Tuesday, September 30, 2014

சிரிப்பு வருது, வெறுப்பு வருது...சிரிக்க சிரிக்க வெறுப்பு வருது...

ஜெயலலிதா அவர்கள் நல்லவரா கெட்டவரா என்று சொல்ல நான் இதை எழுதவில்லை. ஆனால், இந்த மொத்த வழக்கு நடந்த விதத்தை பற்றி தான் நான் எழுத வந்துள்ளேன்.இந்த வழக்கு 1991ல் போட பட்டது. 18 வருடம் கழித்து தான் தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் வந்த தீர்ப்பு " ஜெயலலிதா குற்றவாளி" என்று. இங்கே ஒரு காரியத்தை பார்க்கவேண்டும்.  இவ்வளவு பெரிய ஊழல் செய்தவர் 18 வருடகாலம் ஒரு ராஜ போக வாழ்க்கை வாழ நம் சட்டம் இடம் அளிக்கின்றது என்பதை யோசித்தால், இந்நாட்டின் சட்ட அமைப்பில் உள்ள மதிப்பே போய்விடுகின்றது.

அரசியல் வாதிகள், மக்களின் பிரதிநிதிகள். இவர்கள் திருடும் பணம் மக்கள் பணம். ஒவ்வொரு நாளும் நாம் தெருவில் ஒரு பிச்சை எடுப்பவரையோ, அல்ல மனநிலை சரியில்லாமல் அலைபவர்களையோ, ஆதரவு இல்லாமல் இருக்கும் முதியோர்களையோ, மாற்று திறன் கொண்டவர்களையோ,ஏன் கூலி  தொழில் செய்யும் சிறுவர்களையோ பார்க்கையில், இவர்களுக்காக செலவு செய்ய வேண்டிய பணத்தை இந்த அரசியல் வாதிகள் திருடி தங்கள் வங்கியில் வைத்து கொண்டு உள்ளார்கள் என்று தானே அர்த்தம்.

படம் கூகிள் இருந்து எடுத்தது. எனது அல்ல.


இந்த ஏழை பொது மக்களுக்கான பணத்தை திருடும்  அரசியல் வாதிகள் கொலைகாரனோடு மோசமானவர்கள். சமுதாயத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சாகின்றானே, அவர்கள் ஒவ்வொருவரின் சாவிற்கும் இந்த அரசியல் வாதிகள் தான் பொறுப்பு.

தீர்ப்பில் கூறியது போல் ஜெயலலிதா அவர்கள் குற்றவாளி என்றால், அவர் இந்த 18 வருடத்தில் எப்படி வெளியுலகில் இருந்தார். அவரை 1991-92ல் கைது செய்து இருக்க வேண்டும் அல்லவா? அப்போதே அவரை இனி பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாது என்று தள்ளி வைத்து இருக்கவேண்டும் அல்லவா? இவரோடு கைதான கூட்டாளிகள், இந்த 18 வருடத்தில் வேறு என்ன என்ன காரியம் செய்து இருப்பார்கள். நினைக்கவே பயமாக இருக்கின்றது.
இப்போது மற்ற விஷயங்களுக்கு வருவோம்.

ஜெயலலிதா கைது ஆனதிற்கு  அதிமுக தொண்டர்கள் மிகவும் சோகமாகி போனார்கள். சோகமாக போகட்டும், ஆனால் முட்டாள்களாய் போகாதீர்கள். சில  நிர்வாகிகள் அந்த நீதிபதியை வசை பாடுகின்றார்கள். இந்த முட்டாள்களுக்கு நான் சொல்லவேண்டியது " நீதிபதியை வசை பாடுதல் நம் நாட்டில் குற்றம்". தொலைகாட்சியில் வந்து நீங்கள் இப்படி பேசினால், நாளை உங்களையும் கைது செய்ய ஆட்கள் வருவார்கள். ஜெயலிதாவிற்கு ஆஜாராக "ஜெத்மாலானி" வருவார். உங்களுக்கு ஆஜாராக "ஜெயமாலினி" கூட வர மாட்டார். ஜாக்கிரதை (வெண்ணிறாடை மூர்த்தி ஸ்டைல்).  

இந்த வழக்கில் ஜெத்மலானி அவர்கள் வருவது இன்னொரு விஷயம். சுப்பிரமணி சுவாமி வழக்கு போடுவது, ஜெத் மலானி வாதாடுவது.. " நீ அடிப்பது போல அடி , நான் அழுறது போல நடிக்கின்றேன்" என்பது போல் தான் உள்ளது. ஜெத் மாலானி அவர்கள் சற்று முன்னாள் வரை பிஜேபி யில் இருந்தவர். இவர் மகன் இன்னும் பிஜேபி யில் ஒரு  பெரிய தலை போல் செயல் படுகின்றார். 18 வருடம் கழித்து தீர்ப்பு வந்துள்ளது, அதை எதிர்த்து இவர் ஆஜார் ஆகுவது, "எங்கேயோ இடிக்குது".

இப்போது நாம் சினிமா துறைக்கு வருவோம். எக்கட்சி ஆளுங்கட்சியோ அக்கட்சி நம் கட்சி" இது தான் நம் தமிழ் சினிமா காரர்களின் "உறுதி மொழி". என்ன உண்மை, யார் என்ன செய்தார்கள்-செய்வார்கள் என்பது எல்லாம் இவர்களுக்கு தேவை இல்லை. தங்கள் சுய நலத்திற்க்காக எதை  வேண்டும் என்றாலும் செய்வார்கள்.

சிரிப்பு வருது, வெறுப்பு வருது...


www.visuawesome.com

7 comments:

 1. சிரிப்பு வருது, வெறுப்பு வருது...சிரிக்க சிரிக்க வெறுப்பு வருது..

  ReplyDelete
  Replies
  1. என்னத்த சொல்றது மகேஷ்...? வருகைக்கு நன்றி

   Delete
 2. ஜெயமாலினி கூட வரமாட்டார், செம சார்... அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தானே சினிமாக் காரர்கள், இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு ஜுஜூப்பி, பருங்க அடுத்த சி.எம் அவரு தான்... நம்ம சட்டத்த நினைச்சாவே ...சே

  ReplyDelete
  Replies
  1. அரசியல் ஒரு சாக்கடை... சட்டம் ஒரு இருட்டறை....

   Delete
 3. குற்றவாளிக்கும், நீதிமன்றத்துக்கும் நடக்கும் விசயத்துல இந்த சினிமாக்காரங்கே ஏன் ? இப்படி அறிவு கெட்டதனமா நடந்துகிறங்கே ? இதை நினைச்சு நினைச்சு எனக்கு கவலையாகி 6 பாட்டில் முடிஞ்சுபோச்சு குளூக்கோஸ் பாட்டிலுங்கோ...
  நண்பா எனது புதிய பதிவு My India By Devakottaiyan

  ReplyDelete
 4. வேதனை தரும் விஷயம். நீதிபதி தனது தீர்ப்பிர்க்கான காரணங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார். இந்த வழக்கு உச்சநீதிமன்றம் போனாலும் தாங்காது.

  ReplyDelete
 5. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...