Tuesday, October 7, 2014

"மோடி வித்தையும்" ... "ஜெயில் லலிதாவும்"...

கடந்த சில நாட்களாக நடந்த நடந்து கொண்டு இருக்கும் ஆர்ப்பாட்டமும் -போராட்டமும் நம்மை வியக்க செய்தது.  என்ன ஆர்ப்பாட்டம் .. என்ன போராட்டம்?

அது தான்... அமெரிக்காவில் "மோடி வித்தையும்" ... இந்தியாவில்  "ஜெயில் லலிதாவும் ..."செப்ட் மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா வரபோகின்றார் என்று மிக பெரிய விழாகாண அமெரிக்க வாழ் இந்தியர் சிலர் தயாராகினர்.  மோடியும் வந்து இறங்கினார். எந்த ஓர் வெளிநாட்டு தலைவருக்கும் இல்லாத வரவேற்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு நான் போகவும் இல்லை - பார்க்கவும் இல்லை.

ஆனால்  நான் கேள்வி பட்டவரை, இது ஒரு அற்புதமாக - ஒழுங்கு முறையாக நடைபெற்ற நிகழ்ச்சி என்றும், கோடி கணக்கில் பணம் செலவு செய்து பண்ண பட்ட நிகழ்ச்சி என்றும் தெரியவந்தது.

மோடி அவர்களை இப்போது மக்கள் ஓர் கடவுள் வழிபடுவதை போல் வழி படுகின்றார்கள். இதில் உனக்கு என்ன என்று சிலர் கேட்பது புரிகின்றது. கொஞ்சம் பொறுங்கள்.

இந்த மாதிரியான வழிபாடு தான் அங்கே சென்னையில் அம்மையாருக்கும்  நடந்து கொண்டு இருக்கின்றது. "தெய்வத்தை கைது செய்ய மனிதன் யார்"என்ற போராட்டம்?

அடே, அப்ரண்டிஸ்களா? "நெற்றி கண் திறந்தாலும் குற்றம் குற்றமே" என்பதின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு.

என்னை பொறுத்தவரை இந்த அம்மையாரும் சரி, மற்ற பல தலைவர்களும் சரி, தாங்களும் கெட்டு, நாட்டையும் குட்டி சுவர் ஆக்கியதற்கு காரணமே இந்த "வழிபாடு" தான்.

மோடியும் சரி, ஜெயா அம்மையாரும் சரி, நமக்கு வேலை செய்ய போகின்றேன் என்று சொல்லி நம் வோட்டை வாங்கி பதவிக்கு வந்து உள்ளனர். அவர்கள் பதவியில் ஏறி அமர்ந்த பின் அவர்களை ஒழுங்காக வேலை செய்ய விடாமல் இந்த மாதிரி 'வழிபாடு" நடத்துவதால், சில நேரத்தில் சிலருக்கு தலை கருவம் வருகின்றது. அப்படி வந்த வினை தான் இன்று அம்மையாருக்கு வந்த நிலைமை.

தன்னை யாரும் கேள்வி கேட்க கூடாது - முடியாது என்ற தைரியம். நாலு காரியங்களை இலவசமாக கொடுத்விட்டால், நாடு மக்களின் அனுதாபத்தை பெற்று விடலாம் என்ற எண்ணம்.அதனால் வந்த துணிவு. எல்லா கெட்ட காரியங்களும் சேர்ந்து இன்று சிறைசாலையில்.

இந்த நிலைமை பிரதமர் மோடிக்கு வராமல் பார்த்து கொள்வோம். சும்மா இறக்கும் அவரை ஏற குறைய ஒரு கடவுள் அளவிற்கு உயர்த்தி விட்டது அவரின் ரசிகர் கூட்டம். இப்போது அவர் என்ன செய்தாலும் அவரை போற்றி கொண்டு முகஸ்துதி பாடி கொண்டு இருகின்றார்கள். அவரையும் அம்மையார் அளவிற்கு கொண்டு வந்து விடாதீர்கள்.


கீழே உள்ள இரண்டு படங்களை பாருங்கள்.. 6 வித்தியாசம் கூட தெரியவில்லை! 
 "Unity" அப்படினா ஒற்றுமை என்று தானே அர்த்தம்.. அது எப்படி இங்கே...
 வழிபாடு..
 அம்மையார் வெளியே வர வழிபாடு 
 
 அம்மையாருக்கான தாய் குல போராட்டம். 

"அமெரிக்கா லவ்ஸ் மோடி" இது எப்படி இருக்கு?
(Pictures are  downloaded from Google, not mine)

வேலை செய்ய வந்தவர்களை வேலை செய்ய விடுங்கள். சும்மா முகஸ்துதி பாடி அவர்களை கெடுத்து விடாதீர்கள். 

பின் குறிப்பு ;
இந்த ஆர்பாட்டத்திலேயும் - போராட்டடத்திலேயும்  ஈடு பட்டவர்கள்  "பணம் -  நேரம்" செலவழித்தவர்கள் ஒன்றும் "நன்கொடை பாரி வள்ளல்கள் " அல்ல. எல்லாம் இரா போட்டு சுறா பிடிப்பவர்கள் தான் என்பது இன்னொரு விஷயம்.

6 comments:

 1. என்னை பொறுத்தவரை இந்த அம்மையாரும் சரி, மற்ற பல தலைவர்களும் சரி, தாங்களும் கெட்டு, நாட்டையும் குட்டி சுவர் ஆக்கியதற்கு காரணமே இந்த "வழிபாடு" தான்.///


  sariyaaka sonnirkal sir.


  endru thirunthuvarkalo nam naattu makkal.

  ReplyDelete
 2. வணக்கம்
  அவர்கள் திருந்தி வாழ்ந்தாலும் ஒட்டி உறவாடும் உள்ளங்கள் விடப்போவதில்லை... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. இந்த வழிபாடுகள் தோன்றுவதற்கு ஊடகங்கள் பெரிய அளவில் உதவியுள்ளதை மறுப்பதற்கில்லை

  ReplyDelete
 4. மிக அருமையான கருத்துக்கள்! மக்கள் மாறவேண்டும்! நன்றி!

  ReplyDelete
 5. என்னத்த சொல்ல சார், ர.ர க்கள் விசுவாசத்தைக் காட்டுகிறேன் பேர் வழி என்று பொதுமக்களிடம் வெறுப்பைச் சம்பாதிக்கின்றனர், மோடி ஜப்பான் பயண வெற்றியைப் போல் அமெரிக்கப் பயண வெற்றி அமையவில்லை எனக் கேள்விப்பட்டேன்??

  ReplyDelete
 6. கடவுள் வழிபாடும் , தனி நபர் வழிபாடும் பேராசை என்பதன் மூலம்.
  தனக்கு தன் உழைப்புக்கு என்ன கிடைக்குமோ அதை விடுத்து எனக்கு வேண்டும் என்று கேட்டு அதற்கு லஞ்சம் தந்து (பணமாக , பொருளாக ,போகமாக,யாகமாக ...) பெற முயற்சிப்பதால் நாடே சுடு காடு ஆகிறது.
  இதை செய்ய அதிகாரம் தேவை. மக்கள் அவர்களுக்கு உழைக்க கொடுத்த அதிகாரத்தை வைத்து மக்களையே எயித்து பிழைக்கிறார்கள்.

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...