Tuesday, September 30, 2014

மோடி-ஒபாமா : நாளைய உடை(ரையாட)யல் இன்றே!

 இந்த இரு தலைவர்கள் சந்தித்து பேசுவதை கற்பனை செய்து ஜூலை 11 அன்று எழுதிய பதிவு.. உங்களுக்காக இன்று.. மீள் பதிவு...

இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி ஒபாமாவை சந்திக்க இருக்கின்றார். அவர்கள் இருவரும் அப்போது என்ன பேசினார்கள் என்பதை இப்போதே அளிக்கிறோம்.

வாங்க மோடி சாப். வாங்க.

வணக்கம்  ஹுசைன் அவர்களே

ஹுசைன்னா.. என்னை பாராக் என்றே அழைக்கலாம்..

பராக், பராக், ராஜா ராஜாதி, இளவரசர் , இழவு அரசர்  .. அந்த மாதிரி "ராஜ" "பரம்பரை" எனக்கு பிடிக்காது. அது மட்டும் அல்லாமல் உங்க முழு பெயரான ' பராக் ஹுசைன் ஒபாமா" வில் எனக்கு பிடித்ததே.. ஹுசைன் தான், நான் இப்படியே கூப்பிடுகிறேன்.

மோடி சாப், எதுவும் பேச ஆரம்பிக்கும் முன் தங்களின் விசாவை இத்தனை நாட்களாக முடக்கி அடக்கி மடக்கி வைத்ததற்கு மன்னிக்கவும்.

ஹுசைன் சாப், இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் நாம் எப்போதுமே நம் தவறை ஒத்து கொண்டு மன்னிப்பு கேக்க கூடாது. அதுதான் நம் வெற்றியின் முதல் படி
.
நன்றி மோடி சாப், அங்கே குஜாரத்தில் ஏதோ கலவரம் என்று தெரியும்,
ஆனால் அதற்கு யார் காரணம் என்று தெரியவில்லையே, இவ்வளவு பெரிய கலவரம் நடந்தும் அதை எல்லாம் மீறி எப்படி இத மகத்தான வெற்றி பெற்றீர்கள்.

ஹுசைன் சாப், நீங்கள் எங்கே பிறந்தீர்கள் என்று உங்களுக்கே தெரியாது, உங்கள் வெற்றியை விடவா?

மோடி சாப், இந்த ஊரில் பிறந்து இருந்தால் தான் இங்கே ஜனாதிபதி ஆகலாம், அதனால் வந்த குழப்பம் தான் அது.

ஹுசைன் பாய், எங்க ஊரில் எந்த நாட்டிலும் பிறந்தாலும் பரவாயில்லை, எந்த குடும்பத்தில கல்யாணம் பன்னுரியோ அதை வச்சி தான் பட்டம் பதவி எல்லாம்.

மோடி சாப், அந்த கதை இப்ப எதற்கு? உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

ஹுசைன் சாப், அது ரகசியம் ஒன்றும் இல்லை, உங்களுக்கு நடந்த நல்ல காரியம் தான் எனக்கும் நடந்தது

புரியில, மோடி சாப்.

இத பாருங்கோ ஹுசைன் பாய். அந்த புஷ் குடும்ப தலைமையில் குடியரசு கட்சி இந்த நாட்டில் கடந்த 8 ஆண்டில் என்ன என்ன தப்பு பன்னிச்சு. தேவை இல்லாத போர். பொருளாதாரம் போச்சு. இந்த நாட்டு பேரே உலக அளவில் கேட்டு போச்சு இல்லையா..

ஆமா, மோடி சாப்.. உங்க ஊர் காந்தி (பேரை கொண்ட) குடும்பமும், அவங்க காங்கிரெஸ் கட்சி போலவும் தான்.

குருக்கில பேசாதீங்கோ ஹுசைன். நான் அப்புறம் அமித் ஷாவை வைச்சி உங்கள கண்காணிக்க நேரும்.

ஒ! அந்த தமிழ் பட வில்லன் மாதிரி இருப்பாரே? அவர..

 அவரே தான். விவரமா சொல்லுறன் கேளுங்கோ நீங்க.
அந்த புஷ் நேரத்தில் நடந்த கேடு கேட்ட ஆட்சியினால, நீங்க இல்ல, அந்த தேர்தலில் எந்த தறுதலை நின்று இருந்தாலும் வெற்றி பெற்று இருக்கலாம்

மோடி சாப், இப்ப என்ன சொல்ல வரீங்க?

ஹுசைன் பாய், இந்த மன்மோகன் சிங் தலைமையில் நடந்த 10 ஆண்டு ஆட்சியில் மக்கள் பார்க்காத அநியாயமே இல்லை. போன தேர்தலில் நான் இல்ல, இந்த ' ஓட்ட வாய் சுப்பிரமணி " நின்னு இருந்தால் கூட வெற்றி பெற்று இருக்கலாம். எதோ என் நல்ல காலம், குஜராத்தில் பாரு "தேங்கா மரத்தில் மா,  பலா, வாழை காய்" க்குதுன்னு நான் சொன்னத நம்பி என்ன தலைவர் ஆக்கிட்டாங்க, நானும் ஜெயித்துவிட்டேன்.

பேஷா சொன்னீங்க மோடி சாப்.

நம்ம ரெண்டு பேர் வெற்றிக்கு காரணமே நமக்கு முன்னால ஆண்டவனுங்க  செஞ்ச தப்பு தான் காரணம், இல்லாட்டி ஒரு பய புள்ள நமக்கு ஒட்டு போட்டு இருக்காது.

மெதுவா பேசுங்கோ ஹுசைன் சாப். அது சரி.. நீங்க என்னவோ "change " என்ற ஒரு வாக்குறுதி கொடுத்து ஆட்சிய பிடிசிங்கலாமே, அந்த "change " கொடுத்தீங்களா?

மோடி சாப், "change " னா தமிழில் என்ன?

சில்லறைதனமா பேசாதீங்கோ ஹுசைன் .

சரியா சொன்னீங்கோ, "change " னா, சில்லறை. நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவனவன் பாக்கெட்டில் வெறும் "சில்லறை "தானே தேருது. அப்ப நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினேன் என்று தானே அர்த்தம்.

நல்லா சொன்ன, ஹுசைன் பாய். அது சரி.  இந்த தலைமை பதவியில் எனக்கு நீங்க சீனியர், அதனால் ஒரு சில அறிவுரை தேவை.

கேட்டு வாங்கிகிங்கோ மோடி சாப். அறிவுரையில் என்னை அடிக்க முடியாது.

இப்ப தான் ஆட்சிக்கு வந்துட்டோம் இல்ல, மக்கள் ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்காங்களே. அவங்கள எப்படி திருப்தி படுத்துவது.

அது ஒரு விஷயமே இல்ல மோடி சாப், ஆனியன் விலையில் இருந்து அந்நிய செலவாணி வரை எல்லா இழவுக்கும் காரணம் முந்தைய ஆட்சி, முந்தைய ஆட்சினு ஆட்டைய போடுங்க...

நல்ல சொன்ன ஹுசைன் பாய். ஜெட்லி , மேக் எ  நோட்.

அப்புறம் உங்க ஆட்சி முடியும் போது எனக்கு ஒன் மோர் சான்ஸ் ப்ளீஸ்ன்னு சொல்லுங்க. இந்த மக்கள் அந்த காங்க்றேஸ் உடைய ஆட்சிக்கு பதில் இது எவ்வளவோ தேவலேன்னு சொல்லி இன்னொரு சான்ஸ் தருவாங்கோ.

ஹுசைன் சாப், ஆனால் இந்த காங்க்றேச்ஸ் காரன் சும்மா இருக்கமாட்டானே.

மோடி சாப், அவனுக்கு நாடளுமன்றத்தில் தேநீர் தருவாங்க இல்ல, அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துடுங்கோ. அவன் உள்ள நுழைந்தவுடன் கொட்டாவி விட்டு தூங்கிடுவான். என்ன மோடி சாப், தேநீரில் என்ன எப்படி கலக்குனும்ன்னு    நாங்க உங்களுக்கு சொல்லி தரனும்மா?

சரி மோடி சாப், உங்க தனிப்பட்ட விஷயத்தை பத்தி ஒன்னு கேட்க வேண்டும், கோச்சிக்க மாட்டீங்களே...

ஹுசைன் பாய், என்ன கேட்டாலும் நான் கோச்சிக்க மாட்டேன். எனக்கு புடிக்காத கேள்வின்னா, ஒரு டம்பளர்  தண்ணி வாங்கி குடிச்சிட்டு , மைக்க அவுத்து எறிஞ்சிட்டு நான் பாட்டுக்கு போய்விடுவேன். சரி என்ன விஷயம் கேளுங்க.

ஒன்னும் இல்ல மோடி சாப், உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதாமே, அது எப்படி அந்த அம்மாவ கழட்டி விட்டுவிட்டு ஒரு பிரச்னையும் இல்லாம வாழ்க்கைய நடத்துரிங்க? இப்ப நம்ப பேசும் போது கூட திரும்பவும் திரும்பவும் வந்து ஜன்னல் வழியா ஒட்டு கேட்க்கிராளே என் மனைவி மிஷெல், நான் ஒரு மீட்டிங்ல அவள பத்தி பேசாட்டி கூட மூஞ்ச தூக்கி வச்சிக்கிட்டு  வம்பு பன்னுவா, நீங்க மட்டும் எப்படி, இவ்வளவு அழகா?

ஹுசைன் சாப், ஒரு டம்ளர் தண்ணி கிடைக்குமா?

சாரி மோடி சாப், நீங்க கோச்சிக்கீறீங்கோன்னு நினைக்கிறன், சாரி.

பரவாயில்லை விடுங்க, ஹுசைன். இந்த பொம்மனாட்டியோட வாழ்ற ஆட்களே இந்தமாதிரி கமனாட்டி தனமான கேள்விகள் கேட் பீர்கள் என்று எனக்கு தெரியும். அதனால் தான் நானும் சரி என் மானசீக குரு வாஜ்பாயும் சரி, ஏன், எதிர் கட்சியின் இளவரசரும் சரி, சுத்த பிரமசாரியா இருக்கோம்.

சரி மோடி சாப், பிரமசாரியா இருக்கும்  உங்களுக்கு எப்படி குடும்ப வரவு செலவு பற்றி தெரியும்?

வரவு செலவா? அத நம்ப யோகா குரு ராம்தேவ் நமக்கு சொல்லிகொடுப்பார்.

என்ன மோடி சாப், அரசியல்வாதிகள் சந்யாசி மாதிரி இருக்கீங்கோ  , சந்யாசி அரசியல்வாதிகள் மாதிரி இருக்கீங்கோ  , ஒரே குழப்பமா இருக்கு.

அரசியலில் இது எல்லாம் சகஜம் தானே ஹுசைன் பாய்.

சரி மோடி சாப், இங்கே வெள்ளை மாளிகையில் ஏதாவது ஒரு அறையில் நல்ல தங்கி இருந்துட்டு போங்க.

என்ன ஹுசைன் பாய், அமெரிக்காவில் இருக்க எல்லா மொட்டேலும் எங்க படேலுக்குதான் சொந்தம் அங்க போய் அங்க ஏதாவது ஒருதனுக்கு கஷ்டம்னா ரம்போ பாணியில் எங்க ஊருக்கு காப்பாத்தி கூடி கொண்டு போவேன்.

சரி மோடி சாப், இப்ப பதவிக்கு வந்தாச்சி, அடுத்த 5 வருஷத்திற்கு என்ன நடந்தாலும் அந்த காந்தி குடும்பத்தையும், காங்க்றேசையும் குத்தம் சொல்லி தப்பிக்கலாம். இப்ப டைம் பாஸ்க்கு என்ன செய்ய போறீங்கோ.

என்னது டைம் பாஸா?  இந்த ஜெயமாலினி சாரி, ஜெத்மலானியும், சுப்ரமணிய சுவாமி, சோ ராமசாமியையும் கூட வைச்சின்னு எவனாவது டைம் பாஸ் பண்ண முடியுமா? இவங்க மூணு   பேரும் இங்க இருக்கிறது, புலி வால புடிச்ச மாதிரி. கொஞ்சம் ஏமாந்தோம், பேட்டா, மூணு   பேரும் எதிர் கட்சில் சேர்ந்து எங்களை எண்ணை கூட ஊத்தாம   தாளிச்சிருவாங்கோ, இவங்கள இங்கேயே வைக்க வேண்டும் என்றால் 24 மணி நேரம் கண் காணிக்கவேண்டும்.

சரி, மோடி சாப், மறுபடியும் பார்க்கலாம்.

நன்றி ஹுசைன் பாய், நீங்க அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறவேண்டும் என்பது தான் என் விருப்பம்.

மோடி சாப், எங்க ஊரில ஒரு பதவியில் ரெண்டு டெர்ம் மேல இருக்க முடியாது. மக்களே வேண்டும் என்றாலும் சட்டம் இடம் கொடுக்காது.

அப்படியா ஹுசைன் பாய், இந்த சட்டம் எங்க ஊரில் இருந்தால் கருணாநிதி 1975லெ  ரிடயர் ஆகி இருக்க வேண்டுமே? இந்த சட்டம் கேட்க நல்லா இருந்தாலும், எங்க ஊரில்  வேலைக்கு ஆவாது.

ஏன் மோடி சாப்..

அது ஒன்னும் இல்ல ஹுசைன் சாப், வேற எந்த வேலைக்கும் ஆகாதவன் தான் எங்க ஊரில் அரசியலுக்கு வருவாங்கோன்னு  பொதுவா ஒரு குற்ற சாட்டு.. அவங்கள ரெண்டு டெர்மில் வீட்டுக்கு அனுப்பி வைச்சா எங்க பார்லிமெண்டே காலியாதான் இருக்கும்.

கடைசியா ஒரு கேள்வி மோடி சாப், இந்த மகத்தான வெற்றி பெற்று இருக்கீங்களே, இனிமேல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்னு நினைகிறீங்க.

கண்டிப்பா வரும் ஹுசைன் சாப்.

எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்லுறீங்கோ

அது ஒன்னும் இல்ல ஹுசைன் பாய், நானே நாட்டுக்கு நல்லது பண்ணனும்ன்னு சொன்னாலும், நாங்க எல்லாம் என்ன இழிச்சிய வாயான்னு என்கிட்டே இருக்கிறவாங்க என்னை ஒன்னும் செய்ய விட மாட்டாங்க.. அதுனாலே, மீண்டும் ஒருநாள், "பழைய குருடி கதவை திறடி"ன்னு மக்கள் அங்கே போவாங்க.

மோடி சாப், இப்படியே ரெண்டு கட்சியும் மாறி மாறி ஆட்டைய போட்டா மக்கள் நிலைமை என்ன ஆகும்..

உன்னாலே நான் கெட்டேன்  , என்னாலே நீ கெட்டேன்னு சொல்லி ரெண்டு கட்சிக்கும் ஒட்டு போட்டவனுங்கோ ஒப்பாரி வைக்கணும் அவ்வளவு தான். நன்றி ஹுசைன் பாய்.

நன்றி மோடி சாப்!

http://www.visuawesome.com/

2 comments:

 1. சிறந்த பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 2. //
  ஹுசைன் பாய், இந்த மன்மோகன் சிங் தலைமையில் நடந்த 10 ஆண்டு ஆட்சியில் மக்கள் பார்க்காத அநியாயமே இல்லை. போன தேர்தலில் நான் இல்ல, இந்த ' ஓட்ட வாய் சுப்பிரமணி " நின்னு இருந்தால் கூட வெற்றி பெற்று இருக்கலாம். எதோ என் நல்ல காலம், குஜராத்தில் பாரு "தேங்கா மரத்தில் மா, பலா, வாழை காய்" க்குதுன்னு நான் சொன்னத நம்பி என்ன தலைவர் ஆக்கிட்டாங்க, நானும் ஜெயித்துவிட்டேன்.
  //
  Ha ha.... I like this one. :)

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...