்தது, புத்தகத்தோடு மகள் வந்தாள், அவளுக்கோ சாதாரண பரீட்ச்சை. எனக்கோ விஷ பரீட்சை.

ரெடி டாடி..

சரி ராசாத்தி, குறித்து கொள், இந்தியா என்றாலே உலகம் முழுவதும் தெரிந்த பெயர் "மகாத்மா காந்தி" தன்னலம் பாராமல் உழைத்த மாமனிதர். அஹிம்சை போராட்டம் நடத்தியே இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தார். அவரை பத்தி பேசு.

இன்னும் சில பேர் சொல்லுங்க டாடி, நான் எனக்கு பிடித்த தலைவரை செலெக்ட் பண்ணி கொள்கிறேன்.

அடுத்து எனக்கு பிடித்தது, கர்மவீரர் காமராஜ். அவர் இந்தியாவில் நம்ம தமிழ் ண்ணில் பிறந்தவர். இன்று நீ என்னை இந்த கேள்வி கேட்டு நானும் உனக்கு பதில் சொல்வதற்கு காரணமே இவர் தான். ஏழை எளியோர் உட்பட எல்லாரும் படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்தார்.  கொஞ்சமும் பண ஆசை பொருள் ஆசை இல்லாதவர். இவர் நம் மண்ணில் பிறந்தது நமக்கு புண்ணியம்.

வெரி இண்டரஸ்டிங், டாடி. இன்னும் சில பேர் ப்ளீஸ்!

சுபாஷ் சந்திர போஸ், அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்று நம்பியவர். காந்தியின் அஹிம்சை எல்லாம் சரி பட்டு வராது, சுதந்திரம் என்பது நம் உரிமை, அதை உருவி எடுக்க வேண்டும் என்று ஓலமிட்டு ஆங்கிலேயனை அதிர வைத்தார்.

சூப்பர் டாடி, ஐ லைக் திஸ் லீடர், மேலே சொல்லுங்க...

வல்லபாய் படேல், இரும்பு மனிதன்!  பிரிந்து கிடந்த இந்தியாவை தன் முயற்சியால் ஒன்று சேர்த்தார். நல்ல பண்பாடு கொண்ட மனிதர்.

டாடி.. போதும், இந்த நாலு பேருமே சூப்பர், நான் இவங்க டீச்சரிடம் சொல்லி இவங்க நாலு பேரில் ஒருவரை பற்றி பேச போகிறேன். தேங்க் யு டாடி, என்று ஓடினாள்.

அடேங்கப்பா! தலைக்கு வந்தது தலைப்பாவோடு போச்சு என்று பேரு மூச்சு விட்டேன்,

அடுத்த நாள்!

டாடி.. எங்க சர்வதேச அரசியல் பாடத்தில்....

(நான் பெருமிதத்துடன்) எப்படி நம் தலைவர்கள் எல்லாம், டீச்சர் ரொம்ப சந்தோசம் ஆனார்களா?

சந்தோசம் தான் டாடி, ஆனாலும் இவங்க நாலு பேரை பத்தி பேச கூடாதாம், இப்ப இருக்கிற தலைவர்கள் பத்தி பேச வேண்டுமாம்.

என்று போட்டாலே ஒரு குண்டு! இப்ப எங்கே போவேன் நான். இந்தியாவில், இந்நாட்களில், நல்ல தலைவர்கள் ... எங்கே போவேன் நான்.

மகள், அப்பாவும் பல வருடங்களாக வெளி நாட்டில் இருக்கிறேன் அல்லவா? அதனால் இந்தியாவில் இப்போது உள்ள நல்ல தலைவர்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

என்ன டாடி? நிறைய செய்தி படிக்கின்றீர்கள், இது கூடவா தெரியாது?.


நான் என்ன வைத்து கொண்டா இல்லை என்கிறேன், எனக்கு தெரியாது... ப்ளீஸ். என்னை மன்னித்து விடு.

நீங்கள்  பெயர்களை  மட்டும் கொடுங்கள், மீதியை நான் இன்டர்நெட்டில் தெரிந்து கொள்கிறேன்.

நான் பெயரை மட்டும் தருவேன், நீ தான் இவர்களை பற்றிய நல்ல விஷயங்களை கற்று கொள்ளவேண்டும்.

சரி டாடி. கிவ் மீ தி நேம்ஸ்.


"மோடி- சோனியா - ராகுல்-கருணாநிதி-ஜெயலலிதா-சரத்பவார்-மம்தா--அத்வானி-லல்லு !

தேங்க்  யு டாடி...

சரி, இவர்களை பற்றி நீ எப்போது இன்டர்நெட்டில் தேட போகிறாய்.

இப்பவே டாடி.

அப்பாவிற்கு கொஞ்சம் தலை வலிக்குது, நான் இப்ப ரூம் கதவை சா த்தி   கொண்டு தூங்க போகிறேன். என்னை எழுப்பாதே, ப்ளீஸ். 


அறை மணி நேரம் கழித்து.. அரை கதவு கோபத்துடன் தட்டப்படும் சத்தம்.

டாடி... டாடி.. டாடி..

எதுவாய் இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம்.

யு ச்சீடட் மீ.! வேண்டும் என்றே இந்த மாதிரி தப்பு தப்பு பெயர்களாக கொடுத்துவிட்டீர்கள்.

ரொம்ப தலை வலிக்குது காலையில் பேசி கொள்ளலாம்.

அவள் அங்கு இருந்து சென்ற சத்தம் கேட்டவுடன், மெதுவாக மனைவியிடம் ...

மூத்தவளோடு கொஞ்சம் பிரச்சனை. காலையில் நீயே அவளை பள்ளி கூடத்திற்கு அழைத்து செல்கிறாயா?

ஏன் என்ன பிரச்சனை? 

ஒன்னும் இல்லை, இந்தியாவில் இப்போது உள்ள நல்ல தலைவர்கள் சிலருடைய பெயர் கேட்டாள், கொடுத்தேன்.  

இந்தியாவில் நல்ல தலைவர்கள் பெயர் உங்களுக்கு எப்படி கிடைத்தது? 

என்னமோ எனக்கு தெரிந்த தலைவர்கள் பெயர சொன்னேன், அதை இன்டர்நெட்டில் போட்டு பார்த்து விட்டு என்னை சத்தம் போடுகின்றாள். நீ ஒரு உதவி செய்யேன். இந்தியாவை விட்டு தள்ளு என்று சொல்லி உங்க நாடான ஸ்ரீலங்காவில் உள்ள நல்ல தலைவர்கள் பெயர் சொல்லி கொடு.. ப்ளீஸ்.

ஸ்ரீலங்காவில் நல்ல தலைவர்களா? அங்கேயும் இதே கதி தான்.


அடுத்த நாள் மாலை, மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் வேளையில்.

என்னடா ராசாத்தி, அப்பா மேல கோபமா? நான் என்ன வைத்து கொண்டா சொல்லி தராமல் இருக்கேன். அங்கே நிலைமை அப்படி தான்,

இட்ஸ் ஓகே டாடி. நோ ப்ராப்ளம்!

இப்ப உங்க டீச்சர்க்கு என்ன சொல்ல போற?

இந்தியா வேண்டாம், நான் ஏதாவது ஒரு ஐறோப்ப நாட்டு தலைவரை பற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

சமத்து டா நீ...

பின் குறிப்பு ;

சரி மகள், நேத்து ராத்திரி ஏன் அவ்வளவு கோபமா கதவை தட்டின?


என்ன டாடி. நீங்க சொன்ன ஒவ்வொரு பெயரா இன்டர்நெட்டில் போட்டேன். ஒவ்வொருத்தருக்கும்.. கொலை-கொள்ளை- திருட்டு-ஊழல்-சுயநலம்- பொருள் ஆசை-பேராசை-மதவெறி- ஜெயில்- ஜாமீன்- குடும்ப அரசியல்... இப்படி தான் வருது. அது தான் கோபம் வந்தது. நீங்க என்னை சும்மா கலாட்ட செய்கின்றீர்கள் என்று.!

www.visuawesome.com

9 comments:

 1. அப்பாவிற்கு கொஞ்சம் தலை வலிக்குது, நான் இப்ப ரூம் கதவை சா த்தி கொண்டு தூங்க போகிறேன். என்னை எழுப்பாதே, ப்ளீஸ். //// ஹாஹாஹா.. உஷாரா திட்டு வாங்குரதுல இருந்து எஸ்கேப் ஆகவா:-)

  அரை மணி நேரம் கழித்து.. அரை கதவு கோபத்துடன் தட்டப்படும் சத்தம். /// எதிர்பாத்தேன்...

  டாடி... டாடி.. டாடி..
  எதுவாய் இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம்./// சிறிப்பு அடக்க முடியல...

  15 வயது மானவிக்கு இருக்கும் அந்த தெலிவு இங்க இருக்கும் பெருசுங்கலுக்கும் யாருக்கும் இல்லையே...


  சூப்பர் பதிவு சார்.
  சிந்திக்க வெச்ச பதிவு.

  ReplyDelete
  Replies
  1. என்ன Mahesh... என்னுடைய சோகம்-கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா? இருக்கட்டும்.. இருக்கட்டும்...வருகைக்கு நன்றி!

   Delete
 2. காலக் கொடுமை! நல்ல தலைவர்களை தேட வேண்டியுள்ளது!

  ReplyDelete
  Replies
  1. சுரேஷ், இதற்கு விடிவு காலம் வர மாதிரி தெரியவில்லையே!

   Delete
 3. Boss,

  Padikkum podhu sirippu varuthu... But, nenaikkum podhu....

  Regards,
  A Yusuf

  ReplyDelete
  Replies
  1. சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாம் அழுது கொண்டே சிரிக்கலாம் , வாங்க! யூசுப்.

   Delete
 4. 120 கோடி மக்களில் ஒரு நல்ல தலைவரை சொல்ல முடியவில்லை என்பது எவ்வளவு அவமானம் ,. இந்தியர் அனைவரும் வெட்கப்படவேண்டிய விஷயம் இது

  ReplyDelete
 5. ஹஹஹஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹ்....ஐயோ தாங்கலைங்க......உங்க காமெடி......அதுவும் எஸ்கேப் ஆனீங்க பாருங்க ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாத பெயர்களை கொடுத்துட்டு.....பொண்ணு ஏமாந்துரும்னு நினைச்சீங்களா.....ஹஹாஹஹ்ஹ....என்ன நம்ம நாட்டு மானம் கப்பலேறும் காலம் போய் சாட்டிலைட் ஏறும் காலம் வந்துருச்சு......ம்ம்ம் என்னத்த சொல்ல.....

  இத்தனை நாள் உங்கள் ப்ளாக மிஸ் பண்ணிட்டோமே நு .....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஊக்கமான வார்த்தைகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. வருகைக்கு நன்றி. நான் இப்போது ஒரு 3 மாதமாக தான் எழுதி வருகின்றேன்.

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...