Monday, October 13, 2014

மேடை ஏறி பேசும் போது! (வாரிசு அரசியல் - மோடி பிரமாத பேச்சு).


மகாராஸ்ட்ராவில் நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய வந்துள்ள பிரதமர் மோடி அவர்கள், "குடும்ப-வாரிசு அரசியல்" ஒழிக்க பட வேண்டும் என்று பேசினார். அருமையான பேச்சு. குடும்ப அரசியலினால் நம் நாடு எவ்வளவு "குட்டி சுவர்" ஆகியது என்று நம் எல்லாருக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சி குடும்ப கட்சி, அது ஊர் அறிந்த விஷயம். சென்ற தேர்தலில் அவர்கள் தோல்விக்கு இதுவும் ஒரு பெரிய காரணம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.


டெல்லியில் மட்டும் இல்லாமல் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியில் குடும்பத்திற்கு தான் முதல் உரிமை என்பது ரகசியம் இல்லை. காங்கரஸ் போல் மற்றபல கட்சிகளும் இதை தான் செய்து வருகின்றன.

இப்போது பிரதமர் மோடி அவர்களின் வீரமான பேச்சிற்கு வருவோம். குடும்ப அரசியலை மற்ற கட்சிகளிடம் இருந்து ஒழிப்பதற்கு முன், பிஜேபி யில் எப்படி வளர்கின்றது என்று பார்ப்போம்
மோடி அவர்கள் இந்த வீர பேச்சை பேசி கொண்டு இருக்கும் போதே, அண்டை மாநிலமான ஹரியனாவில் சுஷ்மா சுவராஜின் சகோதரி வந்தனா ஷர்மாவிற்கு   தேர்தலில் நிற்க இடம் கொடுக்க பட்டுள்ளது.

குடும்ப அரசியலை எதிர்த்து பேசி ஆட்சியை பிடித்தீர்களே, இப்போது இதற்கு என்ன பதில் என்று கேட்டபோது பிஜேபி யின் பதில் :

வந்தனா ஷர்மா, சுஷ்மாவின் சகோதரி தான்  , ஆனாலும் இப்போது அவர் வேறு ஒரு குடும்பத்தில்  திருமணம் ஆகி போய்விட்டதால் சுஷ்மா குடும்பத்தை சார்ந்தவர் அல்ல  என்பதை பெருமையுடன் தெரிவித்து  கொள்கிறோம்.

 இந்த பதில் நம் எல்லாரையும், ஒட்டு மொத்தமாக "டேய் அப்ரன்டிஸ்களா, இந்த பேச்செல்லாம் மத்த கட்சிக்கு, எங்களுக்கு என்று எப்பவாது  சொல்லி இருக்கின்றோமா" ? என்று கேட்பது போல் உள்ளது.

மகாராஸ்ட்ராவில் இந்த வீர பேச்சை பேசிய மோடி அவர்கள்,  NCP தலைவரான சரத் பாவரை பேர் சொல்லி குற்றம் சாற்றியுள்ளார். பாவாரின் மூச்சே " என் குடும்பம்  - என் குடும்பம்" தான். அதை யாராலும் மறுக்க இயலாது. இவரை மோடி அவர்கள் இங்கே சுட்டிகாட்டியது சரி தான். ஆனால், இந்நாள் வரை இவர்களோடு தோள் மேல் தோள் போட்டு நடந்து கொண்டு வந்தார்களே "சிவசேனா" அவர்கள் கட்சியில் என்ன நடக்கின்றதாம்.

"சிவசேனா"கட்சியின் வாரிசு அரசியலை பார்த்தால்  காங்க்ரஸ் கட்சியே எவ்வளவோ பராவாயில்லை என்று நினைக்க தோன்றும். மோடி அவர்கள் சிவா சேனாவை பற்றி என் கூறவில்லை. ஒ! தேர்தலில் தனியாக நின்றாலும், முடிவு வரும் வேளையில் அவர்கள் உதவி தேவை பட்டால்....?

திரு மோடி அவர்களே, மற்றவர்கள் தவறை சுட்டிக்காட்டி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தீர்கள். மற்றவர்கள் செய்த தவறையே செய்யாதீர்கள். இந்த "வந்தனா ஷர்மா " அவர்களுக்கு நீங்கள் டிக்கெட் மறுத்து  இருந்தீர்கள் என்றால் உங்கள் பேச்சில் உண்மை உள்ளது என்று எங்கள் எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.
 
நீங்கள் செய்வதை பார்த்தால், நீங்கள் "ஒரு வாய் சொல் வீரர் " என்று தான் தெரிகின்றது.
 
தங்களுக்கு தெரியாதது அல்ல: இருந்தாலும் பிஜேபியில் உள்ள குடும்ப விவகாரங்கள் இங்கே:
 •  யஷ்வந்த் சின்ஹா அவர்களின் மகன்  ஜெயந்த் சின்ஹா
 • பிரமோத் மகாஜான் அவர்களின் மகள் பூனம் மகாஜான்
 • டெல்லியின் முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மா  அவர்களின் புதல்வன் பர்வேஷ் வர்மா
 • உ.பி யின்   முன்னாள் முதல்வர் கல்யான் சிங் அவர்களின் புதல்வன் ராஜ்வீர் சிங்
 • மேனகா காந்தியின் புதல்வன் வருண் காந்தி
 • உமா பாரதியின் அக்கா பையன் ...
 • ராஜ்நாத் அவர்களின் புதல்வன்....
இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

பின் குறிப்பு :
 
முதலில் உங்கள் இல்லத்தில் உள்ள அழுக்கை சுத்தம் பண்ணுங்கள் மோடி சாப், அதை செய்தால் நாடு தானாக சுத்தம் ஆகும்.
 

6 comments:

 1. இது உண்மையாக குடும்ப அரசியலை எதிர்ப்பதற்கு என்று தெரியவில்லை. தன் கட்சியில் இருக்கும் வாரிசு அரசியல் பிரபலங்களுக்கு ஒரு செக் போலத் தோன்றுகிறது! வெறும் அரசியல்!

  ReplyDelete
  Replies
  1. விடிவு காலம் வந்தது என்று நினைத்தேன், ஆனால் இவர்களும் வெறும் கட்டு கதை தான் என்று தினந்தோறும் காட்டி வருகின்றார்கள். தங்கள் வருகைக்கு நன்றி.

   Delete
 2. வந்தனா ஷர்மா, சுஷ்மாவின் சகோதரி தான் , ஆனாலும் இப்போது அவர் வேறு ஒரு குடும்பத்தில் திருமணம் ஆகி போய்விட்டதால் சுஷ்மா குடும்பத்தை சார்ந்தவர் அல்ல என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்./// nallaa saamaalikkuraaynga.

  பிஜேபியில் உள்ள குடும்ப விவகாரங்கள்
  list koduthathukku nandrikal sir.


  ReplyDelete
  Replies
  1. கொடுத்த லிஸ்ட் ஒரு சின்ன சாம்பிள் தான், மொத்தமமும் கொடுக்க நேரமும் இல்லை, இடமும் இல்லை.

   Delete
 3. Replies
  1. Thank you Yusuf. Appreciate you dropping by and commenting. Keep 'em coming.

   Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...