திங்கள், 6 அக்டோபர், 2014

இருந்தால்.. இருந்தால்.. இருந்தால்...?

சனி கிழமை காலை 7 மணிபோல்...

என்ன மகளே...முகமே சரி இல்லை?

இன்னும் இல்ல டாடி!



உன் முகத்தை பார்த்தாலே தெரியுது. எதோ சோகம், என்ன ஆச்சு உனக்கு?

ஒன்னும் இல்ல,

எதோ விசனம், ஆனால் நீ சொல்ல தயங்குற ...

என்று நான் சொன்னவுடன், என் 15 வயது மூத்த மகள் அழ ஆரம்பித்து விட்டாள்.

என்ன ஆச்சி ராசாத்தி...

நேற்று இரவு 2:15 மணிக்கு (அதிகாலை 2:15) இங்கே அருகில் நெடுஞ்சாலையில் ஒரு பெரிய விபத்து ஆகிவிட்டது.

அட பாவமே.. என்ன ஆச்சி, உனக்கு யார் சொன்னது.

காலையில் மீண்டும் மீண்டும் டெக்ஸ்ட் வந்து கொண்டே இருந்தது, எடுத்து பார்த்தால், எல்லாரும் இந்த விபத்தை பற்றி எழுதி கொண்டு இருக்கின்றார்கள்.

ரொம்ப சாரி மகளே.. வேற விவரம் எதாவாது தெரியுமா?

இறந்த 5 பெரும் 15-16 வயது பள்ளி கூட பிள்ளைகள் டாடி. அதில் இருவரை எனக்கு தெரியும், என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

ரொம்ப விசனமாய் இருகின்றதே... ரொம்ப சாரி ராஜாத்தி, இந்த பிள்ளைகளை நான் அறிவேனா?

நீங்க பார்த்து இருப்பீர்கள் டாடி.. இறந்த 3 பையன்களும்  இங்கே நல்ல கால்பந்து விளையாட்டு வீரர்கள், கூட இறந்த 2 பெண்களும் நன்றாக படிக்க கூடியவர்கள். எல்லாரும் நல்ல பிள்ளைகள்.

சரி மகளே, என்ன செய்வது? சில நேரம் இந்த மாதிரி விபத்துகள் நடந்து விடுகின்றது. அது சரி, எல்லாம் 14-16 வயது பிள்ளைகள் ஆயிற்றே... யார் வண்டியை ஒட்டியது.?

அது ஒரு 9ம் வகுப்பு மாணவன் டாடி. அவனுக்கே 15 வயது, அவன் மட்டும் பலத்த காயங்களோடு பிழைத்து கொண்டான்.

5 பேர் இறந்தார்கள், 6வது பையன் பிழைத்து கொண்டானா? இது எவ்வளவு பெரிய வாகனம் மகள்?

BMW -SEDAN டாடி.

ராசாத்தி, அதில் 5 பேர் தானே போக முடியும், எப்படி.. 6 பேர்?

இல்லை டாடி, பக்கத்தில் உள்ள ஒரு நவீன விளையாட்டு பூங்கா (Recreation Park) சென்று வந்து கொண்டு இருக்கும் வேளையில்..

அது சரி மகள், எப்படி 6 பேர்...?

டாடி, சில வேளைகளில் பள்ளி கூட பிள்ளைகள் இந்த மாதிரி சிறு விதி  முறைகளை மீறுவோம்.

என்ன மகளே, எவ்வளவு பெரிய தவறு...இது.. இறந்த அந்த பிள்ளைகளுக்காக மனம் வேதனை படுகின்றது.. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் பல விதி முறைகள் மீற பட்டு இருக்கின்றதே,

ஆமா டாடி.. என்ன செய்வது,?

மகளே.. .என்னை பொறுத்தவரை உலகிலேயே மிகவும் கடினமான காரியம் நாம் இருக்கும் போது நம் பிள்ளைகளை இழப்பது தான். இது அந்த பெற்றோர்களை எவ்வளவு பாதிக்கும் தெரியுமா?

தெரியும் டாடி. என்னாதான் இருந்தாலும் எல்லாரும் விளையாட்டு தவறை தானே இவர்கள் செய்தார்கள். அது இப்படியா போய் முடியும்.?

சரி மகள்.. நீ தைரியமாய் இரு.

ஓகே டாடி..

என்று சொல்லி அவள் அரையினில் நுழைந்தாள்.

சிறிது நேரம் தனியாக அழுது தன துயரத்தை அவள் வெளி படுத்தட்டும் என்று தனியாக விட்டு விட்டு நான் என்னதான் ஆனது என்று ஆறாய ஆரம்பித்தேன்.

நடந்த காரியம் மிகவும் விசனமாய் இருந்தாலும், பல பெரிய தவறுகள் நிகழ்ந்து உள்ளன.

5 பேர் செல்லும் வாகனத்தில் 6 பேர் சென்றது

18 வயதுக்கும் குறைவான எந்த நபரும் இரவு 11க்கு மேல் வாகனத்தை ஓட்டகூடாது என்ற விதி உள்ளது.

18 வயதுக்கும் குறைவான எந்த நபர் வாகனத்தை ஓட்டும் போதும் அந்த வாகனத்தில் 21 வயதை தாண்டிய ஒரு நபர் இருந்தே ஆகவேண்டும் (That too, Driving License Holder)

அதிவிரைவு ஓடும் BMW வாகனம் 16 வயது பையனின் கையில்...?

இவ்வாறாக பல தவறுகள் நிகழ்ந்து உள்ளது.

மேலும் படிக்கையில், இந்த விபத்திற்கு "குடி அல்லது போதை பொருள் " காரணம் இல்லை என்று தெளிவாக போட்டு இருந்தது. அதிக வேகம் அல்லது வாகனத்தை  ஓட்டுபவர் தூங்கி இருக்கலாம் என்றும் போட்டு உள்ளது.

எது என்னவோ.. 5 இளநெஞ்சங்கள் போய் விட்டதே. யார் அந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல இயலும். இந்த நேரத்தில் யார் மேலும் நாம் விரல் காட்டி பழி போட முடியாது. எங்கே போய் சொல்வது...?

சிறிது நேரம் கழித்து, மகள் மீண்டும் அறையை விட்டு வெளியே வந்தாள்.

டாடி.. அந்த வாகனத்தை ஒட்டிய பையனிடம் லைசன்ஸ் கூட இல்லையாம்? What were they thinking? என்று சொல்லி கோப பட்டாள்.

தவறுகள் நடக்கும் மகளே, சில நேரங்களில் அது வினையில் போய் முடிந்து விடும். நம்மால் முடிந்தவரை தவறுகளை தவிர்க்க வேண்டும். அந்த ஆத்மாக்கள் சாந்தி அடைய பிரார்த்திப்போம்.அது மட்டும் அல்லாமல் அந்த பெற்றோர்களின் ஆறுதலுக்காக பிரார்த்திப்போம்.

சரி டாடி..

பின் குறிப்பு :

இந்த 5 பிஞ்சு உள்ளங்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டன? இந்த பெற்றோர்களுக்கு நாம் என்ன சொல்லி ஆறுதல் அளிப்போம்.
போகதே என்று சொல்லி இருந்தால்,
வண்டியை எடுக்காதே என்று சொல்லி இருந்தால்.
நாங்களே உங்களை அங்கே அழைத்து செல்கின்றேன் என்று சொல்லி இருந்தால்.
இரவு 8 க்கு பின் வெளியே நீங்கள் போக கூடாது என்று கண்டிப்பாக இருந்து இருந்தால்...?
இருந்தால்.. இருந்தால்.. இருந்தால்...

4 கருத்துகள்:

  1. aiyo morning nan elunthathum varuthamaana seythiya.

    aamam sir athu eppadi sir anga night 2 manikkellam pasanga veliya poka viduvangalaa?
    parents ellam thedamattangala.

    ingai vidavum saalai vithikal angu kadumaiyaaka irukkum ena kelvi pattu iruken
    athaanal vipathu thavirkka padukirathu enavum
    aanal sirisunga ippadi pannniddangale sir

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 15 வயது பிள்ளைகள் எல்லாரும் விளையாட்டு தனமான பொய்களை சொல்லி நண்பர்களோடு வெளியே இருப்பது சகஜம் தான். ஆனால் இந்த விளையாட்டு விபரீதமாக முடிந்து விட்டது. இங்கே நாங்கள் வாழும் ஊரே சோகத்தில்.

      நீக்கு
  2. ஒரு சிறிய தவறு இவ்வளவு பெரிய இழப்பைக் கொடுத்துவிட்டதே சார், சே.....

    பதிலளிநீக்கு
  3. அதிகமான கட்டுப்பாடு இருந்தாலும் தொல்லைதான்! அதிகமான சுதந்திரம் இருந்தாலும் தொல்லைதான்! வருந்த வைத்த செய்தி!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...