என் வலைத்தளம்!

Wednesday, October 29, 2014

கவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்புப்பணம்

டேய் இங்க வா...

என்ன அண்ணே... கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் வாட போடான்னு. "கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட்" !




தேர்தல் பிரசாரத்து நேரத்தில் நானும் வரேன், நானும் வரேன்னு அடம் பிடிச்சியா?

ஆமா அண்ணே. அதுக்கு இப்ப என்ன? என்னுடைய அட்டகாசமான  மேடை பேச்சினால தான் ஆட்சிய பிடிசிங்களே.. "யு ஆர் வெல்கம்"

நான்.. உன் பேச்சினால் ஆட்சிய பிடிச்சேன்னா? இது என்ன புது கதையா இருக்கு? சரி அதை விடு...  நான் நன்றி இன்னும் சொல்லல ... அதுக்குள்ளே ஏன் "யு ஆர் வெல்கம்" கேட்ட கேள்விக்கு பதில்.

அண்ணே... நான் அவசரமா ஒரு யோகாசனம் போடணும், சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க!

கருப்பு பணத்த பத்தி என்ன சொன்ன?

என்ன சொன்னேனா? நீங்க ஆட்சிக்கு வந்தா நூறு நாளில் மொத்தமா மூட்டை கட்டி நம்ம நாட்டுக்கே எடுத்து கொண்டு வருவேன்னு சொன்னேன். எடுத்துன்னு வந்தீங்களா, அண்ணே..?

டேய்.. இப்ப நூறு நாளுக்கும் மேலே ஆச்சி, இவங்க எல்லாரும் பணம் எங்க? பணம் எங்கன்னு கேக்குறாங்களே? இதுக்கு யார் பதில் சொல்ல போறது.

நீங்க தானே அண்ணே..

நான் ஏன்டா சொல்லணும்? இந்த மாதிரி செய்யமுடியாத வாக்குறுதிகளுக்கு தேவையான பதில் சொல்ல தான நான் உன்னை , சுப்ரமணிய சுவாமி, சோ. ராமசாமி மற்றும் ஜெட்லி போன்ற ஆட்களை கூடவே வைச்சின்னு இருக்கேன்.

இப்ப நான்  என்ன செய்யவேண்டும்  என்று எதிர் பார்க்குறீங்க?

மக்களுக்கு பதில் என்ன சொல்றது?

நீங்க ஏன் சொல்லணும். பேசாம கிளம்பி ஒரு வெளி நாட்டு பிரயாணம் போங்க, நீங்க வருவதற்குள் மக்கள் மறந்துடுவாங்க.

மக்கள் மறந்தாலும், இந்த காங்கிரஸ்காரன் மறக்கமாட்டான் போல இருக்கே.

காங்கிரஸ் ஆளுங்களா? அவங்களுக்கு  இந்த கதை "திருடனுக்கு தேள் கொட்டின கதை" தானே, அவன் ஏன் பேசுறான்?

என்னமோ தெரியல. இவ்வளவு நாளா  அவங்க தான் கருப்பு  பணத்த வச்சின்னு இருக்காங்கன்னு ரொம்ப "பில்ட் அப்" கொடுத்தாச்சி. இப்ப அவனே வந்து கேள்வி கேக்குறான். என்னை என்ன பண்ண சொல்லுற?

சர்வதேச விதி படி எல்லாம் நடக்குது, இந்த நூறு நாளில் நாங்க கமிசன் வச்சி எல்லாம் விசாரித்ததும் கூடிய சீக்கிரம்  வரும்ன்னு சொல்லுங்க.  

 அப்படியெல்லாம் சொல்லி பாத்தாச்சி, ஆனா அவனவன் எங்கே அந்த பணம், எங்கே அந்த பணம்ன்னு கேக்குறான்.

இந்த லிஸ்டில் இருக்கின்ற பெயர் எல்லாம் எங்களிடம் இருக்கு, இதுல காங்கிரஸ் காரன் பெயரும் இருக்கன்னு ஜெட்லிய வச்சி ஒரு மிரட்டல் உடுங்க.

அதை எல்லாம் விட்டு பார்த்தாச்சு.  இதில் இருக்கிற காங்கிரஸ் கட்சிக்காரன் எல்லாம் வட்டம் - மாவட்டம் தான், பெரிய பெயர் எதுவுமே இதுல இருக்காது. திருடி விட்டு மாட்டிக்கொள்ள நங்கள் என்ன புது திருடர்களா? கிட்டத்தட்ட அறுபது வருஷத்துக்கும் மேல திருடுகிறோம், எங்களுக்கே கண்ணாமூச்சியானு சிரிக்கிறான்.

இப்ப என்ன செய்ய போறீங்க.?

நான் என்ன செய்யறது. நீ  ஒரு காரியம் பண்ணு. ஒரு பத்திரிக்கை கூட்டம் கூட்டி ... அண்ணன் நல்லவர்.. வல்லவர்.. காசு எல்லாம் வரும்ன்னு கொஞ்சம் சொல்லேன்.

அது வராது போல இருக்கே அண்ணே..

டேய்.. அது தெரிஞ்சும் அப்ப தேர்தல் நேரத்தில் அந்த மாதிரி சொன்ன?

ஒரு "ப்ளோவில்" வந்துடிச்சி அண்ணே., பேசாம இதில் இருக்கும் பெயர் எல்லாம் அறிவித்து விடுங்கள். அதுக்கு அப்புறம் அவனவன் அடிச்சிகுவான். ஊரு ரெண்டு பட்டா.. கதை தெரியும் தானே.

அப்படி சொல்ல முடிந்தால் தான் சொல்லி இருப்பேனே. தேர்தல் நேரத்தில் பிரசாரத்துக்காக இவங்க எல்லாரும் நமக்கும் சரி, காங்கிரஸ்க்கும் தவணை முறையில் பணம் கொடுத்து இருக்காங்க. 

அதனால் என்ன அண்ணே? கடந்த நூறு நாட்களில் நீங்க கண்டு பிடிச்ச பெயர் எல்லாம் எடுத்து விடுங்க. மக்கள் நீங்க எதோ செய்ய போறீங்கன்னு இன்னும் கொஞ்சம் நேரம் தருவாங்க.

கடந்த நூறு நாட்களில், அப்படி ஒன்னும் இந்த கருப்பு பணம் விவகாரமா செய்யவில்லையே...

அப்ப என்னதான் செஞ்சிங்க.

காந்தி ஜெயந்தி அன்றைக்கு மாணவர்களிடம் பேசினேன். ஜப்பானில் ஒரு இசை கச்சேரி, அப்புறம் ஒரு விளக்குமாறு எடுத்து கொண்டு நாட்டை சுத்தம் பண்ணேன். அப்புறம்.. அப்புறம்... வெளிநாடு பயணம்...

இப்ப  என்ன தான் பண்ண போறீங்க.?

என்ன பண்றதுனே புரியிலே. இதில "சூப்ரீம் கோர்ட்" வேற, உடனே அந்த கருப்பு பண லிஸ்டில் இருக்கின்ற பெயர்களை அறிவிக்க வேண்டும் ஒரு ரூல் போட்டுடாங்க.

சரி, இது தான் ஆரம்பம்னு அந்த லிஸ்ட தான் அறிவிங்களேன்.

அதுல ஒரு சின்ன பிரச்சனை.

என்ன அண்ணே பிரச்சனை?

நாங்க போன நூறு நாளா இந்த கருப்பு பணத்திற்காக கடுமையாக உழைத்தோம்னு பெரிய "பில்ட் அப்" கொடுத்தோம் இல்லையா?

ஆமா அண்ணே..

இந்த லிஸ்ட கொடுத்தா அந்த "பில்ட் அப்" எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துடும்.

என்ன சொல்றீங்க அண்ணே.

ஒன்னும் இல்ல.. இந்த லிஸ்ட்  2011ல் வந்த லிஸ்ட் தான்.

அதனால  என்ன?

சுப்ரீம் கோர்ட், 2011 ல் வந்த லிஸ்ட வைத்து கொண்டு இவ்வளவு "பில்ட் அப்" கொடுத்தீங்களே..இவ்வளவு நாளா நீங்க என்ன பண்ணீங்க?  " புது லிஸ்ட்" எங்கன்னு கேட்டா என்ன சொல்வது?

என்ன அண்ணே, இது ஒரு விஷயம்ன்னு ... இதுக்கு தான் நமக்கு "ஸ்டாண்டர்ட் பதில்" இருக்கே அண்ணே,

புரியல..

எவன் நம்மிடம் "எங்கேடா அதுன்னு" எதை பத்தி கேட்டாலும் "இது தான் அது - அது தான் இது" ன்னு மீண்டும் மீண்டும் சொல்லுங்க, அவனே ஓடிடுவான்.

பின் குறிப்பு:

என் இனிய தமிழ் பதிவுலக நண்பர்களே, விடுதலை வாங்கியதில் இருந்து இந்த வருடம் வரை, காங்கரஸ் ஆட்சியின் ஊழலை சகித்து வந்தோம். இந்த வருடம் அதற்கு ஒரு விமோசனமாக மோடி அவர்கள் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தார். இப்படி வருகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறே நாட்களில் கருப்பு பணம் எல்லாம் நாட்டிற்க்கு திரும்ப வரும், உங்கள் ஒவ்வொருவரின் கையிலும் 15 லட்சம் தரப்படும் என்றார். அடே டே, இவ்வளவு அழகாக பேசுகின்றரே பொய் சொல்ல மாட்டார் என்ற அல்ப நம்பிக்கையில் இந்த பணம் வந்தவுடன் திரும்ப தருகின்றேன் என்று கொஞ்சம் கடன் வாங்கி செலவு செய்து விட்டேன். இந்த 15 லட்சம் வருமா...? 

நகைச்சுவையை விடுங்கள். மோடியின் ஆட்சி வந்ததில் இருந்து தொலை கட்சிகளிலேயும் சரி மற்ற ஊடங்களிலேயும் சரி காங்கிரஸ் பேச்சாளர்களை பார்க்கும் போது ரொம்ப பரிதாபமாக இருக்கும். எந்த ஒரு கேள்விக்கும், பதில் தெரியாமல் தவித்து கொண்டு இருப்பார்கள்.

ஆனால் என்ன இழவோ தெரியவில்லை, இந்த கருப்பு பண பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் சிரித்து கொண்டும் பிஜேபி கட்சி ஆட்கள் முழித்து கொண்டும் இருகின்றார்கள். எனக்கு என்னமோ, காங்கிரஸ் ஆட்கள், தங்கள் பணத்தை எல்லாம் இன்னொரு இடத்திற்கு மாற்றி விட்டது போலவும்.. பிஜேபி ஆட்க்கள் தான் மாட்டி கொண்டார்கள் போலவும் உள்ளது. இல்லையேல், இந்த பெயர்களை அறிவிக்க ஏன் இந்த தாமதம்?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

Pictures courtesy : Google.

7 comments:

  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  2. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

    ReplyDelete
    Replies
    1. அது தான் தளிர்... கூவத்துக்கு பக்கத்தில் ஏன் வாழவேண்டும்ன்னு கானல் நீர் பக்கம் வந்துட்டேன்.

      Delete
  3. " இவ்வளவு அழகாக பேசுகின்றரே பொய் சொல்ல மாட்டார் என்ற அல்ப நம்பிக்கையில் இந்த பணம் வந்தவுடன் திரும்ப தருகின்றேன் என்று கொஞ்சம் கடன் வாங்கி செலவு செய்து விட்டேன். இந்த 15 லட்சம் வருமா...? " Adhae than boss... Vaenumna oru 10% commission eduthutu michatha thara sollunga... Romba punniya pogum :)

    ReplyDelete
    Replies
    1. 10% ஏன் யூசுப்.. 50% கூட எடுத்து கொண்டு ஒரு ஏழரை லட்சம் தந்தா போதும். இந்த ஏழரை சனியன் கடனை அடைச்சிடுவனே !

      Delete
  4. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இந்தியாவின் நிலைமை இதுதான்...! நீங்கள் கானல் நீர் பக்கம் ஒதுங்கியது நல்லது தான் நண்பரே! கொஞ்சமாவது லஞ்சம் இல்லாத சாதி இல்லாதக் காற்றை சுவாசிக்கின்றீர்களே!

    ReplyDelete
  5. சரியா சொன்னீங்க. ஆனா கூவத்தில் சந்தனம் மணக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.(நேற்று இரவு கண்டேன் கனவு---இல்லை இல்லை இன்னும் தூக்கத்தில் தான் உளறிகொண்டிருக்கிறேன்)

    கோ

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...