வியாழன், 18 செப்டம்பர், 2014

ஜெர்மனியின் செந்தேன் மலரே...

கடந்த இரண்டு வாரங்களாக ஐரோப்பாவில் 17 இந்தியர்கள் ஒவ்வொரு நாடாக சுற்றுலா ஆட்டம் - பாட்டம் கொண்டு இருகின்றார்கள் என்று ஒரு செய்தி. என்ன இது, யார் இவர்கள், ஒரு வேளை கல்லூரி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் பணத்தில் சென்று இருக்கலாம் என்று நினைத்தேன்.



பின்னர் சற்று விசாரித்த பின் தான் தெரிய வந்தது, இவர்கள் அரசாங்க செலவில் போய் இருகின்றார்கள் என்று.

அடே டே, இந்தியா வல்லரசு ஆகி விட்டது. 17 பேரை அரசாங்க செலவில் ஐரோப்பாவிற்கு அனுப்பி இருக்கின்றார்களே. நல்ல வளர்ச்சி, ஏதோ ஒரு துறையில் கடின பட்டு படித்து - உழைத்து இருந்து இருப்பார்கள், அவர்களை அரசாங்கம் பாராட்டி  இருக்கலாம் என்று நினைத்தேன்.

சற்று நேரம் கழித்து தெரிய வந்தது, இவர்கள் அனைவரும் கர்நாடகாவில் இருந்து சென்று இருகின்றார்கள் என்று. அட பாவி,  கர்நாடகாவில் ஒரு புறம் வெள்ளம் மறு புறம் வறட்சி. விவசாயிகளின் தற்கொலையில் நாட்டிலேயே ஐந்தாவது மாநிலம் என்ற அந்தஸ்து. இந்த நேரத்தில் ஏன் இந்த அரசாங்கம் 17 பேரை சுற்றுலாவிற்கு அனுப்பியது என்று நொந்து கொண்டு இருக்கையில் அடுத்து வந்த செய்தி தலை சுற்ற வைத்தது.

இந்த 17 பெரும் கர்நாடக காங்கிரஸ் MLA களாம். அரசு செலவில் ஐரோப்பா சென்று விவசாயத்தில் நாட்டை எப்படி முன்னேறுவது   என்று கற்று கொண்டு வருவார்களாம்.

அட பாவி காங்கிரஸ்காரர்களே.. சென்ற தேர்தலில் இவ்வளவு பெரிய அடி வாங்கியும் புத்தி வரவில்லையா என்று நினைக்க தான் தோன்றுகிறது.
தாய் தவிட்டு பிச்சைக்கு அழுகின்றாளாம். பிள்ளை தொங்க தொங்க தங்கம் கேட்டாளாம். என்னடா கதை இது என்று வியந்தேன்.

இந்த 17 பேர் ஐரோப்பாவில் ஆடிய உல்லாச ஆட்டம் அனைத்தும் புகைப்படமாக அனேக வலை தளங்களில் உள்ளது. ஏன்இப்படி செய்தீர்கள் என்று பி  ஜே பி ஆட்கள் கேட்டால், நீங்கள் மட்டும் யோக்கியமா, சில மாதங்களுக்கு முன் கோவாவில்  உங்கள்  ஆட்கள்  உலக கால்பந்து ஆட்டத்திற்கு எப்படி போனார்கள் என்று சொல்லிவிட்டு பிறகு பேசுங்கள் என்கின்றார்கள்.

இந்த கர்நாடக அரசியல்வாதிகள்  அடிக்கடி இந்த மாதிரி தேவை இல்லாத இடத்தில் மாட்டி கொள்கின்றனர். சில வருடங்களுக்கு முன் சட்ட சபையின் உள்ளே  அமர்ந்து "நீல படம்" பார்த்த பெருமையும் இந்த மாநிலத்தையே சாரும்.

இந்த 17 பேர்களில் 7 பேருடைய தொகுதிகள் இந்த வெள்ளம் - வறட்சியினால் அழிந்து போய் கொண்டு இருக்கையில் இவர்களுக்கு அரசாங்க செலவில் உல்லாசம்.

என்னத்த சொல்வேன்....

ஜெய் ஹிந்த்..

www.visuawesome.com

10 கருத்துகள்:

  1. எல்லாரும் ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள் தான் சார்... நாம தான் இளிச்சவாயங்களா போயிட்டோம் இந்த கெவல அரசியல் வியாதிகளுக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான். இது அவன் தவறு மட்டும் அல்ல. அவனை தூக்கி உட்கார வைத்தோமே நம் தவறும். வருகைக்கு நன்றி.
      www.visuawesome.com

      நீக்கு
  2. வணக்கம்
    இவர்களின் சொந்த பணமா... மக்களின் வரிப்பணம் அல்லவா..... நன்றாக சொல்லியகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "ஊரான் வீட்டு நெய். என் பொண்டாட்டி கை" கதை தான். வருகைக்கு நன்றி.
      www.visuawesome.com

      நீக்கு
  3. சிவன் சொத்து குலநாசம் என்ற பழமொழிதான் ஞாபகத்திற்க்கு வருகிறது நண்பரே,,,

    எனது பதிவு ''.Dr.வடுகநாதன்''காண்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரை தூக்கி எங்கே வைக்க வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை. வருகைக்கு நன்றி.
      www.visuawesome.com

      நீக்கு
  4. இது மாதிரி விஷயங்களைக் கேள்விப்பட்டு வருத்தப்படுவதை விட தெரியாமலே இருந்து விடுவது நல்லதெனத் தோன்றுகிறது (பின்ன நம்மால எதையாவது செய்ய முடியுமா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்த பண்றது எழில் அவர்களே, நம் முன்னோர் அந்த காலத்தில் அழகாக சொன்னார்கள். " துஷ்டனை கண்டால் தூர விலகு" என்று. அந்த காலத்தில் துஷ்டர்கள் மிகவும் குறைவு என்று நினைக்கிறன். கண்டவுடன் விலக. இந்த காலத்தில் எங்கே பார்த்தாலும் அவர்கள் தானே. மற்றவர்கள் பரவாயில்லை. ஆனால் இவர்கள், வெளியே பயிரை மேய்ந்த கதை தானே இது. வருகைக்கு நன்றி.

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...