Tuesday, October 21, 2014

தீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்கிரஸ் கட்சியில் கொண்டாட்டம்

.என்னடா இது? இந்த வாரம் தானே மகாராஸ்ட்ரா மற்றும் ஹரியனாவில் தோற்றார்களே, இவர்கள் எப்படி தீபாவளியை கொண்டாட முடியும் என்று கேட்கின்றீர்களா? நல்ல கேள்வி தான். இதோ பதில்.

சுதந்திரம் வந்ததில்  இருந்து ஒரு 5 -7 வருடங்களை தவிர்த்து நம் நாட்டை ஆளுகிறேன் என்று இவர்கள் சூரையடித்ததை யாரும் மறுக்க இயலாது. இவர்கள் செய்த இந்த அநியாயதிற்கு தான் சென்ற தேர்தலிலும் சரி அதற்கு பின் வந்த சட்டசபையிலும் சரி இவர்கள் படு தோல்வி அடைந்தனர்.

சரி, இவ்வளவு தோல்வியை வைத்து கொண்டு எப்படி தீபாவளியை கொண்டாடுகின்றார்கள்? ஒன்றும் இல்லை. பிஜேபி யின் பரிதாப  நிலையை பார்த்து தான். இன்னும்மா புரியவில்லை.

இதோ விளக்கம்.

காங்கிரஸ் ஆட்சி செய்த இத்தனை வருடங்களில் மக்கள் இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தது இல்லை. சென்ற வருடம் வரை யார் என்ன திருடினாலும் பொது மக்கள் அவரவர் அவரவர் வேலையை பார்த்து கொண்டு நாட்களை கடத்தி வந்தனர். ஆனால் சென்ற தேர்தலில் மோடி அவர்கள், காங்கிரஸின் ஊழலை பற்றி அதிகமாக பேசினார். தன்னால் ஒரு ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியும் என்று கொக்கரித்தார்.
பொது மக்களும், உற்சாகமாகினர். கரும்பு தின்ன கூலியா? யாருக்கு தான் ஊழலற்ற ஆட்சி பிடிக்காது? ஒட்டு மொத்தமாக    ஓட்டுகளை மோடிக்கு அள்ளி வழங்கி பெரும்பான்மையோடு வெற்றி செய்ய செய்தனர்.

மோடி ஆட்சி வந்ததில் இருந்து எதிர் கட்சிகளும் சரி (அப்படி ஒன்று இருக்கா) மற்றும் பத்திரிகைகளும் சரி, மக்களும் சரி, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி இந்த ஆட்சியை கவனித்து வருகின்றார்கள்.

கோவாவில் இருந்து 5 சட்டசபை உறுப்பினர்கள் பிரேசில் நாட்டிற்க்கு அரசாங்க செலவோடு சென்று கால் பந்து போட்டி பார்க்க போகின்றார்கள் என்றதும், அர்னாப் கோஸ்வாமி தலைமயில் பத்திரிக்கை உலகமே கொதித்தது. உடனடியாக இது ரத்து செய்ய பட்டது. அது போல், சில நாட்களுக்கு முன் BJP தலைவர் ராஜ் நாத் அவர்களின் திரு மகன் பெயர் எங்கேயோ அடி பட்டவுடன், பத்திரிக்கை உலகம் வேட்டியை மடிந்து கட்டி கிளம்பி விட்டது. இவ்வாறாக "எந்த புற்றில் எந்த பாம்பு" என்று வழி  மேல் விழி வைத்து அனைவரும் பார்த்து கொண்டு இருப்பதால் இந்த ஆட்சியில் ஊழல் என்பது கண்டிப்பாக நிச்சயமாக குறையும்.

சரி, இதனால் காங்கிரஸ்க்கு என்ன கொண்டாட்டமா?

ஒன்றும் இல்லை. இனிமேல் ஆட்சி செய்பவர்கள் தானே திருட முடியாது. நாங்களும் எங்கள் கூட்டணிகளும் தான் அடுத்த  ஏழேழு பரம்பரைக்கு சேர்த்து விட்டோமே. நாங்கள் ஆட்சியில் இருந்தால் என்ன இல்லாவிடில் என்ன? அப்படியே ஆட்சியில் இருந்தாலும் இனிமேல் திருடவும்  முடியாது என்ன தான் மோடி ஆட்சி வழக்கு - வக்கீல் -கோர்ட் என்று சென்றாலும் சில பலி கடாக்களை உள்ளே அனுப்பி விட்டு நாங்கள் எல்லாரும் சந்தோசமாக இருப்போம்.

அது மட்டும் இல்லாமல் சென்ற தேர்தலில் தோர்க்க போகின்றோம் என்று முன்பே அறிந்ததால் எங்கள் வேட்பாளர் எவருமே  ஒரு பைசா செலவு செய்யவில்லை. அதே நேரத்தில், எங்களை எதிர்த்த BJP வேட்பாளர்கள், தாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதை அறியாமல் மொத்தமாக 60,000 கோடி  (எங்கேயோ  படித்து தான், நான் என்ன இவர்கள் ஆடி டரா?)  செலவு செய்து விட்டார்கள், இப்போது போட்ட பணத்தை கூட எடுக்க நாதி இல்லாமல் இருகின்றார்கள். அது தான் இந்த சந்தோசம்.
(போன பாராளுமன்ற தேர்தலின் போது உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சை கேட்க கோடி கணக்கில் செலவழித்து பல்லாயிர கணக்கில் வந்த மக்கள்.)

போன தேர்தலின் போது மோடி அவர்களின் மிகவும் சாதாரண கூட்டம்.

உங்களில் சில பேர், அம்மையார் ஜெயலிதாவிற்கு கிடைத்த தண்டனை போல் காங் மற்றும் கூட்டணி கட்சிக்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பது தெளிவாக தெரிகின்றது.

அப்படி என்ன தண்டனை? கோடி கணக்கில் அவர்களிடம் பணம் உண்டு என்று எல்லாம் சொல்கின்றார்கள். இந்த தண்டனை சுப்ரீம்  கோர்டில் அனுமதிக்க பட்டாலும், மொத்தமே அவருக்கு 4 வருடங்கள் தான் சிறை. அதற்கு பின் தேர்தலில் 10 வருடம் நிற்க கூடாது. இந்த சிறை தண்டனையில் இருந்து வெளியே வரும் போது அம்மையாருக்கு 70 வயது ஆகி விடும். அதற்கு பிறகு அவர்கள் தேர்தலில் நின்றால் என்ன - நிற்காவிட்டால் என்ன ? 4 வருடம் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்தவுடன் கோடி கணக்கில் உள்ள பணத்தை எண்ணி பார்க்கவே நேரம் இருக்காது. பின்னர்  ஏன் பொது வாழ்க்கை?
சொல்ல போனால் அம்மையார் தீர்ப்பு வந்த வுடன் மற்ற குற்றவாளிகள் எல்லாம் கொஞ்சம் நிம்மதி பேரு மூச்சு தான் விடுகின்றனர்.

இனிமேல் ஆள்பவர்கள் திருடவது கடினம். நாம் ஏற்கனவே  திருடியது நம்மை விட்டு போகாது. அதினால் தான் இந்த தீபாவளி கொண்டாட்டம்.

என்ன  ஞான் சரியா பறைஞ்சனோ!

காங்கிராஸ் காரர்களே இந்த தீபாவளியை கொண்டாடும் போது, நீங்கள் எல்லாரும் ஏன் சும்மா இருக்க வேண்டும்.அனைவரும்.. "என்சாய் மாடி".

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

6 comments:

 1. வணக்கம்
  அண்ணா

  எல்லாம் காலம் செய்த விதி....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. சிறந்த பகிர்வு
  தங்களுக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  ReplyDelete
 3. சிறந்த பகிர்வு
  தங்களுக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  ReplyDelete
 4. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. சரியாத்தான் சொல்றீங்க! இனிய தீபாவளிநல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...